31 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

 
சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது.

பிறந்த அந்த குழந்தைக்கு பொதுவாக கை, கால்களில் இருக்கும் 20 விரல்களுக்கு பதிலாக மொத்தம் 31 விரல்கள் இருந்தன.
2 கைகளில் 15 விரல்களும், கால் பாதங்களில் 16 விரல்களும் உருவாகி இருந்தன. இவற்றில் ஒரு கையில் 8 விரல்களும், மற்றொன்றில் 7 விரல்களும் உள்ளன. கால்களில் தலா 8 விரல்கள் இருக்கின்றன.

ஆனால் கை, கால்களில் பெருவிரல்கள் இல்லை.
இக்குழந்தையை ஹாங்காங் என அழைக்கின்றனர். இதுபோன்று அதிக விரல்களுடன் ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதாக சீன வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, குழந்தையின் தாய்க்கும் இது போன்று கால், கைகளில் அதிக அளவில் விரல்கள் உள்ளன. எனவே, மரபு வழியாக குழந்தைக்கும் அதிக அளவில் விரல்கள் உருவாகி இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கை, கால்களில் அதிக விரல் இருப்பதால் குழந்தை ஹாங்காங் மிகவும் சிரமப்படுகின்றான். எனவே சிகிச்சை மூலம் அதை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். குழந்தை ஹாங்காங்கின் தந்தை ஷோயு ஷெஸ்லின் ஏழை. எனவே தனது மகன் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

1  3

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!!

1838626370Elec

சுண்ணாகம் சிவன் கோவிலில் மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

சுண்ணாகம் சிவன் கோவிலின் திருவிழா இன்று காலை ஆரம்பாகியுள்ள நிலையில், கோவிலில் மின்சார வேலையில் ஈடுபட்டிருந்த 07 இளைஞர்களை மின்சாரம் தாக்கியுள்ளதுடன், அதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய அறுவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பொதுக்கூட்டம்!!

Pirajaikal

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் எதிர்வரும் 14.05.2016 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு புகையிரதநிலைய வீதி வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பொதுக்கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், கலை இலக்கிய ஆர்வலர்கள், சமுக ஆர்வலர்கள், சமயப் பெரியார்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு அர்பணிப்புள்ள, மக்கள் நலன்சார் பங்களிப்பு செய்யக்கூடிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினை தெரிவு செய்து எதிர் காலத்தில் மக்கள் நலன்சார் பயணங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க அணி திரண்டு வருமாறு அன்புடன் அழைகின்றோம்.

வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் சார்பாக
மாணிக்கம் ஜெகன்
தலைவர்
கலை தொடர்பு மையம்

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்!!

Protest

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் வேறு மாவட்டத்திற்கு கைநழுவிப் போகக்கூடாது எனக் கோரி நாளை மறுதினம் (07.05.2016) சனிக்கிழமை அமைதிப்பேரணி ஒன்றை பொது உள்ளுர் விலைபொருள் விற்பனையாளர் சங்கமும்

விவசாயிகளும், பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

முந்தைய அரசின் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் இடப்பற்றாக்குறை காரணமாக வேறு மாவட்டத்திற்கு செல்லவுள்ளதாக அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தன.

எமது மாவட்டத்தில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையம் எமது மாவட்டத்தினை விட்டு வேறு மாவட்டத்திற்கு கைமாறக்கூடாது என கோரி எதிர்வரும் 07.05.2016 அன்று காலை 9.00 மணிக்கு தினச்சந்தையிலிருந்து கச்சேரி வரை அமைதியான முறையில் பேரணியாகச் சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக உள்ளுர் விலைபொருள் விற்பனையாளர் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

news (1)

வவுனியாவில் 15 வயதுச் சிறுமி கர்ப்பம் : இளைஞன் கைது!!

Prag

வவுனியா – செட்டிகுளம், கங்காரங்குளம் பிரதேசத்தில் சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கங்காரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியே இவ்வாறு கர்ப்பமாக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி சில நாட்களாக அருகிலுள்ள காட்டுக்குள் பேய் பிடித்தது போல நடமாடித்திருந்ததாகவும் கடந்த மூன்று நாட்களாக வீட்டுக்கு வராமல் காட்டுக்குள்ளேயே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காட்டுக்குள் சிறுமியைக் கண்டுபிடித்த பெற்றோர் சிறுமியை செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது சிறுமி 3 மாதக் கர்ப்பிணியாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட செட்டிகுளம் பொலிஸார், அதே இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞனைக் கைதுசெய்துள்ளனர்.

கணினி தொடர்பான 750 முறைப்பாடுகள் நான்கு மாதங்களுக்குள்!!

cyber-crime

இந்த வருடத்தின் நான்கு மாதங்களுக்குள் 750 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.இதில் அதிகமான முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பானவை என்று கணினி அவசர நடவடிக்கை ஊடகப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்குதல், மற்றையவர்களின் பேஸ்புக் கணக்குகளில் உள்நுழைதல் தொடர்பாகவே முறைப்பாடுகள் அதிகம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேஸ்புக் கணக்குகளை ஆரம்பிக்கும் போது பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை பின்பற்றாமையே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் இதன்போது சரியான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், அறிமுகமில்லாத நண்பர்களை நண்பர்களாக இணைத்துக் கொள்வதை தவிர்க்குமாறும் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.அத்துடன் போலி மின்னஞ்சல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

20 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி!!

625.0.560.320.160.600.053.800.668.160.90

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி நானுஓயா எடின்புரோ பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.வாகனத்தில் சாரதியும் மற்றொருவரும் பயணித்துள்ளதாகவும், சாரதி பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாகவும் மற்றொருவர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தீவிரமடையும் உஷ்ண காலநிலை! மாணவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள்!!

DM_20150717_A001-4

நாட்டில் அதிக வெப்பம் காணப்பட்டாலும் பாடசாலை நேரத்தில் மாற்றமில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்காக பல்வேறு பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய வளிமண்டலவியல் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இந்த நிலைமை குறித்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் வெப்ப நிலைமை அதிகளவில் காணப்படும், இந்தக் காலப்பகுதியில் மாணவர்களை பாடசாலையை விட்டு வெளியேற்றக் கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் பாடாசாலை மாணவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுவதனை தவிர்த்தல், போதிளவு நீரைப் பருகச் செய்தல், பாடசாலை வகுப்பறைகளுக்கு போதியளவு காற்றோட்ட வசதியை ஏற்படுத்தும் வகையில் யன்னல் கதவுகளை திறந்து வைத்தல், பாடசாலையில் போதியளவு நீர் வசதி இல்லாவிட்டால் அதற்கான மாற்று வழிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமாக மாணவர்கள் தனிப்பட்ட ரீதியில் பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் பற்றியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகளவு இனிப்பூட்டப்பட்ட பானங்களை அருந்துவதனை தவிர்த்தல், தொப்பி அல்லது குடைகளை பயன்படுத்தல், குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லல் உள்ளிட்ட சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.எனினும் மாகாணசபைகள் சிலவற்றினால் முன்கூட்டியே பாடசாலைகளை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகள் அதிக வெப்ப நிலை காரணமாக 12.00 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஆறு மாதங்களில் வாகன இறக்குமதி நிறுத்தப்படும்!

z_p-01-New-u

எதிர்வரும் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதியை தற்காலிக அடிப்படையில் நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக லங்கா வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.கொழும்பு தேசிய வணிக சபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.இந்த நிலைமை வாகன இறக்குமதியை பெரிதும் பாதிக்கின்றது.இதனால் வாகன இறக்குமதியை நிறுத்திக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.தற்போது அமெரிக்க டொலர் மற்றும் ஸ்ரெலிங் பவுண்ட் போன்றவற்றின் இலங்கைப் பெறுமதி உயர்வடைந்துள்ளது.இதனால் வாகன இறக்குமதிக்காக பெருந்தொகையை செலவிட நேரிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வாகனங்களின் விலைகளும் ஒப்பீட்டளவில் உயர்வடையும்.எதிர்காலத்தில் இந்திய வாகனங்களின் விலைகள் மூன்று முதல் நான்கு லட்சத்தினால் உயர்வடையும்,இதனால் இந்த வாகனங்களுக்கான கேள்வி குறைவடையும்.வெற் வரி வாகன விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.ஜப்பானிய யென் பெறுமதி அதிகரித்துள்ளதனால் ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது என இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

 

வவுனியா புளியங்குளம் A9 வீதி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் திருக்கோவில்நூதன பிரதிஸ்ட மகா கும்பாபிசேகம் !!(படங்கள் ,வீடியோ)

வவுனியா A9 வீதி புளியங்குளம் சந்தியில் புதிதாக அமைக்கபட்ட ஸ்ரீ லக்சுமி நாராயணன் ஆலயத்தின் நூதன பிரதிஸ்ட மகா கும்பாபிசேகம்    இன்று  04.05.2016 புதன்கிழமை  காலை பத்துமணியளவில் சிவஸ்ரீ நந்தகுமார குருக்கள் தலைமையில்  இடம்பெற்றது .

மேற்படி கும்பாபிசேக நிகழ்வில் கும்பாபிசேகத்தை தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து  கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மற்றும் திருப்பணிகளில் ஈடுபட்டோர் ஆலய பரிபாலன சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டனர்.

20160504_132313 20160504_132323 20160504_132414 20160504_132419 20160504_132424 20160504_132426 20160504_132438 20160504_132443 20160504_132448 20160504_132456 20160504_132552 20160504_132558 20160504_132601 20160504_133642 20160504_133647 20160504_133652 20160504_135320 20160504_135322 20160504_135502

வவுனியாவில் சாரதியின் கவனயீனத்தால் நடந்த விபத்து!!

 
வவுனியா நெடுங்கேணிக்கு அருகில் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இன்று(04.05.2016) காலை இடம்பெற்ற விபத்தில் பட்டா வாகனம் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாகனத்தின் சாரதி வேகமாக வாகனத்தை செலுத்திய அதேவேளை கைத்தொலைபேசியையும் பயன்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதனால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியின் அருகில் இருந்த மதகு ஒன்றின் மீது மோதியதில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தில் வாகனத்தின் சாரதி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள அதேவேளை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சாரதிகளின் கவலையீனத்தால் அண்மைய காலங்களில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 2 3=

எனக்கு அந்த குணம் உள்ள ஆண்களை மட்டும் ஒருபோதும் பிடிக்காது- அனுஷ்கா அதிரடி பதில்!!

Anushka-is-in-a-trouble-anushka-shetty-facing-problems-with-her-weight-fat-body-images-pics-videos

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகின்றார் அனுஷ்கா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என மனம் திறந்துள்ளார்.இதில் ‘எனக்கு பொதுவாக ஆண்கள் கண்களை பார்த்தே அவர்களுடைய குணம் தெரிந்துவிடும், மேலும், நம்மிடையே அவர் பேசும் போது அவர்களின் சிரிப்பை வைத்தே எப்படிப்பட்டவர்கள் என தெரிந்துக்கொள்ளலாம்.

வெகுளியாக சிரிக்கும் ஆண்களை பிடிக்கும், ஆனால், கண்ணாடி அணிந்திருக்கும் ஆண்களை ஒருபோதும் பிடிக்காது, அவர்கள் தங்கள் குணம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக செய்யும் வேலை அது’ என கூறியுள்ளார்.

 

’டிடி’யை அதிர்ச்சியாக்கிய நித்யா மேனன்!!

dd_nithyamenon001

சின்னத்திரை தொகுப்பாளர்களில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவர் சமீபத்தில் 24 படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார்.இதில் சூர்யா, நித்யா மேனன் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நித்யா மேனனிடம், டிடி ‘உங்களை பற்றி ஒரு வதந்தியை பரப்ப வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்’ என கேட்டார்.அதற்கு நித்யா மேனன் ‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என கூறுவேன்’ என கூற டிடி ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டார்.

 

உயிருக்காக போராடிய குழந்தையை விட்டு நகர மறுத்த வளர்ப்பு நாய்!!

showImageInStory

பாரி­ச­வா­தத்தால் பாதிக்­கப்­பட்டு உயிர் காப்பு உப­க­ர­ணங்­களின் தய­வுடன் வாழ்­நாளை எண்ணிக் கொண்­டி­ருக்கும் 4 மாத குழந்­தையை விட்டு இரு வளர்ப்பு நாயொன்று நகர மறுத்த மனதை நெகிழ வைக்கும் சம்­பவம் அமெ­ரிக்க மின்­னே­ஸோரா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.நோரா ஹோல் என்ற மேற்­படி குழந்­தைக்கு பாரிசவாத பாதிப்பால் மூளையும் நரம்பு மண்­ட­லமும் பாதிக்­கப்­பட்ட நிலையில் அவர் உயிர் பிழைக்க வாய்ப்­பில்லை என மருத்­து­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் அந்தக் குழந்­தைக்­கான உயிர் காப்பு உப­க­ர­ணங்­களின் செயற்­பாட்டை நிறுத்தி அந்தக் குழந்­தையை அமை­தி­யாக மர­ணத்தை தழுவச் செய்­வ­தற்கு அனு­ம­திக்க அதன் பெற்­றோர்­க­ளான ஜோனும் மேரியும் தீர்­மா­னித்­தனர்.இதனையடுத்து அந்தக் குழந்தை அதற்கு மிகவும் பிடித்­த­மான இரு வளர்ப்பு நாய்­களை அதன் இறுதித் தரு­ணத்தில் காண்­பிக்க அவர்கள் மருத்­து­வ­மனை நிர்­வா­கத்தின் அனு­ம­தியைக் கோரினர்.

அவர்­க­ளுக்கு மருத்­து­வ­மனை நிர்­வாகம் அனு­ம­தி­ய­ளிக்­கவும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரு வளர்ப்பு நாய்­களும் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரப்­பட்­டன.இதன்­போது அந்த இரு நாய்­களில் ஒன்று அந்தக் குழந்தையை விட்டு பிடிவாதமாக நகர மறுத்து அங்கிருந்த அனைவரது இருதயத்தையும் நெகிழ வைத்துள்ளது.

பாதியில் நின்ற ரோலர்கோஸ்டர், காப்பற்றும் படி கதறி அழுத மக்கள்!

People-on-a-rollercoaster-007

பிரித்தானியாவின், Staffordshire-ரில் உள்ள தீம் பார்க்கில், மக்கள் சவாரி செய்த ரோலர்கோஸ்டர் பாதியில் கோளாறாகி நின்றதில், அதில் பயணம் செய்த மக்கள் தங்களை காப்பற்றும் படி கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் உள்ள மிக பிரபலமான தீம் பார்க்கில் ஒன்று அல்டன் டவர்ஸ்-ல்(Alton towers), அங்கு உள்ள ரோலர்கோஸ்டரில் 28 பேர் சவாரி செய்துள்ளனர்.

சவாரியின் போது ரோலர்கோஸ்டர் பாதியில் கோளாறாகி நின்றுள்ளது, இதில் சவாரி செய்த 27 பேர் தலைகீழாகத் தொங்கிய படி சிக்கியுள்ளனர்.நேரமாக ஆக பீதியடைந்த மக்கள், அவர்களை காப்பற்றும் படி கதறி அழுதுள்ளனர்.இந்நிலையில். தீம் பார்க் ஊழியர் ஒருவர் குறித்த ரோலர்கோஸ்டர் மீது ஏறி சிக்கியுள்ளவர்களுக்கு தைரியம் தெரிவித்துள்ளார்.

ரோலர்கோஸ்டரை மீண்டும் துவக்க முயற்சி செய்த ஊழியர், அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு. 27 பேரை தரைக்கு கொண்டு வந்துள்ளார்.இதை தொடர்ந்து., சமீபத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரோலர்கோஸ்டர் சவாரி மூடப்பட்டதாக, ஊழியர்கள், பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனார்.சமீபத்தில் பெய்த கனமழையில் குறித்த ரோலர்கோஸ்டர் முறிந்து விழுந்துள்ளது. தற்போது, விடுமறை நாட்கள் தொடங்கியுள்ளதால், முறிந்த விழுந்த அதே ரோலர்கோஸ்டர் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ரோலர்கோஸ்டரில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், குறித்த தீம் பார்க் உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.இந்த வழக்கில் Alton towers உரிமையாளர். சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது நிருபனமாகி உள்ளதாகவும், அவருக்கு பல மில்லியன் அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் மே-30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

வெயிலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 219 ஆக உயர்வு! இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்!

Extreme-Weather-on-Increase-Mode-due-to-Climate-Change1

தெலுங்கானா மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதுவரை, அம்மாநிலத்தில் வெயிலின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 41 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவுகிறது.

தெலுங்கானாவின், நல்கொண்டாவில் அதிகளவில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாகவும், இங்கு மட்டும் 76 பேர் பலியானதாகவும், மஹ்பூப் நகரில் 36 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.அடிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், கம்மம் மாவட்டங்களில் வெப்ப அலைகள் வீசுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால், தெலுங்கானாவின் அனைத்து மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வரும், நிலையில் இன்று முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கவுள்ளது.