தெகிவளை ரயில் விபத்தில் பலியான யுவதியில் பேஸ்புக்கில் நிகழ்ந்த மாற்றம்!!

Yasara

தெஹிவளையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியான இருவரில் ஒருவரான யசாராவின் பேஸ்புக் கணக்கானது அவரது மறைவிற்குப்பின் நினைவுக்கணக்காக்கப்பட்டுள்ளது.

யசாராவின் மறைவிற்குப்பின் அவரது பேஸ்புக் கணக்கு இதுவரை யாராளும் உபயோகிக்கப்படவில்லை என்பதால் பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் யசாராவின் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு யசாராவின் நினைவாக இருப்பதற்காக அவரின் இக்கணக்கானது நினைவுக் கணக்காக மாற்றப்பட்டுள்ளது.

இத்தாலியில் கத்திக்குத்துக்கு இலக்கான இலங்கை இளைஞன்!!

kathi

இலங்கை இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இத்தாலியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின் குறித்த இளைஞன் உடனடியாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞன் 20 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி ரோமில் உள்ள பியாசா கேவரில் வைத்து இனம் தெரியாத ஒரு குழு, குறித்தஇளைஞனை அணுகி கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை தாக்க வந்ததற்கான காரணம் தனக்கு தெரியாது என இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈக்வடோர் பூகம்பத்தில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றிய நாய் திடீர் மரணம்!!

Dog

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த வாரம் 7.8 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. அதில் சிக்கி 654 பேர் பலியாகினர்.

58 பேரை காணவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் டைகோ என்ற மோப்ப நாயும் ஈடுபட்டது. 4 வயதான அந்த நாய் லாப்ரேடர் இனத்தை சேர்ந்தது. அது இடிபாடுகளுக்குள் நுழைந்து சிக்கியவர்களை கண்டுபிடித்து மீட்க பேருதவி புரிந்தது. எனவே, அந்த நாய் ஹீரோ என வர்ணிக்கப்பட்டது.

பலரது உயிரை காப்பாற்றிய அந்த நாய் பணியின் போது திடீரென மயங்கி விழுந்தது. உடனே அதை கால்நடை வைத்தியர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இருந்தும் அந்த நாய் பரிதாபமாக இறந்து விட்டது.

கடுமையான வெப்பம் தாங்காமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரணம் அடைந்த மோப்ப நாய் டைகோவுக்கு தீயணைப்பு படை வீரர்கள் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடமை தவறாத டைகோ தனது உயிரை விடும் முன்பு 7 பேரை காப்பாற்றியதாக பேஸ்புக் இணையத் தளத்தில் தெரிவித்துள்ளனர்

ஐந்து வயது மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

CPT117336841_hd-878x494

கனடாவில் ஐந்தே வயதான சொந்த மகளை கொடூரமாக கொலை செய்து விட்டு நாடகமாடிய தந்தை மீது பொலிசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கனடாவில் Newfoundland and Labrador பகுதியை சேர்ந்த 37 வயது Trent Butt என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் Carbonear நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்று தீயிக்கிரையானதாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் வந்துள்ளது.இந்த தகவலை அடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அந்த நெருப்பில் சிக்கி ஐந்து வயதான சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது. மேலும் சிறுமியின் தந்தை Trent Butt படுகாயங்களுடன் மருத்துவமனைக்குஎடுத்து செல்லப்பட்டார்.இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், ஒட்டுமொத்தமாக இது திட்டமிடப்பட்ட செயல் என்பதை உறுதிப்படுத்தும்படியான தடயங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் Butt வேண்டுமென்றே வீட்டிற்கு நெருப்பு வைத்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே சிறுமி Quinn Lorna-Kay புகைப்படத்தை சமூகவலை தளங்களில் பதிவேற்றி பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகமானவர்கள் அனைவரும் ஆறுதல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.தொடர்ந்து Harbour Grace உதைப்பந்து வளாகத்தில் நாளை நடைபெறவிருக்கும் ஆராதனைகளுக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பு விடுத்துள்ளனர்.பொலிஸ் விசாரணைக்கு பின்னரே குடியிருப்புக்கு நெருப்பு வைத்ததன் பின்னணியும் குழந்தை பலியானதன் காரணமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேர்வு கூடத்தில் திடீர் பிரசவ வலி: ஆண் குழந்தைக்கு தாயான மாணவி!!

Newborn_Kerala_baby

ஜார்கண்டில் கல்லூரித் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, தேர்வு அறையிலேயே அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்டில் கிரிதி மாவட்டத்திலுள்ள தேர்வுமையம் ஒன்றில் பாரதி குமாரி என்ற 21 வயது மாணவி தேர்வு எழுத வந்திருந்தார்.

இவர் தன்வர் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவி. தனது வீட்டிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவு ஆட்டோவில் பயணம் செய்து அவர் தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.தேர்வு தொடங்கும் வரை அவர் சாதாரணமாகவே இருந்துள்ளார்.ஆனால், சிறிது நேரத்திலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் அளித்தது.

ஆனால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக, தேர்வு அறையிலேயே பாரதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.இதனைக் கண்டு தேர்வு எழுத வந்திருந்த மற்ற தேர்வர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக தேர்வு கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ரசிகர்களுக்காக செய்கிறேனே – சூர்யா எடுத்த கடும் ரிஸ்க்!!

mfs-Surya-24-is-close-to-heart

சூர்யா படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவரக்கூடியவர். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் 24.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் விக்ரம் குமார், படத்தில் சூர்யா ஒரு மேம்பாலத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ‘நான் எத்தனையோ முறை அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் “சார் பேன்ஸ் எல்லாரும் தற்போது தெளிவாக உள்ளார்கள், டூப் போட்டால் தெரிந்துவிடும், நானே குதிக்கின்றேன்” என அவரே குதித்தார். உண்மையாகவே இவை கடும் ரிஸ்க் தான், அந்த காட்சியை திரையில் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்’ என கூறியுள்ளார்.

 

முதலாளியை தேடி 386 கி.மீ தூரத்தை கடந்து வந்த அதிசய நாய்!!

625.0.560.350.160.300.053.800.668.160.90

பிரித்தானிய நாட்டில் தன்னுடைய உண்மையான முதலாளியை தேடி 12 நாட்களாக நடந்து 386 கி.மீ தூரத்தை கடந்து வந்து உரிமையாளருடன் சேர்ந்துள்ள அதிசய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேல்ஸில் உள்ள Penrhyncoch என்ற நகரை சேர்ந்தவர்ஆலன் ஜேம்ஸ். விவசாயியான இவர், தனது பண்ணையில் உள்ள ஆடுகளை கவனித்துக் கொள்ள பெரோ என்ற 4 வயது நாயைவளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில்,கடந்த மார்ச் மாதம் சிலபயிற்சிகளுக்காக 386 கி.மீ தொலைவில்உள்ள தனது நண்பரின் பண்ணையில் நாயை விட்டுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.C0ckermouth என்ற நகரை சேர்ந்த அந்த நண்பரும்நாயை அழைத்துக்கொண்டு ஆடுகளை கவனிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்துள்ளார்.

ஆனால், கடந்த ஏப்ரல் 8ம் திகதிஅந்த நண்பர் ஆலன் ஜேம்ஸை அவசரமாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது,‘என்னிடம் நீங்கள் விட்டு சென்ற நாயை காணவில்லை என்றும், ஏதாவது விபத்தில் சிக்கி இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக’அவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ஆலன் தனது செல்லப்பிராணியை தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியேவந்துள்ளார்.அப்போது, வீட்டு வாசலில் காணாமல் போன அந்த நாய் இரண்டு கால்களையும் தூக்கிகொண்டு நன்றியுடன் நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளார்.நண்பரின் வீட்டிற்கும் தனது வீட்டிற்கும் இடையே உள்ள 386 கி.மீ தொலைவை இந்த நாய் நடந்தே கடந்து வந்துள்ளது.ஒவ்வொரு நாளும் 32 கி.மீ தூரம்என 12 நாட்களாக இந்த நாய் தனது பயணத்தை தொடங்கியிருக்கலாம் என ஆலன் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.முதலாளியிடம் இவ்வளவு விசுவாசமும் பாசமும் வைத்துள்ள எனது செல்லப்பிராணியை இனி யாரிடமும் ஒப்படைக்கமாட்டேன் என ஆலன் ஜேம்ஸ் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

 

வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே அலுவலகம்: வெனிசூலா அரசு அதிரடி!!

download

வெனிசூலாவில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த அலுவலகங்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.வெனிசூலா நாட்டுக்கு தேவையான பெரும்பாலான மின்சாரம் எல் குரி அணையில் இருந்தே பெறப்படுகிறது. தற்போது அணையில் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்த முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை தோறும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.தற்போது இந்த விடுமுறையை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ வெளியிட்டுள்ளார்.

வரும் வாரங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெனிசூலாவில் தற்போது 2.6 மில்லியன் அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வேலை செய்யும் இரண்டு நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுமா அல்லது விடுமுறை விடப்பட்டுள்ள நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படுமா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

 

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி!!

maxresdefault

சமீபகாலமாக சின்னத்திரை நடிகர்கள், சினிமா நடிகர்களின் தற்கொலை சினிமா, மற்றும் டிவி உலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில், சின்னத்திரை நடிகர் சாய் சக்தி மன உளைச்சலில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக ஒரு ஆடியோ பதிவு நம் கவனத்துக்கு வந்தது. அந்த குரல்பதிவின் சாராம்சம்…

வணக்கம்

நான் சின்னத்திரை சாய் சக்தி பேசுறேன். நான் நிறைய சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த இரண்டு வருடமாக நான் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.இதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? சமீபத்தில் டிவி நடிகர்கள் நிறையப் பேர் இறந்துகொண்டே இருக்கிறோம். சாய் பிரசாந்த் இறந்தார், இப்போது இந்த சாய் சக்தியின் நிலையையும் கேளுங்கள்.நான் ஒரு குறிப்பிட்ட சேனலில் நிறைய சீரியல்களில் நடிச்சிருக்கேன். அப்போது இன்னொரு டி.வியின் ரியாலிட்டி ஷோவுக்கு அழைத்தார்கள். அந்த சேனலில் எனக்கு ரெகுலராக ஷோ, சீரியல்கள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.

அத்தனை முறை வற்புறுத்தி என்னை குழப்பி அங்கே வரவழைத்தார்கள். ஆனால், இன்று எனக்கு ஷோ இல்லை, வருமானம் இல்லை.என் மனைவி, என் குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் யார் பொறுப்பு, யார் உதவுவார்கள், நான் என்ன பாவம் செய்தேன் இன்று நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.17 வருடங்களாக எத்தனையோ சீரியல்கள், நிகழ்ச்சிகள் என நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது வாழ்வாதாரமின்றி நிற்கிறேன். இப்போது சேனல் தரப்பு நபர்களிடம் மாறி மாறி வாய்ப்பு கேட்டுவிட்டேன்.

காலில் விழுந்து வேண்டினேன். பிச்சையெடுக்காத குறைதான். ஒரு நடிகரின் நிலை எப்படி இருக்கிறது என நினைத்துப் பாருங்கள்.மனம் வெறுத்து தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்று பின்னர் என் அம்மாவின் திட்டலிலும், அடியிலும் அந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்தேன்.ஆனால் மீண்டும் இப்போது தற்கொலை செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறேன். சின்னத்திரை நடிகர்களான நாங்கள் இன்று தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நடிகர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நடிப்பு தான் வாழ்க்கை. சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது.எங்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும். நடிச்சு கஞ்சியோ, கூழோ குடிச்சுகிட்டு இருந்தோம். ஆனால் இன்று எங்களுக்கு வாழவே பிடிக்கலை.போதும் எனக்கு இந்த வாழ்க்கை… சத்தியமாகச் சொல்கிறேன் இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. ஒரு சிலரை நம்பிய நான், செத்தே போய் விட்டேன்!’’ எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் மனமுடைந்து அழுகிறார் சாய் சக்தி.

பேச்சின் இடையே சேட்டிலைட் சேனல்களின் பெயர்களைக் குறிப்பிட்டும், அதில் பணிபுரியும் சிலரின் பெயரைக் குறிப்பிடுகிறார் சாய் சக்தி.இந்தக் குரல் பதிவு உண்மைதானா என அறிந்துகொள்ள சாய் சக்தியை தொடர்பு கொண்டு பேசினோம். கோர்வையாகப் பேசக் கூட முடியாமல் மனம் நொந்து ஆழத் துவங்கிவிட்டார்.‘’இன்னைக்கு காலைல தூக்குப் போட்டுக்கிட்டேன். ஆனா, என் அம்மா பார்த்து கதவை உடைச்சு காப்பாத்தினாங்க. அம்மா மட்டும் காப்பாத்தலைன்னா, இப்போ நான் இறந்த செய்தி பத்தி நீங்க விசாரிச்சுட்டு இருந்திருப்பீங்க.என்னோட ஒரு குழந்தை இறந்துருச்சு. இன்னொரு குழந்தைக்கு மருத்துவச் செலவுக்குக் கூட பணம் இல்லை. நான் என்ன செய்யப் போறேன்னே தெரியலை.

ஆனா, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களுக்கு இதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை!’’ என தேம்பித் தேம்பி அழுதவாறே பேசினார். மனதைத் தேற்றிக் கொள்ளச் சொல்லி சமாதான வார்த்தைகள் கூறினோம்.சாய்சக்தியின் நண்பர்கள் மூலம் சின்னத்திரை சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் சாய் சக்திக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கப்படுகிறது!

2015ம் ஆண்டில் 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள்!!

1 (9)

நாடு முழுவதும் 2015 ஆம் ஆண்டில் 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இந்திய மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று மாநிலங்களவையில் இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிபாய் சவுத்ரி கூறியதாவது, தேசிய குற்ற ஆவண காப்பகம் அளித்த தகவலின் படி, கடந்த ஆண்டு 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.இவற்றில் 1,706 வழக்குகள் கூட்டு பாலியல் பலாத்கார வழக்குகளாகும்” என்று தெரிவித்தார்.

 

10 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கும் மகனுக்கும் விளக்கமறியல்!!

arrest (1)

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தந்தையையும் -மகனையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள பத்து வயது சிறுமி தனது தந்தை மது போதையில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், அதனையடுத்து 18 வயதான சகோதரர் தந்தையில்லாத நேரத்தில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சில ஊடகங்கள் மோசடிக்காரர்களின் தேவைக்கேற்ப செயற்படுகின்றது – ஜனாதிபதி!!

ma

நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு வரைவுக்கும் அனுமதியோ அல்லது ஆதரவோ வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எந்தவொரு நபருக்கும் எந்தவொரு பிரேரணைகளையும் நிறைவேற்றுவதற்கு உரிமை இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிரிக்கும் பிரேரணைகளை செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார். இன்று காலை ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்திப் பணிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாறான பிரேரணகைள் நிறைவேற்றப்பட்டவுடன் பதற்றமடையத் தேவையில்லை என்றும் கூறினார். தேர்தல் ஒன்று நெருங்கும் போது இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாகவும், ஜெயலலிதாவும் இவ்வாறு செய்றபட்டு இலாபம் அடைவதாகவும் ஜனாதிபதி கூறினார்.வெட்வரி அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் வினவப்பட்ட போது, பொது மக்களை பாதிக்கும் விதமாக எவ்விதத்திலும் வெட் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கூறினார்.

வர்த்தக துறையினருக்கே வட் வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக வீணாக அச்சம் அடையத் தேவையில்லை என்றும் கூறினார். அத்துடன் சிலர் அரசாங்கத்தை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சதிகாரர்களாக செயற்படுவதாகவும், அவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் தான் இடமளிப்பதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.தானும் பிரதமரும் இணைந்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாகவும், அந்தப் பயணத்தை நாசவேலை செய்வதற்கு எவருக்கும் இடம் வழங்குவதில்லை என்றார்.

கடந்த 48 ஆண்டுகளாக தான் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலின் போது வெளியேற காரணம் கடந்த அரசாங்கத்தின் நிர்வாகமே என்றும், கடந்த அமைச்சரவையில் இருந்தவர்களுக்கும் இவை நன்கு தெரியும் என்றும் கூறினார்.சாப்பாட்டு மேசைக்கு சென்றால் அங்கு முதலில் குடும்ப உறுப்பினர்களின் தீர்மானங்கள் மாத்திரமே பேசப்படுவதாகவும், குடும்பத்தின் 05 உறுப்பினர்கள் மாத்திரம் தீர்மானம் எடுக்கும் இடமாக அது இருந்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

முன்னர் இருந்த மோசமான ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறியக் கொடுக்காமல் சில ஊடகங்கள் மோசடிக்காரர்களுக்காக முன்நிற்பது குறித்து தான் வருத்தமடைவதாக கூறினார்.ஊடகங்கள் எப்போதும் சமநிலை தன்மையுடன் செயற்பட வேண்டிய போதும் சில ஊடகங்கள் மோசடிக்காரர்களின் தேவைக்கு ஏற்றவாறு செயற்படுவதாக கூறினார்.

 

இந்திய – இலங்கை பாலம்! மீண்டும் இலங்கை மறுக்கிறது!!

rams_bridge_lg

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் எவ்விதபேச்சுக்களும் இடம்பெறவில்லை என்று இலங்கை மீண்டும் தெரிவித்துள்ளது.இலங்கையின் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை இன்று தெரிவித்துள்ளார்.

இந்த பாலம் அமைப்பு தொடர்பாக பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய தரப்புதெரிவித்து வருகிறது.எனினும் இலங்கை இன்னும் இந்தப் பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என்று அமைச்சர்குறிப்பிட்டார்.உத்தியோகபூர்வமாகவோ, உத்தியோகபூர்வமற்ற வகையிலோ பேச்சுக்கள் இடம்பெறவில்லைஎன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதீன் கட்காரியே அடிக்கடி இந்த பாலம்தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பாலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 5.19பில்லியன் டொலர்கள்நிதியொதுக்கீட்டில் 22 கிலோமீற்றர் தூரத்துக்கு தலைமன்னாருக்கும் தனுஸ்கோடிக்கும்இடையில் அமைக்கப்படவுள்ளதாக நிதீன் கட்காரி தெரிவித்து வருகிறார்.

 

ரயிலில் மயக்க மருந்து கலந்த கோப்பியை பருகிய முதியவரிடம் கொள்ளை!!

134-Train_On_The_South_Coast_Line-252269-Main_banner-Sri-Lanka-By-Rail

முன்பின் தெரியாத நபரொருவர் தந்த கோப்பியைப் பருகியதும் மயக்கமுற்ற 70 வயது முதியவர் ஒருவரிடமிருந்த 8 ஆயிரம் ரூபா பணத்தையும், அவரது மகளின் வெளிநாட்டுப் பயணத்துக்கான ஆவணங்களையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று நேற்று பொல்காவலை ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இந்த முதியவர் பொல்காவலை ரயில் நிலையத்திலுள்ள வாங்கு ஒன்றில் மயங்கிக் கிடந்தபோது அவரை மீட்ட புகையிரதப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் தனக்கு நேர்ந்த அவலத்தைக் கூறியிருக்கிறார்.

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மீனவரான இந்த முதியவர் கடந்த 24ஆம் திகதி தனது மகளது வெளிநாட்டுப் பயணத்துக்கான ஆவணங்களுடன் கொழும்பிலுள்ள முகவர் நிலையத்துக்கு வருவதற்காக, மட்டக்களப்பு கொழும்பு நகர்சேர் விரைவு ரயிலில் ஏறியிருக்கிறார். பொலனறுவை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய இளைஞன் ஒருவன் இவருடன் சிநேகபூர்வமாக உரையாடிக்கொண்டே கையில் வைத்திருந்த போத்தலில் இருந்த கோப்பியைக் கொடுத்திருக்கிறான். அதைக் குடித்த முதியவர் மயக்கமடைந்திருக்கிறார். பொல்காவலை ரயில் நிலையத்தில் விழிப்பு வந்ததும் இறங்கி அங்கிருந்த வாங்கில் படுத்து மீண்டும் உறங்கியிருக்கிறார்.

மீட்கப்பட்ட முதியவரை பொல்காவலை வைத்தியசாலையில் சேர்த்த புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரது காத்தான்குடி வீட்டுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

 

மே தினக் கூட்டங்களுக்காக 3,500 இலங்கை போக்குவரத்து சங்க பஸ்கள் முன்பதிவு!!

prasi-sup-p09-Remarkable

இம்முறை மே தினக் கூட்டங்களுக்குச் செல்வதற்காக இதுவரை 3,500 பஸ்கள் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.மே தினத்துக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விசேட சலுகைக் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இ.போ.ச. பஸ்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென கூறியுள்ள அவர, தூரத்தின் அடிப்படையில் கட்டணங்கள் அறவிடப்படுமெனவும் தெரிவித்தார்.

இத்னபடி, 100 கி.மீ க்கு 6,000 ரூபா, 100 தொடக்கம் 250 கி.மீ க்கு 12,500 ரூபா, 250 தொடக்கம் 500 கி.மீ க்கு 17,500 ரூபா, 500 தொடக்கம் 750 கி.மீ க்கு 27,500 ரூபா, 750 கி.மீ க்கு மேல் ரூபா 27,500.அத்துடன், இரவு நேரத்துக்காக ஒவ்வொரு பஸ்ஸுக்கும் மேலதிகமாக ரூபா 800 அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மே தினக் கூட்டத்துக்கு இ.போ.ச. பஸ்களில் செல்ல விரும்பும் அரசியல் கட்சிகளிடம் உரிய கட்டணத்தை அறவிட்டபின், இந்தச் சேவையை வழங்குமாறு தான் சகல பிராந்திய டிப்போ அதிகாரிகளுக்கும் சுற்றுநிருபமொன்றின் மூலம் அறிவித்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.பஸ்களை முன்கூட்டியே பதிவுசெய்துள்ள அரசியல் கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, இடதுசாரி முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர ஐக்கிய மேதினம்!!

notis - 1

உலகத் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் தினமாக மே தினம் நினைவுகூறப்பட்டு வருகின்றது.

வருடா வருடம் மேதினம் வவுனியாவில் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் முன்னிறுத்தி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மே தினத்தை நினைவுகூர்ந்து வருகின்றது.

அந்த அடிப்படையில் எமது கட்சி தமிழ் தேசிய இனத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளாக புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வை முன்வை என்பதை வலியுறுத்துவதுடன் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், காணாமல் போனோருக்கு பதில்கூறு,

இராணுவத்தால் சுவீகரிக்கப்படும் நில ஆக்கிரமிப்பை உடனே நிறுத்து, உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து இராணுவமே வெளியேறு, திருமலையில் சம்பூர் அனல் மின்நிலையத்தை அமைப்பதை உடனே நிறுத்து என்பவற்றை கோரிக்கைகளாக முன்னிறுத்தி இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முன்பாக இருந்து காலை 9.30 மணிக்கு ஆர்ப்பாட்டப் பேரணி தொடங்கப்பட்டு காலை 10.30 மணிக்கு நகரசபை புதிய கலாசார மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

இவ் ஐக்கிய மேதினத்தில் பத்திற்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் பங்கேற்கின்றன. இவ் மேதின ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் அதன்பின் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் பொது அமைப்புக்களையும் பங்கெடுத்து மேதின கோரிக்கைகளை வலுவூட்டுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னிப் பிராந்திய செயலாளர் என்.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்.பிரதீபன்
வன்னிப் பிராந்திய செயலாளர்.

notis - 1 Notis - 2