நான் முதல்வரானால் நதிகளை இணைப்பேன் : கஞ்சா கருப்பு அதிரடி!!

kanja_karuppu

நான் முதல்வரானால் நதிகள் அனைத்தையும் இணைப்பேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யமறுத்த கஞ்சாகருப்பு, திருச்செங்கோடு சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..

சில அரசியல் கட்சிகள் என்னை பிரசாரத்திற்கு அழைத்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையை கருதி ஒதுங்கிவிட்டேன். பிரசாரத்துக்கு செல்லாத காரணம் இவர்களைப் பற்றி பேசுவதா அல்லது அவர்களைப் பற்றி பேசுவதா என்று யோசித்தே புத்தி மழுங்கிவிடும்.

கல்வி அறிவு இல்லாததால் என்னிடம் முகாமையாளராக பணியாற்றியவர் 3 ½கோடி ரூபாய் ஏமாற்றினார். படம் எடுப்பதாக சொல்லி வந்த ஒருவர் என்னை இரண்டரை கோடி ரூபாய் கடனாளியாக்கினார். கல்வி எல்லோருக்கும் கொடுக்கணும்.

நான் எந்த அரசியல் கட்சியாலாவது சேர வேண்டும் என்று கேட்டால் 4 நாள் முதலமைச்சர் பதவியை என்னிடம் தரும் கட்சியில் சேருவேன். முதல்வரானால் நதிகளை இணைப்பேன், கல்வி முழுவதும் இலவசம், மருத்துவம் இலவசம், தமிழகம் முழுவதும் பேருந்து பயணத்தை இலவசம் ஆக்குவேன். மாற்றம் என்று சொன்னால் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வரணும் என்று அவர் கூறினார்.

தங்கத் தகடுகளால் வடிவமைக்கப்பட்ட கார் துபாய் கண்காட்சியில் அறிமுகம்!!(படங்கள்)

 
துபாயில் நடைபெற்று வரும் ‘குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016’ கண்காட்சியில் நிசான் நிறுவனம் புதுமையான கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கத்தினாலான ரேஸ் கார் ஒன்றை நிசான் நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கத் தகடுகளால் வடிவமைக்கப்பட்ட காரின் மதிப்பு 1 மில்லியன் டொலர் ஆகும்.

நிஸான் நிறுவனத்தின் R35 GT-R மாடல் ரக காரான இது ஒரு பந்தயக்கார் ஆகும்.

இக்காரில் 3.8 லிட்டர் என்ஜின் மற்றும் V6 twin turbo 545 hp என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கார் அதிவேகத்தில் செல்லக்கூடிய திறன் படைத்தது.

இதில் ஏரோ டைனமிக் வடிவமைப்போடு 6 ஸ்பீட் டூயல் கிவிட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதனால் பந்தயங்களின் போது அதற்கேற்ப வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும்.

இக்கார் பார்வையாளர்கள் அனைவரையும் மிக வெகுவாகக் கவர்ந்துள்ளது.

11 12 13 15

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் பயணத்தை ஆரம்பித்தது!!(படங்கள்)

1

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya, தனது முதல் பயணத்தை மத்திய ஐரோப்பாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கித் தொடங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பயணத்தை ஆரம்பித்த விமானம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சரக்கு விமானம் 10 பிரித்தானிய போர் தாங்கிகளை சுமக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த சரக்கு விமானம் 600 தொன் எடையிலானது.

இந்த சரக்கு விமானம் தனது அவுஸ்திரேலியா நோக்கிய பயணத்தை இந்தியா, மலேசியா வழியாக முன்னெடுக்கிறது.

இந்த ராட்சத விமானம் தரையிறங்குவதைக் காண 50 ஆயிரம் பார்வையாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக உலகின் பெரிய சரக்கு விமானம் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்ததை அடுத்து இந்த விமானம் உக்ரைன் கைவசம் வந்தது.

அந்த விமானத்தையே தற்போது உக்ரைன் நாட்டினர் மாற்றி அமைத்து உயிர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 3 4 5 6

ஒரே பாட்டி இரு கட்சி விளம்பரத்தில் : பாட்டியை ஏமாற்றிய கட்சிகள்!!

Paatti

ஒரு விளம்பரத்தில் எதிராகவும் ஒரு விளம்பரத்தில் ஆதரவாகவும் பேசும் கஸ்தூரி பாட்டி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தற்போதே கஸ்தூரி பாட்டிக்கும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் கடுமையான விளம்பர போர்களத்தில் குதித்துள்ளன.

இரு கட்சிகளுமே தங்களது ஆதரவான தொலைக்காட்சி நிறுவனங்களையும் தாண்டி பொதுவான நிறுவனங்களிலும் போட்டி போட்டு விளம்பரங்களை அள்ளி வீசி வருகின்றன.

இதில் திமுக விளம்பரங்களில் கடந்த ஐந்தாண்டு கால அதிமுக அரசு குறித்து “சொன்னீங்களே செஞ்சிங்களா ? ” என்ற தொணி பொருளில் விமர்சனங்கள் முழுக்க முழுக்க இருக்கின்றன.

பெரும்பாலும், ஸ்டாலின் திமுக என்ன செய்ய உள்ளது என்பது குறித்து விளக்கும் விளம்பரங்களைவிட, அதிமுக அரசை தாக்கி பேசும் விளம்பரங்களே அதிக அளவில் காண்பிக்கப்படுகின்றன.

ஏசியில் அமர்ந்திருப்பவருக்கு மக்கள் கஷ்டம் எப்படி தெரியும், அப்படி என்னங்க அலட்சியம்.. நடு ராத்திரியில் தண்ணிய திறந்து விடுறீங்க.. என்பது போன்ற வசனங்களுடன், சாமானிய பெண்கள் போல தோற்றம் கொண்டோரை வைத்து அரசுக்கு எதிராக உணர்ச்சி மயமான விளம்பரங்களை திமுக பிரசாரம் செய்கிறது.

அதே சமயம், அதிமுக விளம்பரங்களில், எதிர்தரப்பு தாக்குதல் எதுவும் இல்லை. தங்களது சாதனைகளை கூறியே விளம்பரங்கள் வருகின்றன. அதிலும் ஏழை பெண்கள் போன்ற தோற்றம் கொண்டவர்கள், உணர்ச்சியாக பேசி ‘அம்மாவை’ புகழ்கிறார்கள்.

“வானத்தில பறக்குறவங்களுக்கு, நம்மளுடைய பிரச்சினை எப்படிங்க தெரியும்? மக்கள பத்தியே கவலப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா…” இந்த வார்த்தையை உணர்ச்சி பொங்க கையை ஆட்டியபடியே, ஒரு வயதான மூதாட்டி சொல்வது போன்ற திமுக விளம்பரங்களை அடிக்கடி தொலைகாட்சிகளில் பார்ப்பதுண்டு

குறித்த விளம்பரம் பெருமளவில் மக்களிடம் சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதே பெண்மணிதான், அதிமுக விளம்பரத்தில் ஜெயலலிதா ஆட்சியை புகழ்ந்து நடித்துள்ளார் என்பது தான் இதில் சிறப்பு.

கோயில்களில் செயல்படுத்தப்படும் அன்னதானம் திட்டத்தால் பலன் அடைந்த பெண்மணி போல நடித்து அதிமுக அரசை வாழ்த்தும் விளம்பரம் ஒன்றிலும் இதே பெண்மணிதான் நடித்துள்ளார்.

தாயை விரட்டி வீட்டை எரித்த மகன்!!

Mother

மகனொருவர் தனது தாயை வீட்டை விட்டு விரட்டியதுடன் அவர் வசித்து வந்த வீட்டையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார். இச் சம்பவமானது வத்துவ-மொராந்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது தாய்க்கு சொந்தமான நிலத்தையும் வீட்டையும் தனது பெயரிற்கு எழுதி தருமாறு, தாய் வசித்து வரும் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார்.

தாய் அவரது கோரிக்கைக்கு உடன்பட மறுத்ததையடுத்து, அவரை தாக்கியதுடன் வீட்டையும் தீக்கிரையாக்கியுள்ளார். குறித்த நபர் அத்தாயின் 2 ஆவது மகனென தெரியவந்ததையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இவர் ஒரு பஸ் வண்டியின் உரிமையாளர் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை வழக்கு : சந்தேகநபர்களுக்கு மூன்று மாதகால விளக்கமறியல்!!

vidya

புங்குடுதீவு மாணவி வித்தியாவை வண்புனர்விற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மூன்று மாதங்களிற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்களை இன்று யாழ்பாண மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே சந்தேக நபர்களை மூன்று மாதங்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்களுக்கான அபராதம் உயர்வு!!

Ticket

ரயிலில் பிரவேசச் சீட்டின்றி (டிக்கட்) பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது 1500 ரூபாவாக இருந்த அதிகபட்ச அபராதத் தொகை 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்ம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் !!(நோட்டீஸ்)

வவுனியா   குருமன்காடு  அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  நாளை 12.05.2016 வியாழக்கிழமை  காலை பத்து மணியளவில் கொடிஏற்றதுடன்  ஆரம்பமாக உள்ளது ….

ஆலயத்தின் மகோற்சவம்   நாளை ஆரம்பமாகி  தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறும் ..

kali-kovil

13115556_10154378448215827_2107432447_n 13141107_10154378447835827_584537433_n 13149948_10154378447470827_1999153481_n (1) 13149948_10154378447470827_1999153481_n 13150062_10154378446875827_1577101719_n 13162571_10154378448485827_1750334429_n

வவுனியாவில் குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!!

Vavuniya

வவுனியாவில் நேற்று(10.05) இரவு குளத்தில் மீன் பிடிப்பதற்கச் சென்றவர் இளம் குடும்பஸ்தர் இன்று அதிகாலையில் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த கலில் காமீன் (28வயது) திருமணமாகி ஒரு வருடமான இளம் குடும்பஸ்தர் குளத்தில் மீன் பிடிப்பதற்கு இவரின் உறவினருடன் சென்று வருவதுண்டு. நேற்று இரவு பூவரசம்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமாணகுளம் பகுதியிலிருக்கும் குளத்திற்கு உறவினர் சிலருடன் மீன் பிடிப்பதற்குச் சென்றுள்ளார்.

எனினும் இவர்கள் இரு பிரிவினர்களாக கனரக வாகனத்தின் டியூப்பில் காற்று நிரப்பி 4பேர் இரண்டு டியூப்பில் மின் பிடிப்பதற்குச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஒருபிரிவினராக சென்ற இருவரின் டியூப்பில் காற்று வெளியேறியதையடுத்து நீரில் மூழ்கவிருந்தவர்கள் மற்றவர்களின் உதவியுடன் ஒருவர் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.

மற்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இரவு என்பதால் நீரில் மூழ்கியவரை தேடும் பணியினை நிறுத்திவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டனர். இன்று அதிகாலை வேறு சிலரின் உதவியுடன் நீரில் மூழ்கியவர் தேடும் பணியினை மேற்கொண்டபோது நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

13102874_235276546840565_4241158693988072233_n 13164291_235275980173955_7137144887308977412_n 13164292_235276346840585_4638098377839803279_n 13166032_235276096840610_2978472443826482301_n 13177110_235276310173922_6476670428725809748_n 13177728_235276036840616_8311906656227259745_n 13177886_235276266840593_769249914798471929_n 13178742_235276000173953_7475132205281041526_n

400 கோடி ரூபா கள்ள நோட்டுகள் புழக்கத்தில்!!

maxresdefault

இந்தியாவில் ரூ.400 கோடி கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனம் நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் குறித்து ஆய்வு மேற் கொண்டது. அந்த ஆய்வில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

அதன்படி இந்தியாவில் ரூ.400 கோடி கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் ரூ.100 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள் பெருமளவில் புழக்கத்தில் விடப்பட்டு அவை பிடிபட்டுள்ளன. அதே நேரத்தில் இதைவிட 1000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சிக்குகின்றன.

நாட்டில் பிடிபடும் கள்ள ரூபாய் நோட்டுகளில் 50 சதவீதம் 100 ரூபாய் நோட்டுகள்தான் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஆண்டுக்கு ரூ.70 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. தினமும் புழக்கத்தில் இருக்கும் ரூ.10 லட்சத்தில் ரூ.250 அளவில் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு மெத்தனம் காட்டாமல் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க தீவர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய புள்ளியியல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

 

இனி இப்படி ஒருபோதும் நடக்காது- விக்ரம்!!

20-vikram-hari

விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் முடித்த கையோடு அடுத்து கருடா படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ‘நான் ஒரு சில படங்கள் தான் நடிக்க சில வருடம் எடுத்துக்கொள்கிறேன், அந்த படம் ஏமாற்றம் தரும் போது கொஞ்சம் வருத்தம் தான்.ஆனால், இனி என் படம் தயாரிப்பாளர் மட்டுமின்றி ரசிகர்களையும் ஏமாற்றாது என்பது உறுதியாக சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

நடிப்புக்கு முழுக்கு போட்ட சமந்தா!!

2-samantha

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகி சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெறி, 24 படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்போது தமிழில் வடசென்னை படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் “ஜன்தா கேரேஜ்” படத்தில் நடித்து வருகிறார். இவை தவிர புதிய படங்கள் எதையும் சமந்தா ஏற்கவில்லை. நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்க போட்டுள்ளார்.

சமந்தா இதுபற்றி டுவிட்டரில், “என்னுடைய கோடை கால படங்கள் வெளியாகின்றன. இனி நிம்மதியாக தூங்குவேன். கடந்த 8 மாதங்கள் ஓய்வில்லாமல் உழைத்தேன். சோர்வான அந்த நாட்கள் முடிவடைந்து விட்டன. நான் சரியான மகளாகவும், தோழியாகவும் இந்த நேரத்தில் இல்லை.இனி சில விஷயங்களை மெதுவாக முடிவெடுக்கப் போகிறேன். கொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை. எல்லாவற்றுக்கும் பக்கபலமாக இருக்கும் என் குடும்பத்தாருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமரின் மகன் மூன்றாண்டுகளின் பின் மீட்பு!!

535aa339a8156

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டார். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான கஜினியிலிருந்து அமெரிக்க மற்றும் ஆப்கான் படைகளின் கூட்டு முயற்சியில் அலி ஹைதர் கிலானி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முல்தான் நகரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டிருந்தப்போது கிலானி துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ரஸா கிலானி, தனது பதவிக் காலத்தின்போது தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது மகன் அலி ஹைதர் கிலானி போட்டியிட்டார். அந்தத் தேர்தலையொட்டி, பஞ்சாப் மாகாணம், முல்தான் நகரில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலி ஹைதரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

காட்டுத்தீயால் தவிக்கும் குடிமக்கள்: நிதியுதவி வாங்க மறுத்த கனேடிய பிரதமர்!!

22-justin-trudeau-lede.w529.h352

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயாராக இருந்த உலக நாடுகளின் உதவியை பெறுவதற்கு அந்நாட்டு பிரதமர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் மெக்முர்ரி நகரில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

நகரம் முழுவதும் உள்ள 2,400 கட்டிடங்கள் இந்த தீ விபத்தில் சிக்கி நாசமடைந்துள்ளன. ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ள நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளன.தீவிபத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவிர்த்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.கனடாவில் உள்ள செஞ்சிலுவை சங்கம் இதுவரை சுமார் 54 மில்லியன் டொலர் வரை நிதி திரட்டியுள்ளது. இது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மெக்ஸிகோ, தைவான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

ஆனால், உலக நாடுகளின் இந்த உதவி தொடர்பாக நேற்று கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், ‘கனடாவில் நிகழ்ந்த இந்த தீ விபத்திற்கு உதவ கனடா நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் முன் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால், கனடா நாட்டு அரசாங்கமே சீரமைப்பு பணிகளில் திறமையாக செயல்பட்டு வருவதால் இச்சூழலில் வெளிநாடுகளின் உதவிகளை பெறும் அவசியம் ஏற்படவில்லை.எனினும், கனடாவிற்கு உதவ முன்வந்த அனைத்து நாடுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தற்போது காட்டுத்தீ ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், ஃபோர்ட் மெக்முர்ரி பகுதியை பார்வையிட பிரதமர் தயாராகும் நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.ஆபத்தான சூழலில் உதவ தயாராக இருக்கும் உலக நாடுகளின் கரங்களை பிரதமர் உதறி தள்ளியுள்ளது கவலையை தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் கனடா நாட்டு குடிமக்களும் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 வயது சிறுவனுக்கு ‘எய்ட்ஸ்’: நடந்தது என்ன?

1 (3)

அஸ்ஸாம் மருத்துவமனையில் 3 வயது சிறுவனுக்கு சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட ரத்தத்தால் எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கவுகாத்தி அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம், சிறுவன் ஒருவன் உடலில் 40 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.

அங்கு 5 மாதம் நடந்த சிகிச்சையை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 3ம் திகதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளான்.இதையடுத்து இந்த வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி, மீதமுள்ள சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் சேர்த்த போது எடுத்த ரத்த பரிசோதனையில், அச்சிறுவனுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் உள்ளது தெரியவந்துள்ளது.

தீக்காயங்களுக்காக நடந்த சிகிச்சையின் போது அச்சிறுவனுக்கு பல்வேறு முறை ரத்த பரிமாற்றம் நடந்துள்ளது. அச்சிறுவனுக்கு தற்போது நோய் பரவாமலிருக்க சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள் இதுபற்றி கூறுகையில், அச்சிறுவனுக்கு கடந்த ஆண்டு சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர், 6 மாதங்கள் கழித்தே மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.எனவே அந்த 6 மாத காலத்தில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. மேலும், எங்கள் ரத்த வங்கியில், எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ரத்தம் இருக்க வாய்ப்பில்லை.

எனினும், தற்போது ரத்த வங்கியில் இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.குழந்தையின் தாய் கூறுகையில், நாங்கள் மிகவும் பயத்திலும் வருத்தத்திலும் இருக்கிறோம். எங்கள் மகனின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சத்தில் இருக்கிறோம்.

நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது இந்த மருத்துவ செலவை எப்படி ஏற்க போகிறோம் என தெரியவில்லை என கூறியுள்ளார்.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம் தொடர்பாக விசாரிக்க, 5 பேர் கொண்ட மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2013ம் ஆண்டு, அஸ்ஸாமில் உள்ள தராங் மாவட்டத்தில் உள்ள Mangaldai அரசு மருத்துவமனையில், ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெற்ற 4 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டின் அறிக்கை படி, சுமார் 21.7 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

 

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் நான்கு விமானங்கள் விற்பனை!!

SriLankan
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு விமானங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

A 350 வர்க்கத்தைச் சேர்ந்த நான்கு விமானங்களே இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை குறித்த நான்கு விமானங்களுள் ஒரு விமானம் தற்போது குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 3.25 பில்லியன் டொலர் கடன் சுமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.