வடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!

May 18

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை செய்பவர்களுக்கு எதிராக பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் சென்றது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் பாதுகாப்புப் பிரிவினருடனேயே சென்றதாக தெரியவந்துள்ளது எனவும், பிரச்சினை ஏற்படும் வகையில் அவர் செல்லவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உதைபந்தாட்டப் போட்டி!!

 
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உதைபந்தாட்டப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.சுபாஸ்கரன் தலைமையில் நேற்று முன்தினம் (10.05.2016) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இப் பாடசாலையின் முன்னாள் அதிபரும் வவுனியா வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு.அமிர்தலிங்கம், புதுக்குளம் கிராமத்தின் பழைய மாணவனும், மூத்த பிரஜையுமாகிய திரு.பத்மநாதன் மற்றும் அயல் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்!!

Healmat

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் தலையின் பின்பகுதியில் பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் பிலிப் யூக்ஸ் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு பின்னர் மரணமடைந்தார்.

தரம் குறைந்த ஹெல்மெட் அணிந்து இருந்ததும் அவரது மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 25 வயதான பிலிப் யூக்ஸ் மரணமடைந்தது எதனால்? என்பது குறித்து விசாரணை நடத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஒரு குழுவை நியமித்திருந்தது. அந்த குழு தனது விசாரணை அறிக்கையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் தாக்கல் செய்து உள்ளது.

விசாரணைக்குழுவின் அறிக்கையில் பிலிப் யூக்ஸ் இறப்பிற்கு ‘ஹெல்மெட்’ தரம் காரணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டும் தரம் உயர்ந்த ‘ஹெல்மெட்’ அணிந்து இருந்தாலும் அவரது உயிருக்கு பாதுகாப்பு கிடைத்து இருக்கும் என்று சொல்ல முடியாது. அவரை பந்து தாக்கிய இடம் கழுத்து பகுதியாகும். அந்த பகுதியை தற்போதைய ஹெல்மெட்டால் பாதுகாக்க முடியாது.

அம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனது தான் உயிரழப்புக்கு காரணம் என்று சொல்ல முடியாது. அம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனாலும் அந்த நேரத்தில் அவர் முறையாக கவனிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தாக்கமே அவரது சோக முடிவுக்கு காரணம் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த அறிக்கை யூக்சை மீண்டும் நமக்கு கொண்டு வந்து விடாது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவரை நேசித்தவர்களின் வலியை குறைத்து விடாது. இருப்பினும் இதேபோல் சம்பவம் மீண்டும் நடந்து விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. வீரர்கள் பாதுகாப்பு கவசங்களை அதிகம் பயன்படுத்தும் படி நாங்கள் சொல்லி இருக்கிறோம். வீரர்களுக்கான பாதுகாப்பு தரத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும்.

போட்டியின் போது வீரர்கள் காயம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
மேலும் உள்ளூர் ஆட்டம் மற்றும் பயிற்சி உள்பட எல்லா போட்டிகளிலும் வேகப்பந்து மற்றும் மித வேகப்பந்து வீச்சை எதிர்கொள்கையில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிந்து தான் விளையாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கெட் காப்பாளர் மற்றும் சிலிப்பில் களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்களும் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். உயர்தர ‘ஹெல்மெட்’ பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட அறிக்கையில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்புலிங்கம் 3D படத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஜப்பானிய நடிகர்கள்!!

Film1

பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் கலாசார தொடர்ப்பு இருந்துக் கொண்டு இருக்கிறது. பல்வேறு பரிமாணங்களை தாண்டி இன்று அந்தத் தொடர்ப்பு சினிமா மூலம் தொடர்கிறது.

சூப்பர் ஸ்டார் நடித்த முத்து இங்கு மாபெரும் வெற்றி, ஜப்பான் ரசிகர்களுக்கு தமிழ் படங்கள் மீது உள்ள ஆர்வத்தை தூண்டி வருகிறது. அம்புலி 3டி படத்தை இயக்கிய ஹரீஷ் நாராயாணன்- ஹரி ஷங்கர் இரட்டையர் இயக்கி, எம்.எஸ்.ஜி மூவீஸ் மற்றும் சங்கர் டிசழவாநசள தயாரிப்பில், எம்.பி.எல் கடைஅள சார்பில் பி.எல்.பாபு நாளை வெளியிட இருக்கும் ‘ஜம்பு லிங்கம் 3 டி’ படம் இந்திய ஜப்பான் உறவை மீண்டும் மேற்படுத்துகிறது.

அம்புலி 3டி, ஆ ஆகியப் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹரி – ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் இயக்கும் ‘ஜம்புலிங்கம் 3டி’ படத்தில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்து உள்ளனர். தயாரிப்பாளர் ஹரி ஜப்பான் கலாசார மையத்தின் தலைவராக இருப்பதாலோ என்னவோ இந்தப் படத்தில் பங்கேற்க, ஜப்பானிய கலைஞர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. ஆர்வம் ஒரு பக்கம் இருப்பினும், அவர்களுடன் எங்களது சம்பாஷனைகள் பெரும் பாலும் ஊமை மொழியில் தான் இருந்தது. அதை படமாக்கி இருந்தாலே, அதுவே ஒருப் பெரிய நகைச்சுவை படமாக இருந்து இருக்கும்.

Film

இந்தப் படத்தின் கதை ஒரு இந்திய கிராமத்தில் ஆரம்பித்து ஜப்பானில் சென்று முடிகிறது. நமது ஊரில் குழந்தைகளுகான படங்களே வெளி வருவது இல்லை என்றக் குறையை ஜம்புலிங்கம் 3 டி தீர்க்கும்.

இந்தப் படத்தை திரையிட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே இருக்கும் ஆர்வம், இந்தக் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு நல்ல பொழுதுப்போக்கை தர வேண்டும் என்ற அவர்களது எண்ணத்தையும் காட்டுகிறது. 3 டி தொழில் நுட்பம் இருக்கிறது என்று எல்லா கதைக்கும் பயன்படுத்த முடியாது. அதற்கேற்ற கதை வேண்டும், ஜம்புலிங்கம் 3 டி படத்தில் அதற்கு தேவையான அத்தனை அம்சங்களும் அதிக பெற்று இருக்கிறது’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்துக்கு முழுக்குப் போட்ட மாணவி!!

Abuse

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவியொருவர் தான் முகம் கொடுக்க நேர்ந்த கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பை இடைநடுவில் கைவிட்டுள்ளார்.

இணைந்த சுகாதாரத்துறை பாடநெறியொன்றை கற்பதற்காக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான புதிய மாணவியொருவரே இவ்வாறு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளார்.

பகிடிவதை காரணமாக குறித்த மாணவி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை குறித்து அறிந்து கொண்டவுடன் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் விடயம் வெளியில் வராமல் மறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் குறித்த மாணவியை சமரசப்படுத்தி மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.

சிரேஷ்ட மாணவர்களால் தனக்கு அளிக்கப்பட்ட கொடூர பகிடிவதையின் அச்சம் காரணமாக குறித்த மாணவி மீண்டும் படிப்பைத் தொடர்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

தற்கொலை செய்யத் துணிந்த யுவதியை காப்பாற்றிய தொழிலாளர்கள்!!

 
காசல்றி நீர்தேக்கத்திற்கு நீரேந்தி வரும் கெசல்கமுவ ஓயாவில் பாய்ந்து, தற்கொலை செய்யத் துணிந்த யுவதியை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் நோர்வூட் – நியுட்டன் தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதான யுவதியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கெசல்கமுவ ஓயாவில் பாய்ந்துள்ள குறித்த யுவதி நீரில் அடித்துச் செல்லப்பட்டு கல் ஒன்றில் சிக்குண்ட நிலையில் தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரல் எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நோர்வூட் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் யுவதியைக் காப்பாற்றியுள்ளனர்.

பின்னர் இவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யுவதியை கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 12 13

விஜய் மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!!

Mallaya

விஜய் மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் அனுப்பும்படி சர்வதேச பொலிஸான இன்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா அதை திருப்பிச் செலுத்தவில்லை. இதில் 1000 கோடி ரூபாய் வரை அவர் வெளிநாட்டில், தனக்கு சொந்தமான கிங்பிஷர் விமான நிறுவனத்தில் முதலீடு செய்ததாக சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

அமலாக்கத்துறை தொடர்ந்த குறித்த வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவை கைது செய்து, பிணையில் வெளி வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே விஜய் மல்லையா கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி இங்கிலாந்து சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு திரும்பி நீதிமன்ற வழக்குகளை சந்திக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

அவர் மறுத்ததால், அவருடைய சிறப்பு கடவுச்சீட்டை மத்திய அரசு முடக்கியதுடன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்தை கேட்டுக் கொண்டது. இதைத்தொடர்ந்து தனது எம்.பி. பதவியை அவர் இராஜினாமா செய்தார்.

விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதை இங்கிலாந்து நிராகரித்தது. இந்த தகவலை இந்திய அரசுக்கும் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருக்கிறது.

இதையடுத்து, சர்வதேச பொலிஸ் உதவியுடன் விஜய் மல்லையாவை கைது செய்து கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் அனுப்பும்படி சர்வதேச பொலிஸான இன்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீதித்துறை தேடும் ஒரு நபர் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அவரை கைது செய்வது தொடர்பான நடவடிக்கை சிவப்பு அறிவித்தல் ஆகும்.

பஷில் ராஜபக்ஷ கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!!

Basil

பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடுமையான நிபந்தனைகளுடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 16 இலட்ச மூன்று சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு இடையில் நிதி குற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியிலுள்ள காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-வீரகேசரி-

அதிகளவில் வைபர் (Viber) பயன்படுத்துபவர்களா நீங்கள் : இதை கொஞ்சம் படியுங்கள்!!

Viber

அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் சேவைகளுள் வைபர் சேவையும் ஒன்றாகும். இதன் புதிய பதிப்பில் சில விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் நீங்கள் இதன் புதிய வசதிகளை பெற்றுக்கொள்ள வைபர் செயலியை அதன் அண்மைய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

வைபர் புதிய வசதிகள்..

வைபர் சேவையில் உயர் பாதுகாப்பு முறைமை

அண்மையில் வட்ஸ்அப் நிறுவனம் தனது சேவையில் end-to-end encryption எனும் உயர் பாதுகாப்பு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

தற்பொழுது வைபர் சேவையிலும் இதே பாதுகாப்பு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஏனையவர்களுடன் பகிரும் தகவல்களை எந்த ஒரு மூன்றாம் தரப்பினராலும் அறிந்துகொள்ள முடியாது.

அதேபோல் வைபர் சேவை மூலம் நீங்கள் ஏனையவர்களுடன் மேற்கொள்ளும் அரட்டையை (Chat) மறைப்பதற்கான வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக அவற்றுக்கு கடவுச்சொல் இட்டுக்கொள்ளவும் முடியும்.

அரட்டையை மறைப்பது எப்படி?

நீங்களும் இந்த வசதியை பெற விரும்பினால் அரட்டையை மறைக்க வேண்டிய நபரின் அரட்டைக்கான பகுதிக்குச் (Chat Window) சென்று அதன் வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கான குறியீட்டை சுட்டுக (Setting Icon)

1

இனி அதன் கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள Hide Chat என்பதை தெரிவு செய்க.

2

பின்னர் தோன்றும் சாளரத்தில் உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியுமான ஒரு கடவுச்சொல்லை இடுக.

அவ்வளவு தான் இனி குறிப்பிட்ட நபருடன் நாம் மேற்கொண்ட உரையாடல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும். (இது வைபர் சேவையில் உள்ள ஒரு குழுவுக்கும் பொருந்தும்)

மறைக்கப்பட்ட அரட்டையை திரும்பப்பெறுவது எப்படி?

மறைக்கப்பட்ட அரட்டையை திரும்பப்பெற வைபர் செயலியில் ஒரு இரகசியமான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3

அதாவது வைபர் செயலியின் Chat எனும் சாளரத்தின் வலது மேற்பகுதியில் தரப்பட்டுள்ள Search என்பதில் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

4

இனி மறைக்கப்பட்ட நபரின் அரட்டை தோன்றுவதை அவதானிக்கலாம்.அவ்வளவுதான்.

கிளிநொச்சியில் மக்களால் பிடிக்கப்பட்ட பாரிய முதலை!!(படங்கள்)

 
கிளிநொச்சி கண்டாவளை மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுளைந்த பாரிய முதலை அப் பிரதேச இளைஞர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கிளிநொச்சி கண்டாவளை மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுளைந்த பாரிய முதலை அப்பகுதி இளைஞர்கள் சிலரால் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளதுடன் வனத்துறை அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது பகுதிக்குள் வரும் முதலைகள் ஆடுகள், நாய்கள் முதலியவற்றையும் விட்டு வைப்பதில்லை எனவும் கடும் வறட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றி வரும் நிலையில் இம் முதலை மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வந்திருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

11 12 13

உணவு சாப்பிட்டவுடன் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்!!

?????????????????????????????

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா?

* சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிடுவது வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* சாப்பிட்ட உடன் தேநீர் அருந்துவது மிகவும் தவறானது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

 

புகைப்பழக்கத்திற்கு அடிமையான குழந்தை: 3 வயதில் 60 சிகரெட் குடித்த அவலம்!!

3yearsmoke_child_002

இந்தோனேஷியா நாட்டில் 7 வயது சிறுவன் ஒருவன் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் 16 சிகரெட்டுகளை குடித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு ஜாவா தீவில் உள்ள Cicapar என்ற சிறிய கிராமத்தில் வசித்து வரும் Iyan(36) மற்றும் Tati(32) என்ற தம்பதியினரின் ஏழு வயது மகன் Dihan Awalidan. இந்த சிறுவன் சிறுவயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் 16 சிகரெட்டுகளை பிடித்து வருவது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெற்றோர்கள் இருவருக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதால், திஹான் 3 வயது இருக்கும்போதே சிகரெட் பிடிக்க தொடங்கியுள்ளான். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நாளைக்கு 60 சிகரெட்டுகள் வரை பிடித்து வந்துள்ளான். தற்போது சிறுவனுக்கு ஏழு வயது ஆகியுள்ளதால், உடல் நலனில் அக்கறை காட்டி சிகரெட் எண்ணிக்கையை குறைத்து ஒரு நாளைக்கு 16 சிகரெட்டுகள் பிடித்து வருகிறான். தனது மகனின் நிலை குறித்து பேசிய தந்தை Iyan, 3 வயதிலேயே சிகரெட் பிடிக்க பழகி கொண்டதால், ஒரு நாளைக்கு 3 பாக்கெட்டுகளை காலி செய்து விடுவான்.

சிகரெட் வாங்க பணம் கொடுக்கவில்லை என்றால், கீழே விழுந்து அழுவான், இல்லையென்றால் எனது சட்டை பாக்கெட்டில் இருந்து பணமோ அல்லது சிகரெட்டை திருடிக்கொண்டு சென்று விடுவான் என்று கூறியுள்ளார். தாயார் Tati கூறுகையில், எனது மகன் சிகரெட் பிடிப்பதை நிறுத்த எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அது அனைத்தும் பலனளிக்காமல் போய்விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். முன்பு வீட்டிலேயே அனைவருக்கும் முன்பு தைரியமாக சிகரெட் பிடித்து வந்தான். ஆனால் இப்போது, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு பின்னால் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து பிடித்து வருகிறான் என்று கூறியுள்ளார்.

குழந்தை பருவத்திலேயே புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை பற்றி பேசிய Campaign for Tobacco-Free Kids என்ற அமைப்பின் தலைவரான Matt Myers, இந்தோனேஷியாவில் சிறுவயதிலேயே புகைப்பழக்கத்திற்கு அடிமையாவது மிகச்சாதாரணம். உலகளவில் புகையிலை வியாபாரத்தை அதிக அளவில் செய்வதில் இந்தோனேஷியா 5வது இடத்தில் உள்ளதால், இங்கு புகையிலை கிடைப்பது மிக எளிது என்றும் இந்தோனேஷியாவில் மூன்றில் ஒரு சிறுவன் 10 வயதிற்கு முன்னதாகவே சிகரெட் பிடிக்க தொடங்கியிருப்பான் எனவும் கூறியுள்ளார்

 

பேஸ்புக் அறிமுகம் செய்யும் மற்றுமொரு அப்பிளிக்கேஷன்!!

123

ஆரம்ப காலத்தில் இணைய உலாவியின் ஊடாக தனது சேவையினை வழங்கிவந்த பேஸ்புக் நிறுவனம் பிற்காலத்தில் பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்திருந்தது.பயனர்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பு இருப்பதனை கருத்தில் கொண்டு மேலும் சில அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந் நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக Facebook Moments எனும் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக தனிப்பட்ட முறையில் (Private) புகைப்படங்களை பகிரக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டிலேயே இந்த அப்பிளிக்கேஷன் ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்த முக அடையாளம் காணல் (Face Recognition) வசதி தரப்பட்டிருந்ததனால் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது.

முக அடையாளம் காணல் (Face Recognition) வசதி என்பது பகிரப்படும் புகைப்படங்களினுள் ஒரே மாதிரியான முகங்களை தெரிவு செய்தல் ஆகும்.எனவே தற்போது முக அடையாளம் காணல் வசதி நீக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளிலும் கிடைக்கக்கூடியவாறு புதிய பதிப்பாக குறித்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Facebook Moments அப்பிளிக்கேஷனினை தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தி மகிழலாம்.

 

பாம்பு கடித்து கரிக்கட்டையாக மாறிய சிறுமியின் கால்!!

maxresdefault

விஷப்பாம்பு கடித்து விட்டால் 13 வயது சிறுமி ஒருவரின் கால் மிக ஒல்லியாக கரிக்கட்டை போன்று மாறியுள்ளது. வெனிசுலாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை ஒரு மாதத்திற்கு முன்பு விஷப்பாம்பு ஒன்று காலில் கடித்துள்ளது. இதையடுத்து அந்த சிறுமிக்கு விஷத்தை முறிக்கும் மருந்தை கொடுக்காமல் ஆண்டிபயாட்டிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாம்பு கடித்து ஒரு மாதம் கழித்து அவரது கால் கருப்பாக மாறியதோடு சுருங்கி போயுள்ளது. அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் காலில் உள்ள செல்கள் இறந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து லிவர்பூல் மருத்துவர் அருண் கோஸ் கூறுகையில், சிறுமியின் காலை நீக்க வேண்டும் என்றும், காலை நீக்கினாலும் உடம்பு முழுவதும் உள்ள செல்கள் இறந்து அதனால் சிறுநீரகம் பாதித்து சிறுமி உயிரிழக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

நடிப்பை நினைத்தால் பயமாக இருக்கின்றது : திரிஷா!!

trisha

தமிழ், தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் திரிஷா. இப்போதும் நாயகியாகவே இருந்து வருகிறார்.தற்போது ‘நாயகி’ படத்தில் நடித்து வருகிறார். அவரது பாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை காட்சிகளிலும் கலகலப்பூட்டுகிறார்.

“நான் இதுவரை எல்லா விதமான வேடங்களிலும் நடித்து விட்டேன். ஆனால் காமெடியை தவிர மற்றது எல்லாம் எளிது.காமெடியை பார்க்க எளிதாக தெரியும் ஆனால், நடிப்பது சவாலானது. காமெடி காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று நினைத்தாலே பயம் வந்து விடும்.

ஜெயம் ரவியுடன் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ஓரளவு காமெடி செய்தேன். இப்போது ‘நாயகி’ படத்தில் அதிகமான நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறேன். இதிலும் பயந்து பயந்துதான் நடித்தேன். என்றாலும் நான் நடித்த போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் நான் நடித்த காமெடியை ரசித்தனர்.எனவே, தியேட்டரிலும் அனைவரும் இந்த காமெடியை ரசிப்பார்கள் என நம்புகிறேன். இனி, அதிகமான காமெடி படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

 

தோல் அலர்ஜி சிகிச்சைக்காக சமந்தா வெளிநாடு பயணம்!!

Actress-Samantha-reveals-that-she-was-diabetic-patient

சிம்புவுடன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய வேடத்தில் வந்தவர் சமந்தா. பாணா காத்தாடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ படம் அவரை பிரபலபடுத்தியது. நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

சமந்தாவுக்கு தோல் அலர்ஜி நோய் இருந்தது. வெயில் உடம்பில் பட்டாலோ அதிக வெப்பமான இடங்களில் இருந்தாலோ இந்த தோல் அலர்ஜி அவருக்கு வந்து விடும். இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் ஷங்கர் டைரக்டு செய்த ஐ படங்களுக்கு சமந்தாவைத்தான் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அப்போது அவரை இந்த தோல் அலர்ஜி நோய் கடுமையாக தாக்கியது.இதனால் அந்த இரண்டு படங்களிலும் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் வேறு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 6 மாதங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்தார்.

இதன் படப்பிடிப்பில் சமந்தாவுக்கு மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு பல நாட்கள் நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் அதிக வெப்பத்தால் அலர்ஜி ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு விளக்கு வெளிச்சத்தை குறைத்து படப்பிடிப்பை நடத்தினர். தற்போது ஓய்வு இல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இதனால் அவருக்கு மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருக்கிறார்.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் இதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட இருக்கிறது. இந்த மாத இறுதியில் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் சமந்தா கூறி இருந்தார். தோல் அலர்ஜி சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.