நீர்ப்பாசன மற்றும் நிர்வழங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஷா அவர்களினால் திறந்து வைக்கப்பவுள்ள நீர் வழங்கள் சபையின் வடமத்திய மாகாண காரியாலயத்திற்கு இணைந்ததாக நவீன ஆய்வுகூடம் மற்றும் வடமாகாணக் காரியாலயம் திறப்பது சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டம், மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஷா அவர்களினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதேச செயலாளர் கா.உதயராசா, விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், விவசாய அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள மீன் சந்தையின் கழிவுகளால் மக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர்.
வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள மீன் சந்தையிலிருந்து வெளியேரும் கழிவு நீர் முறையான வடிகாலமைப்பு இன்மையால் மீன்சந்தைக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் செல்கின்றது.
இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக வர்த்தகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..
வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள இந்த மீன் சந்தையின் கழிவு நீர் எமது வர்த்தக நிலையத்திற்கு முன்னால் செல்கின்றது. இந்த துர்நாற்றத்துடன் எம்மால் இருக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.
அகில இலங்கை தமிழ் மொழித்தின வலய மட்டப் போட்டிகள் வவுனியா தெற்கு கல்வி வலயமட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்றது. பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்த இந்நிகழ்வுகள் கடந்த 30.04.2016 தொடக்கம் 15.05.2016 வரை நடைபெற்றது.
இவ் வலயமட்ட தமிழ்த்தின போட்டியில் 12 நிகழ்வுகள் முதலாம் இடங்களையும் 6 நிகழ்வுகள் இரண்டாம் இடங்களையும்,1 நிகழ்வு மூன்றாம் இடத்தினையும் பெற்றது.
முதல் இடங்களைப் பெற்ற 12 நிகழ்வுகள்; மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்ற உள்ளன. வவுனியா தெற்கு கல்வி வலயமட்டத்தில் நடைபெற்ற தமிழ்தின போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் அதி கூடிய இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எஞ்சியது உயிர்தான் அஞ்சி அஞ்சி
அடுத்தடுத்து பலஊர்கள் எங்கள்
குஞ்சுகளை சுமந்து குலங்காக்க
குரல்கொடுத்தோம் எங்கள் குரல்வளை
தங்கி நிற்கும் இறுதி மூச்சுவரை
துஞ்சித்தும் இரக்கமில்லா அரக்கர் தேசங்கள்
நஞ்சூட்டிய எமக்கு ஞானஉபதேசம் செய்கிறது
இன்று அகவை ஏழாச்சு
அன்று இருந்த நிலையிலேயெ
நாமின்றும்..
இழந்த எம்உறவுகளை ஒருகண்
நினைந்து கண்சொரிய கடிதம்
எழுதும் நிலையிலேயே
நாமின்றும்..
மே-18 நாள் உங்கனை மறக்காது
யாருக்கு கதை சொல்லும்
பார் இது ?
பார் இதை
பார்முழுதும் பார்த்திருக்க தானே
ஊர்கூடி ஓலமிட்டோம்
யாருக்கு யார் அனுதாபம் –
நேருக்கு நேர் நின்று நீ குத்து
நேரான அழித்தொழிப்பென்று வரலாறு எழுதுமதை
ஆருக்கும் தெரியாது என்று
கண்ணைமூடி பால்குடித்த பூனைக்
கதை சொல்லு ஆருக்கும் நீ நிமிர்ந்து –
போருக்கு துாபமிட்ட மேற்குலகும் வடக்கும்
வேருக்கு தீமூட்டியபின்
வெறும் பூ பிஞ்சு காய் இலைகளுக்கும்
கிளைகளுக்கும் பசளையிட்டு
பயிர் வளர்ப்பாய் பாசாங்கு
காட்டும் காரியத்தை இனி நிறுத்து
உலகின் எந்த தாயக நிலமும்
சந்திக்காத பேரிழிவை எங்கள்
தாயக நிலம் சந்தித்தது
உந்தன் நாளேட்டில் குறித்து வை மே-18
உனக்கு நிரந்தர கடன் என்பதை
தந்தவனுக்கு திருப்பி கொடுக்காமல் விட்ட
மரபல்ல எங்கள் மரபு
எந்த ரூபத்திலும் எங்கள்
சந்ததியினருக்கு விட்டதையே
செலுத்திக் கொண்டு இருக்கின்றோம்
உலகில் தமிழர்கள் உனக்கென்ன
விளம்பர பொருட்களா? உன்
வியாபார போட்டிக்கு-
சண்டையிடவும் சமாதானம் செய்யவும்
அண்டை நாட்டிற்கு அடிபணிந்து
மண்டியிட்டு சொல்வதை செய்யவும்
மீண்டும் சண்டையிடு சமாதானம்பேசு
கண்டபடி அறிக்கையிடு ஊர்வலம் நடத்து
சொன்னபடி தேர்தலில் நில் என
தொண்டு தொட்டு நீ செய்ததையே செய்கின்றாய்
அன்றுதொட்டு உன் வியாபாரம் அரசியில்
என்றுமே மாறாமல் இருக்க
கண்டணங்கள் செய்கின்றாய்
வெருட்டுகிறாய் மனித நேயம்
மனிதஉரிமை என்றெல்லாம்
ஆருக்கு இந்த அறிக்கையெல்லாம்
போருக்கு பின்னர் நடந்த உண்மைகளை
பட்டியலாய் தந்தபின்னும்
ஊருக்கு ஓர்கதையும் உங்களுக்குள் ஓர்கதையும்
போதுமினி போட்ட நாடகங்கள் இனிதே நடக்கட்டும்.
பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.இன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.
நாம் சமையலில் சேர்க்கும் சில பொருட்கள் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும். இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது. உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அதிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.
லெப்டின் என்ற சுரப்பி தான் மூளைக்கு பசி குறித்த சிக்னல் அனுப்பி, உண்ண தூண்டுகிறது. இதில் ஏற்படும் கோளாறுகளினால் தான் அடிக்கடி பசி எடுப்பது (அல்லது) பசியே இல்லாமல் இருப்பது போன்றவை எல்லாம். பூண்டு, இந்த சுரப்பியை சீராக்கி பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகமாக கொழுப்பு செல்கள் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோரெபினிஃப்ரைன் எனும் சுரப்பி வெளிப்படுகிறது. இது நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டிவிட்டு உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீரடைவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.
பூண்டு பல் – 3
1 எலுமிச்சை பழத்தின் சாறு
1 கப் தண்ணீர்
ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் நசுக்கிய மூன்று பூண்டு பற்களை எலுமிச்சை நீரில் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸை இரண்டு வாரம் பருகி வந்தால் நீங்களாகவே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.
கார் விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த பிறகும் அவருக்கு பிரசவம் பார்த்து வைத்தியர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றினர்.அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட் ரைடர் ஆகியோர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான சாராவை அழைத்துக் கொண்டு ரைடர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லும் வகையில் வீட்டில் இருந்து சுமார் 60 மைல் தூரத்தில் அவர்களது கார் விபத்துக்குள்ளானது.தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாரா மற்றும் ரைடர் இருவரையும் காரில் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சாரா ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சாராவிற்கு மருத்துவர்கள் அவசரமாக சிசேரியன் செய்தனர்.அழகான பெண் குழந்தை உயிருடன் பிறந்தது. குழந்தை 2.24 கி.கி எடையுடன் இருந்தது. இருப்பினும் பிறந்தவுடன் குழந்தை வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டது.
அந்த குழந்தை கண்களை திறந்து வைத்திய தாதியின் விரல்களை பற்றிக் கொண்டதாக சாராவின் தங்கை தெரிவித்தார். தாய் இறந்த பிறகு குழந்தை பிறந்தால் ஒட்சிசன் பற்றாக்குறையால் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.இருப்பினும் குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தையான மேட் ரைடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலிவுட் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இன்று தென்னிந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் காஜல் அகர்வாலின் லிப்லாக் முத்தக்காட்சி தான்.இவர் Do Lafzon Ki Kahani என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் போது படத்தின் காட்சிக்காக ஒரு லிப்லாக் முத்ததை அவரது அனுமதி இல்லாமல் ஹிந்தி நடிகர் ரன்தீப் கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது.ஆனால், பின் இதற்கு படக்குழு முறையான விளக்கமும் அளித்தது.
இதற்கு ரசிகர்கள் தரப்பில், காஜல் ஏற்கனவே பிஸ்னஸ்மேன், ஆர்யா-2 ஆகிய படங்களில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுனுடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார்.ஏன், இதை மட்டும் பெரிதாக்க வேண்டும், ஒரு வேளை படத்தின் விளம்பரத்திற்காக அவர்களே இதை செய்ததாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர். ஒரு வேளை உண்மையாகவே ரன்தீப் அப்படி நடந்து கொண்டிருந்தால் இவை கண்டிக்கத்தக்கது தான்.
சூர்யா நடித்த 24 படம் விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வசூல் சாதனை படைத்தது.கேரளா, ஆந்திரா, அமெரிக்கா என அனைத்து பகுதிகளிலும் லாபம் தந்துவிட்டது. இப்படம் ரூ 100 கோடியை கடந்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், தமிழகத்தில் இப்படத்தின் வசூல் எதிர்ப்பார்த்தது போல் அமையவில்லையாம், தமிழ் சினிமாவை சார்ந்த ஒரு நடிகரின் படம் மற்ற மாநிலம், நாடுகளில் நன்றாக வசூல் செய்து, தமிழகத்தில் குறைவான வசூல் வந்தது கொஞ்சம் படக்குழுவிற்கே வருத்தம் தான்.
இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசித்து வருகிறது.பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்கு எந்த அணியும் சென்று விளையாடுவதில்லை.
இதனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் அந்த அணி போட்டிகளை நடத்தி வருகிறது. ஆனால் அங்கு போதிய வருமான அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு கிடைப்பதில்லை.இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களின் விபரம் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 425 குடும்பங்களைச் சேர்ந்த 1651 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 309 குடும்பங்களைச் சேர்ந்த 1150 பேர் பாதிப்புக்குள்ளானதாகவும், 43 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும 21 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,
வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த் 56 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,
மழை வெள்ளம் காரணமாக வவுனியா மரக்காரம்பளைப் பகுதியில் பொதுநோக்கு மண்டபத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் தற்காலிகமாக தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கிவருவதாகவும், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான ஏற்பாடுளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இறந்து போனதாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் நேரடியாக வந்து வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கும் கடந்த 16ம் திகதி வாக்குபதிவு நடந்தது. வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு நேற்று முன்தினம் சின்ன அல்லாபுரத்தைச்சேர்ந்த மணி(வயது 70), சகாதேவன்(வயது 80) ஆகிய இருவரும் வாக்களிக்க வந்தனர்.
அவர்களிடம் ‘பூத் சிலிப்’புகளும் இருந்தன. ஆனால் வாக்காளர் பட்டியலில், சரிபார்த்த போது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை குறிக்கும் வகையில் சிவப்பு மையால் கோடிட்டு, ‘டி’ என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டு இருந்தது. எனவே, இருவரையும் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறவே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்துவேலூ ர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், மணி, சகாதேவன் ஆகியோரிடம்இருந்து, “வாக்களிக்க அனுமதி தாருங்கள், முறையான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இறந்தவர்களாக குறிப்பிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எழுத்து பூர்வமாக கடிதம் எழுதி வாங்கிய பின்னர் வாக்களிக்க அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் ஏழாம் ஆண்டு நினைவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மத குருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ரவிகரன், டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இடம்பெயர்ந்து வவுனியா வேப்பங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் தற்காலிகமாக வசித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இக் கிராமத்திற்கு வடிகாலமைப்பு வசதி இன்மையால் இவ் அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை விமானப்படை அதிகாரிகள் இடம்பெயர்ந்த இம் மக்களின் குடியிருப்புக்களை பார்வையிட்டதுடன் அவர்களின் தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இப் பொதுநோக்கு மண்டபத்தில் கைக்குழந்தைகளுடன் தாயார் படும் துயரங்கள் , சின்னச் சிறுவர்கள் உணவுக்காக காத்திருக்கின்ற நிலை மனதை உருக்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா வேப்பங்குளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உணவுப் பொதிகளை வழங்கியது.
வவுனியா கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் வசித்து வந்த 13 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேப்பங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கான மதிய உணவு, சிறுவர்களுக்கு பிஸ்கட், மைலோ, குடிநீர் போன்றவற்றை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வழங்கி வைத்தது.
தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தா.சலசலோசன் மற்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் இம் மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
பொதுமக்களினால் தற்போது தங்கியிருக்கும் பொதுநோக்கு மண்டபத்திற்கு மின்சார வசதியினை ஏற்படுத்தி தருமாறு மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வவுனியா வேப்பங்குளம் பொது நோக்கு மண்டபத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர்.
வவுனியாவில் AMMU BEAUTY CARE & ACADEMY PVT LTD இனால் மணப்பெண் ஆடை அலங்காரமும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நெல்லி ஸ்ரார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச சபைச் செயலாளரும் அழகுக்கலை நிபுணருமான திருமதி சுகந்தி கிசோர் அவர்களும் தையல் மற்றும் அழகுக்கலை ஒருங்கிணைப்பாளர் திருமதி D.J.குணரட்ணம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் அழகுக்கலைப் பயிற்சியை முடித்த இருபது மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.