தமிழ் சிங்கள புதுவருட மலர்வு விழாவினை முன்னிட்டு வவுனியா கல்வி வலயங்களான வடக்கு-தெற்கு இணைந்து ஏற்பாடு செய்த கலாச்சார நிகழ்வுகள் நேற்று(07.04.2016) காலை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், சர்வமதக் குருக்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் வவுனியா மாவட்டத்தில் தமிழ் சிங்கள மக்களின் இன நல்லுறவை சித்தரிக்கும் கலை கலாச்சார பாரம்பரிய விளையாட்டுகள், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தேசிய கீதமானது தமிழ் மாணவர்கள் சிங்களத்திலும் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியிலும் பாடியமை ஒரு விசேட அம்சமாகும்.
2016 ஆண்டு புதன் கிழமை அன்றைய தினம் மாலை 07.48 மணிக்கு சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பிரவேசிக்கிறார். 60 ஆண்டுகளை கொண்ட சித்திரை மாதம் 01 நாளை கொண்டு தான் பஞ்சாங்கம் கணிக்கபடுகின்றது அதில் உள்ள வருடங்களில் மன்மத வருடம் முடிந்து துன்முகி வருடம் பிறக்கிறது. துன்முகி என்றவுடன் துன்பங்கள் நிறைந்த வருட என்று என்னி விட வேண்டாம்.
(துன்பங்கள் நீங்கி) துன்பங்கள் நீக்கிய வருடமாகவே என்னுவோம் நல்லதை எண்ணுவோம் நல்லதே நடக்கும். ஆகவே கிரகங்களை பொருத்தே பலன்கள் மாறுபடும். இந்த வருடம் மிதுன ராசியில் புணர்பூச நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் வருடம் பிற்பதால் நன்மைகளே ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
‘மிக்கான துன்முகியில் வெள்ளாமை அருமே தொக்க மழை பொழியும்;’’ என்ற ஜோதிடப்பாடலும் உண்டு. அதாவது காலமழை மாரி பெய்யும் விளைச்சல சில பாதிக்கபட்டாலும் பஞ்சம் வந்து விடாது.
லக்கினத்திற்கு 02ல் சனி செவ்வாய் 05ல் கேது 06ல் உச்சம்பெற்ற சுக்கிரன் 07ல் சூரியன் புதன் 09ல் சந்திரன்; லாபத்தில் குரு ராகு ஆகவே லாபமே.
நாட்டில் தெய்வ வழிபாடு அதிகரிக்கும் மகிழச்சியுடன் மன நிறைவு கூடும் வகையில் மக்களுக்கு வாழ்க்கையில் மாற்றஙகள் ஏற்படும். அந்நிய நாட்டுமக்கள் நம்மை கண்டு ஆச்சர்யம் படும் வகையில் நம் நாட்டில் கட்சி கூட்டணி மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
சனி செவ்வாய் 05ல் இருப்பதால் உலகில் பல இடங்களில் பூகம்பம் ஏற்படலாம் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால் கனமழை பெய்யும் . பெண்களுக்கு யோகம் உண்டாகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர். ஆனாலும் பொன்னான நாளான புதன் கிழமை சுக்கிர ஹோரையில் புத்தாண்டு பிறப்பதால் பெறுமையே . மக்கள் அனைவருக்கும் பெறுமையான பொன்னான சிறப்பான நாளாக அமையும்.
புணர்பூச நட்சத்திரம் குருவின் நட்சத்திரம் ஆகையால் சிவ வழிபாடு அம்மன் தட்சிணாமூர்த்தி ஆஞ்சனேயா வழிபாடுகள் செய்வது சிறப்பு.
கையில் பணம் தங்கவில்லையே என்று கூறுபவர்கள் 15.04.2016 அல்லது 15.04.2016 அன்று 50.00 ரூபாய் நோட்டுக்கள் மூலம் தன ஆகர்ஷனம் செய்வது மிகச்சிறப்பு. விரும்பியவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
விசு புண்ணிய காலம்
காலை 06.45. முதல 10.30. மாலை 3.30 முதல் 04.33 வரை
மருத்து நீர் இப்புண்ணிய காலத்தில் எல்லோரும் சங்கற்ப பூர்வமாக இறைவனை பிரார்தித்து தலையில் வேப்பிலையும் காலில் கொன்றையிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராடலாம்.
அணிய வேண்டிய ஆடைகள்
இவ்வருடம் வெள்ளை பச்சை கலந்த பச்சை உடைகள் பச்சை வஸ்திரம் அணிவது சிறப்பு.
அணியவேண்டி இரத்தினஙகள் : மரகத பச்சை பச்சைசேர்க்கோன் வைரம் வைட்சேர்க்கோன்
உண்ண வேண்டிய உணவுகள் : மோதகம்,வடை,நெல்லிக்கனி துவையல்,மாதுளம்பூ,அறுசுவை உணவுகள்,
இனி ஒவ்வொரு ராசிகளுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் பொய்யான தகவல்களைத் தெரிவிப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஃபேஸ்புக்கில் தங்களைப் பற்றிய சுய விபரம், ஆர்வம், பொழுதுபோக்கு போன்றவற்றைப் பகிர்வதிலேயே பெரும்பாலானோரின் பொய் தொடங்கி விடுகிறது.
தங்கள் நண்பர்கள், குடும்பத்தினரை விட தங்கள் முகநூல் பக்கம் வசீகரமாகவும், சுவாரஷ்யமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களைப் பகிர்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, ஆய்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆண்கள் பலரும் ஒப்புக்கொண்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின் முக்கிய அடையாளமான ப்ரொபைல் பிக்சரில் (Profile Picture) தங்களது தற்போதைய
உண்மையான தோற்றத்துடன் கூடிய படத்தை பதிவேற்றம் செய்ய பெரும்பாலானோர் விரும்புவதில்லை.
இதனை 43 சதவீத ஆண்கள் ஆமோதித்துள்ளனர். 14 சதவீத ஆண்கள் மட்டுமே தங்களுடைய தோற்றத்தை அப்படியே ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 18 சதவீதம் பேர் மட்டுமே தங்களது இப்போதைய புகைப்படத்தையும், விபரத்தையும் சரியாக வெளியிட்டுள்ளனர்.
தங்களது ஆர்வம், பொழுதுபோக்கு, பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் போன்றவை மற்றவர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதிலேயே பலர் கவனமாக உள்ளனர். இதனால் அவர்களது சொந்த விருப்பங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட கருத்துக்களால், கடுமையான விமர்சனங்களையும், கசப்பான அனுபவங்களையும், எதிர்ப்புகளையும் பெற்றுள்ளதாகவும், முன்பின் தெரியாதவர்களுடன் கூட கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அரசியல், மதம், பாலியல் போன்றவை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விடயங்களாக உள்ளன.
வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு உதவி வழங்கப்பட்டது.
மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு குழாய்நீர் வினியோகத்திற்காக நிதி வழங்கப்பட்டது.
வவுனியா வாழவைத்தகுளம் அல் மினா சிறுவர் பாடசாலை மற்றும் அல்ஹிஜ்ரா இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கலை கலாசார மற்றும் விளையாட்டுப்போட்டிகள் கடந்த (02.04.2016) சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
காலையில் சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் இடம்பெற்றதுடன் மாலை 2 மணியளவில் அல் மினா சிறுவர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் போட்டிகள் இடம்பெற்றதுடன், கிராமத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கயிறிழுத்தல் போட்டி 16 வருடங்களுக்கு பின்னர் கிராமத்தில் அரங்கேறியது.
அத்துடன் சிறுவர்களின் வினோத உடை கண்காட்சி வருகை தந்த விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியதுடன் நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், முன்பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எம்.சாஜிதீன் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினராக செட்டிகுளம் பிரதேசத்தின் முதலாவது முஸ்லிம் சட்டத்தரணியான சர்ஜூன் நூர்டீனும், சிறப்பு விருந்தினர்களாக கிராமத்திலுள்ள அமைப்புகளின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வுக்கான நிதி உதவியை கிராமத்திலிருந்து சென்று வெளிநாடுகளில் பணிபுரியும் சகோதரர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும், அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள்.மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்க சில எளிய வழிகள்..
* காலையில் நீங்கள் நினைத்ததற்கு பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது, காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டிய வேலைகளை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
* சற்று முன் கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
* கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை, மது வேண்டாம்.
* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பேருந்து தாமதமானால் என்ன செய்வது என்பது போன்றவை.
* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் “மன்னிக்கவும்,தற்போது என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
* எளிமையாக வாழுங்கள்.
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தினமும் கழிவுகள் நகரசபை ஊழியர்களால் சேர்க்கப்பட்டு நகரசபை வாகனங்களில் ஏற்றப்பட்டு நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படுகின்றன.
இக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய முறையில் மூடப்படுவதில்லை என்றும் அதனால் வாகனங்களில் உள்ள குப்பைகளும் கழிவுகளும் காற்றில் பறந்து வீதிகளிலும் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் தங்கிவிடுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக் குப்பைகள் காற்றில் பறப்பதால் நகரசபை வாகனங்களுக்குப் பின்னால் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள், இதனை உரியவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
விக்ரமின் கருடா படத்தின் படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் நாளை சர்தார் கப்பர் சிங் வெளிவரவுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் எளிதில் காதல் வசப்படுகின்ற பெண் தான், ஆனால், என் மனதிற்கு பிடித்தவரை நான் இன்னும் சந்திக்கவில்லை.
அப்படி யாரையும் பார்த்தால் உடனே காதலித்து விடுவேன், அவருடன் ஜாலியாக சுற்றுவேன். விமானத்தில் ஒன்றாக பயணிப்பேன். ஓட்டல், உல்லாசப்பயணங்கள் என்றெல்லாம் இருப்பேன்’ என அடுக்கிக்கொண்டே சென்றுள்ளார்.
அஜித் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு வரமாட்டேன் என கூறியதாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது.விஷால் தரப்பில் இருந்து இன்று ஒரு தகவல் வந்தது. இதில் ‘நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இத நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.
ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொது குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களை கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலை துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களை முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே’(நீண்ட அறிக்கையில் குறிப்பிட்ட சில முக்கிய கருத்துக்கள் மட்டுமே இவை) என ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டனர். இதில் இவர்கள் அஜித் மற்றும் சிம்புவை தான் கூறியிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன் (90). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். கடந்த 1940-ம் ஆண்டு பள்ளியில் படித்த போது நோரா ஜாக்சன் என்ற பெண்ணை சந்தித்தார். தற்போது இவருக்கு 89 வயது ஆகிறது. இருவரும் காதலித்தனர். 1946-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அந்த நேரம் இரண்டாம் உலகப் போர் அறிவிக்கப்பட்டது. எனவே, விக்கர்மேன் போருக்கு சென்று விட்டார்.
போரில் அவர் படுகாயம் அடைந்தார். அதற்காக சிகிச்சை பெற்ற அவர் மன உளைச்சல் அடைந்தார். எனவே திருமண எண்ணத்தை மறந்த அவர் நோரா ஜாக்சனை பிரிந்தார். அதை தொடர்ந்து நோரா ஜாக்சனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. தற்போது அவரது கணவர் இறந்து விட்டதால் விதவையாக உள்ளார். இதற்கிடையே மன அழுத்தத்தில் இருந்து குணமான விக்கர்மேன் நோராவை தொடர்ந்து காதலித்து வந்தார். அவரை சந்திக்க பல வருடங்களாக தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை.
திருமண நிச்சயதார்த்தம் நடந்து 70 ஆண்டு கடந்த நிலையில் சமீபத்தில் ஒரு ரேடியோ நிகழச்சியில் பங்கேற்ற அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது தனது காதல் கதையை கூறினார். அதைக் கேட்ட நோரா ஜாக்சன் விக்கர்மேனை சந்தித்தார். அவர்கள் இருவரும் தற்போதும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை உணர்ந்தனர். எனவே இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர்.
அமெரிக்காவில் தாங்க முடியாத பல் வலியால் அவதிப்பட்டு வந்த சிறைக்கைதி ஒருவர், தனக்கு சிகிக்சை கிடைக்காத காரணத்தால் தனக்கு தானே வைத்தியம் பார்த்துகொண்டார்.அமெரிக்காவின் நிவோத மாகாணத்தில் உள்ள High Desert State என்ற சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் Michael Sanzo(47) என்ற கைதி, தாங்க முடியாத பல்வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அக்கைதி சிறை அதிகாரிகளிடம், வலி அதிகமாக இருப்பதால் என்னால் இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை, மேலும் பசித்தாலும் சரியாக சாப்பிடமுடியவிலை, நாளுக்கு நாள் மிக மோசமான வலியை சந்தித்துக்கொண்டிருக்கும் எனக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.
ஆனால், சிறைக்கைதிகள் தங்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றால் அதற்காக சிறையில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்தி அதிகாரிகளிடம் கொடுக்கப்படும், அதன்படியே Michael – ம் கொடுத்துள்ளார், ஆனால் அவரின் படிவம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் அதிகாரிகளை அணுகியபோது, சிகிச்சையளிக்கவிருக்கும் பட்டியலில் உங்கள் பெயர் வரவில்லை, உங்கள் பெயர் எப்போது வருகிறதோ, அப்போது நாங்கள் உங்களை பார்க்கிறோம் என கூறியுள்ளனர்.இதனால், வலியை பொறுத்துக்கொள்ள முடியாத அவர், தனது முகத்தின் பக்கவாட்டில் குத்துவிட்டு தனக்கு வலியை ஏற்படுத்திக்கொண்டிருந்த 6 பற்களையும் வெளியே எடுத்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு தானே வைத்தியம் பார்த்துக்கொண்டதால், தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் அதனால் தனக்கு நஷ்டஈடாக $1,000,000, வழங்கவேண்டும் என இவரது சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த நீதிமன்றம், இக்கைதிக்கு £42,000 இழப்பீடாக வழங்கியுள்ளது.
நாய்களுக்கு மைக்ரோசிப் எனப்படும் நுண்சில்லு ஒன்றை பொருத்த தவறும் உரிமையாளர்கள் மீது அபாராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் விரைவில் பிரிட்டனில் அமலுக்கு வருகிறது.500 பிரிட்டிஷ் பவுண்டுகள் வரை இதற்கு அபராதம் விதிக்கப்படும். 15 எண்களைக் கொண்ட தனிப்பட்ட குறியீடு பொறிக்கப்பட்ட ஒரு நெல் மணியின் அளவிலான மைக்ரோசிப் ஒன்று, நாயின் கழுத்துக்கு பின்புறமாக தோலின் கீழ்பகுதியில் வைக்கப்படும்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் வளர்க்கப்படும் நாய்கள் அனைத்திற்கும், பிறந்து 8 வாரங்களுக்குள் மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும். வடக்கு அயர்லாந்தில் இது 2012ஆம் ஆண்டு முதல் சட்டமாக உள்ளது.இது தவறவிடப்பட்ட அல்லது காணாமல் போன நாய்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுடன் சேர்த்து வைக்க உதவுகிறது. நாயின் பிடரிப் பகுதியை ஸ்கேன் செய்யும்போது, அதிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அந்த நாயின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியும்.
பிரிட்டனில் உள்ள மொத்த நாய்களில் கிட்டத்தட்ட 8இல் ஒரு நாய்க்கு மைக்ரோசிப் பொருத்தப்படவில்லை எனவும், அவ்வாறு 10 இலட்சம் நாய்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தகவல் தெரிவிக்கிறது.மைக்ரோசிப் பொருத்தப்படாத நாய்கள் இனங்காணப்பட்டால், அதனைப் பொருத்துவதற்கு 21 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும், தவறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சில உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள், மிருக வைத்தியர்கள், மற்றும் டாக்ஸ் ட்ரஸ்ட் போன்ற அறக்கட்டளைகளும் இலவசமாக இந்த சேவையை வழங்குகின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதற்காக இளைஞர் ஒருவர் விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 24 வயதான நிகில் ரெட்டி. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு தாம் குள்ளமாக இருப்பதாக கவலையில் இருந்து வந்தார்.
இதனாலேயே இவருக்கு பெண் கிடைக்கவில்லை எனவும் இவர் பெரிதும் கவலைப்பட்டு வந்துள்ளார்.இதனால் தனது உயரத்தை அதிகரிக்கும் நோக்கில் அறுவை சிகிச்சை செய்ய அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துள்ளார்.இந்த நிலையில் மகனை தொடர்ந்து 3 நாட்களாக காணாத பெற்றோர் ஐதராபாத் பொலிசாரிடம் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே நிகில் ரெட்டியின் அலைப்பேசி சிக்னலை வைத்து அவர் மருத்துவமனையில் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.இத்தகவலை அறிந்த நிகிலின் பெற்றோர் அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருந்த அவரை பார்த்து மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், நிகில் சிகிச்சை தொடர்பாக கடந்த 6 மாதகாலமாக தனியாகவே வந்து மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வரும் நிகில் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மக்கள் வங்கியின் ஏ.ரீ.எம் இயந்திரம் அடிக்கடி செயல்இழப்பதால் வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என பிரபல்யமான தமிழ் இணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு வவுனியா வங்கியின் முகாமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வங்கி முகாமையாளர்,
வவுனியா மக்கள் வங்கிக்கு முன்பாக காணப்படும் ஏ.ரீ.எம் இயந்திரம் அடிக்கடி செயலிழந்து காணப்படுகின்றது என இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றையதினம் மக்கள் வங்கியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக 11 மணியிலிருந்து 2 மணிவரையில் அகில இலங்கை ரீதியாக ஏ.ரீ.எம் இயந்திரங்கள் இயங்கவில்லை. அதன்பொது வாடிக்கையாளர்களின் நலன்கருதி 6 கவுண்டர்களின் சேவை வழங்கினோம்.
இவர்கள் தெரிவித்தது போல எமது ஏ.ரீ.எம் இயந்திரம் அடிக்கடி செயலிழந்து காணப்படுவது இல்லை. திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 8.00 மணி தொடக்கம் 6.00 மணிவரையில் எமது வாடிக்கையாளர் சேவை காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
பண்டிகைக் காலங்களில் பஸ் வண்டிகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக அறிவிக்க விஷேட தொலைபேசி எண்ணினை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1955 அல்லது 0112333222 ஆகிய இலக்கங்களினூடாக அழைத்து முறைப்பாடுகளை பயணிகள் தெரிவிக்க முடியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு போக்குவரத்து சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விஷேட பஸ் வண்டிகளில் இடம்பெறும் அதிக பணம் வசூலிப்பு, பஸ் பிரயாணச் சீட்டு வழங்காமை, குறிப்பிட்ட வீதிகளில் பயணிக்காமல் இடை நடுவில் போக்குவரத்து பாதையினை மாற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக குறித்த தொலைபேசி இலக்கங்களினூடாக அறிவிக்க முடியும் என போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்தப் பிரதேசங்களுக்கு செல்வோர் தனியார் போக்குவரத்து சங்கத்தினூடாக தொடர்பு கொண்டு பஸ்களை முன்பதிவு செய்து கொள்ளமுடியும் எனவும் தனியார் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.