காப்பாற்ற யாரும் வரவில்லை : பலாத்காரத்தில் இருந்து தப்பிய இளம் பெண் உருக்கம்!!

Abuse

பெங்களூரில் இளம்பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி பெங்களூரில் உள்ள கத்திரிகுப்பே மெயில் ரோட்டில் நடந்து வந்த ராதிகா என்ற இளம் வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் குண்டுகட்டாக தூக்கி சென்று பலாத்காரம் முயற்சி செய்துள்ளார்.

அந்நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்பெண் கூச்சலிட்டும், யாரும் உதவிக்கு வரவில்லை, இதனைத்தொடர்ந்து மர்மநபரை தனது பலத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்த இளம்பெண், கத்திரிகுப்பே நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இளம் பெண்ணைமர்மநபர் தூக்கிசெல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கத்திரிகுப்பே மெயின் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள அந்த காட்சியில், ஏப்ரல் 23ம் திகதி இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து ராதிகா இறங்குகிறார்.

பின்னர் அவர் சாலையோரம் நின்று கொண்டிருக்கும் போதுபின்னால் வரும் மர்மநபர், அவரை குண்டுகட்டாக அங்கிருந்து தூக்கி செல்கிறார். ராதிகாவை மர்மநபர் தூக்கி செல்வதை அப்பகுதியில்வசிக்கும் சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.

மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் ராதிகாவை மர்மநபர் தூக்கி செல்வதை பார்த்துவிட்டு, அவரை காப்பாற்ற முயற்சிசெல்லாமல் அங்கிருந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் இரவு 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் தான் அரங்கேறி உள்ளது. இதற்கிடையில், தலைமறைவாக உள்ள மர்மநபரை பிடிக்க தெற்கு மண்டல துணை கமிஷனர் லோகேஷ் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. ‘

தனிப்படை பொலிசார் மர்மநபரை வலைவீசி தேடியதில், பலாத்காரம் செய்ய முயற்சி செய்த மர்மநபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து துணை பொலிஸ் கமிஷனர் லோகேஷ்குமார் பேசுகையில், ”இச்சம்பவம் தொடர்பாக ஒருவனை கைது செய்து உள்ளோம். அவனது பெயர் அக்ஷய். அவனே குற்றவாளி,” என்று கூறியுள்ளார்.

இற்கிடையில் அப்பெண், என்னை அந்நபர் கடத்தி செல்கையில் சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, காப்பாற்றுவதற்காக யாரும் வரவில்லை என கூறியுள்ளார்.

வடமாகாண பாடசாலைகளை 12 மணியுடன் பூட்ட நடவடிக்கை!!

School Closed

வடபகுதிப் பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் குறிப்பிட்ட காலம் வரைக்கும் பூட்டி மாணவர்களைப் பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசாவிடம் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பூமி வெப்பமடைந்து வெப்பம் வெளிப்பட்டு வருவதாலும் இலங்கைப் பிராந்தியத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் உச்சநிலையையடைந்திருப்பதாலும் அதன் பாதிப்புக்களிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆரம்பப் பாடசாலை சிறுவர்களைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடும் பொறுப்பும் எமக்கு உண்டு.

வடக்கு கிழக்கில் பல பாடசாலைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்படுகின்றன. ஏனெனில் 12 மணிக்குப் பின் நிலவெப்பமும் அதிகரிக்கும் என்பதால் சூரிய வெப்பத்தாக்குதலில் எதிர்விளைவுகள் சிறுபிள்ளைகளைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும் எனும் எண்ணமேயாகும்.

எனவே வடபகுதிப் பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மூடி மாணவர்களைப் பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-வீரகேசரி-

சிங்கப்பூரில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இலங்கை மாணவருக்கு சிறை!!

Lift

சிங்கப்பூரில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இலங்கை மாணவர் ஒருவர் 10 வாரங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்திக்க பத்மகுமார எனும் 28 வயதான அவர், அந்த நாட்டின் வீடமைப்பு மற்றும் அதிகார சபையின் கட்டடத்தில் இருந்த லிப்டுக்குள் வைத்து, கடந்த ஏப்ரல் 13ம் திகதி 33 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பின்னர் அப் பகுதிகளில் இருந்த கெமராப் பதிவுகளின் அடிப்படையில் ஐந்து நாட்கள் கழித்து குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் ஒரு வருட டிப்ளோமா பாடநெறியை பயின்று வருவதாகவும், சம்பவம் இடம்பெற்ற போது மதுபோதையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மனிதர்கள் வாழத் தகுந்த மூன்று கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

terr_sizes

பூமியைப் போலவே மனிதர்கள் வாழத் தகுந்த மூன்று கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பெல்ஜியத்தில் உள்ள லீகே பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் விண்வெளித்துறை விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறியதாவது..

உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள வேதியியல் படிவங்கள் உள்ள ஒரு சிறு சூரிய குடும்பம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுபோன்ற வேதியியல் படிவங்கள் இருப்பது முதல் முறையாகத் தெரிய வந்துள்ளது. 39 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு சிறு நட்சத்திரத்தை 3 கிரகங்கள் சுற்றி வருகின்றன.

ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவான 6 இலட்சம் கோடி கி.மீ. ஆகும். 39 ஒளியாண்டுத் தொலைவில் இந்த கிரகங்கள் அமைந்துள்ளன. அந்த 3 கிரகங்களிலும் நமது பூமி, சுக்கிரன் (வீனஸ்) கிரகத்தைப் போன்ற அளவு, தட்ப வெப்பம் இருப்பதாகத் தெரிகிறது. இது மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்றவை எனக் கூற முடியும்.
சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள “டிராப்பிஸ்ட்’ தொலைநோக்கி வழியாக அந்த சிறு நட்சத்திரத்தையும் அதனைச் சுற்றி வரும் 3 கிரகங்களின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பல மாதங்கள் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவை மனிதர்கள் வாழத் தகுந்த கிரகங்கள் என முடிவுக்கு வந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் “தி நேச்சர்’ ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.

மரம் பேசுகிறேன்..

Tree

பூமித்தாயின் மடியில் உயிர் முட்டி வந்தேன்.
சூரியனின் ஒளிபட்டுபச்சையமும் கொண்டேன்.
உயிரினங்கள் வாழ்வோடுஉறவாக நின்றேன்.
பிராணவாயு தூய்மையாக உமக்களித்து மகிழ்ந்தேன்.
எனைமறந்து நகரமயம், நாகரீகம் விவேகமற்ற விபத்தே.

போதிமரப்புத்தனும் என் மடியில் அமர்ந்தே
இருந்த இடத்தில் ஞானம் பெற்றே மூவுலகம் வென்றான்.
ஆதி மனிதன் சுற்றி வணங்கிய இயற்கைத் தெய்வம் நானே.
ஆயுர்வேத மருந்தாக நீண்ட ஆயுள் தந்தேன்.

ஞானம் பெற முனிவரெல்லாம் என் இடம் தேடி வருவார்.
விஞ்ஞானம் என எனை மறந்து ஓசோன் துளை தானே.
நீர் வணங்கும் போது வணங்குகின்ற இயற்கை தெய்வம் நானே.

மழை என்று கேட்ட போது மேகம் தொட்டு வந்தேன்.
நிழல் என்று கேட்டபோது நிஜமாகக் குளிர்ந்தேன்.

வனவிலங்கு வாழ்வளித்து பிள்ளை போலக்காத்தேன்.
உணவுச்சங்கிலி காக்கும், எனை அறுந்திடாமல் காப்பீர்.

வீடு, தளபாடமென உயிர் முடித்தும் வந்தேன்.
வெட்டு முன்னே ஊன்றி எனை விதைத்திடுதல் நலமே.

பக்தி என்று வந்த போது மாலையாகத் தொழுதேன்.
காதல் என்று வந்த போது ரோஜாவிலும் சிவந்தேன்.
பசி என்று கேட்ட போது பழமாகத் தந்தேன்.
ருசி என்று கேட்ட போது அறு சுவையில் ருசித்தேன்.
உப்பென்று கடலிடமே ஒரு சுவையஅளித்தேன்.
வாசம் என்று நுகர்ந்த போது சந்தனமாய் மணந்தேன்.

காலநிலை சீராக என் சிறப்பறிதல் நலமே.
கவிதை கொண்டு
என் மனதை அறியவைத்த பெரிய மனிதர் அறமே.

-குமுதினி ரமணன்-

வவுனியா பொது வைத்தியசாலையில் சேவை நலன் பாராட்டு விழா!!

 
வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த 32 வருடங்களாக வெளிநோயாளர் இரத்தப் பரிசோதனை பிரிவில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் திருமதி மாலினி குஸ்மலதா அவர்களின் சேவையினை பாராட்டும் முகமாக நேற்று முன்தினம் (01.05.2016) வவுனியா பொது வைத்தியசாலையி பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் சேவை நலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அன்னார் ஓய்வு பெற்றுச் செல்வதையிட்டு அன்னார் ஆற்றிய சேவைக்காக நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் வெளிநோயாளர் பரிவு வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

image-513f4835541647a1542063584f25bcdfab08816e128019704f9d05a543500804-V image-d59adf75db52cc7d52b25ca0bacf8b0951996f882b7cae3926dedd135e476077-V image-f085fb2502664c8c70234779103b947f003b00d702e331d34710e7d7849ade02-V image-fe19646b9143f900994f4dec868477d5053661157ddfa7af2b0d07ab4f4330c2-V

வவுனியாவில் யானையிடம் இருந்து உயிர் தப்பிய ஊடகவியலாளர்கள்!!

Elephant

நஞ்சடித்த பள்ளம் ஆற்றுப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட வவுனியா ஊடகவியாளர்கள் யானையிடம் இருந்து உயிர் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பெரியபுளியங்குளம் பகுதியில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் காடு மற்றும் வயல் நிலங்களை அண்டி அமைந்துள்ள நஞ்சடித்த பள்ளம் பகுதியில் செய்தி சேகரித்து கொண்டிருந்த போது அங்கு நீர் அருந்துவதற்காக யானை ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரும், விவசாயிகளும் பாதுகாப்பாக பின்வாங்கி மறைந்து கொண்டனர். நீண்ட நேரமாக அப்பகுதியில் மறைந்திருந்த ஊடகவியலாளர்கள் யானை சென்ற பின் விவசாயிகளின் துணையுடன் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

தலைகீழாக கவிழ்ந்து பஸ் விபத்துக்குள்ளானத்தில் 16 பேர் படுகாயம்!!(படங்கள்)

 
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் மஸ்கெலியா பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று நோர்வூட் பாலத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (03.05.2016) மதியம் 2.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் 16 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக பாடசாலை மாணவர்களே காயங்களுக்குள்ளாகியிருப்பதாக பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

photos (1) photos (2) photos (3)

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை!!

Fight

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் நண்பன் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்றுவிடுவேன், தலையை முறித்துவிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாட்ட சொல்லிடாத’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாட்ட சொல்லிருவன்’ என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்களின் ஆசிரியரைப் பற்றி கமன்ட் அடிக்கக் கூடாது. “உங்கட டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்கட டீச்சருக்கே ஒண்டுமே தெரியாது’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷம்பூ வாங்கிவந்தால், உனக்கு சொக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விடயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, ‘நீ நன்றாக படித்தால் டொக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியோன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

வவுனியா புளியங்குளம் A9 வீதி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் திருக்கோவில் எண்ணெய் காப்பு!!(படங்கள்)

வவுனியா A9 வீதி புளியங்குளம் சந்தியில் புதிதாக அமைக்கபட்ட ஸ்ரீ லக்சுமி நாராயணன் ஆலயத்தின் நூதன பிரதிஸ்ட கும்பாபிசேகத்தை முன்னிட்டு இன்று 03.05.2016 செவ்வாய்கிழமை காலைமுதல் எண்ணெய் காப்பு இடம்பெற்று வருகிறது .

மேற்படி ஆலயத்தின் நூதன பிரதிஸ்ட மகா கும்பாபிசேகம்    நாளை 04.05.2016 புதன்கிழமை  காலை பத்துமணியளவில் சிவஸ்ரீ நந்தகுமார குருக்கள் தலைமையில்  இடம்பெறும்.

20160503_124542 20160503_124551 20160503_124557 20160503_124603 20160503_124608 20160503_124637 20160503_124641 20160503_124649 20160503_130529 20160503_130534 20160503_130540 20160503_130547

கடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகில் பயணம்!!(வீடியோ)

 
கடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகொன்றைப் பயன்படுத்தி நதியொன்றில் பயணம் செய்து பிரித்தானியர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.

ஹரி டவியர் மற்றும் சார்ளி வோலர் ஆகிய மேற்படி இருவரும் தொழிற்சாலைகளிலிருந்து வீசப்பட்ட கடதாசி பொருட்களை மீள் சுழற்சிக்குட்படுத்தி இந்தப் படகை வடிவமைத்துள்ளனர்.

‘திஸ் வே அப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படகை ஒரு வாரத்தை செலவிட்டு ஹரியும் சார்ளியும் வடிவமைத்துள்ளனர்.

இந்தப் படகானது தேம்ஸ் நதியில் மூழ்காது வெற்றிகரமாக பயணித்துள்ளது. அந்தப் படகு தண்ணீரில் மூழ்குவதைத் தடுக்க அதன் மேற் பகுதியில் நீர் கசியாத மெழுகு கடதாசி ஒட்டப்பட்டிருந்தது.

மேற்படி படகில் அதனை உருவாக்கிய இரு சாதனையாளர்களும் தொலைக்காட்சி அறிவிப்பாளரும் பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 காணொளியைப் பார்க்க

2 1 3

இலங்கை தேசிய கபடி அணியில் முதன்முதலாக ஒரு தமிழன்!!

Kapadi

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்களில் ஒருவரும், முன்னணி கபடி பயிற்றுவிப்பாளருமாக துரைச்சாமி மதன்சிங், 3வது ஆசிய கபடி (Circle Kabbadi) போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கான கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.

2016ம் ஆண்டிற்கான ஆசிய circle கபடி சுற்றுப் போட்டியானது இந்த மாதம் 2ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த சுற்றுப் போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணியானது ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

அந்த வகையில் குறித்த கபடிப் போட்டியில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு தமிழ் வீரரும் எமது மண்ணைச் சேர்ந்தவரும் என்ற பெருமையை துரைச்சாமி மதன்சிங் பெற்றுள்ளார்.

ரி.மதன்சிங் தனது முதலாவது ஆசிய circle கபடி போட்டியில் இலங்கை சார்பாக பங்கு கொண்டதுடன், அப்போட்டித் தொடரில் இலங்கை அணி 3ம் இடத்தை சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மல்யுத்த வீரரான இவர் மல்யுத்த போட்டிகளிலும் தேசிய அளவில் பதக்கங்களை சுவீகரித்து மட்டக்களப்பு மண்ணிற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் தமிழ் பேசும் மக்களிற்கும் பெருமை தேடித் தந்தவருமாவார்.

தனது வாழ்நாளின் பெரும் பகுதியை விளையாட்டிற்காக அர்ப்பணித்துள்ள இவர், இப்போட்டிகளில் பிரகாசித்து அணிக்கும், நாட்டிற்கும், மண்ணிற்கும் பெருமை சேர்க்க மட்டக்களப்பு தமிழ்பேசும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

வட்ஸ்அப் பயன்பாட்டிற்கு 72 மணி நேரம் தடை!!

Whatsapp

குற்றவியல் வழக்கு ஒன்றில் தகவல்களைத் தர மறுத்த வட்ஸ்அப் நிர்வாகத்தைக் கண்டித்து, பிரேசிலில் அடுத்த 72 மணி நேரத்துக்கு வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டார் அந்நாட்டு நீதிபதி.

செர்ஜிபி நகர நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் மார்சல் மாண்டால்வோ, குற்ற வழக்கு ஒன்றுக்காக உரிய தகவல்களைத் தர வட்ஸ்அப் சேவையை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் மறுத்ததால், திங்கட்கிழமை காலை முதல் வாட்ஸ் அப் சேவைக்கு 72 மணி நேர தடை விதித்து உத்தரவிட்டார்.

இது குறித்து வட்ஸ் அப் நிர்வாகம் கூறுகையில், எங்களிடம் தகவல்கள் இல்லை என்று கூறியும், எங்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக, ஏராளமான பிரேசில் மக்களை வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாமல் தண்டித்துவிட்டனர்.

பொதுமக்கள் அனுப்பும் எந்த தகவலும் எங்கள் செவரில் இல்லை. எங்கிருந்து அனுப்பப்படுகிறதோ, அது சென்று சேரும் இடத்தில் மட்டுமே அந்த தகவல் இருக்கும். வேறு யாராலும் அதைப் படிக்க முடியாது. நாங்களும் கூட என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

27 வயது காதலனால் கர்ப்பிணியாக்கப்பட்ட 14 வயது மாணவி!!

Prag

பொகவந்தலாவ எல்டப்ஸ் தோட்டப் பகுதியில் 14வயது பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் ஆகிய நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றய தினம் குறித்த மாணவிக்கு தலைவலி மற்றும் தலைசுற்று என்பன ஏற்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கு வந்தபோது, குறித்த மாணவியை வைத்தியர் ஒருவர் பரிசோதித்ததன் ஊடாகவே மாணவி கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்துள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து வைத்தியசாலையின் ஊடாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த தோட்டபகுதியை சேர்ந்த 27வயது இளைஞன் ஒருவரை இன்றையதினம் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவிக்கும் இளைஞனுக்கும் காதல் உறவு இருந்து வந்ததாக மாணவியினால் பொலிஸாருக்கு அளிக்கபட்ட வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபர் நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தப்பட உள்ளதோடு குறித்த 14வயது மாணவியை மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

8வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 16 வயது சிறுவன் கைது!!

Abuse

மட்டக்களப்பு ஆரையம்பதியில் எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் மாமா உறவினரான சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறுவன், கடந்த ஒரு வருடகாலமாக குறித்த சிறுமியை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிப்பு!!

Food

புதிய வரித் திருத்தம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக, அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.