ப்ரோகேரியா எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிஹால் பிட்லா மரணம்!!

 
மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மும்பையைச் 15 வயதுடைய நிஹால் பிட்லா உயிரிழந்தார்.

மரபணு தாக்கம் காரணமாக சராசரி வயதை விட தோற்றத்தில் 8 மடங்கு அதிக வயதுள்ளவர் போல் நிஹால் பிட்லா தெரிவார்.

ப்ரோகேரியா என அழைக்கப்படும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் நிஹால் பிட்லா ஈடுபட்டு வந்தார்.

சமூக வலைத்தளங்களில் ப்ரோகேரியா பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இவர் மும்முரமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தெலுங்கானா சென்ற நிஹால் பிட்லா கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார்.

1 2 3

அவுஸ்ரேலியாவில் கடவுச்சீட்டை இழந்து தவிக்கும் வித்யுலேகா!!

Vidleka

வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள வித்யுலேகா ராமனின் கடவுச்சீட்டுக்கள், கிரெடிட் காட்டுகள் அடங்கிய கைப்பையை யாரோ ஒருவர் திருடிவிட்டார். இதனால் என்ன செய்வதென்று தவிப்பில் உள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் வித்யுலேகா ராமன். நடிகர் மோகன் ராமின் மகளான இவர், அவுஸ்ரேலியாவில் உள்ள வியன்னா நகருக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு இவர் தங்கியிருந்த ஹோட்டல் லொபியில், இவருடைய கைப்பையை யாரோ திருடிவிட்டனர்.

கடவுசீட்டு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், பணம் ஆகியவை அதில் இருந்திருக்கிறது. இதனால் செய்வதறியாது தவித்துப்போன வித்யுலேகா, டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜிடம் உதவி கோரினார்.

இது தெரிந்ததும் நடிகை குஷ்பூ, நடிகர் கருணாகரன், பின்னணிப் பாடகர் க்ரிஷ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அவருக்கு டுவிட்டர் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், நாளை இந்திய தூதரகத்துக்குச் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வவுனியா பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பான கலந்துரையாடல்!!

 
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் தற்போது வவுனியா வாடி வீடு மண்டபத்தில் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொது அமைப்புக்கள், வியாபார ஊழியர்கள் எனப் பலர் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர் . இக் கலந்துரையாடலுக்கு விவசாயிகள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13140629_477173042476016_1589985625_n 13153350_477173019142685_1090032759_n 13153416_477173072476013_662965155_n 13162038_477173025809351_1473182056_n 13162327_477173069142680_1529729448_n 13180867_477173055809348_67360343_n

12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள் : உலகில் நடக்கும் கொடூரம்!!

Mother

ருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 2212 பேர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக ருமேனியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து Lorena என்ற சிறுமி கூறுகையில், கடவுள் எனக்கு அழகான குழந்தையை கொடுத்துள்ளார், இதில் என்னவொரு சிரமம் என்றால் நானும் குழந்தை தான் என தெரிவித்துள்ளார்.

தனது காதலனுடன் வசித்து வரும் Lorena, திட்டமிடாமல் வாழ்ந்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கிறார்.

மற்றொரு சிறுமியான Diana கூறுகையில், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் கதறி அழுததாகவும், தன்னுடைய வாழ்க்கையே நாடகத்தன்மை நிறைந்ததாக மாறிப்போயுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இதற்கு காரணம் ரோமா என்ற சிறுபான்மை இன மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என நம்பப்படுகிறது.

ரோமானியாவில் Save TheChildren என்ற அமைப்பை நடத்தி வரும் Gabriela Alexandrescu என்பவர் கூறுகையில், புலம்பெயர்வு மற்றும் ஏழ்மையே இளவயது கர்ப்பத்திற்கு முதன்மை காரணம்.

அதுமட்டுமின்றி சிறுமிகளுக்கு போதிய உடல்நலம் சார்ந்த கல்வியறிவு இல்லாததும், அவர்கள் தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இளவயதிலேயே குழந்தையை பெற்றெடுப்பதால் மனநலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2 வயது சிறுவன் மீது இனவெறித் தாக்குதல்!!

Attack

ஸ்கொட்லாந்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 2 வயது சிறுவன் Mohammad Sudais. எதிர்பாராத விபத்தில் தந்தை, தாய் மற்றும் சகோதரனை இழந்த Mohammad Sudais முகத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக தன்னுடைய மாமா வீட்டில் தங்கியுள்ளான்.

இவர்கள் குடும்பத்தினருடன் ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமையன்று Mohammad Sudais தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, விரைந்து வந்த மர்ம நபர் “வெடிகுண்டு வைத்து உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன்” கூறி கொண்டே சிறுவன் மீது தாக்குதல் நடத்த வந்துள்ளார்.

மேலும் நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பி செல்ல வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து Mohammad Asif கூறுகையில், Mohammad Sudais அனைவரிடமும் அன்பாக பழக கூடியவன், எப்போதுமே தோட்டத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பான்.

நாங்கள் பல வருடங்களாக இங்கே வசித்து வருகிறோம், எங்களது அண்டை வீட்டாரருடன் நல்ல நட்பு உள்ளது. இதுவரையிலும் எங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்த முயன்றது குறித்து என் மனைவியும், மகளும் அச்சமடைந்துள்ளனர்.

நாங்கள் அந்த நபரை பார்த்தது கூட கிடையாது, எங்கள் மேல் அவருக்கு அப்படியென்ன கோபம் என்று தான் எனக்கு புரியவில்லை.

அனைவருக்கும் வாழ்வில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும், அதற்காக குடும்பத்தினர் மீது எப்படி தாக்குதல் நடத்தலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா துட்டுவாகை நேரியகுளத்தில் புதிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா!!

 
செட்டிக்குளம் துட்டுவாகை நேரியகுளத்தில் புதிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(04.05.2016) துட்டுவாகை கிராமத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வலயக்கல்வி அலுவலர்கள், வடமாகாணசபை உறுப்பினர், ஆலய பங்குத்தந்தை, பிரதேசசபைச் செயலாளர், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கிராம மக்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் பலந்து கொண்டிருந்தினர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9) news (10)

சட்டக்கல்லூரி மாணவி படுகொலை : உடலில் 38 இடங்களில் காயம் : போராட்டம் வலுக்கிறது!!

Students

கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் பெரும்பாவூர் குருப்பம் பட்டியைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் கடந்த 28ம் திகதி கொடூரமாக முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் தனியாக இருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்தது.

சட்டக்கல்லூரி மாணவியின் கொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்திலும் மாணவி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகப்படும்படியாக உள்ள 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி ஷிஜாவின் தாயார் ராஜேஸ்வரி, மகளுக்கு நடந்த இந்த கொடூரத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உடல் நிலை பாதிக்கப்பட்டு பெரும்பாவூர் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மாணவி ஷிஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாணவி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அவரது உடலில் 38 இடங்களில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு இருந்தது. வயிற்றில் கடுமையாக தாக்கியதால் அவரது பெருங்குடல் வெளியே வந்து கிடந்தது.

அவரது தலை முதல் உடல் முழுக்க காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலையாளிகள் பயன்படுத்திய இரும்பு ஆயுதத்தால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாணவி ஷிஜாவின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

வவுனியா கணேசபுரம், மணிபுரம் வீதிகளின் நிலைமையை ஆய்வு செய்த சுகாதார அமைச்சர்!!

 
வவுனியா மாவட்டத்தில் நீண்டநாட்களாக திருத்தப்படாது குண்டும் குழியுமாகவுள்ள கணேசபுரம், மணிப்புரம், சமயபுரம் கிராமங்களின் உள்ளக வீதிகளின் நிலைமையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்தப் பகுதிகளுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது நீண்டநாட்களாக திருத்தப்படாதுள்ள வீதிகளில் பிரயாணம் செய்யும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் உள்ளுராட்சி மன்றங்களின் வீதிகளை புனரமைப்பதற்கான விசேட நிதி மாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னுரிமை அடிப்படையில் இந்த
வீதிகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமகன் ஒருவர் இதுதொடர்பில் கருத்து தெரிவித்தமை செயலகமட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

G-1 G2 G3 G4

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா!!

Puthukkulam

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 68ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 16வது தடவையாக வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா-2016 எதிர்வரும் 04.06.2016 ம் திகதி சனிக்கிழமை எமது கழக மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் எமது கழகத்திற்கு தங்கள் வழங்கிய பேராதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் தலை வணங்குவதோடு. வடகிழக்கு மாகாண ரீதியில் எமது கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் விளையாட்டு போட்டிகள் சிறப்புற நடைபெறுவதற்கு பணம் மற்றும் பெறுமதியான பரிசுப் பொருட்கள் என்பவற்றை வழங்கியதோடு வருகை தந்தும் சிறப்பித்தமையை இட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள், கிராம முக்கியஸ்தர்கள், புலம்பெயர்வாழ் உறவுகள் அனைவருக்கும் கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாக எமது உளபூர்வமா நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

தொடர்ந்தும் இவ் விளையாட்டு விழா மென்மேலும் சிறப்புற உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் பேராதரவை எதிர்பார்த்து நிற்கின்றோம்

நன்றி.

0775381742
0771108423
0770790450

நிர்வாகம்
சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகம்
புதுக்குளம்

இரண்டாவது முறையாக தேசிய விருதை புறக்கணித்த இளையராஜா!!

Ilayarajah

2015 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் இசையமைப்பாளர் இளையராஜா சிறந்த பின்னனி இசையமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ராஜவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை பிக்கு படத்திற்காக நடிகர் அமிதாப் பெற்றார். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை கங்கனா ரணாவத் பெற்றுகொண்டார்.

சிறந்த படத்திற்கான விருதை பாகுபலி படத்திற்காக அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தயாரிப்பாளர்கள் ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் பெற்றுகொண்டனர்.

தமிழில் விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை சமுத்திரக்கனியும், சிறந்த எடிட்டருக்கான விருதை மறைந்த கிஷோருக்காக அவருடைய தந்தையும் பெற்றனர். சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட விசாரணைக்கான விருதை தனுஷ், வெற்றிமாறன் சார்பில் சுரேஷ் பெற்றுகொண்டார்.

தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விருது நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. ஆனாலும் தேசிய விருது நிகழ்ச்சியை புறக்கணிப்பது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. 2010 ஆம் ஆண்டு பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதினையும் அவர் பெற்றுகொள்ளவில்லை.

பின்னனி இசை நன்றாக செய்பவர்களுக்கு பாடல்களை போட தெரியாதா பின்னணி இசை, பாடல்களுக்கு என்று விருதினை தனியாக கொடுக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தினை முன்பே கூறியிருந்தார். இந்த முறையும் இந்த காரணத்திற்காகத்தான் அவர் விருது நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயதுச் சிறுவன் : 10,000 டொலர்களை வெகுமதியாக வழங்கிய பேஸ்புக்!!

instagram

புகழ்பெற்ற இன்ஸ்டகிரம் சமூக வலைதளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனுக்கு, அந்த வலைதள உரிமையாளரான பேஸ்புக் நிறுவனம் 10,000 டொலர்களை வெகுமதியாக அளித்துள்ளது.

தங்களது வலைதளங்களில் ஊடுருவுவதன் மூலமாக, அதன் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வெகுமதி அளித்து வருகிறது.

இந்த நிலையில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜொனி என்ற 10 வயது சிறுவன், பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டகிரம் சமூக வலைதளத்துக்குள் வெற்றிகரமாக ஊடுருவி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டகிரம் சமூக வலைதளத்தை 13 வயதுக்குட்பட்டவர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. எனினும், அந்த வலைத்தளத்தில் இணையாமலேயே அதற்குள் ஊடுருவி, அதில் பயன்பாட்டாளர்கள் செய்துள்ள பதிவுகளை அழிக்கக் கூடிய விடயத்தை ஜொனி உருவாக்கியதால் அவனுக்கு பணத்தொகை பரிசளிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சிறுவன் கண்டுபிடித்த குறைபாடு பேஸ்புக்கினால் சரி செய்யப்பட்டுள்ளது.

யாழில் இருவர் மீது வாள் வெட்டு : மீண்டும் ரௌடிகள் அட்டகாசம்!!

vaal_rowdy

நல்லூர் சட்டநாதர் வீதியில் இனந்தெரியாத இருவர், இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய கொடூர சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைவதற்காக இந்த இனந்தெரியாத நபர்கள் இரவு 9.20 மணியளவில் வீட்டின் முன் கதவினை கோடரியால் வெட்டியுள்ளனர்.

எனினும் வீட்டின் உள்ளே நுழைய முடியாத இனந்தெரியாத நபர்கள், வீட்டை உடைக்கும் முயற்சியினை கைவிட்டு விட்டு செல்லும் போது, அந்த வீதியால் ஆட்டோவில் பயணித்த ஆட்டோ சாரதி மீதும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீதும் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.

மதிவேந்தன் கேதீசன் (வயது 24) என்ற இளைஞரும், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மகநே்திரன் கபில்ராஜ் (வயது 18) என்ற இளைஞரும் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

வீட்டுக் கதவினை இனந்தெரியாத நபர்கள் கோடரியால் வெட்டிய சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் நேற்று புதன்கிழமை நள்ளவிரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அநியாயமாக 36 இலட்சம் ரூபாவை இழந்த விராட் கோலி!!

Virat Kholi

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கொல்கத்தா 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி தலைவர் விராட் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டில் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவது 2வது முறையாகும். ஏற்கனவே அவருக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அவர் இதுவரை 36 லட்சத்தை இழந்து உள்ளார்.

இதேபோல இந்த போட்டியில் வெற்றி கொண்டாட்டத்தின்போது கொல்கத்தா அணி தலைவர் காம்பீர் கதிரைகளை எட்டி உதைத்தார்.
இதற்காக அவருக்கு போட்டியில் பெறும் பணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

10 ஆண்டுகளின் பின் வானில் நிகழவுள்ள அபூர்வம் : வரும் 9ம் திகதி அவதானிக்கலாம்!!

Sun

10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி நடக்கிறது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம்.

புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.

புதன்கோள் சூரியனை கடக்கும் நிகழ்வை வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணலாம். இந்தியாவில் சூரியன் மறையும்போது இந்த நிகழ்வை காணமுடியும். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்க நாடுகளில் சூரிய உதயம் ஆகும்போது காணமுடியும்.

கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி இந்த அரிய நிகழ்வு நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கிறது.

ஒரு நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன்கோள் சூரியனை கடந்து செல்லும். அடுத்து 2019ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி இந்த நிகழ்வை மீண்டும் காணலாம்.

அதன் பின்னர் 2032ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி தான் புதன்கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்திய அப்பிள் போன்களை மீள் விற்பனை செய்யத் தடை!!

Apple Phone

ஒரு முறை உபயோகப்படுத்திய அப்பிள் ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் விற்பதைப் போல ஒருமுறை பயன்படுத்திய செல்போன்களை மீண்டும் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பதற்கான முயற்சிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டு இருந்தது.

இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்திய அப்பிள் செல்போன்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மின்னணு கழிவுகளை குறைக்கும் நோக்கத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, தொலை தொடர்பு அமைச்சகம் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை இது பாதிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இணைய துஷ்பிரயோகம் குறித்து 750 முறைப்பாடுகள்!!

Internet-crime

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தலம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கனணி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன.

இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான் சந்திரகுப்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.