இலங்கையில் நாளாந்தம் 658 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வேண்டுமா என்ற தொனிப்பொருளில் சுகாதார கல்விப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தாடலின்போது இந்த தகவல் வெளியானது
இலங்கையின் நடைமுறை சட்டத்திற்கு அமைய கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்பதுடன் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே கருக்கலைப்பை மேற்கொள்வதற்கான அனுமதி இருக்கின்றது.
எனினும் நாட்டில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கரு கலைப்புக்கள் அநேகமான தாய்மாரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
2014 ஆம் ஆண்டு இலங்கையில் 112 தாய் மரணங்கள் சம்பவித்துள்ளன. 112 மரணங்களில் 14 மரணங்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்புக்களே காரணமாக அமைந்துள்ளன.
இலங்கையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவோர் மத்தியிலேயே அதிகளவில் கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையியின் இளம் சந்ததியினர் மத்தியிலும் குறிப்பிடத்தக்களவு கருக்கலைப்பு காணப்படுவதாக இதன்போது தெரியவந்தது.
சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ அல்லது யாரிடம் இருந்தும் பணம் வாங்கவோ மாட்டேன் என உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வகையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் 100 கோடி ரூபாவை எட்டுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் உணவுப் பொட்டலங்களுக்குள் பணம் வைத்து கொடுப்பது, பணத்துக்கு பதிலாக பெற்றோல் போடுவதற்கான டோக்கன்கள் கொடுப்பது என புதுபுது வியூகங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பிரதான கட்சிகளான ஆளும் அ.தி.மு.க, தி.மு.க என்பனதான் இத்தகைய நடைமுறைகளை கடைபிடிப்பதாக தே.மு.தி.க, ம.தி.மு.க, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என்பன குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந் நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டார். அப்போது தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன் என சாமி சிலை முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனை தே.மு.தி.க.வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளனர்.
வவுனியா போகஸ்வெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்குள் திருடன் உள்நுழைவதைத் தடுக்கும் முகமாக வீட்டின் உரிமையாளரால் வீட்டின் பின்பக்க கதவுக்கும், யன்னலுக்கும் இடையில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தாகவும்.இதனை அவதானிக்காத குறித்த மாணவன் பின்பக்க கதவைதிறக்க முற்படுகையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
பிரபல ஆங்கில ஊடகத்துக்கு தற்போது பேட்டியளித்துள்ள கருணாநிதி, கூறியிருப்பதாவது..
1957ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன். இதுவரை ஒருமுறைகூட தோல்வியை சந்தித்ததில்லை. இந்தமுறை வெற்றி பெற்றால் ஆறாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் பதவியை மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை, ஆறாவது முறையாக நான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதை விரும்புபவர்களுள் ஸ்டாலின் மிக முக்கியமானவர்.
இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழக நிர்வாகிகளின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது செயற்பட்ட 13 மாணவர்களை இன்று நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதால் கடந்த 26ம் திகதி மாலை 05.00 மணிக்குள் அனைவரையும் விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சில மாணவர்கள் இந்த உத்தரவை கவனத்தில் கொள்ளாது அங்கு தங்கியிருந்துள்ளனர்.
இவர்களை அங்கிருந்து வௌியேறுமாறு பலமுறை நிர்வாகிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்த போதும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இதனையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகிகளால் இது குறித்து களனி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
பின்னர் இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பந்தப்பட்ட 13 மாணவர்களையும் மஹரகம நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து இன்று அவர்களை கடுமையாக எச்சரித்து நீதவான் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் ஆதரவு யாருக்கு என்பதை அகில இந்திய இளையதளபதி விஜய் தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.
நடைபெறவிருக்கின்ற 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்வேறு நடிகர், நடிகைகள் தங்கள் அபிமான கட்சிகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவரது விஜய் மக்கள் தலைமை இயக்கத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்தக் கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சயமம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.
ஆனால் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைப்பாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன்.
மேலும் இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கின்றேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே இளைய தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அன்னையர் தினமான (08.05.2016) அன்று தங்கள் பிள்ளைகள், கணவர் உட்பட உறவுகளை காணாமல் தேடிஅலையும் 4 குடும்ப அன்னையர்களின் குடும்பங்களுக்கு கனடாவை தளமாக கொண்டு இயங்கும் வன்னிப் பட்டறை அமைப்பின் தலைவர் த.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் உலர் உணவுப் பொதிகள், ஆடைகள் வழங்கினர்.
பிரதீபனின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் சென்று வழங்கி இருந்தனர்.
இறுதியில் அனைவரும் வன்னி ப் பட்டறைக்கும் பிரதீபன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுப் பயிற்சியினைப் பெற்றுவந்த பெண் உட்பட 10 பேர் இன்று (10.05.2016) சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.
வவுனியா புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் எம்.ஏ.ஆர்.எமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 6 பேர் ஒருவருட புனர்வாழ்வு பெற்றதுடன் 4 பேர் கிராமசேவையாளர்கள் (பெண் உட்பட) 3மாத புனர்வாழ்வு பெற்றுவந்துள்ளனர்.
மொத்தம் 10பேர் இன்று அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பின்ஆய்வு இணைப்பதிகாரி கேணல் பி.பி.எச்.பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக, பௌத்த சமயத் தலைவர், போராளிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா நகரில் காணப்படும் குப்பைகளை சுத்தப்படுத்தும் செயற்பாட்டுத் திட்டத்தின்கீழ் இன்று (10.05.2016) காலை 9.30 மணிமுதல் சிரமதானப் பணி நடைபெற்றது.
இச் சிரமதானப் பணியில் வவுனியா பொலிசார், வர்த்தக நிலைய ஊழியர்கள், நகரசபை ஊழியர்கள், சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வவுனியா மாவட்ட சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவையினால், வவுனியா இறம்பைக்குளம் சமுர்த்திச் சங்கத்தில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாகவும், இச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருசிலர் இச்சங்கத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதாகவும், இவர்களே தொடர்ச்சியாக இவர்களின் பெயர்களிலும், வெவ்வேறு நபர்களின் பெயர்களையும் பயன்படுத்தி கடன் பெற்றுவருவதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இம் முறைப்பாட்டில்..
வவுனியா இறம்பைக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் இயங்கும் சமூர்த்தி இயங்கு தளத்தில் ஊழல்கள் நிறைந்து காணப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் பலரின் வாய்கள் மூலமாக முனுமுனுக்கப்பட்டாலும் கூட, இவைகள் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று தவிர்க்க முடியாத நிலையில் அன்று நடந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னைய சமூர்த்தி உத்தியோகத்தினரால் வங்கியில் இருந்த ஆவணங்கள் எரிக்கப்பட்ட நிலையையும் பத்திரிக்கையில் செய்தியாக வெளிவந்த நிலையில்,
மீண்டும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு நேரில் கண்டறியப்பட்டு ஒரு புதன்கிழமை நடைபெற்ற சமூர்த்திக் கூட்டத்தில் கிராம சேவையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சிவில் பாதுகாப்பு குழுவினரின் முன்நிலையில் பாதிக்கப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு மிகவும் காரசாரமான விவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்ற நிலையில்..
தொடந்தும் இப்படியான சம்பவங்கள் நடந்து கொண்டு இருப்பதாகவே நாம் சந்தேகிக்கின்றோம். ஆரம்பம் முதலே இச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு சிலர் மாத்திரமே இச்சங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், இவர்களே தொடர்ச்சியாக இவர்களின் பெயர்களிலும், வெவ்வேறு நபர்களின் பெயர்களையும் பயன்படுத்தியும் கடன்கள் பெற்று ஊழல்கள் செய்ததையும் கடந்த காலத்தில் நிருப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் உரிய நபர்கள் இப்படியான கடன்களைப் பெற்று வெளியில் அதிக வட்டிக்கு இன்றும் விடுவதாகவே நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது நாம் சந்தேகிக்க வேண்டியவர்களாகவே உள்ளோம்.
எனவே இறம்பைக்குளம் சமூர்த்திச் சங்கம் தொடர்பாக ஒரு விசாரணையை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதுடன், பழைய நிர்வாகத்தை கலைத்துவிட்டு, ஊழல் அற்ற புதிய நிர்வாகத்தை கண்கானிப்புடன் செயற்படுத்த ஆவண செய்யுமாறும் சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவை தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
நகல்கள்.
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வவுனியா.
சமூர்த்தி வங்கி முகாமையாளர், பிரதேச செயலக வளாகம், வவுனியா.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு, வவுனியா மாவட்டம்.
தமிழ் சினிமாவில் சமீபத்தில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் வித்யூலேகா ராமன். இவர் சமீபத்தில் வியன்னா சென்றபோது தனது உடைமைகளை இழந்தார் என்ற செய்தி வெளிவந்தது. தற்போது தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.இவர் கோடை விடுமுறைக்காக நண்பர்களுடன் வியன்னா சென்றுள்ளார்.
அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார். அப்போது அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குள் உள்ளே நுழைந்த போது யாரோ இருவர் அவரிடம் வழி கேட்டுள்ளனர். நான் சுற்றுலா பயணி, எனக்கு தெரியாது என்று கூறியபோதும் சில நிமிடங்களில் மீண்டும் பின்தொடர்ந்து அதே கேள்வியை கேட்டுள்ளனர். திடீரென வித்யுலேகா பாஸ்போர்ட் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வைத்திருந்த பேக்கை பறித்து சென்றுள்ளனர்.இதனால் அதிர்ந்து போன அவர் அங்குள்ள போலிசிடமும், இந்திய தூதரகத்திடமும் புகார் தெரிவித்ததையடுத்து உடனடியாக பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கப்பட்டதாம்.
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னால் தான் செல்பி எடுப்பதற்காக மொபைல் போனை கையில் வைத்திருந்தாராம். அதனால் தான் போன் தப்பியது, மற்றவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது என்று கூறியுள்ளார்.இவர் தற்போது தமிழ் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் அடுத்தடுத்த படங்களின் ரிலிசுக்காக காத்திருக்கிறார்.
நந்தா படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ்.அதன் பின் சில படங்களில் காமெடி ஹீரோவாகவும் நடித்தவர் மீண்டும் காமெடியனாகவே மாறினார். நடிகர் சங்கத்தேர்தலிலும் வெற்றி பெற்று துணைத்தலைவராக உள்ளார்.வருகிற தமிழ்நாட்டு தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
சமீபத்தில் இவர் போட்டியிடுகிற திருவாடனை தொகுதிக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் ஜாதிய பின்னணியில் ஓட்டு கேட்டு வருவதால் உள்ளே நுழையவிடாமல் திருப்பி அனுப்பியதாக ஒரு காணொளி இணையதளத்தில் பரவி வருகிறது.
விஜய் யாருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். இந்நிலையில் அவர் வீட்டிலே உதவி இல்லை, ஒரு அன்பு கட்டளை உள்ளது.இதை நிறைவேற்றுவாரா?
வேறு ஒன்றும் இல்லை, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், விஜய்க்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார்.விஜய் தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வவுனியா தோணிக்கல் அம்மன் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் சிங்கள புதுவருட வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த 2016.05.07 சனிக்கிழமை நடை பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.M.M.வசந்த விக்கிரமசிங்க அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ் உட்பட பெருமளவிலான பிரதேச மக்கள் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
ஐஎபில் தொடரில் மும்பை அணிக்கு எதிரான நேற்றைப் போட்டியின் போது ஐதராபாத் அணியின் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்து ஆசி பெற்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்தது.முன்னாள் இந்திய வீரர் சச்சின் மீது அளவில்லாத பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் வீரர்களின் யுவராஜ் சிங்கும் ஒருவர்.
இதனாலே அவரை பார்க்கும் போது எல்லாம் மைதானம் என்று கூட பாராமல் அவரது காலில் விழுந்து ஆசி பெறுவார் யுவராஜ். நேற்று நடந்தப் போட்டியிலும் இந்த சம்பவம் நடந்தது.நேற்றையப் போட்டியில் ஐதராபாத் அணி தவான், வார்னர், யுவராஜ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், நெஹ்ரா, ரஹ்மானின் அபார பந்துவீச்சாலும் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் பெவிலியன் திரும்பினர். அப்போது அங்கிருந்த சச்சின் மும்பை வீரர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில சச்சின் காலை தொட்டுக் வணங்கினார் யுவராஜ். உடனே சச்சின் நெளிந்தபடி அவரை தடுத்து நிறுத்தினார். இதை சக வீரரான கனே வில்லியம்சன் ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 23 பந்தில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரி என 39 ஓட்டங்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களுடைய குழந்தைகளை புகைப்படங்களாக எடுத்து, அதை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவு செய்தால் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் தங்களுடைய பிடித்த விஷயங்கள் அல்லது ஒரு செய்தியை பற்றிய தங்களுடைய கருத்துக்கள் ஆகியவற்றை பதிவு செய்வது என்பது போய், தன்னுடைய குடும்பப்புகைப் படங்கள், தங்களுக்கு பிறந்த பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பழக்கம் அனேகரிடம்; உள்ளது.
மேற்கு நாடுகளில் இது இன்னும் அதிகம். ஆனால், அந்த நாட்டு அரசாங்கம் இதை சுலபாமக எடுத்துக்கொள்வதில்லை. குழந்தைகளின் தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்கிறார்கள். முக்கியமாக, பிரான்ஸ் நாட்டில் அதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அனேக பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் செய்யும் வேடிக்கையான பல விஷயங்களை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்கின்றனர். இது அந்த குழந்தையின் தனிப்பட்ட உரிமைகளை பாதிப்பதாக அந்த நாடு கருதுகிறது.இதனால், தங்களுடைய குழந்தைகள் பற்றி அதிகமான, மோசமான புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசாங்கம் எச்சரித்துள்ளது.