திருமணத்திற்கு சென்ற இடத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம்!!

1 (26)

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பொம்பே பதா கிராமத்தை சேர்ந்த 14 வயது பழங்குடியினத்து சிறுமி சொன்டாக்கே கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 18ம் தேதி அங்கு சென்றுள்ளார்.

திருமணம் முடிந்தபிறகு அவர் மண்டபத்தில் உள்ள அறை ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மயுர்முக்னே(19) என்பவர் சிறுமியை எழுப்பி அங்கிருந்து வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு வைத்து அவரது நண்பர்கள் இருவருடன் இணைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மயுரின் நண்பர்கள் ஹரிஷ் பாம்பே, உதய் பாம்பே ஆகியோர் சிறுமியை மிரட்டியுள்ளனர்.

முதலில் இது குறித்து யாரிடமும் கூறாத சிறுமி மறுநாள் காலை துணிவை வரவழைத்துக் கொண்டு பொலிசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் மயுர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட 3 நபர்களும் சிறுமியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பில் அதிகரித்துள்ள எலித் தொல்லை!!

A-rat---not-necessarily-t-009

தலைநகர் கொழும்பில் கடுமையான எலித் தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரில் துரித கதியில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பிரதான சுகாதாரப் பரிசோதகர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 53000 வீடுகளுக்கு எலிகளை அழிப்பதற்கான மருந்த வகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50000 வீடுகளுக்கு இந்த மாதத்தில் இந்த வகை மருந்துகள் வழங்கப்படவுள்ளன.கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை அதி வேகமாக பரவி வருவதாகவும், இதனால் லெப்டோஸ்பய்ரோசிஸ், மா மாரியா உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் நோக்கிலேயே எலிகளை கொல்லும் மருந்து வகைகள் விநியோகம் செய்யப்படுகின்றது.எலிகளை அழிப்பதற்கான மருந்து வகைகள் கிடைக்காத வீடுகள் கொழும்பு பொது சுகாதார திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், 011-2503550 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து அறிவிக்க முடியும் என ருவான் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

 

சிங்கப்பூரில் பெண் மீது சேஷ்டை- இலங்கையருக்கு சிறை!!

prisoner-jail

சிங்கப்பூரின் புவான்கொக் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக இம்சைக்குள்ளாக்கிய இலங்கை மாணவர் ஒருவருக்கு 10 வார கால சிறை தண்டனை விதக்கப்பட்டுள்ளது.யதோவிட்ட விதானகே புத்திக பத்மகுமார என்ற 28 வயதான குறித்த நபர், 33 வயதான பெண்ஒருவர் மின் உயர்த்தி ஒன்றில் வைத்து இவ்வாறு இம்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 13ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் இடம்பெற்ற தினம் இரவு குறித்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற அவர், கட்டிடம்ஒன்றின் மின்னுயர்த்தியில் வைத்து அந்த பெண்ணை தகாத வகையில் தொட்டு, அங்கிருந்துதப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவரது செய்கை சீ.சீ.ரீ.வி.கமராவில் பதிவாகி இருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

முஸ்லிம் பெண்கள் திருமணம் : 16ஆக இருந்தது 18ஆக மாறியது!!

muslim-wedding-1a

முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளும் வயதெல்லை 12இல் இருந்து 16 அல்லது 18ஆகஅதிகரிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்படவுள்ளது.முஸ்லிம் திருமணம் மற்றும் விவகாரத்து சட்டம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டஜனாதிபதி நிபுணர்கள் குழு இந்த பரிந்துரையை முன்வைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

திருமண வயதெல்லை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிபுணர்கள் குழுமேற்கொண்டுள்ள போதும், அதனை 16 ஆகவா அல்லது 18 ஆகவா அதிகரிப்பது என்பது தொடர்பில்இன்னும் தீர்மானிக்கவில்லை.இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.இதன் பரிந்துரை அறிக்கை எதிர்வரும் ஜுன் மாதம் முன்வைக்கப்படவுள்ளது.இந்த குழு கடந்த 2009ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போதுநியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பெண் மீது துப்பாக்கிச் சூடு! இராணுவத்தினரிடம் விசாரணை!!

1 (58)

தந்திரிமலை – போகொட இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் பெண் ஒருவரின் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தவறுதலாக குறித்த துப்பாக்கி பிரயோகம் நடந்திருக்கலாம் எனவும் இதனடிப்படையிலேயே இராணுவத்தினரிடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனை இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தாயான குறித்தப் பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.இதனையடுத்து தந்திரிமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை இந்தப் பெண்ணின் உடல்நிலை சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

துஷ்பிரயோகம் செய்த பொலிஸார் விளக்கமறியலில்!!

1 (9)

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகத்தின் பணியாளர் ஒருவருக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தம்புள்ள பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.துப்பாக்கியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தம்புள்ளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, தம்புள்ளை நீதவான் குலதுங்க பண்டாரவால் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த உப பொலிஸ் பரிசோதகரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் இருந்ததாக கூறப்படும் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்கள் இருவர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

அதிக வெப்பத்தினால் கல்வியை இழக்கும் வன்னி மாணவர்கள்!!

DB021413A

அதிக வெப்பத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதுப்புக்கு உள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.தாங்கள் தகரக்கொட்டகைகளில் இருந்து கல்வி பயில்வதாகவும், மற்றும் கல்வி புகட்டும் ஆசிரியர்களும் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட கல்வி வலயத்தில் தற்போது 104 பாடசாலைகள் இயங்குகின்றன. இந்தப் பாடசாலைகளில் 32 ஆயிரத்து 245 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அத்துடன் இப்பாடசாலைகளில் 1, 727 ஆசிரியர்களும் கல்வி கற்பித்து வருகின்றனர்.இவர்களுக்கு வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாமையால் தகரக் கொட்டகைகளிலும் மர நிழலிலும் இவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக வினாசியோடை, வேரவில், முக்கொம்பன், கறுக்காய் தீவு, செம்மங்குன்று, ஆனையிறவு, பரந்தன், முரசுமோட்டை,புன்னைநிராவி உள்ளிட்ட பாடசாலைகள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

முற்பகல் பத்து மணிக்கு பின்னர் கல்வி பயில முடியாத அவல நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வறட்சி காரணமாக குடி நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அதிக வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

புதிதாக பல மருந்து வகைகளை தயாரிக்க சுகாதார அமைச்சு முடிவு!!

medicine-tablet

இந்த வருடம் தொடக்கம் அரச மருந்தாக்கக் கூட்டுதாபனம் புதிதாக 19 மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை மருந்து உற்பத்தித் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் சயுரு சமரசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரத்மலானையில் அமைந்துள்ளதைப் போன்று வத்தளை மற்றும் கண்டி பிரதேசங்களிலும் மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் மூலம் தற்போது வரை 48 மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் காலாண்டுக்குள் மாத்திரம் 38 மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

வெப்பத்துடனான காலநிலை காரணமாக பாடசாலை நேர அட்டவணைகளில் மாற்றமில்லை!!

hot-weather

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலையைக் கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய பாடசாலை அதிபர்களை தௌிவுபடுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் பாடசாலை நேர அட்டவணைகளில் எவ்வித மாற்றங்களும் இடம்பெற மாட்டாது என அறிக்கை ஒன்றின் ஊடாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிக வெப்பத்தினை கருத்தில் கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் நிறைவு செய்யுமாறு சுகாதார சேவை பணிப்பளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால பரிந்துரைத்துள்ளார்.

அதிக வெப்பம் நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்கள் திறந்த வௌியில் நடமாடுவதால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளவதாக டாக்டர் பாலித்த மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

வெப்பத்துடனான காலநிலையினால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தாம் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும என மாகாண கல்வி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகள் நேரகாலத்துடன் மூடப்படுவதில் மத்திய-மாகாண அரசுகளிடையே மோதல்!!

School

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இந்த வாரம் முதல் நண்பகல் 12 மணியுடன் மூடப்படுகின்றன. ஆனாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசிய பாடசாலைகள் வழக்கம்போல் இயங்குகின்றன.

மாகாண சபைகளினால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை உடனடியாகக் கைவிடுமாறு மத்திய அரசின் சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆராய்ந்த பின்னர் அதனைக் கைவிடுமாறு உரிய மாகாண சபைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் நேர அட்டவணையில் எந்நவொரு மாற்றமும் ஏற்படுத்தப்படாது என மத்திய கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சின் இந்தத் தீர்மானம் குறித்து கவலை வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண தழிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ் ஜெயராஜா இதனை மாகாண சபையின் நிர்வாகத்தின் மீதான மத்திய அரசின் தலையீடாக பார்ப்பதாக தெரிவித்தார்.

பகலில் 11.30 முதல் 1.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் அதிக வெப்பம் உணரப்படுவதால் அந்த நேரத்தில் மாணவர்களை வெளியில் நடமாடுவதை குறைக்குமாறு மத்திய கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

வகுப்பறைகளில் காற்றோட்டம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் கழுத்துப்பட்டி அணிய வேண்டும் என்ற விதியை தளர்த்துதல் போன்ற மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் மத்திய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

-பிபிசி-

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஸ்தூபி அமைக்கப்படும்!!

Vijayakala-Maheswaran_2

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஐந்து வருடங்களுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்றை எழுப்புவது தொடர்பில், தனக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டு பதவி பறிபோனாலும் அதுகுறித்து தான் கவலைப்படவில்லை எனவும் அமைச்சர் விஜயகலா கூறுகிறார்.

உயிரிழந்தவர்கள் நினைவாக அங்கு சென்று தீபங்களை ஏற்றுவதற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாது எனவும் கூறும் அவர், அதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் கூறுகிறார்.

அங்கு நினைவு ஸ்தூபி எழுப்பப்படுவதில் வடமாகாண சபையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் இருக்கும் ´நல்லாட்சிக்கான அரசாங்கத்தால்´ வட மாகாண சபைக்கு அதிகாரமும் நிதியும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

-பிபிசி

வவுனியாவில் கொள்ளையர்கள் அட்டகாசம் : ஆயுதமுனையில் நகைகள் கொள்ளை!!

armed-men

வவுனியாவில் நேற்று முன்தினம் (02.05.2016) இரவு 7.15 மணியளவில் மகாறம்பைக்குளம் காத்தார்சின்னக்குளம் பகுதியில் வீடொன்றுக்குள் சென்று அங்கிருந்தவர்ளை அச்சுறுத்தி பெறுமதியான நகைகளை ஆயுதமுனையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மகாறம்பைக்குளம் காத்தார்சின்னக்குளம் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள கருப்பிஞ்சாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் சென்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இரண்டு சங்கிலி, ஒருசோடி காப்பு, நெக்லஸ் உட்பட 8 ½ பவுண் தங்க நகைகள் (340 000 பெறுமதி) தலையை மூடிய ழுமுக்கவசம் அணிந்து வந்தவர்களால் ஆயுதமுனையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் மூவரடங்கிய குழுவினர் மோட்டார் சைக்கிலில் வந்துள்ளதாகவும,

அச்சமயம் வீட்டில் தாய், மகள் இருவரும் இருந்துள்ளனர். காலையில் தந்தை யாழ்ப்பாணம் சென்ற நிலையிலையே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

48 மணி நேரத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை நிகழ்த்திய கபாலி!!

Kabali

கபாலி படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள். இந்நிலையில் இப்படத்தின் டீசர் மே 1ம் தேதி வெளிவந்தது.

இந்த டீசரை ஒரே நாளில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். இந்நிலையில் 2 நாள் முடிவில் இந்த டீசரை 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

2.88 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது, இன்னும் 2, 3 நாட்களில் இதுவரை வந்த அனைத்து டீசர்களின் ஹிட்ஸ் சாதனையையும் கபாலி முறியடித்துவிடும்.

நீண்ட நாள் காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி!!

Danush

தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தங்கமகன் படத்திற்கு பிறகு ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அடுத்தடுத்து அதிரடி படங்களாக கமிட் ஆகி வருகின்றார்.

இதில் பிரபு சாலமன் இயக்கத்தில் தொடரி படத்தின் பாடல்கள் எப்போது வரும் என அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீடு குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.தொடரி படத்தின் பாடல்கள் மே 8ம் தேதி சென்னையில் பிரபல திரையரங்கில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

3 வாரத்தில் வேதாளம் வசூலை முறியடித்த தெறி!!

THeri

தெறி படத்தின் வசூல் விண்ணை முட்டுகின்றது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். ஏனெனில் கோடை விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது.

இந்நிலையில் இப்படம் சென்னையில் 3 வாரத்தில் 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த வருடத்திலேயே சென்னையில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி வேதாளம் சென்னையில் ரூ 6.5 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், தெறி 3 வாரத்தில் வேதாளம் வசூலை முறியடித்தது விட்டது.

திருமணங்கள், இறுதிச்சடங்குகள் நடக்கக்கூடாது : வட கொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு!!

Korea

வட கொரியா அதிபர் தன்நாட்டு மக்களுக்கு விதித்துள்ள உத்தரவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வடகொரியா நாட்டின் உயர் தலைவராக இருக்கும் கிம் ஜாங்கின் பதவிப்பிரமாணம் நடைபெறவிருக்கிறது. இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிம்ஜாங் 33 வயதை எட்டியுள்ளதால் இந்த பதவிப்பிரமான நிகழ்ச்சி மே 6 ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறவிருக்கிறது.

ஆனால் சரியான திகதி வெளியிடப்படவில்லை, இந்நிலையில் கிம் ஜாங், தனதுநாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், பதவிப் பிரமாணம் பாதுகாப்புகருதி, நான் பதவியேற்கும் வரைநாட்டில் திருமணங்கள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது.

அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்துவிட்டால் கூட இறுதிச்சடங்கினை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

அதிபரின் இந்த உத்தரவினை கேட்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனையை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், வடகொரியா ஒரு அணு ஆயுத தேசிய நாடு என அறிவித்துள்ளது.