வாழ்க்கை வரமா பாரமா?

Vaalkkai

வாழ்வதற்காய் பிறந்தவர்கள் நாம் உயர்வாய்
வாழ்வின் பொருள்ளுணர்ந்து வாழ்தல் வேண்டும்.
வீழ்வதெல்லாம் வெற்றியின்முதல் படியாக எண்ணி
வீழ்ந்தே கிடந்திடாமல் எழுதல் நன்றே.
ஏழ்மை நிலை வந்தெம்மை வாட்டினாலும்
எளிமைகாத்து பொறுமையுடன் வாழ வேண்டும்.

தேடியவர் செல்வம் செல்லும் போது
தேகமதன் உயிர் பிரிவைத் தடுத்ததில்லை.
நாடியவருக்கு ஈயாத குணம் படைத்திடார்
நாளும் பாரமவர் உலகிற்குத் துன்பம்.
வாடியவர் மனம் கண்டு வாட்டம் கொள்ளார்
வாழும் வாழ்விலும் அர்த்தமுண்டோ.

புகழ் வந்து உச்சியிலே சென்றபோதும்
எளிமை பேணும் குணம் வரமே.
இகழ் சேர்ந்துன்னைச் சாய்த்த போதும்
இழந்திடாத துணிவில் எதிர் கொள்வாய்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
அன்போடு பொறுமையும் காத்தல் அறமே.

தாய் அன்பிற்கு நிகராய் ஏதுமுண்டோ
தாயவள் பாசம் போல் செல்வமுண்டோ.
சேயாக சிறந்து நீயும் சிறப்புடனே
சீராட்டியவள் மனம் போற்ற வாழ வரமே.
நோய் கொண்டு பாயோடு படுத்திட்டாலும்
நோகாமல் தாயவள் நலம் காப்பாய்.

உழைப்பாலே உயர்ந்தவர்கள் கோடியுண்டு.
உலகில் உழைப்பவர்க்கே உயர்வான வாழ்வுண்டு.
பிழைப்பதற்கு உலகில் வழிகள் உண்டு.
பிரிந்திடாத முயற்ச்சி உனக்குள் வேண்டும்.
தழைத்திடும் வேட்டிடவே வாழை மீண்டும்.
தந்துவிடு நாளை உனதாக வென்று.

தரம் கண்டு படித்துவிடு வாழ்ந்தோர் நூல்கள்.
தனித்துவமாய் உறுதிபெறுவாய் உனக்குள் நீயே.
உரம் கொண்டு வளர்த்துவிடும் பயிரைப் போலே-நல்
உணர்வு கொண்டு உறுதிபெற்று வெல்வாய் நாளை.
வரம் என்று மாற்றிவிடு வாழ்வை நன்றே
பாரம் என்று எண்ணலாமோ வீணே.

விண் பொழியும் மழைக்குத் தடைதானுண்டோ.
விரைந்து வரும் கதிரவனை தடுப்போருண்டோ.
மண் விளைச்சல்தர மறந்த துண்டோ.
மனம் வைத்தாள் முடியாதது ஏதுமுண்டோ.
கண் வைத்து கருத்தாய் நாளும் முயன்று
கடமைதனை செய்திடப் பலனே உண்டு.

-குமுதினி ரமணன்-
யேர்மனி.

வவுனியாவில் வித்தியாவின் 1ம் ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

 
புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை 8.00 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப் பிரார்த்தனையில் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் ஜெயந்திநாதன் குருக்கள் மற்றும் பிரபாகரக் குருக்கள் உட்பட தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9)

வவுனியா நெளுக்குளம் குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : மக்கள் விசனம்!!

 
வவுனியா நகரிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் நெளுக்குளம் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நெளுக்குளம் குளத்திற்கு அருகில் இரு மதுபானசாலைகள் அமைந்துள்ளமையால் மதுப்பிரியர்கள் குளக்கட்டுக் கரையிலிருந்து மதுபானத்தினை அருந்திவிட்டு குளத்தினுள் போத்தல்களைப் போடுவதாகவும், அவ்விடத்தில் நடமாடும் விற்பனை நிலையங்களை நடாத்தும் வியாபாரிகள் கழிவுகள் மற்றும் குப்பைகளை குளத்தினுள் கொட்டுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இக் குளத்தில் குப்பைகள் மற்றும் மீன் கழிவுகள் கொட்டப்படுவதனால் குளத்தின் அழகு சீர்கெடுவதோடு தூர்நாற்றமும் வீசுகின்றது. உரிய அதிகாரிகள் இவ் விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

வவுனியா நெளுக்குளம் குளம் தற்போது குப்பைகள் மற்றும் மதுபான போத்தல்களின் இருப்பிடமாக காட்சியளிக்கின்றது.

எம்மைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும், நீராதாரங்களான குளங்களையும் பாதுகாப்பது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும். எமது கடமையைச் செய்ய மறந்து அதிகாரிகளையும் மற்றவர்களையும் குறைகூறுவது அர்த்தமற்றது.

சிந்திப்போம் செயற்படுவோம்.. எமது வளங்களை நாமே பாதுக்காப்போம்.

20160512_145022 20160512_145029 20160512_145032 20160512_145037 20160512_145040 20160512_145046 20160512_145057 20160512_145102 20160512_145141 20160512_145145 20160512_145149

வவுனியாவைச் சேர்ந்த 7வயதுச் சிறுவன் கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை!!

 
கராத்தே சுற்றுப்போட்டியில் வவுனியாவைச் சேர்த்த 7 வயது மாணவன் 10 வது தங்கம்பதக்கத்தை பெற்றுள்ளார்.

கண்டி பேராதனை பல்கலைகழகத்தில் நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவை சேர்ந்த நந்தகுமார் ஷபீந்தன் 7 தொடக்கம் 8 வயதுப் பிரிவில் காட்டன் பகுதியில் ஒரு தங்கப்பதக்கமும், குமித்தே பகுதியில் ஒரு தங்கப்பதக்கமும் ஆக இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்று பத்தாவது தங்கப்பதக்கத்தை எட்டியுள்ளார்.

இம் மாணவன் தனது வயதை விட அதிகமான தங்கப்பதக்கங்களை பெற்று வவுனியா மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

news (1) news (2) news (3) news (4) news (5)

தற்கொலைக்கு முன் செல்பி எடுத்து வீடியோவாக வெளியிட்ட இளம்பெண்!!

Sucide

பிரான்சில் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முன் தான் தற்கொலை செய்துகொள்ளும் வீடியோவை எடுத்து பெரிஸ்கோப் மூலம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பெயர் தெரியாத இளம்பெண் ஒருவர் பாரிசில் உள்ள புறநகர் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளும் வீடியோவில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் பலாத்காரம் செய்தவர்களையும் பற்றி அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் அவர்கள் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக அதில் அவர் கூறியுள்ளார்.

அந்த பெரிஸ்கோப் வீடியோவை ஏற்கனவே யாரோ ஒருவர் பார்த்து தங்களுக்கு தகவல் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெரிஸ்கோப் என்பது ஒரு ஸ்மார்ட்போன் செயலி. இந்த செயலி மூலம் டுவிட்டர் அக்கவுண்டை பயன்படுத்தி நேரடி ஸ்ட்ரீம் வீடியோ அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து பாரிஸ் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்களில் பயணிக்கும்போது செல்போன் பயன்படுத்தவேண்டுமா? இதோ வந்துவிட்டது சூப்பரான தொழில்நுட்பம்!!

cell-phone-use-to-be-banned-in-montana-91257_1

கார்களில் பயணிக்கும்போது விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனேகமானவர்கள் செல்போன்களை பாவிப்பதை பெரிதளவில் விரும்பமாட்டார்கள்.இதற்காக Hands Free எனும் சாதனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக Hands Free ஐ தாண்டி பல அம்சங்களைக் கொண்ட சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.ஜேரோடுச் எனும் இச் சாதனத்தை முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனமான Logitech உருவாக்கியுள்ளது.

இதனை கார்களில் பொருத்தி ஸ்மார்ட் கைப்பேசியினை இணைத்துவிட்டு விசேட அப்பிளிக்கேஷன் ஊடாக திரையில் எவ்வித தொடுகையினையும் செய்யாது செயற்படுத்த முடியும்.அத்துடன் குரல் வழி கட்டுப்படுத்தல் ஊடாக Google Maps, Spotify என்பவற்றினையும் கையாள முடியும்.இதன் விலையானது 59.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

 

சந்திரமுகி-2 ரெடியாகிவிட்டது, லோரன்ஸுடன் நடிக்கப்போவது யார் தெரியுமா?

5168dd869b8809e9ae5f043cccc96422

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு அவர்களே மீண்டும் எடுக்கவுள்ளார்.இதில் ஹீரோவாக லாரன்ஸ் நடிக்க, ஹீரோயின் தேடுதல் தற்போது நடந்து வருகின்றது.

லாரன்ஸுடன் இணைந்து காமெடியில் கலக்கப்போவது யார் தெரியுமா? வைகைப்புயல் வடிவேலு தான். இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கின்றது.

 

ஆர்வத்தில் கேட்டுட்டேன், ஆனா நடக்குமா? கீர்த்தி சுரேஷ்!!

Keerthi-Suresh-11-KEERTHY SURESH LATEST PHOTOS-CS (26)

ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் ரெமோ, தனுஷுடன் தொடரி படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக விஜய்யின் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு மற்ற நடிகர், நடிகைகளை போல திரையில் பாடவேண்டும் என்ற ஆசையிருக்கிறதாம். இசையமைப்பாளர் இமானிடம் ஒரு வாய்ப்பும் கேட்டுள்ளாராம். ஆனால் நடக்குமா என்று சந்தேகத்தில் உள்ளாராம்.

 

ஒலிம்பிக் போட்டிக்காக லஞ்சம் கொடுத்த ஜப்பான்?

olymp

2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை டோக்கியோவில் நடத்துவதற்கான உரிமையை ஜப்பான் ஏற்கனவே பெற்று இருக்கிறது. இந்த உரிமையை பெற சர்வதேச தடகள சம்மேளன தலைவர் லாமின் டியாக்கின் மகன் மூலம் பிரான்ஸ் ஒலிம்பிக் நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இதனை ஜப்பான் மந்திரி சபையின் தலைமை செயலாளர் யோஷிடே சுகா மறுத்துள்ளார். தாங்கள் நேர்மையான முறையில் தான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற்று இருக்கிறோம். லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்லாமியரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரித்தானிய பிரதமர்!!

david-cameron_1939896c
பிரித்தானியாவை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைத்து பேசியதற்காக அந்நாட்டு பிரதமரான டேவிட் கமெரூன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.பிரித்தானியாவில் இஸ்லாமிய கொள்கைகளை போதித்து வரும் சுலைமான் கனி என்பவர் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் கமெரூன் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அப்போது, ‘இஸ்லாமிய மதபோதகரான சுலைமான் கனி என்பவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்’ என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.பிரதமரை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளரான மைக்கேல் ஃபாலனும் இதனை உறுதிப்படுத்தி பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமரின் குற்றச்சாட்டால் அதிர்ச்சி அடைந்த சுலைமான் கனி தனது வழக்கறிஞர்கள் மூலம் பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் தனது கருத்திற்கு மன்னிப்பு தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளரை தொடர்ந்து பிரதமர் கமெரூனும் சுலைமான் கனியை ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைத்து பேசியதற்காக மன்னிப்பு கோருவதாகவும், இடையில் நிகழ்ந்த தவறான புரிதலுக்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கமெரூன் தெரிவித்துள்ளார்.

 

’பீட்சா’ சாப்பிட ஆசைப்பட்டு இரண்டு வீடுகளை இழந்த நபர்!!

image
கனடா நாட்டில் பீட்சா சமைத்தபோது நிகழ்ந்த தீவிபத்தால் இரண்டு வீடுகள் தீக்கிரையாக உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வான்கூவர் மாகாணத்தில் உள்ள Langley என்ற நகரில் நேற்று பிற்பகல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பிற்கு அருகில் உள்ள நபர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க, நகரில் இருந்த அனைத்து தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடியுள்ளனர்.இந்த விபத்தில் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து உருக்குலைந்து சென்றுள்ளது. அருகில் இருந்த மற்றொரு வீடும் இந்த விபத்தில் சிக்கி மிகவும் சேதமடைந்துள்ளது.

விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோது, இதே பகுதியில் வசித்து வரும் மேத்தியூ என்ற நபர் பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார்.அப்போது, ‘தீவிபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வீட்டின் உரிமையாளர் பின்னால் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ’பீட்சா’ சமைத்துக் கொண்டிருந்தார்.இந்த அறையில் இருந்து தீஜுவாலைகள் அதிகளவில் பரவியதை பார்த்தேன். அதே சமயம், வீடு தீப்பற்றி எரிவதற்கு முன்னதாக பீட்சா சமைக்கப்பட்ட இடத்திலிருந்து தான் தீ பரவியது.

எனவே, வீட்டு உரிமையாளரால் தான் இந்த தீவிபத்து நிகழ்ந்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், சரியான நேரத்தில் அப்பகுதி இளைஞர்கள் விரைந்து செயல்பட்டதால் இரண்டாவது வீடு குறைந்த சேதாரத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.இந்த தீவிபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வடக்கில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த உதவுமாறு இந்தியாவிடம் கோரிக்கை!!

1 (42)

வடக்கில் போதைப்பொருட்களின் அதிக பாவனையை கட்டுப்படுத்த இந்தியா உதவவேண்டும்என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி ஜிபார்த்தசாரதியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் கடற்பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில்பார்த்தசாரதியுடன் வடக்கு மீனவர்கள் சந்திப்பை நடத்தினர்.இதன்போது தமது இந்திய மீனவர்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை வடக்குமீனவர்கள் சுட்டிக்காட்டினார்கள் என்று யாழ்ப்பாண மீனவர் சம்மேளன தலைவர் நாகநாதிபொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவின் ஊடாக கேரளா கஞ்சா உட்பட்ட போதைப்பொருட்களின் கடத்தல்களும்அதிகரித்துள்ளதாக தாம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் போதைப்பொருட்களுக்கு வடக்கில் உள்ள தொழிலற்ற இளைஞர்கள் இலகுவில்அடிமையாகி விடுவதாக தாம் சுட்டிக்காட்டியதாகவும் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பார்த்தசாரதி, தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த போதும்அவருக்குள்ள மதிப்பின் அடிப்படையில் இந்த விடயங்களை இந்திய அரசாங்கத்தின்கவனத்துக்கு அவர் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தாம் கேட்டுக் கொண்டதாகபொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயத்தில் இந்தியாவின் உதவியை வடக்கின் ஆளுநரும் கோரியிருந்தார்.இதேவேளை இந்த பிரச்சினைக்கு இந்தியாவை மட்டும் குற்றம் சுமத்த முடியாது, வடக்கில் உள்ள மக்களும் இந்த நிலைமைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மன்னார்மாவட்ட மீனவர் சங்க தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாய்களைப் பராமரிக்க கோடிகளை செலவு செய்யும் அரசாங்கம்!!

file_2153_column_popular-dog-names

இலங்கையில் வருடமொன்றிற்கு நாய்களைப் பராமரிப்பதற்கு 63 கோடி செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடந்த வருடத்தில் மாத்திரம் நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்கான தடுப்பூசியின் செலவு 40 கோடி ரூபாய் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 2015ம் வருடத்திற்கான கணக்கெடுப்பின் படி வீடுகளில் 20லட்சம் நாய்கள் இருப்பதாகவும், இதில் 5லட்சம் நாய்கள் கட்டாக்காலி நாய்கள் உள்ளதாகவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுள் 15லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சின் பொது சுகாதார பணிப்பாளர் வீ.ஏ.எல்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் பணிப்புரைக்கு அமைய கட்டாக்காலி நாய்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, நாய்கள் பராமரிப்பு மற்றும் நாய்களுக்கான தடுப்பூசிக்காக 23 கோடி ரூபாயை அரசாங்கம் செலவு செய்வதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

போலிச் சான்றிதழ் அச்சகம் சுற்றிவளைப்பு!!

Sinhalese-Sinhala-Singhalese Marriage Certificate
புதுக்கடை நீதிமன்றம் அருகில் போலிச் சான்றிதழ் அச்சகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.10,000 ரூபாய் தொடக்கம் இந்த போலிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்கடை நீதிமன்றத்தை அண்மித்த இரண்டு மாடிக் கட்டிடத்திலேயே குறித்த போலிச் சான்றிதழ் அச்சகம் இயங்கி வந்துள்ளதாகவும், பதிவாளர் பணிப்பாளரின் முத்திரைக்கு சமனான முத்திரைகளும் அங்கிருந்து மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சுற்றிவளைப்புக்காக இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினதும், பொலிஸாரினதும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நடாத்தி வந்த நபரும், அவரது தந்தையையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், குறித்த இடத்தில் பிறப்பு பதிவுச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் புதுக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் கடலரிப்பு – மக்கள் பாதிப்பு!!

2012 - 1

மாரவில – தலவில, தொடுவாவ, ஒருவெல்பொல ஆகிய பிரதேசங்களில் கடலரிப்பு அதிகமாக இடம் பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக தமது வீடுகள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பி்ட்டுள்ளனர்.

இதை தடுக்கும் முகமாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் தற்காலிக தீர்வாக கற்கள் போடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும், அது போதுமானதாக இல்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.உரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016!!(படங்கள், காணொளி)

 
வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016 நேற்று (12.05.2016) வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகளின் பின்னர் முருகப் பெருமான் வள்ளி சமேதராக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.

10 நாள் திருவிழாவில் முதலாம் நாளான நேற்று முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலா வந்து பதர்களுக்கு அருள்புரிந்தார்.

தினமும் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.

-விதுசன்-

13094175_563868950460742_6946163348014635456_n 13151420_563872007127103_7449247563168890727_n 13151692_563872073793763_8655773522989045004_n 13164276_563872087127095_6851460417477308016_n 13165973_563871863793784_2678374807122096355_n 13166074_563868887127415_2811693307090273826_n 13173865_563869893793981_7535236792921000052_n 13177207_563869113794059_9145017314625771556_n 13177305_563869147127389_6470048849675095917_n 13177786_563872057127098_6495111965875267344_n 13178679_563869220460715_836909355173382538_n 13179127_563869287127375_5338234609983249971_n 13179350_563870397127264_4301060722394495189_n 13221609_563869263794044_6578931481331031711_n 13226896_563869320460705_539997768196006032_n 13227875_564009143780056_1417147361_n 13230060_563869020460735_4644776269022427980_n 13232903_563870503793920_7062887516349874636_n