நடிப்பை நினைத்தால் பயமாக இருக்கின்றது : திரிஷா!!

trisha

தமிழ், தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் திரிஷா. இப்போதும் நாயகியாகவே இருந்து வருகிறார்.தற்போது ‘நாயகி’ படத்தில் நடித்து வருகிறார். அவரது பாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை காட்சிகளிலும் கலகலப்பூட்டுகிறார்.

“நான் இதுவரை எல்லா விதமான வேடங்களிலும் நடித்து விட்டேன். ஆனால் காமெடியை தவிர மற்றது எல்லாம் எளிது.காமெடியை பார்க்க எளிதாக தெரியும் ஆனால், நடிப்பது சவாலானது. காமெடி காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று நினைத்தாலே பயம் வந்து விடும்.

ஜெயம் ரவியுடன் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ஓரளவு காமெடி செய்தேன். இப்போது ‘நாயகி’ படத்தில் அதிகமான நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறேன். இதிலும் பயந்து பயந்துதான் நடித்தேன். என்றாலும் நான் நடித்த போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் நான் நடித்த காமெடியை ரசித்தனர்.எனவே, தியேட்டரிலும் அனைவரும் இந்த காமெடியை ரசிப்பார்கள் என நம்புகிறேன். இனி, அதிகமான காமெடி படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

 

தோல் அலர்ஜி சிகிச்சைக்காக சமந்தா வெளிநாடு பயணம்!!

Actress-Samantha-reveals-that-she-was-diabetic-patient

சிம்புவுடன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய வேடத்தில் வந்தவர் சமந்தா. பாணா காத்தாடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ படம் அவரை பிரபலபடுத்தியது. நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

சமந்தாவுக்கு தோல் அலர்ஜி நோய் இருந்தது. வெயில் உடம்பில் பட்டாலோ அதிக வெப்பமான இடங்களில் இருந்தாலோ இந்த தோல் அலர்ஜி அவருக்கு வந்து விடும். இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் ஷங்கர் டைரக்டு செய்த ஐ படங்களுக்கு சமந்தாவைத்தான் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அப்போது அவரை இந்த தோல் அலர்ஜி நோய் கடுமையாக தாக்கியது.இதனால் அந்த இரண்டு படங்களிலும் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் வேறு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 6 மாதங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்தார்.

இதன் படப்பிடிப்பில் சமந்தாவுக்கு மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு பல நாட்கள் நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் அதிக வெப்பத்தால் அலர்ஜி ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு விளக்கு வெளிச்சத்தை குறைத்து படப்பிடிப்பை நடத்தினர். தற்போது ஓய்வு இல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இதனால் அவருக்கு மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருக்கிறார்.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் இதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட இருக்கிறது. இந்த மாத இறுதியில் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் சமந்தா கூறி இருந்தார். தோல் அலர்ஜி சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தப்பிக்க முயன்ற குடும்பம்: உயிருடன் எரித்து கொலை செய்த ஐ.எஸ்!!

Fire

ஐ.எஸ்.குழுவினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவர்கள் உள்ளிட்ட குடும்பம் ஒன்றை உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈராக்கின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிர்கூக் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த குடும்பத்தினரை கைது செய்த ஐ.எஸ்.

பொது வீதியில் வைத்து அவர்கள் மீது நெருப்பு வைத்துள்ளது. தீக்கிரையாக்கும் முன்னர் அவர்கள் மீது வாகன எரிபொளுளை கொட்டியுள்ளது. இதில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட அந்த குடும்பம் உடல் வெந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளது.இச்சம்பவம் நடந்த அதே நாளில் அவர்களது குழுவினர் 35 பேரை உயிருடன் புதைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் ஈராக்கின் வடக்கு பகுதியில் போராடிவந்தவர்கள் எனவும், அங்கிருந்து தப்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக ஐ.எஸ் அமைப்பு ஈராக்கின் வடபகுதியில் கடுமையான போராட்டத்தை சந்தித்து வருவதுடன், பெரும் இழப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றது. அரசு சார்பு கூட்டுப்படைகளின் கை ஓங்குவதை எதிர்கொள்ள முடியாமல் பல ஐ.எஸ் குழுவினரும் கைப்பற்றியுள்ள பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.இதனிடையே கூட்டுப்படைகளின் வேகம் போதவில்லை எனவும் இதுவரையில்வெறும் 5 கிராமங்களை மட்டுமே மீட்டுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பை வர்த்தக நகராக மாற்ற, அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு மாற்றம்: சம்பிக்க!!

Ugo_Colombo_Brickell

கொழும்பில் உள்ள 113 முக்கிய அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், கொழும்பு நகரை முற்றிலும் வர்த்தக நகராக மாற்றுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் உள்ள அரச நிறுவனங்களை வெளியே கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ், செத்சிறிபாயவின் மூன்றாவது கட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதற்கமையவே 113 அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பெருந்தெருக்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் காணப்படும் வாகன நெருக்கடி மற்றும் பொது மக்களின் தேவைப்பாடுகளைப் பற்றி சிந்தித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய பிரதான அமைச்சு அலுவலகங்கள் 31, திணைக்களங்கள் 50 மற்றும் அரச நிறுவனங்கள் 32 என்பனவே இடமாற்றப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.இதேவேளை குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பன பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

கனடாவின் நிதியுதவியின் கீழ் புதுக்குடியிருப்பில் பால் பதனிடல் நிலையம் கையளிப்பு!!

Milk

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பால் பதனிடல் நிலையம் நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்த பால் பதனிடல் நிலையம் கனடாவின் நிதி உதவியின் கீழ் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகர் செலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பீட்டர் பட்ச்லர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பஸ் – கொள்கலன் நேருக்கு நேர் மோதி விபத்து! 16 பேர் வைத்தியசாலையில்!!

acc-main
இறக்குவானை – கவுடுவாவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பயணிகள் பஸ்ஸொன்று கொள்கலன் ஒன்றுடன் மோதியதனாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சாரதிகள் உட்பட விபத்தில் காயமடைந்த 16 பேர் கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!!

06
மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.தேயிலை உற்பத்தியின் அதிகரிப்பால் நாளொன்றிற்கு 18 தொடக்கம் 20 கிலோ வரையான தேயிலை கொழுந்தினைப் பறிக்கக் கூடியதாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் நாளொன்றிற்கு 40 தொடக்கம் 50 கிலோ வரையான தேயிலை கொழுந்தினை பறிப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அத்துடன் தேயிலை உற்பத்தி அதிகரிப்பனைத் தொடர்ந்து 1 கிலோவிற்கு 23 ரூபாய் அடிப்படையில் சம்பளம் வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக சில தனியார் தேயிலை தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்கள் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயதுச் சிறுவன்!!

Mayan

தென் அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர்கள் தான் மாயன்கள். அவர்களை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு உலகெங்கிலும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.

மாயன்களின் நாட்காட்டியின் படி, 2012 இல் உலகம் அழியும் என்று கூறப்பட்ட வதந்தியை உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக எல்லொரும் ஒரு வகையில் நம்பினர்.

மாயன்களின் புராதான நகரான ‘மச்சுபிச்சு’ உலகிலுள்ள அனைவரையும் கவரும் பகுதியாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் நடமாட்டம் இல்லாமல் ஒளியும் புக முடியாத அடர்ந்த காடுகளின் இடையே மாயன்களின் நகரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இதனை கண்டுபிடித்தது கனடாவை சேர்ந்த 15 வயதேயான வில்லியம் கேடோரி.

வில்லியம் கேடோரி செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படத்தினைக் கொண்டு வீட்டில் இருந்தவாறே கண்டுபிடித்துள்ளார்.

தென்கிழக்கு மெக்ஸிகோவின் அடர்ந்த யுகாடன் காடுகளின் செயற்கைக் கோள் வரைபடத்தை ஆராய்ந்த வில்லியம், அதன் இடையே சதுர வடிவ கட்டுமானம் ஒன்று உள்ளதனை கண்டறிந்து, அதை 3 ஆண்டுகளாக ஆராய்ந்ததன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. சிறுவன் வில்லியம் தான் கண்டறிந்துள்ள மாயன் நகரத்திற்கு ‘நெருப்பு வாய்’ என பொருள்படும் வகையில் கே’ஆக் சீ’ என பெயரிட்டுள்ளான்.

தனது கண்டுபிடிப்பு குறித்து 2017 இல் பிரேசிலில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் கருத்தரங்கில் உரை நிகழ்த்தவுள்ளார்.

வில்லியம் கேடோரி கண்டறிந்துள்ள அமைப்பு மனிதனால் கட்டப்பட்ட ஒன்றாக தான் இருக்க வேண்டுமென கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த டேனியல் டீ லிஸ்லே என்பவரும் கருத்து தெரிவித்துள்ளார்.

வெசாக் தான சாலைகளை பதிவு செய்யுமாறு அறிவிப்பு!!

z_mag-p-15-THE
வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து தான சாலைகளையும் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.அத்துடன் தான சாலைகளை ஏற்பாடு செய்துள்ள அமைப்புகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தான சாலைகள் நடத்தப்படும் பிரதேசத்தில் உள்ள மாகாண சபைகளில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் வெசாக் பூரண தினத்தை முன்னிட்டு யாத்திரை செல்பவர்கள் பாதுகாப்பாக ஒரு வேளை உணவை உட்கொள்வதற்கும்,பொதுமக்களின் நலன் கருதியுமே குறித்த பதிவும், அறிவுரைகளும் வழங்கப்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார பரிசோதக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

பசில் சற்று முன் கைது!!

Basil-Rajapaksa

பசில் ராஜபக்ஸ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று குற்றப்புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை செய்வதற்கு வந்திருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை இன்று மாலை இவரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பசில் ராஜபக்ஸ முன்னாள் பொருளாதார அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சீமான் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் தெரியுமா?

Seeman

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என போராடி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் அரசியலுக்கு வந்த நோக்கம் குறித்து கூறியுள்ளார்.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். கடலூர் கிளிஞ்சிகுப்பம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் பேசுகையில்,

இந்த தேர்தலை ஒரு மாற்றத்திற்கான அரசியலாக நாங்க பார்க்கின்றோம், இதுவரை நம்ம நிலத்தில் இருந்த அரசியலுக்கு, ஊழல் லஞ்சம் இல்லாத, பசி பஞ்சம் இல்லாத தூய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

உலகத்தில் மற்ற நாடுகள் எல்லாம் எப்படி வாழ்கின்றது, அந்த நாட்டில் ஊழல் லஞ்சம் இல்லாத நிர்வாக கட்டமைப்பு எப்படி இருக்கின்றது,

அது போல ஏன் நமது நாட்டை நாம் உயர்த்த முடியாது, மாற்ற முடியாது என்கிற எண்ணத்தில் தான் இந்த அரசியலை செய்ய வந்தோம்.

எந்த நம்பிக்கையில் என்றால், எங்களை பெற்றவர்கள், எங்களுடன் பிறந்தவர்கள் எங்களை கைவிட மாட்டீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான், உங்கள் தமிழ் பிள்ளைகள் நாங்கள் இந்த அரசியலுக்குவந்து இருக்கின்றோம் என சீமான் கூறியுள்ளார்.

தலித் பெண்ணை நிர்வாணமாக்கி பாதையில் இழுத்துச் சென்ற கும்பல்!!

Dalit

உத்தர பிரதேசத்தில் நிலப்பிரச்சினை காரணமாக தலித் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேச மாநிலம் கயிராதியா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்தாண்டு ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹரேவா கிராமத்தில் இதேபோல ஐந்து தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

கடந்த ஞாயிறன்று வீட்டில் தனியாக இருந்த தலித் பெண் ஒருவரை ஒரு கும்பல் அடித்து வெளியே தெருவிற்கு இழுத்து வந்துள்ளனர்.

பின்னர் அவரை அக்கும்பல் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். சம்பவத்தின்போது அவரது கணவரும், குடும்பத்தாரும் வீட்டில் இல்லை.

வழியெங்கும் அவரை அடித்து உதைத்த அந்தக் கும்பல் பின்னர் குளம் ஒன்றிற்கு அருகே அவரை விட்டு விட்டுச் சென்றுள்ளது.

இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இவ்வாறு அப்பெண் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸில் புகார் தரப்பட்டபோதும் முதலில் பொலிஸார் புகாரை எடுக்கவில்லை.

குடும்பச் சண்டை என்று கூறி புகாரை கண்டு கொள்ளாமல் விட்டனர். பின்னர்தான் புகார் பதிவு செய்யப்பட்டது.

இலங்கையில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு!!

Homo

இலங்கையில் உள்ள பெண் ஓரின சேர்க்கையாளர்கள், ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், அரவாணிகள், பால்நிலை மாற்றுநர்கள் ஆகியோருக்கு அமெரிக்கா தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று சமவுரிமை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமெரிக்க தூதுவரை சந்தித்தனர். இதன்போதே கெசாப் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இதேவேளை பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகவாதியும் பால்நிலை மாற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவியுமான பாரோனெஸ் பார்க்கர், தமது கருத்து ஒன்றில் இலங்கையில் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்

இலங்கையில் சிங்ஹ லே என்று அமைப்பு இந்த அச்சுறுத்தலை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் இந்த வன்முறை அமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரோனெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து கஞ்சாவை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!!

Kanja

இலங்கையில் பயிரிடப்படும் கஞ்சாவை மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுர்வேத மருத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாகவும் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது அவர் தெரிவித்தார்.

ஆயுர்வேத மருந்து உற்பத்திக்காக கடந்த காலங்களில், அபினை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அவர் அக்கூட்டத்தில் கூறினார்.

மருந்து உற்பத்திக்கு கஞ்சாவும் தேவைப்படுவதால் அதனை முறையாக இலங்கையில் உற்பத்தி செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

-பிபிசி-

இலங்கை அணியின் அதிரடி வீரர் குஷல் பெரேராவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

Perera

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய குசல் பெரேராவுக்கு ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழையானது என்று அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கட் சபையால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது.

தாய்மையது போற்றிடுவோம்..

Mother

தாய்மையது போற்றிடுவோம் நாளும்- பெண்
தவமது என்றிடுவோம் மீளும்- கண்
தாய்மையவள் மென்மையவள்
தூய்மையவள் பெண்மையவள்
தேற்று உயர்வு ஏற்று.

வாய்மையது தன்னுதிரம் தந்து -மண்
வாழ்வளித்த தெய்வமவள் நொந்து -என்
வரமென்றும் உரமென்றும்
தரமென்றும் கரமென்றும்
வார்த்தாள் என் ஆத்தாள்.

-குமுதினி ரமணன்-