பொலிஸாருக்கு எதிராக 6 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடு!!

NPC Srilanka

கடந்த 6 மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே இதனை தெரிவித்துள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம், பொது மக்களின் முறைப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமை, மற்றும் பக்கச்சார்பாக செயற்படுகின்றமை குறித்து இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சமூக வலைதளங்கள் ஊடாக வெளியிடப்படும் காணொளிகளை கொண்டு பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்ததாக உரிய ஆதாரங்களுடன் அவர்களுக்குகெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய 2015ம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தால் முடியாவிட்டால் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள் : வித்தியாவின் தாயார்!!

Vidya Mother

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது இல்லத்தில் குடும்பத்தார் உறவினர்களால் வித்தியாவை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

புங்­கு­டு­தீவு 9ம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணா என ஒரு சிறிய குடும்­பத்தின் கடைக்­குட்டியை பறிகொடுத்து விட்டு கண்ணீர் விழிகளோடு வித்தியாவின் தாயார் கலங்கி நிற்கின்றார்.
நேற்றைய தினம் வித்தியாவின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,

எனது மகளுக்கு இந்த கொடூரமான சம்பவம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் எனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

என் செல்லத்துக்கு நீதி கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என் செல்லத்தை வக்கிரமான முறையில் படுகொலை செய்துவிட்டு நல்லவர்களைப் போன்று சட்டத்தின் முன் காட்டிக் கொள்கிறார்கள்.

ஜனாதிபதி எம் குடும்பத்தை சந்தித்து எமக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றார். ஆனால் இன்றுடன் சரியாக ஒருவருடம் பூர்த்தியாகியும் நீதி கிடைக்கவில்லை.

குற்றவாளிகளை தண்டிக்க சட்டத்தால் முடியாவிட்டால் தயவு செய்து எங்களிடம் ஒப்படைக்கவும். நாங்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குகின்றோம்.

தயவு செய்து என் மகளுக்கு நீதியை பெற்றுக்கொடுங்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். விரைவாக நீதிவான் நீதிமன்றில் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

மேலும் உறவினர்கள் தெரிவிக்கையில்,

எங்கள் பிள்ளையை கொலை செய்தது. இவர்கள் தான் எமக்கு நன்றாக தெரியும். சட்டம் இவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும்.

எங்கள் பிள்ளையை கட்டுகோப்பாக வளர்த்தோம் பழி தீர்ப்பு என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்துவிட்டார்கள். மனதின் வலி பிள்ளைகளை பறிகொடுத்தவர்களுக்கு தான் தெரியும்.

குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் நாம் கும்பிடும் தெய்வம் கைவிடாது என தெரிவித்தனர்.

இவ் நினைவஞ்சலியில் உறவினர்கள் அயலவர்கள் கலந்து கொண்டனர்.

வித்தியாவுக்கு நீதி கிடைக்குமா? சட்டம் நீதி காக்குமா?

சர்வதேச சொற்பொழிவுக்கலை போட்டியில் தகுதி பெற்றுள்ள இலங்கை மாணவி!!

Student

இங்கிலாந்து லண்டன் தலைநகரில் இடம்பெறும் சர்வதேச ‘பொது விரிவுரை’ சொற்பொழிவுக்கலை போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாணவியொருவர் அரை இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கொழும்பு மியூசியஸ் வித்தியாலயத்தின் தேவினி நெத்மா வணிகஆராச்சி என்ற மாணவியே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் 09ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை இடம்பெற்ற இப் போட்டிக்கு 56 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை ஆங்கிலம் பேசுபவர்கள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய ‘பொதுமக்கள் விரிவுரை’ சொற்பொழிவுக்கலையின் வெற்றியாளரான தேவினி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

யாழில் வெசாக் கொண்டாட்டங்களை பாரியளவில் நடாத்த ஏற்பாடு!!

Vesak

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி வெசாக் கொண்டாட்டங்களை பாரியளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கு தொடக்கம் நாகவிகாரை வரை வெசாக் வலயம் அமைக்கப்படும் எனவும் வடக்கில் 12 விகாரைகளில் வெசாக் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல்வேறு இடங்களிலும், 61 தானசாலைகள் அமைக்கப்படும். ஒன்பது சிரமதான நிகழ்வுகள், ஆறு சில் ஓதும் நிகழ்வுகள், 85 வெசாக் விளக்குகள், எட்டு வெசாக் விளக்கு போட்டிகள், பக்திப்பாடல், போதி பூஜைகள், உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடத்தப்பட்ட இளைஞன் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!!

van

வாரியப்பொல பிரதேசத்தில் கடத்தப்பட்ட இளைஞன் குறித்து விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட இளைஞன் வாரியப்பொல, மல்வத்த பகுதியில் உள்ள பிரபலதொழிலதிபர் ஒருவரின் மகன் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுவனை மீட்பதற்காக ரூபா 20 மில்லியன் மீட்பு பணம் செலுத்துமாறுகடத்திய குழு கோரியுள்ளதாக இளைஞனின் தந்தை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு வெள்ளை வானில் தனது மகனை ஒரு குழு கடத்திச் சென்றுள்ளதாக இளைஞனின் தந்தைபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட இளைஞன் 20 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய குடிவரவு சட்டம் இன்று முதல் மேலும் இறுக்கம் : குடியேற்றவாசிகளுக்கு சிக்கல்!!

UK-border

ஐக்கிய இராச்சியத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் புதிய குடிவரவுச் சட்டமொன்று (Immigration Act 2016) அமுலுக்கு வந்துள்ளது.

இச்சட்டமானது அந்நாட்டுக்கு குடிபெயர்ந்து நிரந்தர வதிவுடமை மற்றும் பிரித்தானிய குடியுரிமை பெறாதோர் தொடர்பிலான பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

முக்கியமாக அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அந்நாட்டின் நலன்புரி சேவைகளை அணுகுதல், வேலை செய்தல், வங்கிக் கணக்குகளை கையாளுதல், வாகன அனுமதிப் பத்திரங்களை எடுத்தல் மற்றும் வாடகைக்கு வீடுகளை எடுத்தல் தொடர்பில் மிகக் கடுமையான விதிமுறைகளைக் கூறுகின்றது.

UK

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!!

School Srilanka

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக உயர்த்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சீருடை வழங்குவதில் நிலவிய திருட்டு மற்றும் மோசடிகளை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபா பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளயுள்ளார்.

இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வவுச்சர்களை இலகுவில் உரிய காலத்திற்குள் விநியோகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை அச்சுறுத்திய இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்!!

SL

ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்ட விரோதமான முறையில் தொடர்பு வைத்திருந்த இரண்டுரஷ்யர்கள் மற்றும் இலங்கையர் ஒருவர் சேலங்கூர் பகுதியில் மார்ச் 28 மற்றும்ஏப்ரல் 22ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுமலேசியாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என்று மலேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மூவரும் சீலங்கூர் சிறப்பு இராணுவ அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுமலேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் டேன் கலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டு வந்த 25மற்றும் 28 வயதையுடைய இரண்டு ரஷ்ய பிரஜைகள் முதலில் கைது செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய ஐ.எஸ் தீவிரவாதத்தின் உறுப்பினர்கள் என்று இந்த இருவர்களும்சந்தேகத்தின் பேரில் துருக்கி அதிகாரிகளால் இந்த வருடம் பெப்ரவரி மாதம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் துருக்கியில் இருந்து மார்ச் மாதம் மலேசியாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் 2012ம் ஆண்டுக்கான சட்டத்தின் படி குற்ற பாதுகாப்புபிரிவின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கையர்கிள்ளான் பள்ளத்தாக்கில் தொலைக்காட்சி தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் 42வயதுடையவர் என்று கலிட் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர் தன்னுடைய முகப்புத்தக கணக்கில் இலங்கையின் ஜனாதிபதி மற்றும்பிரதமரை கொலை செய்வதாக அச்சுறுத்தி தரவு ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கையிலேயே தேடப்படும் பட்டியலில் குறித்த நபர் உள்ளடங்குகின்றமைகுறிப்பிடத்தக்கது. சந்தேக நபர் குடிவரவு சட்டம் 6ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மலேசியஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் ஏப்ரல் 27ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு பொலிஸ் அதிகாரிகளின்தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மலேசிய பிரதி பொலிஸ் மா அதிபர்டேன் கலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

உயர் ஆபத்து நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் குறித்து முழுகண்காணிப்புடன் இருக்குமாறு மலேசிய குடிவரவு திணைக்கள பொலிஸ் அதிகாரிகளிடம்கலிட் கூறியுள்ளார்.

வவுனியாவில் நடந்த கோர விபத்தில் 12 பேர் படுகாயம்!!(படங்கள்)2ம் இணைப்பு

 
வவுனியா பன்றிக்கெய்தகுளம் இராணுவ விஷேட அதிரடிப்படையினர் முகாமை அண்டிய பகுதியில் இன்று (14.05.2016) அதிகாலை 4 மணியளவில் மருத்துப் பொருட்களை ஏற்றிச் சென்ற குளிரூட்டி வாகனத்துடன் பேரூந்து மோதுண்டதில் பேரூந்தில் பயணித்தவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்..

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று அதிகாலை தென்பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து வவுனியாவிலிருந்து மருந்துப் பொருட்களை விநியோகம் செய்யும் குளிரூட்டி வாகனம் பாதை ஓரத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த போது சுற்றுலா சென்ற பேரூந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பயணிகள், குளிரூட்டி வாகனத்தில் சென்றவர்கள் உட்பட12 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா புளியங்குளத்தில் கோர விபத்து!!(படங்கள்)

image-964992dd8d0b41040666095e8af61bc480d03d273e120a4339c0e6909cab43b4-Vimage-1c025d5e5d69ba82b08306999faf688ba4dbf8ad1bd6a57f01a6fb79af4ddacc-V image-1f9274894cbf782ce7ae76bb1b722202459547da3d7a23a12ac71b2f39a63ba6-V image-3bc2966297ef4a35270bdbdae22a28e64b11676d933c03b1683e34452bebade7-V image-5ad27d0f2070fcbb7b401104925dc457929b442a4337f40166bacb8227ed7492-V image-5c22712136eb5e2ede209f6cfe01a8bb5d36a7919a7a7f75b3b12fad49c4c0ce-V image-55b066ff0e2932131bd800e786b6c4480a2374aaf2e572d16e28f7ba19da046c-V image-410c7bbe62fa1f897b8a9e58ad8cdb01321d4cbf0e67d1c11ff0c1ed91565431-V image-6061c2afb1a1ca6428b7417ff4713813d184e8ece38a5978ba7a3315515753f2-V image-6623c10926207cb54bea7917988ce9bd4dcf066f8cb7f32b7917bddd59129906-V image-48898e9c6ce32eb02885ad697655e018d8b60c0f0181ef2a1c170436f57b5f49-V image-964992dd8d0b41040666095e8af61bc480d03d273e120a4339c0e6909cab43b4-V image-8777295fefe4c27fd7efd8104e6bcc6c323573b5601ea722cf96fb5a1eddd024-V image-416562007abc3d535a7957dc923eeb8034e93621acc90050e7837d61ccdb56f4-V image-b69e8fa9663e83b88a3f10def1ccc115d242382f61e5f452c11e4f2da1c387b9-V image-cb63785360bec1d8b6bd3c26c801744865f6a1cefed71dda1df1833ee9e2d2c2-V image-ccb47bcf477f219d93fbf812c97f619a6e555f4904eb5b645f0b941c8cbcaf6c-V image-f07655e554f9bddcabd636b841fc4ad627226755f5876a93e96fd0a7d0841013-V image-ec2f4fdb11f35325c75ee64888aa781c4ed5a501a48aa8074272462c25fea447-V image-e862d754ee065f7cf265d453bafa4f6e47c63d03d0421d3f4c9afb672cd494ec-V image-e232de068555b3f351dbeb9727ca130056cd407381e65e500d818d91e06d54f7-V

வவுனியா புளியங்குளத்தில் கோர விபத்து!!(படங்கள்)

 
வவுனியா புளியங்குளம் இராணுவ முகாமிக்கு அருகே இன்று(14.05.2016) அதிகாலை இடம்பெற்ற பஸ் – வான் விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

முழுமையான தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

image-1c025d5e5d69ba82b08306999faf688ba4dbf8ad1bd6a57f01a6fb79af4ddacc-V image-1f9274894cbf782ce7ae76bb1b722202459547da3d7a23a12ac71b2f39a63ba6-V image-3bc2966297ef4a35270bdbdae22a28e64b11676d933c03b1683e34452bebade7-V image-5ad27d0f2070fcbb7b401104925dc457929b442a4337f40166bacb8227ed7492-V image-5c22712136eb5e2ede209f6cfe01a8bb5d36a7919a7a7f75b3b12fad49c4c0ce-V image-55b066ff0e2932131bd800e786b6c4480a2374aaf2e572d16e28f7ba19da046c-V image-410c7bbe62fa1f897b8a9e58ad8cdb01321d4cbf0e67d1c11ff0c1ed91565431-V image-6061c2afb1a1ca6428b7417ff4713813d184e8ece38a5978ba7a3315515753f2-V image-6623c10926207cb54bea7917988ce9bd4dcf066f8cb7f32b7917bddd59129906-V image-48898e9c6ce32eb02885ad697655e018d8b60c0f0181ef2a1c170436f57b5f49-V image-964992dd8d0b41040666095e8af61bc480d03d273e120a4339c0e6909cab43b4-V image-8777295fefe4c27fd7efd8104e6bcc6c323573b5601ea722cf96fb5a1eddd024-V image-416562007abc3d535a7957dc923eeb8034e93621acc90050e7837d61ccdb56f4-V image-b69e8fa9663e83b88a3f10def1ccc115d242382f61e5f452c11e4f2da1c387b9-V image-cb63785360bec1d8b6bd3c26c801744865f6a1cefed71dda1df1833ee9e2d2c2-V image-ccb47bcf477f219d93fbf812c97f619a6e555f4904eb5b645f0b941c8cbcaf6c-V image-e232de068555b3f351dbeb9727ca130056cd407381e65e500d818d91e06d54f7-V image-e862d754ee065f7cf265d453bafa4f6e47c63d03d0421d3f4c9afb672cd494ec-V image-ec2f4fdb11f35325c75ee64888aa781c4ed5a501a48aa8074272462c25fea447-V image-f07655e554f9bddcabd636b841fc4ad627226755f5876a93e96fd0a7d0841013-V

திருமணமாகி ஒரு வருடத்துக்குள் ஒரே சமயத்தில் 4 குழந்தைகள்!!

babyகன­டாவைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று திரு­ம­ண­மாகி ஒரு வரு­ட­மா­வ­தற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரே­ச­ம­யத்தில் ஒரே உருவத் தோற்­றத்தைக் கொண்ட 4 பெண் குழந்­தை­க­ளுக்கு பெற்­றோ­ரா­கியுள்­ளது. கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி குழந்­தை­களின் பிர­சவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.இவ்­வாறு குழந்­தைகள் பிர­ச­வ­மா­வது 15 மில்­லி­ய­னுக்கு ஒன்று என இடம்­பெறும் அபூர்வ நிகழ்­வாகும்.

அல்­போர்ட்டா பிராந்­தி­யத்­தி­லுள்ள எட்­மொன்டன் நகரைச் சேர்ந்த பெதனி மற்றும் ரிம் வெப் என்ற ஜோடிக்கே அவர்­க­ளுக்கு திரு­ம­ண­மாகி ஒரு வருட கால­மா­வ­தற்கு முன்னர் 4 குழந்­தைகள் ஒரே­ச­ம­யத்தில் கருத்­த­ரித்து பிறந்­துள்­ளன.அவர்கள் இதற்­காக இன­வி­ருத்தி சிகி ச்சை எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.பிறந்த குழந்­தை­க­ளுக்கு அபிகெயில், எமிலி, கிரேஸ் மற்றும் மக்கேலா என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

உலகின் அதிக வயதான நபர் காலமானார்!!

Susannah- Mushatt Jones

உலகின் மிக அதிக வயதான நபர் தனது 116வது வயதில் நியுயோர்க் நகரில் காலமானார். சூசானா முஷாட் ஜோன்ஸ் என்ற இந்த மூதாட்டி 1899ம் ஆண்டில் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஒரு பண்ணையில் பிறந்தார். கடந்த பல நாட்களாக அவர் உடல் நலமின்றி இருந்தார் என்று மருத்துவர்கள் கூறினர்.

அவரது மறைவுக்குப் பின்னர் தற்போது, அவரைக் காட்டிலும் சில மாதங்களே இளையவரான , எம்மா மொரானோ என்ற இத்தாலியப் பெண்மணிதான் உலகின் மிக மூத்தவர் என்ற பட்டத்தை சுமக்கிறார்.

அவர்தான் 19ம் நூற்றாண்டில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கும் கடைசி நபர் என்று கருதப்படுகிறது.

வித்தியா கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி : எப்போது கிடைக்கும் நீதி?

Vidya

யாழ்ப்பாண மக்களிடையே பெரும் கொந்தளிப்பை அல்லது சமூகப் பயத்தை ஏற்படுத்திய, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மறுநாள் காலையில் பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்டதையடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸாரால் விசாரணை தொடங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட அடுத்தடுத்து 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இன்றுவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவியின் சந்தேகநபர்களை 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தச் சென்ற போது, அங்கு ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்களால் நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளானது. நீதிமன்றம் மாத்திரமின்றி சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணிகளின் கார் மற்றும் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் ஒன்றும் உடைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு, படிப்படியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததுடன் ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, அதன்பின்னர் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.

அதனையடுத்து, இன்னும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13ஆவது சந்தேகநபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

வழக்கின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் டி.என்.ஏ பரிசோதனையானது இன்னமும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்;ப்பிக்கப்படவில்லை. பரிசோதனைகளை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனம், அறிக்கையைத் தரவில்லை என குற்றப்புலனாய்வு பொலிஸார் மன்றில் கூறியிருந்தனர்.

எனினும், நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக கட்டவேண்டிய பணம் கட்டாமையால் அறிக்கை தாமதமானது என நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது. அடுத்த வழக்குத் தவணையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஒரு வழக்கின் சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தால் ஒரு வருடத்துக்கு மேல் விளக்கமறியலில் வைக்க முடியாது. ஆனால், வழக்கு விசாரணையானது இன்னமும் முடியாத காரணத்தால் மேலும் 3 மாதகாலத்துக்கு சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைத்து, வழக்கை விசாரிப்பதற்கு அனுமதி கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை (11.05), மனுவை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், சந்தேகநபர்களை தடுத்துவைக்க அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த வழக்கின் சான்றுப்பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கை, குற்றப்புலனாய்வுப் பொலிஸாரின் முழுமையான விசாரணை அறிக்கை, வழக்கில் சந்தேகப்படும்படி விடயங்களை தெளிவுபடுத்தும் அறிக்கை என்பன நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் தொடர்ந்தும் புங்குடுதீவில் இருப்பது பாதுகாப்பில்லை என்பதை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற கெட்டதெனியாவ சேயா சந்தவமி என்ற சிறுமியின் கொலை தொடர்பில் 184 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

13 வயதுச் சிறுமியுடன் ஒரே வீட்டில் இருந்த இளைஞன் கைது!!

Girl

13 வயது சிறுமி ஒருவரை சட்டவிரோதமாக தனது இல்லத்தில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை களுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி கடந்த இரு வாரங்களுக்கு முதல் காணாமல் போயுள்ளதாக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய மேற் கொண்ட விசாரணைகளுக்கு அமையவே களுத்துறை வடக்கு பிரதேசத்தில்உள்ள ஓர் வீட்டில் குறித்த சிறுமி இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அந்தச் சிறுமியுடன் ஒன்றாக இருந்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இருவரையும் இன்யை தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவிற்கு தெரிவு!!

Mahela

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மஹேல ஜயவர்தன முதல் தடவையாக கலந்து கொள்ளவுள்ளார்.

மஹேல ஜயவர்தன 1996ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 1161 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அத்துடன் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட்டும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

50 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் : 9 பேர் படுகாயம்!!

 
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டம் சாமஸ் பிரிவில் கொட்டகலை பகுதியிலிருந்து மேபீல்ட் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (13.05.2016) வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் 9 பேர் பயணித்துள்ளதாகவும், 9 பேரும் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மாணவர்களும், 9 வயதுடைய சிறுமி மற்றும் இரண்டு முதியோர், நான்கு ஆண்கள் அடங்களாக 9 பேர் பயணித்துள்ளமை குறிப்பிடதக்கது.

IMG_4025 IMG_4027 IMG_4029 IMG_4032 IMG_4034 IMG_4037 IMG_4044 IMG_4048 IMG_4050 IMG_4053 IMG_4056 IMG_4062