இந்துக் கோவிலில் லண்டன் மேயர் சாதிக் கான்!!

Sadik Khan

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன் நகர புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள டூட்டிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கடந்த பத்தாண்டுகளாக பதவி வகித்துவரும் சாதிக் கான், மனித உரிமைகள் துறை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

லண்டன் நகரின் மேயராக பொறுப்பேற்றுக்கொள்ளும் முதல் இஸ்லாமியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 3ம் திகதி சாதிக் கான் லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலுக்கு சென்றார். அங்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார் சாதிக் கான்.

சில நாட்களுக்கு முன் தான் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

லண்டனில் இருக்கும் இந்தியர்களுடன் நெருக்கமான உறவை பராமரித்து வரும் சாதிக் கான், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதரவாகவும், இந்தியாவுடன் நல்லுறவை பராமரிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் தேவாலயம் நிர்மாணிக்கப்படுவதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு!!

Jeyalalitha

தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்ட வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அதனை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி மறுத்திருந்தார்.

யாழ் ஆயரின் வேண்டுகோளின்படி கிறிஸ்தவ விவகார அமைச்சின் நிதியுதவியுடன் தேவாலயம் ஒன்றே அங்கு நிர்மாணிக்கப்படுகிறது என்றும், கடற்படை முகாம்கள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அங்கு தேவாலயம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தை இடித்து விட்டு, அங்கு புதிய தேவாலயம் கட்ட இலங்கை அரசு திட்டமிட்டு இருப்பதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி பற்றி உங்கள் தனிப்பட்ட கவனத்துக்கு உடனடியாக கொண்டு வருவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இலங்கை அரசின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக அந்த தீவுக்கு சென்று தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி வருவதற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

கச்சத்தீவில் இலங்கை அரசால் தன்னிச்சையாக புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்படுமானால், எதிர்காலத்தில் அந்த புனித அந்தோணியார் ஆலயத்துக்கு சென்று வழிபடும் உரிமையை தடுத்து, இடிக்கப்பட நேரிடலாம் என்று இந்திய மீனவர்கள் சந்தேகப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவில் புதிய புனித அந்தோணியார் ஆலயம் கட்டும் முன்பு தமிழ்நாட்டு மீனவர்களிடம் கலந்து பேச வேண்டும் என்று இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களிடம் பேசிய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.

மேலும் தமிழன மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கச்சத்தீவில் அந்தோணியார் கட்டப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசு ஏற்கும்படி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பௌத்த தேரர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

Monk

கல்கமுவ, சியம்பலேவ பிரதேசத்தில் உள்ள விகாரையின் தேரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விகாரையின் விருந்துபசாரசாலையில் தேரர் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

52 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முஸ்லிம் பெண்களை பாதிக்கும் இளவயதுத் திருமணம்!!

Wedding

இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அவர்கள் சமூக மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் என புதிய ஆய்வொன்றில் கண்டறிப்பட்டுள்ளது.

குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது, முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வை மேற்கொண்டவரும் பெண்ணியல் சட்டத்தரனியுமான ஹஸானா சேகு இஸத்தீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த சிறுமிகளின் கல்வி உரிமைகள் நிராகரிக்கப்படுவதுடன், அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கும் தயாராவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர்கள் திருமணம் செய்து சில காலத்திலேயே விவாகரத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றும் சட்டத்தரணி ஹஸானா இஸத்தீன் கூறினார்.

இந்த விஷயம் தொடர்பில் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்று முஸ்லிம் தரப்பினர் கூறுகின்றனர் எனவும், முஸ்லிம்கள் இல்லாத அரச தரப்பினரோ மதம் சார்ந்த இந்த விஷயத்திற்கு தங்களால் சுயமாக முடிவெடுக்க முடியாது என கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இதை மத பிரச்சினையாக பார்க்காமல் சிறுமிகளின் உடல், உளரீதியான பிரச்சினையாக பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என பொதுவான சட்டம் இருக்கின்ற நிலையில், மதத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் சிறு வயது திருமணங்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னதாக, இது தொடர்பில் பிபிசிக்கு கருத்து தெரிவித்திருந்த மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்திராணி பண்டார, இது மதம் சார்ந்த விஷயம் என்பதனால் தங்களால் முடிவு எடுக்க முடியாது எனவும், முஸ்லிம் தரப்பினரின் பரிந்துரைகளுக்கமையே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் அவதி!!

Rain

அதிக மழைக் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சேதங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பல வீடுகளில் மழை வௌ்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்யும் மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் தகவல்கள் திரட்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய மழைக் காணரமாக மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதிக மழைக் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவதாகவும் நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அசம்பாவிதங்கள் தொடர்பில் 117 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இரண்டு கோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட இளைஞன் பொலிஸாரினால் மீட்பு!!

van

இரண்டு கோடி ரூபா கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்ட வாரியபொல பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் நிக்கவரட்டியவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களக்கு முன்னர் 20 வயதான இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றிருந்தனர். 20 வயதுடைய மொஹம்மட் ஆசிக் என்ற இளைஞரே, வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த கடத்தலின் பின்னர் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரப்பட்ட நிலையில், குறித்த இளைஞர் நிக்கவரட்டியவில் வைத்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம்!!

 
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் இன்று(14.05.2016) மாலை 3.30 மணியளவில் முத்தையா மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சமயத்தலைவர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவோன்று முன்னைய காலத்தில் இயக்கிய சமயத்திலும் அவ் அமைப்பின் நடவடிக்கைகள் அரசியல் சார்ந்து இருப்பதாகவும் எனவே சரியான பிரஜைகள் குழுவொன்று வவுனியா மாவட்டத்திற்குத் தேவை எனக் கருத்தில் கோண்டு இப் புதிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப் புதிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் அங்குரார்ப்பணம் மற்றும் அங்கத்தவ தெரிவும் இன்று நடைபெற்றது.

அரசியல் கட்சி சார்ந்தவர் அங்கத்தவராக இருக்கலாமா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசகராக இருக்க வேண்டும், பிரஜைகள் குழுவின் பதிவு , யாப்பு என பல்வேறு வினாக்கள் தொடுக்கப்பட்டன.

புதிய பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன் நிகழ்வுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20160514_152033 20160514_152040 20160514_152049 20160514_152105 20160514_152111 20160514_152119 20160514_152134 20160514_152238 20160514_152254 20160514_152259 20160514_153121 20160514_153124 20160514_154813 20160514_154831 20160514_154955 20160514_163219 20160514_165146 20160514_165205 20160514_170027 20160514_170048 20160514_171047 20160514_171052 20160514_171102 20160514_171111 20160514_171119 20160514_171419

நடிகை நமீதா பிரசாரத்துக்கு அழைக்கப்படாதது இதற்காக தான்!!

Nametha

திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நடிகை நமீதா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.

அப்போது அவர் தேர்தல் பிரசாரத்துக்கு விரைவில் வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அவரை பிரசாரத்துக்கு புக் செய்ய செய்யவில்லை. இதனால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் நமீதாவின் உதவியாளர் கூறுகையில், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர வேண்டும் என்பது நமீதாவின் விருப்பம். ஆனால் பிரசாரத்துக்கு தலைமைக் கழகத்தில் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இதனால் அவர் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அடிப்படை உறுப்பினராகச் சேரும் பிரபலங்கள், பிரசாரத்துக்கு வரவேண்டும் என்பதில்லை என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சமரசம் விளக்கம் அளித்துள்ளார்.

சில அதிமுக பிரமுகர்கள் கூறுகையில், அரசியல் மேடையில் பேசும் அளவுக்கு நமீதாவுக்கு பக்குவம் இல்லை. அதுமட்டுமல்லாது அவருக்கு தமிழும் தெரியாது. இதனால் எதையாவது பேசி மீம்ஸ், வீடியோ என கேலிப்பொருள் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அழைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் : கருத்துக் கணிப்பு முடிவுகள்!!

TN-General-Election-2016

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 140 இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் தலைமையிலான குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிமுகவுக்கு 65 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியரும், மக்கள்ஆய்வு மையத் தலைவருமான பேராசிரியர்ச.ராஜநாயகம் மற்றும் அவரது குழுவினர் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை நேற்று சென்னையில் வெளியிட்டனர்.

அப்போதுஅவர்கள் கூறியதாவது, மக்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழகம் முழுக்க சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான மக்களின் எண்ண ஓட்டங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஏப்ரல் 24ம் திகதி முதல்மே 10ம் திகதி வரை நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பில் 8,064 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
இந்த தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை அமைக்கும்என்ற கேள்விக்கு திமுக அணிக்கு 42.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுக அணிக்கு 36.6 சதவீதம் பேரும், தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா அணிக்கு 7.9 சதவீதம், பாமக அணிக்கு 3 சதவீதம் என மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு 41.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா-31.7 சதவீதம், விஜயகாந்த் -10.1 சதவீதம், அன்புமணிக்கு 10.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடந்தால், பெரும்பான்மை வாக்குகளுடன்திமுக முதலிடத்தைப் பிடிக்கும். திமுகவுக்கு 40.7 சதவீதம், அதிமுக-31.8 சதவீதம், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணி-10.4 சதவீதம், பாமக5.9 சதவீதம், நாம் தமிழர் 1.8 சதவீதம், பாஜ-1.6 சதவீதம், சுயேச்சை 0.7 சதவீதம், நோட்டாவுக்கு-5.5 சதவீதம் பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டியே என இறுதி வடிவம் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் திமுக 118 முதல் 120 இடங்கள் வரை பிடிக்கும்.

காங்கிரஸ் 8-10 இடங்கள், அதிமுக 94-96 இடங்கள், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா 6 முதல் 8 இடங்கள், பாமக 5-7 இடங்கள், பாஜ1-3 இடங்கள் மற்றவை 2-4 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளது. திமுக-அதிமுகவுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த இடைவெளி இதேவேகத்தில் மேலும் தொடரும் நிலையில் திமுக140 இடங்கள் வரை பிடிக்கும், காங்கிரஸ் 15 இடங்கள் வரையும், அதிமுக 65 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.

முதல்வர் காலில் விழுந்து கெஞ்சிய எம்எல்ஏக்கள்!!

Odisa

ஒடிசா சட்டப் பேரவையில், முன்னாள் சட்ட அமைச்சர் ரகுநாத் பட்நாயக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டமுதல்வர் நவீன் பட்நாயக், இரங்கல் கூட்டம் நிறைவடைந்தவுடன் வெளியேற முயன்றார்,

அப்போது, இடஒதுக்கீடு காலி இடங்கள் சட்டத்தை அமல்படுத்தக்கோரி எதிர்கட்சிகளின் எஸ்சி, எஸ்டி, எம்எல்ஏக்கள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டார், இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் பிரபுல்லா மஜ்ஜி தெரிவிக்கையில், மாநில மக்கள்தொகையில் 38% ஆக இருக்கும் எஸ்.சி., எஸ்.டி பிரிவினரின் நலனுக்காக காலில் விழுந்து கெஞ்சுவதில் தவறில்லை.

ஆனால் இரக்கமற்ற மனம் படைத்த முதல்வர் எங்களைப் புறக்கணித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஆளுங்கட்சியானபிஜு ஜனதாதள செய்தித் தொடர்பாளர் சசிபூஷன் பெஹெரா தெரிவிக்கையில், சட்டப்பேரவையின் புனிதத்தை மீறக்கூடாது. ஜனநாயக முறையின் படியே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மனைவியை குத்தி கொன்ற கணவன்!!

1 (14)

களுத்துறை, தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.குடும்பத் தகராறு காரணமாகவே குறித்த பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றுபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

 

கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சிறை!!

Mobile checking

சவுதி அரேபியாவில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனிமனித சுதந்திரத்தை இது பாதிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை கிளம்பியுள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் மட்டும் 35,000 கருத்துகள் இது தொடர்பாக பதிவேற்றப்பட்டுள்ளது. கணவரின் கைப்பேசியை சோதனையிட்டாலே மனைவிக்கு சவுக்கடியா என கேட்டு இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர்.

வாழ்க்கை இன்னலின்றி இருக்க வேண்டும் என்றால் கணவன் தனது தனிப்பட்டவாழ்க்கை முறையை மனைவியுடன் பகிர்ந்துகொள்வதே சரி என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்னொருவர் சவுதியில் கடைபிடித்துவரும் இன்னொரு முக்கிய பிரச்னையை சுட்டிக்காட்டியுள்ளார். மனைவியரை அடித்து துன்புறுத்தும் கணவர்களுக்கு என்ன தண்டனை? மனைவிக்கு போதிய உரிமைகளை வழங்காத கணவர்களுக்கு இந்த சமூகம் என்ன தண்டனை வழங்கவிருக்கிறது? சட்டம் இதுபோன்ற காரணிகளை களைய முன்வர வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள குடிமக்களின் சமூக நலன் கருதியே இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்துவதாக முதிர்ந்த சட்ட நிபுணரான தெம்யத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வைத்தியசாலையில் சீ.டீ.ஸ்கான் இயந்திரம் பழுது நோயாளிகள் அவதி!!

16_big

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் காணப்பட்ட சீ.டீ.ஸ்கான் இயந்திரம் பழுதடைந்திருப்பதாக பாராமெடிக்கல் சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.குறித்த இயந்திரத்தினூடாக தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதனால் அதன் பராமரிப்பு பணிகள் தாமதப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் இயந்திரத்தை சரி செய்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும் என்று அதன் செயலாளர் தர்மகீர்த்தி ஏபா கூறியுள்ளார்.அவசர சிகிச்சைப் பிரிவில் பழுதடைந்த நிலையில் உள்ள ஸ்கான் இயந்திரம் திருத்துதல் பணிக்காக விடப்பட்டுள்ளதால் தற்போது நோயாளிகளின் விடுதிகளில் உள்ள ஸ்கான் இயந்திரம் மூலமாக பரிசோதனைகள் வழமை போன்று இடம்பெறுவதாக தர்மகீர்த்தி ஏபா மேலும் கூறினார்.

 

ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கோரும் இலங்கை கிரிக்கெட் சபை!!

Kusal-Thilanga

ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக இலங்கை அணியின் தொடக்க வீரர் குஷால் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்திருந்தது.

இந்நிலையில் அவர் ஊக்க மருத்து எடுத்துக் கொண்டதாக வெளியான அறிக்கையில் பிழை இருந்ததாக கூறி அவர் மீதான தடையை ஐசிசி உடனடியாக நீக்கியது. ஆனால் இந்த சம்பவத்தால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை இழப்பீடாக கேட்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குஷால் பெரேரா மீது பொய்யான அறிக்கை சமர்பிக்கப்பட்டது, இதனால் நஷ்டஈடு கேட்க உரிமை உள்ளதாக கூறியுள்ள கிரிக்கெட் சபை, இதற்கு முன்னதாக குஷாலை அணியில் இணைத்துக் கொள்வதே முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

தந்தையின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமல் சுத்தியலால் அடித்துக் கொன்ற மகள்கள் வீடியோவில் வாக்குமூலம்!!

news_18-02-2015_35HUMMERONHEAD

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் அருகே தந்தையின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமலும், இனியும் சகித்து கொள்ள முடியாமலும் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இரு மகள்கள் வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனினும், இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளூர் போலீசார், இந்த வழக்கை திசைதிருப்ப முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த நபர் சுவரில் தலைமோதி ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாக கூறிவரும் போலீசார், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், இந்த கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கும் பெண்களின் வீடியோவில், பிரேதத்தின் அருகாமையில் ரத்தம் தோய்ந்த சுத்தியல் காணப்படும் நிலையில் போலீசார் எதை மறைக்க இந்த நாடகம் ஆடுகின்றனர்? என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

 

புதிய உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்!!

Ruwanda Cricket

சிறிய ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் எரிக் துசீங்கிஸிமானா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது அவர் நீண்ட நேரம் வலைப்பயிற்சி செய்து இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேர வலைப்பயிற்சி சாதனையை முறியடித்துள்ளார்.

ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே அவர் தொடர்ச்சியாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

உள்நாட்டு போரினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ருவாண்டாவில் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆதரவு சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.