அயர்லாந்தில் சிறை கைதி விழுங்கிய கைத்தொலைபேசி அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது!!

h

அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 29 வயது கைதி சிறைக்காவலர்களுக்கு பயந்து சிறியரக மொபைல் போன் ஒன்றை விழுங்கியுள்ளார். விழுங்கிய 6 மணிநேரம் கடந்த பின்னர், அந்நபர் அங்கிருந்த ஊழியர்களிடம் நான் மொபைல்போனை விழுங்கிவிட்டேன் என கூறியுள்ளார்.

மொபைல்போனை விழுங்கிய காரணத்தால், அந்நபருக்கு தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.எண்டோஸ்கோப் மூலம் ஒரு நீண்ட மெல்லிய நெகிழ்வான குழாயின் வழியாக ஒளியைப் பாய்ச்சி வீடியோ கேமராவின் வழியாக பார்த்தபோது, உணவுக்குழாயின் இடையில் அவரது வயிற்றுக்குள் செல்போன் சிக்கி இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

செல்போனை விழுங்கிய பத்துமணி நேரத்துக்கு பின்னர் வயிற்றின் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை செய்து, அந்த செல்போனை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். சுமார் ஒருவார மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் அவன் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிகிச்சை முடிந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த கைதி தற்போது நலமாக இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் : பலத்த பொலிஸ் பாதுகாப்பு!!

 
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குராப்பண நிகழ்வு தற்போது முத்தையா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன் நிகழ்வி்ல் சமயத்தலைவர்கள், பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு கருதி பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

13214732_480133525513301_1049760935_o 13214870_480133625513291_1815671497_o 13223562_480133635513290_1954640472_o 13225132_480133552179965_137109199_o 13225185_480133548846632_2100184246_o 13225252_480133558846631_1473325058_o

உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்!!

Water-Should-I-Drink

சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.உணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் உங்களால் இரண்டு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் தண்ணீர் வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகளின் செயலாற்றல் குறைய ஆரம்பிக்கும்.

இரத்த ஓட்டத்தில் இருந்து மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல் பாகங்களும் ஒவ்வொன்றாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இதனால், தான் சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு தண்ணீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி தண்ணீர் பருகுவதால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்….

45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

60 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

 

சுரேஷ் ரெய்னாவுக்கு பெண் குழந்தை!!

Raina

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவிற்கும் அவரது மனைவி பிரியங்கா செளத்ரிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஸ்ரேயன்ஷி (Shreyanshi) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொல்கத்தாவுடனான ஐபிஎல் ஆட்டத்துக்குப் பிறகு, மனைவியை அருகில்இருந்து கவனித்துக்கொள்வதற்காக நெதர்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார் ரெய்னா.

ரெய்னாவின் மனைவி பிரியங்கா நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார்.
2008 முதல் ஐபிஎல்-லில் ஆடிவரும் ரெய்னாஇதுவரை ஒரு ஐபிஎல் போட்டியைக்கூட தவறவிட்டதில்லை.

மனைவியின் பிரசவத்துக்காக அவர் நெதர்லாந்து சென்றதால் சில போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரெய்னாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு சக வீரர்கள், டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமுத்திரகனியை காதலிக்கும் பிரபல நடிகை?

Samuthirakani

சமுத்திரகனி எப்போதும் புரட்சிகரமான விஷயங்களை செய்பவர். இதை தன் படத்திலும் இருக்க வேண்டும் என எண்ணுவார்.அந்த வகையில் இவர் தற்போது அச்சமின்றி என்ற படத்தில் நடித்துள்ளார். இதுநாள் வரை இவர் நடித்த அனைத்து படங்களிலும் திருமணம் ஆனவராகவே நடித்துள்ளார்.

முதன் முறையாக சைவம் படத்தில் நடித்த நித்யா இவரை காதலிப்பது போல் இந்த படத்தில் சமுத்திரகனி கதாபாத்திரம் இருக்குமாம். சமுத்திரகனி காதல் காட்சிகளில் நடிப்பது இதுவே முதன் முறை.

முறிகண்டி பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!!

Body

முல்லைத்தீவு, முறிகண்டி வசந்தநகர் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் பெண்ணின் சடலமொன்று காணப்படுவதாக நேற்றிரவு கிடைத்த தகவலையடுத்து, மாங்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவிலுள்ள பாழடைந்த கிணற்றிலேயே சடலம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு விஷயத்துக்காக கருத்து கேட்ட விஷ்ணு – ரசிகர்களின் பதில் என்ன?

vishnu

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்தும், தயாரித்தும் வருகிறார் விஷ்ணு விஷால். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் விஷ்ணு விஷால் தான் நடித்த முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் எதில் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.

அதில் ரசிகர்கள் இன்று நேற்று நாளை படத்திற்கே அதிக வாக்குகள் அளித்துள்ளனர். அனேகமாக இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வவுனியாவில் சமூக அபிவிருத்தி மன்ற நிகழ்ச்சித்திட்டம் 2016!!

 
வவுனியா மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி மன்ற நிகழ்ச்சித்திட்டம் 2016 வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (13.05.2016) மாலை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.திரேஸ்குமார், சிறப்பு விருந்தினராக திருமதி. எஸ்.புத்மரஞ்சன் பணிப்பாளர், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம் வவுனியா மாவட்ட செயலகம், பிரதம கணக்காளர், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம், மாவட்ட செயலகம் வவுனியா. மற்றும வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சிசு திரிய புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கொடுப்பனவு சான்றிதழ் வழங்கல், சிப்தொற புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல், சமூக அபிவிருத்தி மன்ற நிதிக்கொடுப்பனவு வழங்கல், புத்தாண்டு சேமிப்பில் திறம்பட செயற்பட்ட சங்கத் தலைவர்களை கௌரவித்தல், புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் மகாசங்க மட்டத்தில் அதி கூடிய சேமிப்புச் செய்த 10 வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசில் வழங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

P1200354 P1200361 P1200363 P1200364 P1200367 P1200368 P1200369 P1200370 P1200371 P1200372 P1200373 P1200374 P1200376 P1200377 P1200378 P1200385 P1200390 P1200391 P1200392 P1200394 P1200397 P1200398 P1200401 P1200404 P1200405 P1200406 P1200407 P1200408 P1200409 P1200412 P1200414 P1200416 P1200418 P1200419 P1200420 P1200422 P1200423 P1200424 P1200425 P1200427 P1200428 P1200429 P1200430 P1200431 P1200433 P1200434

உலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்!!

iBall_compbook_excelance

உலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள காம்ப்புக் எக்ஸலன்ஸ் (CompBook Excelance ) ரக மடிக்கணனிகள் உலகின் விலை குறைந்த மடிக்கணனி என்ற பெருமையைப் பெறுகிறது.

விண்டோஸ் 10 இயங்குதளத்துடனும், 11.6 இன்ச் திரை அளவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மடிக்கணனி 2 ஜி ரெம் வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 32GB சேமிப்பு வசதி கொண்டதாகவும், இதனை 64GB வரை அதிகரித்துக்கொள்ளும் வகையிலும் CompBook Excelance வெளிவரவுள்ளது.

அதேபோல, வைஃபை, புளூடூத் வசதிகள் மற்றும் 3 யுஎஸ்பி போர்ட்டுகள் உடனும் இது வெளிவரவுள்ளது. அதேபோல, CompBook வரிசையில் எக்செம்பிளேர் (Exemplaire) ரக மடிக்கணனிகள் ரூ. 13,999 விலையில் 14 இன்ச் திரை அளவுடன் வெளிவரவுள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ.10,459 விலையில் குறைந்த விலை மடிக்கணனி மொடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்!!

boys

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் சோயிப் அஹ்மது (13), அப்துல் ரஷீத் (9) சகோதரர்கள் வசித்து வருகின்றனர்.

பிறந்ததிலிருந்தே இவர்கள் பகலில் இயல்பாகவும் இரவில் அசைவுகளற்று ஜடப்பொருள் போலவும் மாறி விடுகின்றார்கள்.
சூரியன் மறையத் தொடங்கியதும் பேசவோ நடக்கவோ கண் விழிக்கவோ முடியாமல் அசைவின்றிக் கிடக்கின்றனர்.

தமது மகன்மார் இருவரும் சூரியனிலிருந்தே உடலுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்வதாக சோயிப் அஹ்மது, அப்துல் ரஷீத்தின் தந்தை முகம்மது ஹாசிம் நம்புகிறார்.

ஆனால், இதனை மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். காரணம், இவர்களை இருட்டறையில் பகல் முழுதும் வைத்த போது இயல்பாகவே இருந்தனர். அதேபோல, மழைக் காலங்களில் சூரியன் வராதபோதும் இயல்பாகத்தான் இருக்கின்றனர்.

எவ்வாறாயினும், பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்த்தும் இந்த மர்ம நோய்க்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.

“நானும் என் கணவரும் இரத்த உறவுகள். எங்களுக்கு 4 குழந்தைகள். இதில் சோயிப், ரஷீத் இருவருக்கும் இந்த நோய் இருக்கிறது. மூன்றாவது குழந்தைக்கு இல்லை. 1 வயதான கடைசிக் குழந்தையும் தற்போது இதே பாதிப்பிற்கு உள்ளாகிவிட்டான்” என்கிறார் சிறுவர்களின் அம்மா.

மருத்துவப் பேராசிரியரான ஜாவித் அக்ரம் இந்த இருவருக்கும் உதவுவதற்கு முன்வந்திருக்கிறார்.

தற்போது பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் சோயிப்பும் ரஷீத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் முறையாக இரவில் இருவரும் நடந்திருக்கிறார்கள்! “விரைவில் நாங்கள் குணமாகி விடுவோம். நான் ஆசிரியராக வேண்டும் என விரும்புகிறேன். ரஷீத் இஸ்லாமிய அறிஞராக வேண்டும் என்று விரும்புகிறான்’’ என்று தெரிவித்துள்ளான் சோயிப்.

நாளை முதல் நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!!

Srilanka Rain

நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை மேலும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த குழப்பநிலை படிப்படியாக தாழமுக்கமாக மாறி, நாட்டிலும், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியங்களிலும் வானிலையில் தாக்கம் செலுத்துமென எதிர்ப்பார்ப்பதாக திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை (15.05) முதல் 18 ஆம் திகதி வரை, நாட்டிலும், கடற் பிராந்தியங்களிலும் கடும் காற்று மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டார்.

இரத்தினபுரி, அயகம, கிரிஎல்ல, பெல்மதுளை, எஹெலியகொட, பலாங்கொடை மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!!

Kolkal

பூமி போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்த 550 கோள்களை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இவ்வாறான கோள்கள் இனங்காணப்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்தை விட்டு தொலைவில் பயணிக்கும் 1 284 புதிய கோள்களை தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை, பூமியை ஒத்த அளவுடையதும் மிக அருகில் உள்ளதுமான கோள்கள், பூமியை விட்டு 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுவது தெரியவந்துள்ளது.

அத்துடன், 9.5 டிரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கோள்களின் பயணித்தை அவதானிக்க, போதியளவு வசதியுடைய விண்கலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஒரே நாளில் 29 பேர் பலி!!

lightning over the city

பங்களாதேஷில் பல்வேறு மாவட்டங்களில் மின்னலின் தாக்கத்தால் 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

சிரஜ்காஞ்ச் மாவட்டத்தில் 5 பேரும், பாப்னா, கிஷோர்காஞ்ச், பிரக்மன்பர்கியா ஆகிய மாவட்டங்களில் 4 பேரும்,ராஜ்ஷாகி,காஜிபூர், போக்ரா மற்றும் நாட்டோர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

டாக்காவின் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும் மின்னல் தாக்கியதில் பலியாகியுள்ளனர்.

மேலும், மின்னல் தாக்கியதில் காயமடைந்த மூன்று சிறுவர்களுக்கு டாக்கா மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது வயல்களில் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கொலை செய்யப்பட்டார்!!

Abuse

காலி, மொரவக்க- களுபோவிட்டியன ருவன்கந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15 வயதான மாணவி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, லொறி ஒன்றில் வந்த சந்தேக நபர், மாணவியை கடத்திச் சென்றுள்ளார். மாணவியை பாழடைந்த வீடு ஒன்றுக்குள் கொண்டு சென்று சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் மொரவக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் வீட்டுக்கு சென்ற சந்தேக நபர் மாணவியை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார்.

எனினும் மாணவியின் வீட்டுக்கு அருகில் சந்தேக நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கொலையை செய்ததாக கூறப்படும் இரண்டு பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

40 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மொரவக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் ரீதியாக தொல்லை : இந்திய முன்னாள் கால்ப்பந்தாட்ட அணித் தலைவி!!

Sona story

இந்­திய கால்­பந்து வீராங்­க­னை­க­ளுக்கு பயிற்­சி­யா­ளர்கள், நிர்­வா­கிகள் பாலியல் ரீதி­யாக தொல்லை கொடுத்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

இதை இந்­திய மகளிர் கால்­பந்து அணியின் தலை­வி­யாக இருந்த சோனா சௌத்­தரி தற்­போது அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்ளார்.

2002ஆம் ஆண்டு கால்­பந்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தான் எழு­திய “கேம் இன் கேம்” என்ற சுய­ச­ரிதை புத்­த­கத்தில் பல்­வேறு உண்­மை­களை வெட்ட வெளிச்­ச­மாக்­கி­யுள்ளார்.

அதில் அவர் கூறி­யுள்­ள­தா­வது, இந்­திய கால்­பந்து வீராங்­க­னை­களின் நிலைமை மோச­மாக உள்ளது. அவர்கள் பயிற்­சி­யா­ளர்கள், நிர்­வா­கி­களால் உடல்­ரீ­தி­யா­கவும், மன­ரீ­தி­யா­கவும் பாதிக்கப்ப­டு­கின்­றனர்.

வேறி­டங்­க­ளுக்கு விளை­யாட சென்றால் பயிற்­சி­யா­ளர்­களும், நிர்­வா­கி­களும் வீராங்­க­னை­களின் அறை­க­ளிலேயே தங்­குவர்.

இது குறித்து பல முறை புகார் தெரி­வித்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இவர்­களின் தொல்லை­களில் இருந்து தப்ப வீராங்­க­னைகள் நெருங்­கிய தோழிகள் போல் நடித்­தனர் என்று தெரிவித்துள்ளார்.

உலகின் அதிக மாசு நிறைந்த 5 நகரங்கள் பட்டியலில்!!

Polution

உலகின் அதிக மாசுபட்ட நகரமாக இதுவரை டெல்லி இருந்து வந்த நிலையில், டெல்லியை பின்னுக்கு தள்ளி ஈரானின் சாபோல் நகரம் அதிக மாசுபட்ட நகரமாக விளங்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், அதிக மாசு நிறைந்த உலகின் 5 நகரங்களில் இந்தியாவில் உள்ள 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

காற்றில் உள்ள நுண் துகள்களை குறிப்பிடும் பிஎம் 2.5 ஆண்டு சராசரி 122 என்ற அளவுக்கு இருப்பதால், உலகின் 10 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி 9வது இடத்தில் உள்ளது. கோடைக்காலத்தில் புழுதி புயலால் பாதிக்கப்பட்ட ஈரானின் சாபோல் நகரம் அதிக அளவு பிஎம்.2.5 அளவீடு 217 என்ற அளவுக்கு உள்ளதால், அதிக மாசு நிறைந்த நகரமாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நான்கு நகரங்களும் இந்திய நகரங்களே ஆகும். கவாலியர், அலகாபாத், பாட்னா, மற்றும் ராஜ்பூர் ஆகியவை அதிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தை வகிக்கின்றன.

உலகின் 20 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் 10 இடங்கள் இந்திய நகரங்களாகும். 2014 ஆம் ஆண்டில் 13 இந்திய நகரங்கள் இடம் நினைவு கூறத்தக்கது.