மாணவர்களுக்கு ஆபத்தான இடமாக மாறிவரும் வகுப்பறைகள்!!

maxresdefault

பாடசாலையில் உள்ள வகுப்பறைகள் மாணவர்களுக்கு ஆபத்தான இடமாக மாறி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.விசேடமாக மாணவர்கள் அமரும் கதிரையானது 80 வீதம் மாணவர்களுக்கு பொருத்தமில்லாததும், உடல் நடவடிக்கைகளுக்கு பொருத்தமில்லாத ஒன்றுமானதும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வகுப்பறைக்குள் காணப்படும் சுகாதாரம் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் வெளிச்சம், காற்றோட்டம், அமரும் இடம், மேசைகள் மற்றும் கதிரைகள் ஆகியவை மாணவர்களுக்கு பொருந்தாத வகையில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாக ஆய்வுகளை மேற்கொண்ட வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கரும்பலகைகளுக்கு அருகில் மாணவர்களை அமரச் செய்வது சுகாதாரத்துக்கு பொருந்தாத விடயம் என்றும், அடிக்கடி மாணவர்களை இடமாற்றி அமரச் செய்வதன் மாணவர்களின் மூலம் மாணவர்களின் சுகாதாரத்தில் அக்கறையுடன் செயற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாணவர்கள் முதுகு வலி, மன ஏற்றத் தாழ்வுகள் உள்ளானவற்றிற்கு முகம் கொடுப்பதாகவும்,குறிப்பாக 35 வீதமான மாணவர்கள் தசை சம்பந்தப்பட்ட நோய்களினால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

 

திருகோணமலைக்கு வந்த தென்னாபிரிக்க கப்பல் தலைமை அதிகாரி உயிரிழப்பு!!

captain-spiro_9692856_1211243.570x1140

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் திருகோணமலை எண்ணை நிலையத்திற்கு எண்ணை நிரப்புவதற்காக வந்த கப்பலில் பணிபுரியும் தலைமை அதிகாரி சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Mw, Ceapual எனும் எண்ணைக் கப்பலில் பணிபுரியும் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த றாடோ கிட்வொகோ (RODO WGITVOGO) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கப்பலானது திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரம் இடப்பட்டிருந்தபோது கப்பலில் இருந்து குறித்த நபர் கடலில் விழுந்ததாகவும் அதன்பின்னர் குறித்த நபர் சிகிச்சைக்காக கடற்படையினரால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

பேஸ்புக்கில் அரசாங்கத்தை விமர்சித்தவரின் பதவி பறிப்பு!!

1 (70)

பேஸ்புக்கில் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த விமான நிலைய ஊழியர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.மத்தளை விமான நிலையத்தைச் சேர்ந்த செயற்திட்ட இணைப்பாளரான பிரியங்கர என்பவர் சுதந்திரக் கட்சியின் மஹிந்த அணிக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர் தனது அரசியல் ஆதரவை அடிக்கடி பேஸ்புக் வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் அரசாங்க பதவியில் இருந்து கொண்டு அரசாங்கத்தையே விமர்சிக்கும் வகையில் பதிவுகளை தரவேற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் நேற்று விமான நிலைய அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் போது அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பிரியங்கரவை சம்பளமில்லாத தற்காலிக பணி நீக்கத்துக்கு உட்படுத்தி விமான நிலைய அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.முறையான விசாரணைகளின் பின்னர் அவர் நிரந்தர பணிநீக்கத்துக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டு சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்துவதாக வார்த்தை ஜாலம் காட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் அண்மைக்கால போக்குகள் அனைத்தும் வாக்குறுதிகளுக்கு மாற்றமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ரிபன் பட்டியால் தற்கொலை செய்துகொண்ட 12 வயது சிறுமி!!

 

Lady-doctor-com3528

நாவலப்பிட்டி – பார்கேபல் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் நேற்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவி தலைக்கு கட்டும் ரிபன் பட்டியைக் கொண்டே இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு தற்கொலை செய்து பலியான சிறுமி 12 வயதான சிவகுமார் நிரஞ்சலா என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவரது பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி!!

IMO

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தொடர்ந்தும் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எண்ணியுள்ளதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பணம் அறவிடாது மேதின கொண்டாட்டங்களுக்காக பஸ்கள் வழங்கப்படமாட்டாது!!

CTB BUS

பணம் அறவிடாது மேதின கொண்டாட்டங்களுக்காக பஸ்கள் வழங்கப்படமாட்டாதென இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

மேதினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்ற பிரதான கட்சிகளிடமிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பஸ்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க குறிப்பிட்டார்.

மேதினத்தை முன்னிட்டு சபைக்கு சொந்தமான பஸ்களில் 40 வீதமானவற்றை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோரப்பட்டுள்ள பஸ்களுக்கான பணத்தை முழுமையாக செலுத்திய பின்னரே மேதின கூட்டங்களுக்காக அந்தந்த கட்சிகளுக்கு அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அனைத்து பஸ் டிப்போக்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் கூறினார்.

மே தினமான முதலாம் திகதி பொது விடுமுறை என்பதால் பயணிகளுக்கு பெரும்பாலும் அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் எதிர்வரும் 3 ஆம் திகதிவரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் நன்மை கருத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

யாழில் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த 15 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை!!

Fish

யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகளினால், சட்டவிரோதமான முறையில் பழுதடைந்த மீன்களை மக்களுக்கு விற்பனை செய்த 15 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்று யாழ் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

யாழ் சுகாதார திணைக்கள பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள், இவ்வாறான மீன்களை எடுத்து பரிசோதனை செய்தபோது மீன்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் அவ்வாறான மீன்களை எடுத்து பொதுச்சுகாதார அதிகாரிகள் அழித்துள்ளனர்.

குறித்த மீன்களின் பெறுமதி அறுபதாயிரம் ரூபா மதிக்கத்தக்கது என சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணையினை சுகாதார திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் புதிய சாதனை!!

dna-thermometre

மரபணு (DNA) வடிவமைப்பைப் பயன்படுத்தி உலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டரை (வெப்பமானியை) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நானோ தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட நானோ ஸ்கேலில் வெப்பத்தை எளிதாக அளக்கவும் இயற்கையைப் புரிந்து கொள்ளவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

வெப்பமடையும்போது மனிதர்களின் மரபணு தகவல்களை DNA மூலக்கூறுகள் விரிவடையச் செய்யும் என்பதை 60 ஆண்டுகளுக்கு முன், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அதை மையமாக வைத்து மனித முடியை விட 20 ஆயிரம் மடங்கு சிறிய அளவிலான உலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சந்தித்துக்கொண்ட நால்வர்!!

Meeting

வியட்நாம் போரில் பங்கேற்ற 4 முன்னாள் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ஒன்று கூடினார்கள்.

50 ஆண்டுகளுக்கு (1966) முன்பு அதே கடற்கரையில் சர்ஃப் போட் வைத்துக்கொண்டு, நால்வரும் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப் புகைப்படத்தில் இருப்பது போலவே நால்வரும் நின்று, மீண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

போருக்கு முதல் நாள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அப்போது எடுத்த புகைப்படம் இது. அதற்குப் பிறகு 11 ஆண்டுகள் வியட்நாம் காடுகளில் கடுமையான வாழ்க்கை. தினமும் 20 மைல் தூரம் காட்டுக்குள் நடக்க வேண்டும். நிலத்தைத் தோண்டி, அதற்குள் உறங்க வேண்டும். இந்தப் புகைப்படம் எடுத்த பிறகு நாங்கள் நால்வரும் சந்திக்கவே இல்லை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது
என நால்வரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போரில் இருந்து திரும்பிய பிறகு நாங்கள் நால்வரும் கட்டிட வேலை, வீட்டுக் காவல், வங்கி என்று பல வேலைகளுக்குச் சென்றுவிட்டோம். திருமணம் செய்து, குழந்தை குடும்பம் என்று வாழ்ந்து முடித்துவிட்டோம். 5 ஆண்டுகளுக்கு முன்புதான் இணையத்தின் மூலம் ஒவ்வொருவராக மீண்டும் அறிமுகமானோம்.

நேரில் சந்திக்க 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைஞர்களாக சந்தித்த நாங்கள், 70 வயதுகளில் முதியவர்களாகச் சந்தித்திருக்கிறோம். போருக்கு முன்னால் மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படத்தை மீண்டும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறு உருவாக்கம் செய்ய முடியும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. ஆனால் நடந்திருக்கிறது
என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் என்ன தெரியுமா?

FB

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டிற்கான நிகர இலாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 1.5 பில்லியன் டொலரை ‌தொட்டுள்ளது.

இந்த தொகையானது கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட 512 மில்லியன் டொலர்கள் அதிகமானதாகும்

ஃபேஸ்புக் நிறுவனம் மும்ம‌டங்கு லாபம் பெற்றதன் மூலம் நடப்பாண்டில் மிகச்சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளதாக அதன் நிறுவுனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும், ஃபேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்து 165 கோடியை எட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் போராளிகளையும், த.தே.செயற்பாட்டாளர்களையும் கைதுசெய்வதை ஏற்க முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!

Ananthan

யார் புலிகளை அழிப்பதில் வல்லவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்டி தமக்கான இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக தென்னிலங்கையின் சில முக்கிய அரசியல்வாதிகள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் பலிகடாவாக்குவதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர் சிவகரன் உட்பட வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய முன்னாள் உறுப்பினர்கள் திடீரென கைது செய்யப்பட்டு வருகின்றமையினாலும், மேலும் பலருக்கு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றமையினாலும் அவர்களது உறவினர்களும் பொது மக்களும் கதிகலங்கிப்போயுள்ளனர்.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ்வு என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு என்பன வலுப்பெற்றதன் காரணத்தாலும் அரசியல் சுயலாபத்துக்காகவும் கட்டம் கட்டமாக முன்னாள் போராளிகள் கடுமையான நிபந்தனைகளுடனும் கண்காணிப்புக்களுடனும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் நூற்றுக்கு 99 சதவீதமானவர்கள் தொழில்துறைகளில் முனைப்பு காட்டி தமக்கான வாழ்வதாரத்தினை தேடுவதற்கான போராட்டத்தில் அன்றாடம் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர்.

அத்தகைய நிலையில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது கடந்த சில நாட்களாக சில முக்கிய முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டுள்ளார்கள் என்றும், விடுதலை செய்யப்பட்டு சிறிது காலஅவகாசத்தின் பின்னர் பயங்கரவாத பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது.

அதுமட்டுமன்றி ஏனைய போராளிகள் சிலருக்கும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் சிலர் நான்காம் மற்றும் இரண்டாம் மாடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களது குடும்பங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது.

யார் புலிகளை அழிப்பதில் வல்லவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்டி தமக்கான இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக தென்னிலங்கையின் சில முக்கிய அரசியல்வாதிகள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் பலிகடாவாக்குவதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே வேளை அவ்வாறான நடிவடிக்கைகளுக்கு கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அண்மைக்கால கைது நடவடிக்கையில் எவ்விதமான அரசியல் பின்னணியும் இல்லையென நல்லாட்சி அரசாங்கம் தெரிவிக்குமானால் அதன்காரணத்தை வெளிப்படுத்தவேண்டும். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் அல்லது புனர்வாழ்வு முழுமையாக வழங்கப்படவில்லை என்று தற்போதைய கைதுகளுக்கு அர்த்தம் கற்பிக்க முயல்வார்களாயின் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக சுதந்திரமாக நடுமாடும் புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தான் என்ன? அதுதொடர்பிலும் வெளிப்படுத்தி நல்லாட்சி நடைபெறுகின்றது என்பதனை நிருபிக்க வேண்டும்.

அதனை விடுத்து உரிமைப்போராட்டத்தை நிராகரித்தன் விளைவால் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு என்ற பெயரில் சிறைவாசம் அனுபவித்து விடுதலையானவர்கள் தற்போது வாழ்வாதார போராட்டத்தில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் நல்லாட்சியிலும் கைது செய்யப்படுவதனை ஒருபோதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அந்த கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!!

Ice cream

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விருந்தில் ஐஸ்கிரீம் இல்லாததால் இருவீட்டார் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று புதன்கிழமை மாலை நடந்துள்ளது. அப்போது நடந்த விருந்தில் மணமகன் வீட்டார் சிலர் சாப்பிட சென்றபோது, ஐஸ்கிரீம் தீர்ந்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, காவல்நிலையம் வரை சென்றது. அப்போது அங்கு வந்த காவலர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி மணமகன் உறவினர்களில் பெண்கள் உள்பட பலர் பொலிசார் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக மதுரா பகுதி காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து, மணமகன் வீட்டார், மணமகளை அழைத்துச் செல்லாமல் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

பிரித்தானிய மகாராணியின் தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம்!!!

British

பிரித்தானிய மகாராணி வெளியிடும் தகவல்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிரும் நபருக்கு ஒரு கோடி இலங்கை ரூபாய் சம்பளமாக அளிக்க உள்ளதாக பிரித்தானிய அரண்மனை அதிகாரப்பூர்வமாக விளம்பரம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரண்மனை தனது அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் சில தினங்களுக்கு முன்னர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,’ பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் பகிர்வதற்கு அனுபவம் வாய்ந்த ஊழியர் ஒருவரை தெரிவு செய்ய உள்ளோம்.

இந்த வேலைவாய்ப்பில் தெரிவாகும் நபருக்கு ஒரு வருடத்திற்கு 47,400 பவுண்ட் (1,00,99,215 இலங்கை ரூபாய்) ஊதியமாக அளிக்கப்படும்’ என அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையில் சேருவதற்கு தேவையான முக்கிய தகுதி என்னவென்றால், ஊழியர் சமூக வலைத்தளங்களை வேகமாகவும் சிறப்பாகவும் கையாளுபவராக இருக்க வேண்டும்.

தற்போது மகாராணியின் டுவிட்டர் கணக்கில் 20 லட்சம் பேரும், இன்ஸ்டகிராம் பக்கத்தில் 3 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.

இந்த வேலைக்கு தெரிவாகும் நபர் பகிரும் ஒவ்வொரு தகவலும் இவர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது முக்கியமாகும்.

மேலும், இதற்கு முன்னதாக அந்த நபர் உலக பிரபலங்களின் இணையத்தளங்கள் அல்லது சமூக வலைத்தளங்களை கையாண்டவராக இருக்க வேண்டும்.

அதே போல், பிரித்தானிய மகாராணியின் தகவல்கள் என்பதால், சிறு பிழை இல்லாமல் தகவல்களை உடனுக்குடன் பகிர வேண்டும் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு தெரிவாகும் ஊழியருக்கு சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. ஆண்டுக்கு வங்கி விடுமுறைகள் உள்ளிட்ட 33 விடுப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.

2. கட்டணம் இல்லாத மதிய உணவு அளிக்கப்படும்.

3. பணி வழங்குபவர் 15 சதவிகித ஓய்வூதியமும் வழங்குவார்.

4. பணியில் சேருவதற்கு முன்னதாக பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப்படும்.
5. உலகம் முழுவதும் பிரபலமாக வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளும் அறிக்கப்பட்டுள்ளன.

ஆனால், துரதிஷ்டவசமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 24ம் திகதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஊழியர் தெரிவாகியுள்ளாரா இல்லை என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாததால் இதுபோன்ற மற்றொரு அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரங்களில் சமைக்கக் கூடாது : மீறினால் 2 வருட சிறை : விநோத உத்தரவு பிறப்பித்த அரசு!!

Bihar

கடும் வெப்பம் நிலவுவதால், தீ விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பகல் நேரங்களில் யாரும் சமையல் செய்ய வேண்டாம் எனவும், அதனை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்தியாவின் பீகார் அரசு வினோத உத்தரவை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை விட வட மாநிலங்களில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வெயிலின் கொடுமைக்கு 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மனிதர்கள் மட்டுமின்றி, வெயிலின் கொடுமையால் 1200க்கும் மேற்பட்ட விலங்குகளும் பலியாகியுள்ளன.

இந்நிலையில், வெயிலால் ஏற்படும் இந்தப் பிரச்சினைக்கு வித்தியாசமான தீர்வு ஒன்றைக் கண்டறிந்துள்ளது பீகார் அரசு.
பகல் நேரங்களில் மக்கள் அடுப்புகளைப் பற்ற வைக்கக்கூடாது என்பது தான் அது.

அதாவது, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டில் யாரும் சமைக்கக் கூடாது என பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் மட்டுமின்றி யாகம் வளர்ப்பது, தீ வளர்த்து மத சடங்குகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் வெப்பக்காற்று வீசி வருவதால், சமையல் செய்யும்போது தீ பரவி வீடுகளில் தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன், பெகுசாரி மாவட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 300 குடிசைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்திற்கான காரணத்தை விசாரித்த பிறகு தான், அரசு மேற்கூறிய பகலில் சமைக்கத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழில் 27 இளைஞர்கள் கைது!!

Arrest1

யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என பலர் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள்.

யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது, சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டால், கைதுசெய்வதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு கடந்த ஒரு வாரங்களில் சுமார் 50ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றினால் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட 27 இளைஞர்களையும் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலை சென்ற சிறுவனைக் காணவில்லை : தாயார் கண்ணீர்!!(காணொளி)

20160428_112821வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் வடிவேல் ரவிக்குமார் என்ற 13 வயது பாடசாலை மாணவன் 25.04.2016 அன்று பாடசாலைக்குச் சென்று இன்றுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

25.04.2016 அன்று குறித்த சிறுவன் தான் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கமாட்டேன் எனவும், தான் வேலைக்கு செல்லப் போவதாவும் தாயரிடம் தெரிவித்துள்ளான்.

மகனை பாடசாலைக்கு செல்லும்படி கூறிவிட்டு மாலை தாயார் விடு வந்த பொழுதும் மகன் வீடு திரும்பவில்லை என தாயார் தெரிவித்தார்.

குறித்த பாடசாலைச் சிறுவனைக் கண்டால் உடனே கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

வடிவேல் ராஜேஸ்வரி
077 – 2101553
077 – 2510154
077 – 0545615

20160428_112259 20160428_113315