மோசஸ் சிறுவர் நிதியத்தின் – மலரும் மொட்டுக்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஆன்மீக தேவசபையின் ஒத்துழைப்புடன் மிகவும் பின்தங்கிய கிராமமாகிய ஈஸ்வரிபுரம், வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் அன்றாட அத்தியாவசிய தேவைகளைக் கூட கஷ்டத்தின் மத்தியில் முகம் கொடுத்துவந்த சுமார் 30 சிறுவர்களிற்கு பாடசாலை உபகரணங்களும், புத்தகப்பைகளும், உலர் உணவுப் பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந் நிகழ்வானது மோசே சிறுவர் நிதியத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பில் இருந்து அங்கு சமூகமளித்திருந்த குழுவினராலும், ஆன்மீக தேவசபையின் விசுவாசிகளின் மற்றும் தன்னார்வத் தொண்டர்களாலும் வவுனியா ஈஸ்வரிபுரம் பிரதேசத்தில் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்திச் செல்லப்பட்டது.
மேலும், சிறுவர்களின் ஏனைய சந்திக்கப்படாத தேவைகளையும் அக் குழுவினர் நேரடியாக அவதானித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
மோசஸ் சிறுவர் நிதியத்தின் – மலரும் மொட்டுக்கள் நிகழ்ச்சித் திட்டமானது சிறுவர்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை சந்திக்கும் ஒரு பயணம் எனும் கருப்பொருளினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை அவுஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதியுள்ளது என அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அப்படி மோதிய விண்கல் 20-30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
வட மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள பாறைகளில், அந்தப் பெரும் மோதலில் வெடித்துச்சிதறி ஆவியாகிபோன சில தாதுப்பொருட்கள் சிறிய கண்ணாடிபோன்ற மணிகளில் காணப்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவ்வளவு பெரிய விண்கல் பூமியின் மீது மோதியது நிலநடுக்கங்களையும், எரிமலை வெடிப்புகளையும் உலகம் முழுவதிலும் ஏற்படுத்தியிருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மழையுடனான வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,96,000 இற்கும் அதிகமானோர் தற்காலிக இடைதங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அரநாயக்க சிரிபுர பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் இதுவரை 134 பேர் காணாமல் போயுள்ளதாக மேல் மாகாண பாதுகாப்பு படைபிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
மண்சரிவினால் 66 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கட்டளை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட 14 சடலங்களில் 8 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 11 சடலங்கள் முழைமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் 3 சடலங்களில் உடல் பகுதிகள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மழையுடனான வானிலைக் காரணமாக மீட்பு பணிகள் நேற்று மாலை ஆறு மணியுடன் நிறுதப்பட்டுள்ளதாகவும் இன்று காலை தொடக்கம் மீண்டும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேல் மாகாண பாதுகாப்பு படைபிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கேகாலை புலாத்கொஹூபிட்டிய களுபஹனவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மண்சரிவில் சிக்கி காணமல் போன மேலும் 11 பேரின் சடலங்கள் தேடப்பட்டு வருவதாக புலத்கொஹுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கடுகண்ணாவையில் மண்சரிவில் சிக்கி காணமல் போன 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மண்சரிவி்ல் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அத்தோடு அதிக மழையுடனானவானிலைக் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்திள்ளார். 21 பேர் இதுவரை காணமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் யட்டியந்தோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையினால் அங்கிருந்து சுமார் 50 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வந்த அசாதாரண காலநிலை இன்றுடன் வழமைக்குத் திரும்பி, மழையின் தீவிரம் தணியும் வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கையின் வான்பரப்பில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் முற்றாக அகன்று அதன் பாதிப்புகளும் இன்றுடன் தணியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் வானிலையில் சடுதியான மாற்றத்தை எதிர்பார்க்க முடியாத நிலையில் தொடர்ந்தும் சில நாட்களுக்கு இடைக்கிடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அடைமழையாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் காற்றின் தீவிரம் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மரக்கறிகளின் விலை நூற்றுக்கு 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் யு.ஆர்.தயானந்த தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
சீரற்ற காலநிலையினால் சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மத்திய மலைநாட்டு மரக்கறி வகைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அவ்வாறு கிடைக்கும் மரக்கறிகளும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.
சீரற்ற காலநிலையினால் மரக்கறி செய்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் நட்களில் மரக்கறிகளின் விலை மேலும் உயர்வடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கறிமிளகாய் 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ பீட்ருட் 110 ரூபாவிற்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவிற்கும், ஒரு கிலோ தக்காளி 110 ரூபாவிற்கும், ஒரு கிலோ கரட் 100 ரூபாவிற்கும், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாவிற்கும், ஒரு கிலோ கோவா 80 ரூபாவிற்கும், ஒரு கிலோ லீக்ஸ் 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிக குறைந்த விலையில் 99 ரூபாவில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது Namotel என்ற நிறுவனம்
Namotel Acche Din என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன் 4 அங்குல தொடுதிரை, Android 5.1 Lollipop இயங்குதளம் 1.3GHzQuad-Core Processor மற்றும் 1 GB RAM ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனர் மாதவ ரெட்டி கூறுகையில், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என்றும், மேக் இன் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியர்களுக்காக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.
குறித்த போனின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இது Illustration Purposes Only என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் (சட்) உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடன் பேச மணமகன் விரும்பினார். அதை மணமகள் கண்டுகொள்ளவில்லை. செல்போனில் உரையாடுவதிலேயே மிகவும் குறியாக இருந்தார். இது குறித்து கேட்டதற்கு திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் பதில் தெரிவிப்பதாக கூறினார்.
உடனே மணமகன் உனக்கு நான் முக்கியம் இல்லையா என்று கேட்டார். அதற்கு ஆம் என மணமகள் பதில் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு ஓட்டலை விட்டு வெளியேறினார்.
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்ட திருமணபந்தம் செல்போன் உரையாடலால் அது ஏற்பட்ட மறுநிமிடமே முடிந்து விட்டது.
தலாவ – தம்புத்தேகம பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து தடைபட்டிருந்தது.
எனினும், நேற்று இரவு முதல் வட பகுதிக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத் கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலாவ பிரதேசத்தில் இன்றும் வெள்ள நிலைமை காணப்படுகின்ற அதேவேளை, புகையிரத பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் குறித்த புகையிரத மார்க்கத்தை சீர்செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்களின் வேகமானது மணிக்கு பத்து கிலோ மீற்றராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த புகையிரத மார்க்கமானது சீர்செய்தமையைத் தொடர்ந்து நேற்று இரவு தபால் ரயில் சேவையானது கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களை சேர்ந்த 81 ஆயிரத்து 216 குடும்பங்களை சேர்ந்த 3 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 42 ஆயிரத்து 918 குடும்பங்கள் 332 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளம் காரணமாக கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
35 ஆயிரத்து 513 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பான மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்த வழக்குடன் தொடர்புடைய ஏனைய அறிக்கைகளையும் உடனடியாக நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின் போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன மற்றும் நிர்வழங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஷா அவர்களினால் திறந்து வைக்கப்பவுள்ள நீர் வழங்கள் சபையின் வடமத்திய மாகாண காரியாலயத்திற்கு இணைந்ததாக நவீன ஆய்வுகூடம் மற்றும் வடமாகாணக் காரியாலயம் திறப்பது சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டம், மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஷா அவர்களினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதேச செயலாளர் கா.உதயராசா, விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், விவசாய அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள மீன் சந்தையின் கழிவுகளால் மக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர்.
வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள மீன் சந்தையிலிருந்து வெளியேரும் கழிவு நீர் முறையான வடிகாலமைப்பு இன்மையால் மீன்சந்தைக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் செல்கின்றது.
இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக வர்த்தகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..
வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள இந்த மீன் சந்தையின் கழிவு நீர் எமது வர்த்தக நிலையத்திற்கு முன்னால் செல்கின்றது. இந்த துர்நாற்றத்துடன் எம்மால் இருக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.
அகில இலங்கை தமிழ் மொழித்தின வலய மட்டப் போட்டிகள் வவுனியா தெற்கு கல்வி வலயமட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்றது. பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்த இந்நிகழ்வுகள் கடந்த 30.04.2016 தொடக்கம் 15.05.2016 வரை நடைபெற்றது.
இவ் வலயமட்ட தமிழ்த்தின போட்டியில் 12 நிகழ்வுகள் முதலாம் இடங்களையும் 6 நிகழ்வுகள் இரண்டாம் இடங்களையும்,1 நிகழ்வு மூன்றாம் இடத்தினையும் பெற்றது.
முதல் இடங்களைப் பெற்ற 12 நிகழ்வுகள்; மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்ற உள்ளன. வவுனியா தெற்கு கல்வி வலயமட்டத்தில் நடைபெற்ற தமிழ்தின போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் அதி கூடிய இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எஞ்சியது உயிர்தான் அஞ்சி அஞ்சி
அடுத்தடுத்து பலஊர்கள் எங்கள்
குஞ்சுகளை சுமந்து குலங்காக்க
குரல்கொடுத்தோம் எங்கள் குரல்வளை
தங்கி நிற்கும் இறுதி மூச்சுவரை
துஞ்சித்தும் இரக்கமில்லா அரக்கர் தேசங்கள்
நஞ்சூட்டிய எமக்கு ஞானஉபதேசம் செய்கிறது
இன்று அகவை ஏழாச்சு
அன்று இருந்த நிலையிலேயெ
நாமின்றும்..
இழந்த எம்உறவுகளை ஒருகண்
நினைந்து கண்சொரிய கடிதம்
எழுதும் நிலையிலேயே
நாமின்றும்..
மே-18 நாள் உங்கனை மறக்காது
யாருக்கு கதை சொல்லும்
பார் இது ?
பார் இதை
பார்முழுதும் பார்த்திருக்க தானே
ஊர்கூடி ஓலமிட்டோம்
யாருக்கு யார் அனுதாபம் –
நேருக்கு நேர் நின்று நீ குத்து
நேரான அழித்தொழிப்பென்று வரலாறு எழுதுமதை
ஆருக்கும் தெரியாது என்று
கண்ணைமூடி பால்குடித்த பூனைக்
கதை சொல்லு ஆருக்கும் நீ நிமிர்ந்து –
போருக்கு துாபமிட்ட மேற்குலகும் வடக்கும்
வேருக்கு தீமூட்டியபின்
வெறும் பூ பிஞ்சு காய் இலைகளுக்கும்
கிளைகளுக்கும் பசளையிட்டு
பயிர் வளர்ப்பாய் பாசாங்கு
காட்டும் காரியத்தை இனி நிறுத்து
உலகின் எந்த தாயக நிலமும்
சந்திக்காத பேரிழிவை எங்கள்
தாயக நிலம் சந்தித்தது
உந்தன் நாளேட்டில் குறித்து வை மே-18
உனக்கு நிரந்தர கடன் என்பதை
தந்தவனுக்கு திருப்பி கொடுக்காமல் விட்ட
மரபல்ல எங்கள் மரபு
எந்த ரூபத்திலும் எங்கள்
சந்ததியினருக்கு விட்டதையே
செலுத்திக் கொண்டு இருக்கின்றோம்
உலகில் தமிழர்கள் உனக்கென்ன
விளம்பர பொருட்களா? உன்
வியாபார போட்டிக்கு-
சண்டையிடவும் சமாதானம் செய்யவும்
அண்டை நாட்டிற்கு அடிபணிந்து
மண்டியிட்டு சொல்வதை செய்யவும்
மீண்டும் சண்டையிடு சமாதானம்பேசு
கண்டபடி அறிக்கையிடு ஊர்வலம் நடத்து
சொன்னபடி தேர்தலில் நில் என
தொண்டு தொட்டு நீ செய்ததையே செய்கின்றாய்
அன்றுதொட்டு உன் வியாபாரம் அரசியில்
என்றுமே மாறாமல் இருக்க
கண்டணங்கள் செய்கின்றாய்
வெருட்டுகிறாய் மனித நேயம்
மனிதஉரிமை என்றெல்லாம்
ஆருக்கு இந்த அறிக்கையெல்லாம்
போருக்கு பின்னர் நடந்த உண்மைகளை
பட்டியலாய் தந்தபின்னும்
ஊருக்கு ஓர்கதையும் உங்களுக்குள் ஓர்கதையும்
போதுமினி போட்ட நாடகங்கள் இனிதே நடக்கட்டும்.
பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.இன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.
நாம் சமையலில் சேர்க்கும் சில பொருட்கள் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும். இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது. உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அதிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.
லெப்டின் என்ற சுரப்பி தான் மூளைக்கு பசி குறித்த சிக்னல் அனுப்பி, உண்ண தூண்டுகிறது. இதில் ஏற்படும் கோளாறுகளினால் தான் அடிக்கடி பசி எடுப்பது (அல்லது) பசியே இல்லாமல் இருப்பது போன்றவை எல்லாம். பூண்டு, இந்த சுரப்பியை சீராக்கி பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகமாக கொழுப்பு செல்கள் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோரெபினிஃப்ரைன் எனும் சுரப்பி வெளிப்படுகிறது. இது நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டிவிட்டு உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீரடைவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.
பூண்டு பல் – 3
1 எலுமிச்சை பழத்தின் சாறு
1 கப் தண்ணீர்
ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் நசுக்கிய மூன்று பூண்டு பற்களை எலுமிச்சை நீரில் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸை இரண்டு வாரம் பருகி வந்தால் நீங்களாகவே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.