இமயமலை ஏறும் போது உயிரிழந்தவர்களின் சடலம் 16 வருடங்களின் பின் மீட்பு!!

Himalaya

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மலை ஏறும் வீரர் அலெக்ஸ் லோவ். இவர் கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது நெருங்கிய நண்பரான டேவிட் பிரட்ஜஸ் மற்றும் சக கூட்டாளிகளுடன் இமயமலை சிகரத்தில் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இவர்கள் சீனாவின் திபெத் பகுதியில் உள்ள ‘ஷிஷாபங்மா’ சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. அலெக்ஸ் லோவ் மற்றும் டேவிட் பிரட்ஜஸ் ஆகிய இருவரும் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்தனர்.

அவர்களது உடல்களை மீட்க சக வீரர்கள் போராடி வந்தனர். நீண்ட நாட்கள் ஆகியும் பலன் கிட்டாததால் அவர்கள் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் அலெக்ஸ் லோவ் மற்றும் டேவிட் ஆகியோரின் உடல்கள் ‘ஷிஷாபங்மா’ மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து நேபாளத்தில் வசித்து வரும் அலெக்ஸ் லோவின் மனைவி ஜெனிபர் லோவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புபடையினர் மூலம் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

ஜெனிபர் லோவ் தற்போது தனது புதிய கணவர் கான்ராட் ஆன்க்கருடன் இணைந்து முன்னாள் கணவர் அலெக்ஸ் லோவின் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சம்பவத்தின் போது கான்ராட் ஆன்க்கரும், அலெக்ஸ் லோவுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் அவர் பனிச்சரிவில் சிக்காமல் காயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர் இவர் 2011ம் ஆண்டு ஜெனிபர் லோவை திருமணம் செய்து, அவரது 2 குழந்தைகளையும் தத்து எடுத்து கொண்டார்.

பிறந்து நான்கு நாட்களான குழந்தை எறும்பு கடித்து உயிரிழப்பு!!

Baby

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு வைத்தியசாலையில் கடந்த 29ம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை, 4 நாளே ஆன அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த செவிலியர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

எறும்புகளை செவிலியர்கள் துடைத்த போது குளுக்கோஸ் போத்தல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த குழந்தை இறந்தது. எறும்புகள் கடித்ததாலும், குளுக்கோஸ் போத்தல் விழுந்ததாலும் குழந்தை இறந்ததாக உறவினர்கள் கதறி அழுதனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த வைத்தியர்கள், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாலேயே குழந்தை இறந்தது என்றனர்.

இதுபற்றி அறிந்த காங்கிரஸ் மற்றும் வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வைத்தியசாலை முன்பு போராட்டம் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதே போல சில மாதங்களுக்கு முன்பு குண்டூர் அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து ஒரு குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.

இனி அனுமதிப் பத்திரமின்றி தொலைபேசி மற்றும் பாகங்களை விற்பவர்களுக்கு சிக்கல்!!

Mobile

அனுமதிப் பத்திரம் இன்றி தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிட, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும்.

எனினும் சில இடங்கள் அனுமதிப் பத்திரம் இன்றி செயற்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் அவ்வாறான இடங்களை பதிவு செய்ய மே மாதத்திற்குள் வாய்ப்பு வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜூன் மாதம் முதல் நாடு பூராகவுமுள்ள சட்ட விரோத கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களில் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரிப்பு!!

Acci

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்கிளினாலேயே அதிக உயிர் சேதங்கள் ஏற்படுகின்றதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபையின் செயலாளர் டாக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மற்றும் பாதசாரிகள் விபத்துக்களில் அதிகமாக உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கவனயீனம் காரணமாக வாகனம் செலுத்துகின்றமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவதினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபையின் செயலாளர் டாக்டர் சிசிர கோத்தாகொட மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து இன்று 24 பேர் தாயகம் திரும்புகின்றனர்!!

SL

அகதிகளாக தமிழகம் சென்ற 24 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கைதிகள் தொடர்பான ஆணையாளர் அலுவலகத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு நாடு திரும்புபவர்களில் ஏழ்வர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.

திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 பேரே இன்று இலங்கைக்கு மீளத் திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதிய பஸ் : 8 பேர் படுகாயம்!!

Bus

இறக்குவானை – கரன்கெடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

பெல்மடுல்ல நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சாரதி உள்ளிட்ட எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்!!

Police

வவுனியா மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இன்று (02.05.2016) கடமையிலிருந்த பொலிசார் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய உடல்நிலை தற்போது தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களாக வவுனியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளுத்து வாங்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை எப்படி தணிப்பது?

sweat-cleanse-1

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிக்க வேண்டியது தலையாய கடமையாகிவிட்டது.
இல்லையேல், மயக்கம், நீர் வறட்சியின் காரணமாக உண்டாகும் உடல் உறுப்புகளின் செயற்திறன் குறைபாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

உடற்பயிற்சி
அதிகப்படியான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இது உடலில் நீர்வறட்சி உண்டாக்க கூடும். முடிந்த வரை விளையாட்டின் மூலம் பயிற்சி செய்யுங்கள். இதனால், உடலில் வியர்வை நன்கு சுரந்து உடலை சுறுசுறுப்பாக உணர உதவும்.

நீராகாரம்
கடினமான உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித உணவுகள், பிட்சா, பர்கர் போன்ற உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்து. நீராகாரம் நிறைய உட்கொள்ளுங்கள். பழைய சோறு, இளநீர், பதநீர் போன்ற இயற்கை பானங்களை குடியுங்கள்.

கூல் ட்ரிங்க்ஸ்
வெப்பம் அதிகமாக இருக்கிறது, தாகமாக இருக்கிறது என கூல் ட்ரிங்க்ஸ் பருக வேண்டாம். உண்மையில் கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உடல் வெப்பம் அதிகரிக்க தான் செய்யும். எனவே, இயற்கை பானங்கள், பழங்களை தேர்வு செய்து உண்ணுங்கள்.

பானை நீர்
ஃப்ரிட்ஜில் வைத்து தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, பானையில் நீர் சேமித்து குடித்து வாருங்கள். இது உடலுக்கு நல்லது, உடல் சூட்டை தணிக்கும். மேல் கூறியவாறு கூலான நீர், பானங்கள் குடிப்பதால் உண்டாகும் உடல் சூடு அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

பருத்தி உடைகள்
சுட்டெரிக்கும் வெயிலில் ஃபேஷன் என்ற பெயரில் ஜீன்ஸ், பாலியஸ்டர் போன்ற துணிகளால் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டாம். காட்டன் உடைகளை தேர்வு செய்யுங்கள்.

மெத்தை
மெத்தை பயன்படுத்துவதை தவிர்த்து, வெறும் தரை அல்லது லேசான போர்வை விரித்து உறங்குங்கள். இதனால், இரவு அதிகப்படியாக உடல் வெப்பம் அதிகரிக்காமல் இருக்கவும், நல்ல உறக்கம் பெறவும் முடியும்.

கயிற்றுக்கட்டில்
கட்டிலில் படுத்தால் உறக்கம் வரும் என்பவர்கள் கயிற்றுக்கட்டில் பயன்படுத்தலாம். இது, உடலுக்கும் இலகுவாக இருக்கும், உடல் சூட்டையும் அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

காலை, மாலை
காலை மட்டுமின்றி, மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் இன்னொரு முறை குளியுங்கள். இதனால், வேர்வை காரணமாக உண்டாகும் நச்சு தொற்று, உடல் சூட்டை போக்க முடியும். மற்றும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

பச்சை நிறமாக பாயும் நதிகள் : காரணம் தெரியுமா?

green_river_003.w540

பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள், கடந்த சில நாட்களாக பச்சை நிறமாக காட்சியளித்தன. இதனால் பொதுமக்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். நதிநீர் மாசடைந்துள்ளதால்தான் இவ்வாறு பச்சை நிறமாக காட்சியளிப்பதாக மக்கள் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ‘நதிநீர் பச்சையாக மாறுவதற்கு காரணம் நாங்கள்தான்’ என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வந்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, “நாங்கள்தான் பச்சை நிற சாயத்தை நதி நீரில் கலந்தோம், பிரான்ஸின் இயற்கை வளங்களில், கடந்த வருடங்களை விட தற்போது 10 சதவிகிதம் பசுமை குறைந்துள்ளது. எனவே பிரான்ஸ் மக்களுக்கு இது குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துதான் இவ்வாறு செய்துள்ளோம்.

நதிகளில் கலக்கப்பட்ட பச்சை நிற சாயம் நீர்வாழ் உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை அல்ல. இதனால் எவ்வித கேடும் வராது. இந்த பச்சை நிற சாயம் நதி நீரின் ஓட்டத்தை கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படுவதுதான்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது சுற்றுலா பயணிகளும், பிரான்ஸ் மக்களும் பச்சை நிறமாக மாறியுள்ள நதிகளை வியப்போடு பார்த்து செல்கின்றனர்.

 

உலகின் முதலாவது கதைக்கும் பூனை… நம்பமுடியாத அதிசயக் காட்சி!!

maxresdefault

கார்ட்டூன்கள் மற்றும் விஞ்ஞானபூர்வமான கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் பூனைகள் கதைப்பது போன்ற கதாபாத்திரங்களை பார்வையிட்டிருப்பீர்கள்.

எனினும் அவை கதைப்பதை நேரடியாக பார்த்திருக்கின்றீர்களா? ஆம் நவீன தொழில்நுட்பத்தில் அதுவும் தற்போது சாத்தியமாகியுள்ளது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!!

Ajmal

பாகிஸ்தான் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தான் அணியில் தன்னை மீண்டும் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அஜ்மல், அவருடைய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களை பொதுவெளியில் ஆர்ப்பாட்டம் செய்யும் படி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த உலக கிண்ணத் தொடரில் அஜ்மலின் நடவடிக்கை குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை அணியை விட்டு விலக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பாகிஸ்தானில் நடந்து வரும் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான தொடரில், அஜ்மல் பலூசிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில். நேற்று பைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடந்த போட்டியில்அஜ்மல் இடம்பெற்று இருந்த பலூசிஸ்தான் அணியும், இஸ்லாமாபாத் அணியும் மோதின.

இந்த போட்டியின் போது, மைதானத்தில் குழந்தைகள், அஜ்மலை ஊக்குவிக்கும் வகையில் சுலோக அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்துள்ளனர், அந்த அட்டையில் அஜ்மல் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

மேலும், அஜ்மல் அகாடமியில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் 50-ற்கும் மேற்பட்ட வீரர்கள் சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை தாங்கியவாறு மைதானத்திற்கு வெளியே சர்ச்சைக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்கள் பிடித்துக்கொண்டிருந்த பதாகைகளில், அஜ்மல் மற்றும் துடுப்பாட்டகாரர் உமர் அக்மல் ஆகியோரை, மீண்டும் பாகிஸ்தான் அணியில் தெரிவு செய்ய வேண்டும் எனவும், அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இந்த சர்ச்சைக்குரிய செயலை அஜ்மலின் வற்புறுத்தலினால் தான், அவருடைய அகாடமியை சேர்ந்த வீரர்கள் செய்துள்ளதாக தற்போது ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தூக்கி வீசப்படும் பழைய கைப்பேசிகளின் பயன்பாடு அறிவீர்களா?

cell-phone-repair.png.pagespeed.ce.Zt45X0Zqre

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளே தவழ்கின்றன.அதற்கு முன்னர் வந்த கைப்பேசிகள் அனைத்தும் முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளன.இதேவேளை எந்தவொரு கைப்பேசியாயினும் சம காலத்தில் அவற்றினை பாவிக்கும் காலம் சராசரியாக 2 ஆண்டுகளாகவே காணப்படுகின்றது.

அதன் பின்னர் அவற்றினை வீசிவிட்டு புதிய கைப்பேசிக்கு மாறுகின்றனர். ஆனால் கைப்பேசிகளில் காணப்படும் லிதியம் அயன் மின்கலமானது 5 ஆண்டுகள் வரை பாவனைக் காலம் கொண்டதாகும்.எனவே 2 ஆண்டுகளில் கைப்பேசிகள் கைவிடப்படுவதனால் குறித்த மின்கலங்கள் பயனற்றுப்போகின்றன.

ஆனால் அந்த மின்கலங்களைக் கொண்டு பலரது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்ற முடியும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதாவது இந்த மின்கலங்களைக் கொண்டு LED சோலார் மின்கலங்களை 3 ஆண்டுகள் வரை ஒளிர வைக்க முடியும் என Kyung Hee பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதன் மூலம் பின்தங்கிய நாடுகள், கிராமங்களில் உள்ள மக்களுக்கு மின் வழங்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தும் பிச்சையெடுத்த மூதாட்டி!!

begging-for-money

ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இருப்பு இருந்தும், பிச்சை எடுத்து, மருத்துவ செலவுக்குகூட செலவழிக்க முடியாமல் உயிரைவிட்டுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 70 வயதான கனகலதா என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர் பிரேமநாராயண் கடந்த ஆண்டு இறந்தார். இந்த தம்பதியிக்கு குழந்தைகள் கிடையாது. கனகலதா ஒரு சிறிய அறையில் வசித்து வந்தார்.

இவரது நிலைமையை பார்த்து பரிதாபப்பட்ட அக்கம்பக்கத்தினர் அவருக்கு உணவு, உடைகளை கொடுத்துஉதவி வந்தனர். இதேபோல் தினமும் பிச்சை எடுத்தே அவர் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில், 2 நாட்களாக கனகலதா வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது அவர்இறந்து கிடந்தார். பொதுமக்களிடம் பெற்ற பணத்தை கொண்டுஅவரது ஈம சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

கோயில் பூசாரியும், அப்பகுதியினரும் அவரது அறையை சுத்தம்செய்தபோது, பெட்டி ஒன்றில் பலவங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதற்கானரசீதுகள் இருந்தன. அவற்றைகூட்டி பார்த்தபோது இரண்டு கோடிக்கு மேல்இருப்பது தெரிந்தது.அந்தந்த வங்கிகளிடம் அவற்றை அவர்கள் கொடுத்தனர். தனது இறப்புக்கு பணத்தை பெற அவர் யாரையும் வாரிசாக நியமிக்கவில்லை.இந்நிலையில் மறைந்த மூதாட்டியின் உறவினர் என கூறிகொண்டு சட்டீஸ்கரில் இருந்து ஒருவர் வங்கியில் உரிமை கோரியுள்ளார். ஆதாரங்களை வங்கிகள் கேட்டு வருகின்றன. ‘‘பணம்கைக்கு வந்ததும். எனது மாமா, மாமியின் நினைவாக கோயில் கட்டுவேன்’ என புதிதாக வந்த உறவினர் கூறியுள்ளார்.

 

5 பண்டங்களுக்கு VAT வரி விலக்களிப்பு : விபரம் இணைப்பு!!

No VAT

11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்ட வட் வரி நாளை முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 5 பண்டங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், அரிசி, கோதுமை மா, பால்மா, மருந்து மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் ஆகியவைக்கே குறித்த வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்தும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் கல்வி மற்றும் மருத்துவ பொருட்கள் விடயத்தில் அமுல் செய்யப்பட மாட்டாது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த படத்தில் மட்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்- தமன்னா அதிரடி!!

tam-7899

பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னா கடும் பிஸியாகிவிட்டார். பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வரும் இவர், அடுத்து அஜித் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வருகின்றார்.

இந்நிலையில் தமன்னாவிற்கு சோகமான படங்கள் என்றாலே பிடிக்கதாம், படம் முழுவதும் அழுதுக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டாராம்.மேலும், எப்போதும் ஜாலியான கமர்ஷியல் படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

 

எனக்கும் விக்ரமிற்கும் சண்டையா : மனம் திறந்த சூர்யா!!

1709141

நடிப்பில் இந்த வாரம் 24 படம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றது.இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு ஷோவில் கலந்துக்கொண்ட சூர்யாவிடம், ‘உங்களுக்கு நடிகர் விக்ரமிற்கும் ஏதும் சண்டையா’ என கேட்டனர்.

சூர்யா சிரித்துக்கொண்டே ‘யார் இப்படியெல்லாம் கூறுவது, நான் அவரின் ஐ படம் பார்த்து முடித்த பிறகு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினேன், தற்போது கூட அவர் இயக்கிய ஆல்பத்தில் நான் நடித்தேன், அப்படியெல்லாம் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’ என கூறியுள்ளார்