14 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!!

1 (53)

14 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவரை கைது செய்வது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சிறுமியின் தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் காரணமாக வௌிநாடு சென்றுள்ள நிலையில், அவர் தனது பாட்டியின் பொறுப்பில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவரது பாட்டி தினக் கூலிக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தநிலையில், பாட்டி இல்லாத நேரம் சந்தேகநபர் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அதன் பின்னரும் சில சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதேவேளை, இந்த விடயத்தை அறிந்த ஒருவர் தனது பெயரைக் குறிப்பிடாது சிலாபம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.மேலும், சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்பட்டவில்லை என்பதோடு, சிலாபம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா மக்களுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் விடுத்த வேண்டுகோள்!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது புதிதாக கட்டப்பட்ட 200 கட்டில்களை கொண்ட கட்டிடத்தின் கூரை, படிக்கட்டுக்கள், மின்தூக்கி மீது வெற்றிலை எச்சில், எச்சில்
துப்பப்படுவதனால் கூரை விரைவில் உக்கக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.

எவ்வாறு எச்சில் துப்புவதால் வைத்தியசாலையின் அழகு கெடுவது மட்டுமன்றி சுகாதார சீர்கேடுகளும் எழுகின்றன. எனவே இதுபோன்ற செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களின் சொத்துக்களை அவர்கள் தான் பொறுப்புணர்ச்சியுடன் பாதுகாக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

20160505_142113 20160505_142234 20160505_142240 20160505_142457 20160505_142502 20160505_142506 20160505_142654

கலாச்சாரத்தின் சின்னமாக விளங்கிய யாழ். மண் இப்பொழுது காடையர்களின் விளைநிலமாக!!

Jaffna

கந்த புராணக் கலாசாரத்தைக் கொண்ட யாழ். மண் இன்று காடையரின் அராஜகத்தின் விளைநிலமாகி வாள் வெட்டுக் கலாசாரத்தின் சொந்தமாகிவிட்டது என அகில இலங்கை இந்துமா மன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“யாழ்ப்பாணத்தின் இளம் சமுதாயத்தை சீர்கெட்ட பாதையிலிருந்து சீர்திருத்தப் பாதைக்கு கொண்டு வருவதற்கு அறநெறி போதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக பாடசாலைகள், ஆலயங்களில் சிவதொண்டர் அணிகளை உருவாக்கி வருகின்றோம்.

இதுவரை அவ்வாறு சிவதொண்டர் அணிகளை உருவாக்காதவர்கள் அதனை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கந்த புராணக் கலாசாரத்தைக் கொண்ட யாழ். மண் இன்று காடையரின் அராஜகத்தின்விளைநிலமாகி வாள் வெட்டுக் கலாசாரத்தின் சொந்தமாகிவிட்டது.இதனைக் கட்டுப்படுத்தி எமது இளம் சமு தாயத்தைச் சீர்திருத்துவது எமதுஎல்லோரதும் கடமையாகும்.

அந்த வழியில் இந்துமா மன்றம் சகல மக்களுக்கும்அறநெறியைப் போதிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.இதற்காக பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களில் சிவதொண்டர்அணிகளை உருவாக்கி வருகின்றோம்.

இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதன் மூலம்இளம் சமுதாயத்தை சமயப்பற்றுள்ள ஒழுக்க சீலர்களாக உருவாக்க முடியுமென்றநம்பிக்கை எமக்குள்ளது.

இதுவரை சிவதொண்டர் அணிகளை உருவாக்காத பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் இந்து மதஅமைப்புக்கள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென நாம் விநயமாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

சகல பாடசாலை அதிபர்கள், ஆலயங்களின் பரிபாலன சபையினர், பெற்றோர், நலன்விரும்பிகள் யாவரும் இதை ஒரு சேவையாகக் கருதும் அதேநேரம் தமது கடமையென்றஉணர்வோடும் சிவ தொண்டர் அணியை உருவாக்க முன்வர வேண்டும்.

இது எமக்கு மட்டுமல்லஎமது சமுதாயத்துக்கும் முக்கியமாக இளம் சந்ததியினருக்கும் செய்யும் தொண்டாகஎண்ணிச் செயற்படுவோம் என்றுள்ளது.

மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபமாகப் பலி!!

Minnal

இரத்தினபுரி, எஹலியகொட நியனகொலதென்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் முற்றத்தில் நின்றுகொன்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்குள்ளான அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

வவுனியா தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் : உள்ளூர் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!!

Vavuniya

கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த வவுனியா பொருளாதார மத்திய நிலைய சர்ச்சை முடிவிற்கு வந்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா தாண்டிக்குளத்தில் அமைக்க மாகாணசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து இதற்காக உழைத்த அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் ஊடக அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளனர்.

இவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

வட மாகாண விவசாயிகளின் நன்மை கருதி மத்திய கிராமிய பொருளாதார அமைச்சினால் 2000 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையமொன்றினை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவ் அமைச்சு கோரிய காணியை வழங்குவதில் பல்வேறான இழுபறி நிலை காணப்பட்ட நிலையில் எமது சங்கம் மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் பொது அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க அமைதியான போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறு மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் சென்று விடுமோ என்று எண்ணி விவசாயிகள் மற்றும் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் செய்வதறியாது இருக்கையில், வட மாகாணசபையில் விசேட பிரேரணை மூலமாக ஏகமனதாக தாண்டிக்குளம் விவசாய பண்ணையில் உள்ள மேட்டுக்காணியை பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வழங்கலாம் என தீர்மானம் எடுத்துள்ளமை வவுனியா மாவட்டத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றோம்.

எனவே இத்திட்டம் வெற்றியளிக்க உழைத்த மத்திய கிராமிய பொருளாதார அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் அனைவருக்கும் எமது அமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்கருக்காக அண்ணனை சுட்டு கொன்ற தம்பி!!

Burgar

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள செயின்ட் கிளவுட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப் (25). சம்பவத்தன்று இரவு இவர்களது வீட்டில் பர்கர் உணவு தயாரிக்கப்பட்டது.

அதை பங்கிட்டு கொள்வதில் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெஞ்சமின் தனது அண்ணன் நிகோலசை கைத்துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் நிகோலஸ் மார்பில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த நிகோலஸ் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தம்பி பெஞ்சமினை கைது செய்தனர்.

இலங்கையில் அதிகரித்துவரும் எச்.ஐ.வி நோயாளர்கள்!!

HIV-AIDS

இலங்கையில் முன்பைவிட கூடுதலாக, எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசின் தேசிய பாலியல் தொற்றும் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டத்திற்கான பிரிவு தெரிவித்துள்ளது.

1986ஆம் ஆண்டு எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து இன்று வரை, இலங்கையில் சுமார் 2377 பேருக்கு மட்டுமே எச்.ஐ.வி. தொற்று இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த பிரிவின் சிறப்பு நிபுணரான டாக்டர் வீரசிங்க கூறினார்.

எனினும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 68 பேர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் முன்பைவிட பரிசோதனை வசதிகள் அதிகம் இருப்பதனாலும், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாலும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது சுலபமாக உள்ளது எனவும் டாக்டர் வீரசிங்க கூறுகிறார்.

எனினும் இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று பரவுவது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-பிபிசி-

சட்டவிரோதமாக பெண்களை வௌிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நால்வர் பிடிபட்டனர்!!

arrests

பெண்களை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு வேலைக்காக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் போலி விசா மற்றும் பாஸ்போட்கள் தயாரிக்கப்பட்டு, பெண்கள் வௌிநாட்டுக்கு வேலை நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் மிகவும் சூட்சமமான முறையில், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் வௌிநாட்டு வேலை வாய்ப்புக்கான பதிவினையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் பெண் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்த மறுப்புத் தெரிவித்தது பிரிட்டன்!!

Vijay Mallaih

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள அவரை அமுலாக்கத் துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் தங்கியுள்ள விஜய் மல்லையா மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருகிறது.

எனவே அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்திய அரசு கடிதம் எழுதிய பிறகு இது குறித்து கருத்து தெரிவித்த விஜய் மல்லையா, கட்டாய நாடு கடத்தலுக்குள்ளான நான் இந்தியா திரும்ப போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது எனவும், அதேவேளையில், இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி இருவர் பலி : இரத்மலானையில் ஒருவர் பலி!!

Train1

வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். சற்று நேரத்துக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் இவர்களது சடலங்கள் வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் பலி

கொழும்பில் இன்று காலைஇடம்பெற்ற ரயில் விபத்துக்களில் மூன்று பேர் பலியாகினர். இந்த சம்பவங்கள் வெள்ளவத்தை மற்றும் ரத்மலானை ரயில் நிலையங்களுக்கு அருகில்இடம்பெற்றுள்ளன.

வெள்ளவத்தையில் ரயிலில்இறங்கி ரயில் பாதையை கடக்க முயன்ற இரண்டு பேர் ரயிலில்மோதுண்டுபலியாகினர்.

இதேபோன்றுஇரத்மலானை ரயில்நிலையத்துக்கு அருகிலும் ஒருவர் ரயிலில் மோதுண்டுபலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரத்திலும் இரண்டு பாடசாலை மாணவிகள் தெஹிவளை பகுதியில் ரயிலில்மோதுண்டு பலியானமை குறிப்பிடத்தக்கது.

அண்டி வைரசால் நன்மையை விட தீமைகளே அதிகம் : கனடா ஆராய்ச்சியாளர்கள்!!

virus-alert

கணினியில் பாதுகாப்பிற்காக இயங்கும் அண்டி வைரசால், ஒன்லைன் பணப் பரிவர்த்தனைகள், வங்கிச் சேவைகள் பாதுகாப்பாக செயல்படுவது இல்லை என ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கனடாவின், மொன்ரியலில் உள்ள கோன்கோடியா (Concordia) பலகலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

கணினிகளில் இணையம் மற்றும் இணையம் மூலமான வங்கி சேவைகள், பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அண்டி வைரஸ் பயன்படுத்தப்படும்.

ஆனால் அவ்வாறு பாதுகாப்பிற்காக பயன்படுத்தும் அ ண்டி வைரஸ்கள் தான் தீமையை விளைவிப்பதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில், பெரும்பாலும் பலராலும் பயன்படுத்தப்படும் 14 அ அண்டி-வைரஸ்களை சோதனை செய்துள்ளனர்.

அந்த அண்டி-வைரஸ்கள் அனைத்தும், கணினிகளை பாதுகாக்கும் என்றும், வைரஸ்களை அணுகவிடாமல் தடுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

ஆனால் இந்த ஆராய்ச்சியில் பலமுறை சோதித்தும், அவை நன்மையை விட தீமையையே அதிகம் விளைவித்துள்ளது தெரியவந்துள்ளது.

அவை அனைத்துமே பெரும்பாலும், பிரவுசர்கள் வழங்கும் பாதுகாப்பு அளவினை விட குறைவான பாதுகாப்பையே வழங்கியுள்ளதோடு, சிலசமயங்களில் தீவிர பாதுகாப்பு குறைபாட்டையும் அவை ஏற்படுத்தியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

கலிபோர்னியாவில் புதிய சட்டம்-ஆண் பெண் இருவரும் ஒரே கழிவறை!!

gender-neutral-restroom-sign

அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

 

நீச்சல் குளத்தில் தலைக்குப்புற விழுந்த குழந்தை : பதற வைக்கும் வீடியோ!!

Baby

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக நீச்சலடிக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், மஞ்சள் நிற ஆடை அணிந்து நீச்சல்குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் குழந்தையிடம் நீச்சல் குளத்திற்குள் இருக்கும் பெண்மணி, காலணியை காட்டுகிறார்.

அதனை தனது பிஞ்சு கையால் எடுக்க முற்படுகையில் அதனால் முடியவில்லை. அதன் பின்னர் சற்று முன்னால் நகர்ந்து வரும் குழந்தை, நீச்சல் குளத்தில் தலைகுப்புற கவிழ்கிறது. ஆனால் விழுந்த சில நொடியில் தனது காலினை திருப்பிக் கொண்டு கைகள் இரண்டையும் அசைத்தவாறு நேராக மிதக்க ஆரம்பிக்கிறது.

இடை இடையே தனது கை, கால்களையும் அசைத்தவாறு நீச்சல் அடிக்கிறது. மிகவும் தைரியத்துடன் நீந்திக்கொண்டிருக்கும் அந்த குழந்தையை ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு அவரது தாய் தூக்கி விடுகிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு 3 லட்சம் நிதி திரட்டிய 5 வயதுச் சிறுவன்

Boy

கனடா நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் வீடில்லாமல் தவித்து வரும் பொது மக்களுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் சுமார் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் மெக்முர்ரி என்ற நகருக்கு அருகில் உள்ள காட்டில் தீ விபத்து ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக எரிந்துக்கொண்டு வருகிறது.

இந்த காட்டுத்தீ நகர மக்களையும் பாதித்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை வீடு, உடமைகளை விட்டுவிட்டு அண்டை நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பிலிருந்து நிதியுதவி கிடைத்து வருகிறது.

இந்நிலையில், ஓண்டாரியோ மாகாணத்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் டக் என்ற 5 வயது சிறுவனின் செயல் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகும் சாத்தியம்!!

Avatar

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிபெற்ற அவதார் படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளிவரும் என அப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கெமரன் தெரிவித்திருக்கிறார். ஐந்தாவது பாகம் 2023 இல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் 3 பாகங்கள் வெளியாகுமென ஜேம்ஸ் கெமரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தன்னிடம் இருக்கும் கதை மூன்று பாகங்களுக்குள் அடங்காது என தற்போது கூறியிருக்கிறார்.

உலக அளவில் இதுவரை வெளியான திரைப்படங்களில், அதிக வசூல் செய்த படம் அவதார். 2009ல் வெளியான இந்தப் படம் தற்போதுவரை 2.7 பில்லியன் டொலர்களை வசூலித்திருக்கிறது.

அவதார் படத்தின் 2 ஆவது பாகம் 2018 இலும் அதற்கடுத்த பாகங்கள் 2020, 2022, 2023 இலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவென்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவன விழாவிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படுமா?

Mobile using

கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கைத்தொலைபேசியில் உரையாடும் போது உருவாகும் மின்காந்த அதிர் வலைகள் காதுவழியாக சென்று மூளையை தாக்கி புற்று நோயை ஏற்படுத்தும் என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது.

இது உண்மையா என அறிய அவுஸ்திரேலியாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆராய்ச்சியை மேற் கொண்டனர்.

அதில் கைத்தொலைபேசி அதிகம் பேசுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் 1987ம் ஆண்டில் தான் செல்போன் உபயோகம் புழக்கத்தில் வந்தது.

எனவே 1982 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களிடம் இருந்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. அவற்றில் அதிக நேரம் கைத்தொலைபேசி பேசுவதால் மூளைப் புற்றுநோய் பாதிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

அதே நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே மூளைப் புற்று நோய் இருந்தது. ஆகவே கைத்தொலைபேசிக்கும், மூளைப் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை என தெரிய வந்துள்ளது. ஆகவே வதந்திகளை நம்ப வேண்டாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.