பிரமாண்டமாக இடம்பெற்ற ஐ.பி.எல் தொடக்க விழா!!(படங்கள்)

 
மும்பையில் 9 ஆவது ஐ.பி.எல் தொடக்க விழா கத்ரினா கைப், ரன்வீர் சிங், பிராவோ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் 9 ஆவது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதை முன்னிட்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை மும்பையில் கோலாகலமாக நடந்தது. மும்பை வொர்லியில் உள்ள நெஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒ ப் இந்தியா அரங்கில் நடைபெற்றது.

இதேபோல, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரரும், ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடப் போகும் பிராவோ, சம்பியன் பாடலுக்கு நடனமாடி அசத்தினார். அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு இசைக்குழுவான மேஜர் லேசர் குழுவின் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இதுதவிர இங்கிலாந்தை சேர்ந்த பொப் பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த குழுவின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் அரங்கை ஒளிர வைக்கும் நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1 2 3 4

மின்குமிழை உட்கொள்ள முயற்சித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!!

Hospital

இராஜாங்கனையில் மின்குமிழை உட்கொள்ள முயற்சித்த 13 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த பகுதியில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியொன்றில் மின்குமிழை உட்கொள்வது போன்ற காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை நண்பர்களுக்கு விளக்குவதற்கு முயற்சித்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

காயங்களுக்குள்ளான சிறுவனை நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக சிறுவன் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

இதேவேளை இவ்வாறான கண்காட்சிகள் தொடர்பில் பிள்ளைகளை தெளிவுப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ஞானதாச பெரேரா தெரிவித்துள்ளார்.

15 முதல் 17 வயது வரையான பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்துதல் அவசியம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பிரஸெல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!!

Mohommad-Abrini

பிரான்ஸின் பிரஸெல்ஸ் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபர் பெல்ஜிய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்ரினி என்றழைக்கப்படும் 31 வயதான மொராக்கோ வம்சாவழியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டு பிரஜையே பெல்ஜிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய ஊடகத்தை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர் சமீபத்தில் நடத்தப்பட்ட பிரஸெல்ஸ் பயங்கரவாத தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரஸெல்ஸ் விமான நிலைய பாதுகாப்பு cctv கமராவில் பதிவாகிய தொப்பி அணிந்திருந்த அந்த சந்தேகநபர் இவராக இருக்க கூடுமென சந்தேகிப்பதாக பெல்ஜிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வரையில் பிரஸெல்ஸ் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாத்திரம் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பெல்ஜிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!!

arrest (1)

பலாங்கொடை, கிரிமெட்டிதென்ன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 134 வெள்ளைச் சந்தன மரக்கட்டைகளுடன் மேலும் பல பெறுமதியான மரக்கட்டைகளும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

பேஸ்புக் காதலால் நகைகளை இழந்த வவுனியா யுவதி!!

FB

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பெண்ணொருவரைக் காதலித்து திருமணம் புரிவதாகக் கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் ஏமாற்றிய பொறியியலாளர் ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், 2012 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிய நபரொருவர் தான் கனடாவில் வசிக்கின்றேன் என்றும், தான் திருமணமாகாதவர் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் குறித்த பெண் வவுனியாவுக்கு திரும்பி வந்த பின்னர் தான் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளேன் என்றும், அந்தப் பெண்ணைத் திருமணம் புரிய விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதை நம்பிய அந்தப் பெண்ணும் அவருடன் தொடர்ந்தும் முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு வந்துள்ளார். இந்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாத காலப்பகுதியில் பெண்ணுடன் தொடர்பு கொண்ட குறித்த இளைஞன், தனக்கு முல்லைத்தீவு பகுதியிலிருந்து பெருமளவு தங்கம் கிடைத்துள்ளது என்றும், அதனைக் கடையில் விற்பனை செய்வதற்குப் பற்றுச்சீட்டுக்களுடன் உள்ள நகைகள் தேவையாகவுள்ளன என்றும், எனவே அவரிடம் நகைகளை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்கு வருமாறும் கூறியுள்ளார்.

குறித்த பெண்ணும் அவ்வாறு வரும்போது கச்சேரிக்கு அண்மையில் அவரை இறங்குமாறு கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார். இடையில் கோயிலொன்றைக் கண்டு அதனை வணங்கி விட்டுச் செல்வோம் எனக்கூறி, பெண் உள்ளே சென்றவுடன் அவரிடமிருந்த தங்க நகைகள் அடங்கிய பையுடன் அந்த இளைஞன் மாயமாகி விட்டார்.

சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பொலிஸார், குறித்த சந்தேக நபரை வவுனியாவில் வைத்துக் கைது செய்து நேற்று முன்தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சந்தேக நபரை இந்த மாதம் 19ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபரிடமிருந்து சில நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

Fli

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 891 என்ற விமானத்தில் இருந்து தொழில்நுட்ப கோளாறினால் புகை வெளியேறியமை காரணமாக அந்த விமானம் பாங்கொக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் பாங்கொக்கில் இருந்து கொழும்பை நோக்கி புறப்பட்ட விமானம் திடிரென்று மீண்டும் அந்த நாட்டிலேயே தரையிறக்க வேண்டி ஏற்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 263 பயணிகள் இருந்துள்ளதுடன், எனினும் பயணிகள் எவருக்கும் எந்தவித காயங்களும் இன்றி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சொர்ணபூமி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம் அந்த நாட்டு பொறியிலாளர்களால் சரிசெய்யப்பட்டு பின்னர் பயணிகள் அனைவரும் அதே விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த விமானத்தில் விமானியாக இருந்தவர் 25 வருட கால அனுபவம் கொண்ட ஒருவர் என்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வித்தியா குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த இந்தியா!!

vithya_home_004

புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு வவுனியாவில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடு இந்திய அரசின் நிதியுதவியினால் கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்த போது தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருதி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.

இதனையடுத்து, வவுனியா, குருமன்காடு, சிங்கள பிரதேச செயலக வீதியில் வீடு அமைக்கப்பட்டு கடந்த 3ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவினால் வித்தியா குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.இந்நிலையில், குறித்த வீட்டினை இலங்கை அரசாங்கமே நிர்மாணித்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்கான முழுமையாக நிதி உதவியினை இந்திய மத்தியரசு வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், கட்டுமானப் பணிகளுக்கான சரீர உதவிகளை இராணுவத்தினர் வழங்கியுள்ளனரே தவிர இலங்கை இராணுவத்தினரால் வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை எனயாழ். இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

வன்னி மண் : எங்கள் தாய் மண்!!

12987919_1061538630554387_914245610_n

வன்னியன் வலிமை வாழ்ந்து
வரலாறு படைத்த மண்.

நூற்றாண்டு அடிமை கொண்ட
வெள்ளையரிடம் அடங்காது
சினங்கொண்டு எழுந்த மண்.

புகழ் பண்டாரவன்னியனை
கற்சிலையில் பொற்சிலையாய்
பெற்றெடுத்து வரலாறு கண்ட மண்.

கொரில்லாப் போர் புகழ்
வன்னியரே என வெள்ளையனின்
வரலாற்றிலும் நிமிர்ந்த மண்.

பின்னாலில் வரலாற்றிலும் அதனைப்
பறைசாற்றிய மண்.

காடென்றும் சகதியென்றும்
யாழ் ஓடிய ஆச்சி அப்பு,அதன்
வேகமான வளர்ச்சியதை
உழைத்தே நிறைவாய் காட்டிய மண்
வன்னி மண் எனை வளர்த்த மண்.

குளங்கள் வெட்டி மழை காத்து
பசுமை எங்கும் நிறை காத்த மண்.

விவசாயம், வியாபாரம், கைத்தொழில்
உழைப்பாலே பலன் கண்ட மண்.

யுத்தத்தில் இடம்பெயர்ந்த
பல்லாயிரம் மக்களுக்கு
ஆதரவுக்கரம் தந்த மண்.

சாதியென்றும் சமயமென்றும்
நீதியற்ற பேதம் அறியா முல்லை மண்.

கோயில்கள்,தேவாலயங்கள்.
மசூதிகள் விகாரைகள்
புனிதம், அதை மதித்த மண்.

யாழ்பீடம்,கல்லூரி,தொழில்நுட்பம்
கலாமன்றம்,நகரசபை,நூலகம்
அறிவோடு கலைகளும் அழகாக
சிறந்த மண்.

கல்வாரி மலையிலே
சிலுவை சுமந்த யேசு போல்
பொல்லாத துயரங்களைச்
சுமந்த மண்.

-குமுதினி ரமணன்-
ஜேர்மனி.

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)2ம் இணைப்பு!!

 
இன்று (08.04.2016) காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பஸ்தரான முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் வசித்துவந்த எஸ். பீற்றர் என்ற 56 வயதுடைய குடும்பஸ்தரே ரயிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகில் சென்ற போது குறித்த நபர் ரயிலிருந்து விழுந்துள்ளதாகவும் இறந்தவரின் உடலை ரயில் சாரதி வவுனியா புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு மறுடியும் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

இறந்தவரை அடையாளம் காட்டிய உறவினரிடமிருந்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா? போன்ற கோணத்திலும் விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

12987996_1558624864467951_641019322_nDSC02965DSC0296612939691_468321790027808_804719509_n 12969393_468321716694482_1144947345_n 12969394_468321770027810_379098763_n 12980590_468321780027809_1730002971_n

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

Train

வவுனியாவில் இருந்து இன்று மாலை காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட புகையிரதமானது 6.30 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது 6.40 மணியளவில் வவுனியாவில் இருந்து புறப்பட்ட புகையிரதமானது மன்னர் வீதிக் கடவையை
அண்மித்த போது அப் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்துடன் இணைந்திருங்கள்.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர்தின சிறப்புக் கண்காட்சியும் விற்பனையும்!!

 
வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கண்காட்சியும் விற்பனையும் இன்று(08.04.2016) காலை வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் கண்காட்சி 08.04.2016 தொடக்கம் 10.04.2016 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளதுடன். இக் கண்காட்சியில் பெண்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் தங்கள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

12970348_859264314202583_588427261_o12962435_859369004192114_926707822_o12986366_859264397535908_400789537_o12986418_859368934192121_165619785_o12946987_859369664192048_368080465_o 12948506_859369814192033_2029113450_o 12948560_859369980858683_73216673_o 12952815_859369857525362_197373278_o 12952821_859369914192023_1191254354_o 12952881_859370297525318_1042978590_o 12953233_859369050858776_1425584914_o 12953321_859369197525428_72686396_o 12980681_859368897525458_1461786458_o12962416_859370217525326_1709217861_o  12970258_859369277525420_1622439003_o  12970527_859369534192061_793686449_o 12970662_859370327525315_1237540798_o   12980734_859369450858736_1036109302_o  12980681_859368897525458_1461786458_o (1)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 2015ம் ஆண்டுக்கான வெற்றியாளர் கௌரவிப்பு!!

 
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலத்தில் 2015ம் ஆண்டு தரம் 05, க.பொ.த (சா.தர), க.பொ.த (உ.தர) பரீட்சையில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கான பாராட்டு விழா இன்று (08.04.2016) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அதிபர் செ.தர்மரட்ணம் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக இ.இரவீந்திரன் செயலாளர் (கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடமாகாணம்) மற்றும் சிறப்பு விருந்தினராக திருமதி.எஸ்.அன்ரன் சோமராஜா (வலயக்கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு), கௌரவ விருந்தினர்களாக திரு.க.அ.சிவனருள்ராஜா (உதவிக்கல்விப் பணிப்பாளர் – விஞ்ஞானம்-மாகாணக் கல்வித்திணைக்களம், வடக்கு மாகாணம்), து.லெனின் அறிவழகன் (உதவிக் கல்விப் பணிப்பாளர் – தொழிநுட்பக்கல்வி மாகாணக் கல்வித்திணைக்களம், வடக்கு மாகாணம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

பாம்புகளுடன் நடனமாடிய பாடகி ராஜநாகம் கடித்து உயிரிழந்த பரிதாபம்!!(காணொளி)

Dead

இந்தோனேசியா நாட்டில் பாம்புகளுடன் மேடையில் பாட்டு பாடியபடி, ஆடிய பெண்ணை ராஜநாகம் கடித்ததில் அவர் மேடையிலேயே உயிரிழந்தார்.

இந்தோனேசியாவிலுள்ள கரவாங் என்ற நகரில் இர்மா ப்ளூ என்ற பிரபல பாடகி, சில தினங்களுக்கு முன்னர் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அவர் கச்சேரிகளில், சிறிய பாம்புகள் முதல் மலைப்பாம்புகளை வரை தனது உடலில் சுற்றிக்கொண்டு நடனமாடியபடி பாடல்களை பாடுவது வழக்கம். இந்நிலையில், மலைப்பாம்பிற்குப் பதிலாக ராஜநாகத்தை பயன்படுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதை ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்ட ராஜநாகத்திற்கு பல் நீக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜநாகத்துடன் மேடையில் பாடிய அவர், கவனக்குறைவால் பாம்பின் வாலை மிதித்துள்ளார்,

இதனால், கோபமடைந்த அந்த ராஜநாகம் பாடகரின் தொடையில் கடித்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். அதனால், அதிச்சியடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததுடன், சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒன்றாக கோலி-அனுஷ்கா!!

Kholi

கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட காதல் ஜோடியான விராட் கோலி -அனுஷ்கா சர்மா தற்போது மீண்டும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்துவிட்டனர்.

பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இருப்பினும் அனுஷ்கா சர்மா கிரிக்கெட் போட்டியில் கோலியின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்.

அதேபோன்று கோலியும் உடைந்த போன காதலை மீண்டும் ஒட்ட வைக்க அனுஷ்காவின் சகோதரர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் அனுஷ்கா, கோலியுடன் சேரும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டார்.

இருப்பினும் காதலி அனுஷ்கா சர்மாவை சமூகவலைதளங்களில் கேலி செய்தவர்களை விளாசித் தள்ளினார் விராட் கோலி.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா- விராட் கோலி மீண்டும் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அனுஷ்கா சர்மா கறுப்பு நிற உடையும், கோலி சாதாரண ஒரு டிசேர்ட் அணிந்த படி இரவு ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தற்போது கோலி ஐபிஎல் போட்டியிலும், அனுஷ்கா சர்மா சுல்தான் படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில சூப்பர் டிப்ஸ்!!

bigstock_Slim_Waist_8223730

அளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக பணி புரிதல் போன்றவற்றினால் உண்டாகும் தொப்பையினை குறைப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் அவற்றில் அதிகளவானவை கைகொடுப்பதில்லை.இதனால் தொப்பை ஏற்படுவதை முன்னரே தடுத்து அழகிய தட்டையான வயிற்றை பெறுவதற்கு பின்வரும் நடைமுறைகளை கையாளலாம்.

உரிய நேரங்களில் உணவை உட்கொள்ளல்

இன்று அனேகமானவர்கள் வேலைப் பழு காரணமாக நீண்ட நேரம் உணவினை உள்ளெடுக்காலம் இருக்கின்றனர். இவ்வாறு இருப்பதனால் உடலில் இன்சுலின் அளவு குறைகின்றது.

இன்சுலின் ஆனது வயிற்றுப் பகுதியில் கொழுப்பின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும், சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

எனவே உரிய நேரங்களில் உணவினை உள்ளெடுப்பதனால் இப்பிரச்சினையை தவிர்க்க முடியும்.

உணவை அரைத்தல்

உள்ளெடுக்கப்படும் உணவானது குறைந்தது 30 தடவைகள் ஆவது அரைக்கப்பட வேண்டும். இவ்வாறு அரைக்கப்படுவதனால் உணவுச் சமிபாடு இலகுவாக்கப்படுவதுடன், விரைவாக இடம்பெறவும் உதவுகின்றது.

மாறாக அரைக்காது உள்ளெடுக்கப்படும்போது வயிற்றில் அதிக நேரம் தங்கி பருமனை அதிகரிக்கின்றது.

உணவு மற்றும் இதயம்

சுத்தமான உணவு வகைகளை உள்ளெப்பதுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்ளல். உதாரணமாக ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றன.

உப்பின் அளவு

உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவினை கண்காணித்தல். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் போன்றவற்றில் அதிகளவில் உப்பு இருப்பதால் அவற்றினை அளவாக உட்கொள்ள வேண்டும்.

குத்தும் பயிற்சி

அன்றாட பயிற்சியில் குத்துச் சண்டையில் ஈடுபடுவது போன்ற பயிற்சியினை சேர்த்துக்கொள்வதன் மூலம் கொழுப்பு எரிக்கப்படுகின்றது.

நீர்

நாள் ஒன்றிற்கு 7 தொடக்கம் 8 கிளாஸ் வரை நீர் அருந்துதல் வேண்டும். தவிர இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வருதல் வேண்டும்.

 

பிரபல நடிகையின் ஆபாச படங்களை வெளியிட்ட ஹிரித்திக் ரோஷன்- அதிர்ச்சி தகவல்!!

4-hrithik-roshan-birthday-100114

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன். க்ரிஷ், க்ரிஷ்-2, தூம்-2 படங்களின் மூலம் தென்னிந்தியா ரசிகர்களையும் கவர்ந்தவர்.இந்நிலையில் இவருக்கு நடிகை கங்கனா ரனாவத்திற்கும் காதல் இருந்து தற்போது பிரிந்துவிட்டது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் கங்கனா தன் சார்பில் ஒரு புகார் கொடுத்துள்ளார். இதில் ஹிரித்திக் என் தனிப்பட்ட புகைப்படங்களை தனக்கு மெயில் அனுப்பியதாக கூறியுள்ளார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஹிரித்திக், அது நான் இல்லை என் பெயரில் இருக்கும் போலி கணக்கு என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.