உடன் அமுலாகும் வகையில் அனைத்து மதுபான வகைகளுக்கும் தடை!!

bottles-and-glasses-of-alcohol

உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் விற்பனை செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக பீகாரில் நேற்று முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி தரப்படாது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார். அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இராணுவ சிற்றுண்டிச்சாலைகளில் மதுவிற்பனை தொடரும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பீகார் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று ஐக்கிய ஜனதா தள தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அவருடைய கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றதும் பீகாரில் ஏப்ரல் 01ம் திகதி முதல் மதுவிலக்கு அமுலுக்கு வரும் என்று நிதிஷ்குமார் அறிவித்தார்.

எனினும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் விற்பதற்கான அனுமதி மட்டும் நீடித்தது. இந்த வகை மதுபானங்களின் விற்பனையையும் தடை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தரப்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தாடி இல்லாவிட்டால் அபராதம்.. பர்தா அணியாவிட்டால் தண்டனை: ஐ.எஸ். பிடியில் உள்ள மக்களின் நிலை !!

isis_public_003

ஐ.எஸ். தீவிரவாதிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்று தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.

தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்து வருகின்றனர்.இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் மனித கேடயமாக உள்ளவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஈராக்கின் மக்மோரில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் அபு இஸ்ரா என்பவர் இது தொடர்பாக கூறியதாவது, எங்கள் கிராமத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை கேடயமாக பயன்படுத்து தங்களை தற்காத்துக்கொண்டனர்.

மேலும் ஏராளமான கட்டளைகள் போட்டனர். ஆண்கள் கட்டாயம் நீளமாக தாடி வளர்க்க வேண்டும்.தாடி சிறிதாக இருக்கிறது என்று என்னிடமே இருமுறை அபராதம் பெற்றுள்ளனர். அதேபோல் பெண்களுக்கு பர்தா கட்டாயம்.எங்கள் வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிக்கசென்ற எனது 12 வயது மகள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவளுக்கு கடும் தண்டனை அளித்தனர்.

அவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு சரியாக சம்பளம் தர மாட்டார்கள். ஒருநாள், நான் வேலையை விட்டு நிற்கபோவதாக சொன்னதற்கு எனது தலையை தனியாக வெட்டி விடுவதாக மிரட்டினர்.மேலும் அவர்கள் செய்யும் கொடூரமாக கொலைகளை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் எங்களை மனித கேடயமாகவும் பயன்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.

 

நடிகர் அக்ஷய் குமார் லண்டன் விமான நிலையத்தில் கைது!!

Akshaikumar

இயக்குனர் சங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார், இன்னும் பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற போது அவர் காலாவதியான விசா வைத்திருந்தாக கூறி விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரை காக்கவைத்த அதிகாரிகள், பிரச்சனையை சரிசெய்த பிறகு அவரை விடுவித்துள்ளனர்.

அவரை விமான நிலையத்தில் கண்டவுடன் ரசிகர்கள் கூட்டமாக கூடிவிட்டனர். அங்கு இருந்த 2 மணி நேரமும் அக்ஷய் குமார் ரசிகர்களோடு செல்பி எடுப்பதிலேயே கடந்துவிட்டதாம்.

யாழில் சித்திரைப் புத்தாண்டில் சிறப்பு பட்டிமன்றம் : இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வருகை!!

Pattimantram_in_001

யாழ். இந்தியத் துணைத் தூதரகமானது வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து பட்மன்றமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.

சுதந்திர இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி டீ.சு.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்த தின நினைவு நாளை முன்னிட்டும்,

தமிழ் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் எதிர்வரும் 14ம் திகதி 5.30 மணிக்கு சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வு ஒன்றினை நல்லூர், சங்கிலியன் தோப்பில் நடாத்தவுள்ளது.

இச்சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தரும் பிரபல பேச்சாளர்களான திரு. பட்டிமன்றம் ராஜா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவர்களுடன் வடமாகாணத்தின் புகழ் பூத்த பேச்சாளர்களான முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் தி.வேல்நம்பி, செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், திரு. ந.விஜயசுந்தரம், திரு. இ.சர்வேஸ்வரா மற்றும் செல்வி ப.கதிர்தர்சினி ஆகியோரும் இப்பட்டிமன்ற விவாத அரங்கினில் தமது வாதங்களை முன்வைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Pattimantram_in_001 (1)Pattimantram_in_002

பேஸ்புக்கில் மத எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்ட மாணவர் வெட்டிக்கொலை!!

FB

பங்களாதேஷ் பகுதியில் பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் மதத்­துக்கு எதி­ரான தனது கண்ணோட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய சட்ட மாணவர் ஒருவர் வெட்டுக் கத்­தியால் வெட்டி புதன்கிழமை பின்­னி­ரவு படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

நஸ்­முதீன் சமாத் (26 வயது) என்ற மேற்­படி சட்ட மாணவர் மதத் தலை­வர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்பாட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் சம்­பவ தினம் டாக்கா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அரு­கி­லுள்ள சந்­தியில் சென்று கொண்­டி­ருந்த அவரை மோட்டார் சைக்­கிளில் வந்த 3 ஆயு­த­தா­ரிகள் நெருங்கி அவ­ரது தலையை கத்­தியால் வெட்­டிய பின் அவர் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். இதன்போது நஸ்­முதீன் சமாத் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

ஜகன்னாத் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டத் ­து­றையில் பட்ட கற்­கை­நெ­றியை கற்று வந்த அவர் தனது பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் ‘எனக்கு மதம் கிடை­யாது’ என்ற தலைப்பின் கீழ் மத தீவிரவாதத்­திற்கு எதி­ரான கருத்­து­களை எழு­து­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இந்தத் தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்­த வொரு குழுவும் உரி­மை­கோ­ர­வில்லை. கடந்த வருடம் அந்நாட்டில் மதச் சார்பற்ற 4 இணையத்தள எழுத்தாளர்கள் மத கடும் போக்காளர்களால் வெட்டிக் கொல்லப்பட் டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஆபத்தான புகையிரதப் பயணம்!!

Train

இந்தியாவைப் போன்று இலங்கையிலும் புகையிரத பயணிகள் புகையிரதத்தில் எங்கு இடமுள்ளதோ அங்கும் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டுள்ள காட்சி பதிவாகியுள்ளது.

களனி – பியகம வீதியின் களுபாலத்தின் கீழ் கொள்கலன் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளானதால் புகையிரத சேவைகள் தாமதமாகின.

குறித்த விபத்தினால் இரு புகையிரத பாதைகள் சேதமடைந்து, பிரதான புகையிரத சேவைகளின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டன.

இதனால் புகையிர நிலையத்தில் புகையிரதத்திற்காக காத்து நின்றவர்கள் வேறு புகையிரதங்களில் ஏறி பயணத்தை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பயணிகள் இவ்வாறு புகையிரதத்தில் பயணித்ததை கடந்த காலத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது, இந்நிலையில் கொழும்பில் இவ்வாறு புகையிரதத்தில் பயணிகள் ஆபத்தான முறையில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறைக்கைதி மரணம்!!

Dead

வவுனியா சிறைச்சாலையில் காளிமுத்து இராமச்சந்திரன் (வயது 59) எனும் நபர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்தவேளையில் கடந்த இரு தினங்களாக திடீர் நெஞ்சுவலி காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்

எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 05.04.2016 அன்று இரவு மரணமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கிறன.

வவுனியாவில் மக்கள் வங்கியின் சிறுவர்களுடன் சித்திரை வருடம்!!

 
‘சிறுவர்களுடன் சித்திரை வருடம்’ எனும் தொனிப்பொருளில் மக்கள் வங்கி வவுனியா கிளை பிராந்தியக் காரியாலயம் நடாத்திய சிறுவர்களுக்கான நிகழ்வு பார்ப்போரை மனம் மகிழவைத்தது.

இளவேனில் முன்பள்ளி சிறார்களின் அழகான தோற்றமும் அற்புதமான விளையாட்டுகளும் உற்சாகமான நடனமும் ஓயாத மகிழ்ச்சியும் அனைவரையும் வேறோர் உலகிற்கு அழைத்துச் சென்றது.

போட்டிகள், பரிசுகள், குதூகலங்கள், ஆட்டங்கள் பாட்டங்களோடு தமது பண வைப்புக்களையும் மேற்கொண்டு பயன்மிக்க மாலையாக நேற்றைய தினத்தை மாற்றியமைத்து அனைவரையும் பாடசாலைக் காலத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9) news (10) news (11) news (12) news (13)

இன்றுமுதல் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்ய முடியாது!!

prasi-sup-p09-Remarkable

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக கூறினார்.

அத்துடன், புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இன்றுமுதல் புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் பஸ்களில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்று ராஜா குணதிலக கூறினார்.

இதுதவிர புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க கூறினார்.

 

பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூர பெற்றோர்!!

1 (67)

பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றசாட்டின் பேரில் பெற்றோர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெற்றோர் குழந்தையை கொன்று மிகவும் இரகசியமான முறையில் புதைத்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் கொச்சிக்கடையில் உள்ள அத்கல பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 5குழந்தைகளின் பெற்றோர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், நீர்கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் குழந்தையின் உடல் தோன்றி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிகாட்டியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு கொக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!!

 
வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் கொக்கி விளையாட்டினை ஊக்கிவிக்கும் முகமாக இலங்கை கொக்கி விளையாட்டுச் சங்கம், வவுனியா கொக்கி விளையாட்டுச் சங்கம் என்பன இணைந்து இன்று காலை வவுனியா தமிழ் மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தில் அதிபர் சீ.மரியநாயகம் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கொக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா கொக்கி விளையாட்டுச் சங்க உறுப்பிகர்கள் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு கொக்கி விளையாட்டு உபரரணங்களை வழங்கி வைத்தனர்.

இன் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSC02779 DSC02807 DSC02815

சிறைச்சாலைகளில் கடும் இட நெருக்கடி: சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

jail-cell-prison

இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படும் சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இலங்கை முழுவதும் உள்ள அனைத்துச் சிறைகளையும் ஒன்றிணைத்தால் சுமார் எட்டாயிரம் கைதிகளை அடைத்து வைக்கும் அளவுக்கே இடவசதி உள்ளது. கொழும்பில் உள்ள சிறைகளில் மட்டும் ஆயிரத்து ஐநூறு பேருக்கான இடவசதி உள்ளது.

எனினும் தற்போது சுமார் 18 ஆயிரம் வரையான கைதிகள் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 7000 பேர் வரையானோர் கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாகவே சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

இலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும்! முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்!!

IN11_C_V__WIGNESWA_2337718f

இலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.அதில் வடக்கு கிழக்கில் முஸ்லிம் தன்னாட்சி அலகும், தென்னிலங்கையில் மலையக மக்கள் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை முன்மொழிகளை சமர்பித்துள்ளது.இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் நிலையில் அதற்கான முன்மொழிவாக இந்த பிரதான விடயம் இன்று வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டது.

இதனைதவிர ஒற்றையாட்சிக்கு பதிலாக சமஷ்டி முறை அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை பிரஜை ஒருவர் மற்றுமொருவருக்கு கீழானவர் என்ற முறைமை மாற்றப்பட வேண்டும்.எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய ஒரு இனம் மற்றைய இனத்தை விட கூடிய பயனை கோர கூடாது.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படும்.

இந்த தன்னாட்சி பிராந்தியத்தின் நிலை பரிமாணம் மற்றும் நியாயாதிக்கம் என்பன தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளால் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படும்.மொழி ரீதியிலான தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மாநிலமானது மாநில நாடாளுமன்றம் ஒன்றை கொண்டிருக்கும்.இதேபோன்ற ஒழுங்குகள் சிங்கள மொழி மூலமான மாநிலத்தில் மலையக தமிழர்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதிகாரம் ஒரு சமூகத்திற்கு மட்டும் பகிரப்படாது, அனைத்து சமூகத்திற்கும் பகிரப்படுவதை நாட்டின் நாடாளுமன்றம் உறுதி செய்ய வேண்டும்.வடக்கு கிழக்கு மாநிலம், முஸ்லிம் தன்னாட்சி பிராந்தியம், மலையக தன்னாட்சி பிராந்தியம் ஆகியன பாதிக்கப்படும் வகையில் மத்திய கூட்டாட்சி சமஷ்டி நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் குறித்த மூன்று அலகுகளால் அங்கீகரிக்கப்படும் வரை நடைமுறைக்கு வரக்கூடாது என்றும் வட மாகாண முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாநிலம், வடக்கு கிழக்கு மாநில நாடாளுமன்றம், வடக்கு கிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை மற்றும் மலையக பிராந்திய சபை ஆகியவற்றுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.தமிழ் பேசும் மாநில அரசில் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநர் என்ற ஒருவருக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்ககூடாது.

இலங்கையின் அரச கரும சிங்களமும் தமிழுமாக இருக்க வேண்டும்.ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.வடகிழக்கு மாநிலத்தின் சகல நடவடிக்கைளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்புடன் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.மலையக தமிழ் பிராந்திய சபை தவிர்ந்த இலங்கையின் ஏனைய பகுதிகளில் பேணப்படும் சகல மொழிகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்புடன் சிங்களத்தில் இருக்க வேண்டும்.

மலையக பிராந்திய சபையின் பதிவுகள் தமிழிலோ சிங்களத்திலோ இடம்பெறலாம்.அதில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிப்பெயர்புகள் பேணப்பட வேண்டும்.வடக்கு கிழக்கு மாநில மற்றும் முஸ்லிம் மலையக தன்னாட்சி சபைகளின் சுயாட்சியானது கூட்டாட்சி அல்லது சமஷ்டி அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபை முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி இறுதி முன்மொழிவு சபையின் அங்கீகாரத்திற்கு சமர்பிக்கப்படவுள்ளது.இதனையடுத்து, வடமாகாண சபையின் அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு பேரவையிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp இல் புதிய வசதி : இனி தகவல்களை திருட முடியாது!!

Whatsapp

உலகம் முழுவதும் கைப்பேசி பயன்படுத்துவோரிடம் வட்ஸ்–அப் மோகம் அதிகரித்து வருகிறது. இதில் தகவல்கள், புகைப்படம்,காணொளிகளை உடனே பரிமாறிக் கொள்ளலாம். இதனால் இது பெறும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

வட்ஸ்–அப் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான புதுமைகளை அந்நிறுவனம் அடிக்கடி புகுத்து வருகிறது. வட்ஸ்–அப் குருப்பில் 100 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதை மாற்றி 256 பேர் வரை உயர்த்தியது.

தற்போது வட்ஸ்–அப்பில் மறையாக்கம் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும். இதனால் இந்த தகவல்களை யாரும் இடை மறித்து ஹேக் (திருட) செய்ய முடியாது.

இதுகுறித்து வட்ஸ்–அப் நிறுவனர் ஜன்கும் கூறுகையில், “வட்ஸ்–அப் நிறுவனம் எப்போதுமே தகவல்களை பாதுகாக்க முன்னுரிமை அளித்து வருகிறது.

தற்போது பெருமையுடன் அறிவிக்கிறோம். வட்ஸ்– அப் தகவல்களை மிகவும் பாதுகாப்பானதாக்கும் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம்.

புதிய வட்ஸ்–அப் அப்டேட் மூலம் உங்களது தகவல்கள், புகைப்படம், வீடியோ, காணொலி, குரூப்பில் பேசுவது போன்றவைகளை யாரும் திருட முடியாது. யாரும் இடைமறித்து பார்க்க முடியாது. ஏன் நாங்கள் கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.

வவுனியா சிதம்பரபுரம் மக்களின் 20 வருட முகாம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!!

Sithamparapuram Camp

வவுனியா மாவட்டத்திலுள்ள சிதம்பரபுரம் முகாமில்வாழும் மக்களுக்கு அதே இடத்தில் காணிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் உள்ளக மற்றும் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து நாடு திரும்பியவர்களில் 193 குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக சிதம்பரபுரம் முகாமில் வாழ்ந்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் இவர்களின் நிலை தொடர்பில் வடக்குமாகாண புனர்வாழ்வு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு குடும்பமொன்றிற்கு தலா நான்கு பரப்புக் காணி வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான காணி அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவுள்ளது.

காணி அனுமதிப்பத்திரமும், தற்காலிக வீடுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19.04.2016 அன்று வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

இவர்கள் குடியிருப்பதற்கான தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 69,000 நிதி வழங்கியுள்ளதாக அச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

Elephant

வவுனியா நெடுக்கேணி சேனப்பிளவு பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கணபதிப்பிள்ளை மனோகரசீலன் (வயது 42) என்பவர் நேற்று (07.04.2016) இரவு 8.00 மணியளவில் தனது வயலுக்குச் சென்றபோது அவரை யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.