பாலாவை ஷூ துடைக்கச் சொன்ன பாரதிராஜாவுக்கு பாலா கடும் எச்சரிக்கை!!!

Bala

பாரதிராஜாவுக்கும், பாலாவுக்குமான குற்றப்பரம்பரை பட விவகாரம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று ஏழு மணிக்கு சென்னை ப்ரசாத் லேபில், பத்திரிகையாளர்களை சந்தித்த பாலா, பாரதிராஜா மற்றும் ரத்னகுமாருக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார். அவர் பின்வருமாறு பேசினார்..

“இந்த விஷயத்தில் நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். கூட்டாஞ்சோறு என்று வேல ராமமூர்த்தி எழுதிய கதை, அடுத்த பதிப்பில் குற்றப்பரம்பரை என்று வெளியானது. அந்தக் கதையின் ஒரு விஷயத்தை நான் திரைக்கதையாக்கி படமாக எடுக்கப் போகிறேன். ஆனால், பாரதிராஜா, ரத்னகுமார் கூட்டணி எடுப்பது நடந்த வரலாறு.

நீங்கள் வரலாற்றை எடுக்கிறீர்கள். நான் கதையை படமாக எடுக்கிறேன். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை யார் வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம். அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். நான் செய்வது வேறு. கதையைப் படமாக்குவது.

ஏற்கனவே இதுசம்பந்தமாக பாரதிராஜா என்னிடம் பேசியபோதே ‘நான் குற்றப்பரம்பரை வரலாற்றை படமாக எடுக்கவில்லை’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகும் பாரதிராஜா ‘என் எச்சிலை பாலா தின்னமாட்டான் என்று நினைக்கிறேன்’ என்று பேட்டி கொடுத்தார்.

போனவாரம் தனஞ்செயன் என்னை அழைத்து, ‘குற்றப்பரம்பரை படத்திற்கு பாரதிராஜா பூஜை போடுகிறார்’ என்று சொன்னபோதுகூட, ‘என்னை அழைத்தால் நானும் பூஜைக்கு நிச்சயம் வருவேன்’ என்றுதான் தனஞ்செயனிடம் சொன்னேன்.

அதை தனஞ்செயனும் பாரதிராஜாவிடன் சொல்லியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா ‘அப்படியா சொன்னான்? எனக்கு ஷாக்கா இருக்கே. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. கூப்டலாமா வேணாமா’ன்னு யோசிக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பிறகு பாரதிராஜா, தனஞ்செயனிடம் ‘பாலா அங்க வந்தா யாராவது ஏதாவது பேசி, சீன் க்ரியேட் ஆகிடும். அதுனால கூப்பிடவேண்டாம்’ என்றிருக்கிறார். ஆனால் ரத்னகுமாரோ, ‘பாலா ஷூட்டிங்குக்கு வரட்டும். வந்து ஷூ தொடைக்கட்டும்’ என்றும், ‘பாலா ஒரு கதைத் திருடன், பாலாவுக்கு ‘கூறு’ கிடையாது’ என்றெல்லாமும் பேசுகிறார்.

ரத்னகுமார் தொடர்ந்து இதுபோல என்னை அவதூறாகப் பேசுவதை, பாரதிராஜா கண்டும் காணாமல் இருப்பது அவர் இவற்றை அனுமதிப்பது போலவே தெரிகிறது. இன்றைக்கு பாரதிராஜாவை அழைத்தேன். இரண்டு முறை எடுக்காதவர், மூன்றாவது முறை, எடுக்கிறார். ‘மூணாவது தடவையா கூப்டறான்யா’ என்கிற அவர் குரல் மட்டுமே எனக்குக் கேட்டது. கால் கட் செய்கிறார்.

இதற்கு மேலும் நான் அமைதியாக இருந்தால், மழுமட்டையாக ஆகிவிடுவேன் என்பதால்தான் இந்த ப்ரஸ் மீட்.

இரண்டு விஷயங்கள் சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் எடுப்பது வேறு. நான் எடுப்பது வேறு. என் படத்தின் பெயர் குற்றப்பரம்பரை அல்ல. வேறு பெயர் வைக்கப் போகிறோம்.

இரண்டாவது, இந்த ப்ரஸ்மீட்டின் மூலம், பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் உங்கள் படத்தை எடுங்கள். நான் என் படத்தை எடுக்கிறேன். இதற்கிடையில் என்னைக் காயப்படுத்துவது, உங்களுக்கு நல்லதல்ல. மேற்கொண்டு எதுவும் என்னைப் பற்றியோ, என் படத்தைப் பற்றியோ பேசாதீர்கள்” என்று தெரிவித்தார்.

ஒரே நாளில் 175 தொழிலாளர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

ISIS

சிரியாவில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 தொழிலாளிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாகவும், அவர்களில் 175 பேரை ஒரே நாளில் கொன்று குவித்துள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சிரியாவின் தலைநகரமான டமாகஸில் இருந்து சுமார் 50 கி.மீட்டர் தொலைவில் பாடியாஹ் என்ற சீமேந்து தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுமார் 300 தொழிலாளிகளை, சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சிரியா இராணுவம் மூலம் பெறப்பட்ட அதிர்ச்சி தகவல்களை சிரியா செய்தி ஏஜென்சியான சானா நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், கடத்தப்பட்ட 300 தொழிலாளிகளில் 175 பேரை ஒரே நாளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை சிரியா தொழிற்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், திங்கட்கிழமை முதல், கடத்தப்பட்ட தொழிலாளிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளது.

கணவரை நாய்க்கு உணவாக்கிய கொடூர மனைவி!!

32D8203B00000578-0-image-a-34_1459797213298

ஸ்பெயின் நாட்டில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிஸார் கைது செய்தனர்.ஸ்பெயினில் கலா மில்லொர் கடற்கரை ரிசார்ட் பகுதியில் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவந்த ஹான்ஸ் ஹென்கெல்ஸ் மற்றும் ஸ்வெட்லனா பட்டுகோவா தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஸ்வெட்லனாவுக்கு கொகைன் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதால் அவர் மனதால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அளவுக்கதிமான போதையில் தனது கணவர் ஹான்ஸை ஸ்வெட்லனா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.பின்னர், அவரது கையை வெட்டி தனது நாய்க்கு உணவாக அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் உடனடியாக ஸ்வெட்லனாவை கைது செய்தனர். தற்போது அவர் மனநில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் அழகு குறிப்புகள்!!

f

கோடைகாலத்தில் சரும நிறத்தை பாதுகாக்க பழங்களை ஃபேஸ் பேக்குகளாக பயன்படுத்தி கருமையை போக்கலாம்.சரும செல்களை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள, கோடையில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுவது நல்லது.

* கோடையில் மாம்பழம் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாம்பழத்தின் கூழ் 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கோல்ட் க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் சேர்த்து நன்கு கலந்து, முகம், கை, கால்களுக்கு தடவி உலர்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் கோடையில் சருமத்தின் நீர்ச்சத்தை தக்க வைக்கலாம்.

* கோடையில் தர்பூசணியை வாங்கிச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். உங்கள் வீட்டில் தர்பூசணி இருந்தால், 1/2 கப் தர்பூசணி கூழ் உடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தினமும் தடவி வந்தால், வெயிலால் ஏற்பட்ட கருமையைப் போக்கலாம்.

* கிவி பழத்தில் விற்றமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தின் தரத்தை மேம்படுத்தும். ஒரு பௌலில் 1/2 கப் கிவி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பால், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக் மென்மையான சருமத்தினருக்கு ஏற்றது.

* தயிர் சரும நிறத்தை அதிகரிக்க உதவும். அத்தகைய தயிரை கோடையில் வாரத்திற்கு இரண்டு முறை கை, கால், முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவினால், சருமத்துளைகள் சுத்தமாகி, சரும பொலிவு மேம்படும்.

* வெள்ளரிக்காயும் கோடையில் அதிகம் கிடைக்கும். அத்தகைய வெள்ளரிக்காயை ஒன்று வாங்கி அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த பால் கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சிப் பெறும்.

* ஒரு அன்னாசி பழத் துண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும் ரோஸ் வாட்டர் கொண்டு துடைத்து, பின் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும எரிச்சல் தடுக்கப்படும்.

 

வவுனியாவில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களும் திறந்திருக்கும்!!

Saloon

தமிழ்- சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு வவுனியா சிகை அலங்கரிப்பு நிலையங்கள் வாடிக்கையாளர் நன்மை கருதி விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியாவில் உள்ள அனைத்து சிகையலங்கார நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களும் திறந்திருக்கும் என வவுனியா சிகையலங்கார சங்கம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் விழிப்புணர்வுக் கண்காட்சி!!

 
வவுனியா நகரசபை மைதானத்தில் மாபெரும் விழிப்புணர்வுக் காண்காட்சி நடைபெற்று வருகின்றது.

வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (08.04.2016) ஆரம்பான விழிப்புணர்வுக் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இக் காண்காட்சியினை பொதுமக்கள் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 வரையும் பார்வையிடலாம்.

இக் காண்காட்சியில் வழுவிழந்தோரின் கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.

20160409_112751 20160409_112812 20160409_112815 20160409_112827 20160409_11285720160409_112859 20160409_112916 20160409_112923 20160409_112949 20160409_112954 20160409_112956 20160409_113010 20160409_113042 20160409_113045 20160409_113123 20160409_113126 20160409_113736

பேஸ்புக் அறிமுகம் செய்த புத்தம் புதிய வசதி!!

1 (70)

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆரம்ப காலங்களில் நண்பர்களிடையே புகைப்படங்களை பகிரும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.அதன் பின்னர் வீடியோக்களை பகிரக்கூடிய வசதியினையும் அளித்திருந்தது. இவ்வாறான நிலையில் தற்போது மற்றுமொரு புத்தம் புதிய வசதியினை வழங்கி தனது பயனர்களை கௌரவித்துள்ளது.

அதாவது இதுவரை காலமும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை மட்டுமே பகிரக்கூடியதாக இருந்த நிலையில் தற்போது நேரடி ஒளிபரப்புக்களையும் பகிரக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.Going Live எனும் இப்புதிய வசதியின் ஊடாக பேஸ்புக் குழுக்கள், தெரிவு செய்யப்பட்ட தனிப்பட்ட நபர்கள் ஆகியோருக்கிடையில் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

தற்போது iOS சாதனங்களில் பேஸ்புக் அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்வதன் மூலம் இவ் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அன்ரோயிட் சாதனங்களில் இவ் வசதி அடுத்துவரும் வாரங்களில் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எந்த விழாக்களிலும் கலந்துக்கொள்ளாததற்கு அஜித் சொன்ன அதிரடி பதில் இது தான்

ajith-kumar-so-sorry

அஜித் எப்போதும் தன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொள்ள மாட்டார். ஆனாலும் இவர் படங்களின் வசூலுக்கு எந்த பாதிப்பு வரப்போவதில்லை.இதை தெளிவாக தெரிந்துக்கொண்டு தான் இப்படியெல்லாம் செய்து வருகிறார் என பலரும் கூறுகின்றனர்.

ஆனால், அஜித் சில வருடங்களுக்கு முன் நீங்கள் ஏன் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்வது இல்லை என கேட்க, ‘நாம் வளரும் போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும், வளர்ந்த பிறகு வாயை மூடிக்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார். அவர் என்ன நினைத்து சொன்னாரோ, அதில் உள்ள ஆழமான தத்துவம் தற்போது பலருக்கும் புரிந்திருக்கும்.

 

திடீரென்று பல்டி அடித்த நடிகை அசின்!!

1 (32)

அண்மையில் நடந்த பிரபலங்களின் திருமணங்களில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது நடிகை அசின், ராகுல் ஷர்மா திருமணம்.சில நாட்களாக அசின் மீண்டும் நடிக்க வருகிறார் என்று செய்திகள் வந்தபோது, என்னை பற்றி தவறான செய்திகள் வருகிறது. திருமணத்துக்கு முன்பே நடிக்க வேண்டிய படங்களை நடித்து கொடுத்துவிட்டேன்.இனி சினிமாவிலோ, விளம்பரத்திலோ நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் திடிரென்று, நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை, தற்போது நான் என் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருவதால் தற்போதைக்கு நடிக்கவில்லை என்றுதான் கூறியிருந்தேன் என்று கூறியுள்ளார்.

 

விசேட பஸ் சேவைகள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்கலாம்!!

1 (68)

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் தேவை கருதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட பஸ் சேவை தொடர்பிலான முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களை போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ் சேவைகளில் எவ்வித பிரச்சினைகள் காணப்படுமாயின் 1955, 011 1333 222 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தமது முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.

 

உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!!

1 (4)

கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

 

வரைகோலால் சிறுமியின் முகத்தை பதம் பார்த்த ஆசிரியை!1

32F18B1100000578-0-image-a-17_1460048186272

வியட்நாம் நாட்டில் சிறுமி ஒருவர் வீட்டுப்பாடத்தில் எழுத்துப்பிழை விட்ட காரணத்தால், அச்சிறுமியை ஆசிரியை மிகமோசமாக அடித்துள்ளார்.வியட்நாமின் Bat Xat மாவட்டத்தில் உள்ள Phin Ngan Elementary பாடசாலையில் படித்து வந்த 6 வயது சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடத்தில் எழுத்துப்பிழை விட்டுள்ளார்.

இதனால் கோபம் கொண்ட ஆசிரியை Tran Thi Thu Tra, வரைகோலினை வைத்து சிறுமியின் முகத்தில் அடித்துள்ளார்.இதனால் சிறுமியின் கண்ணின் கீழ்பகுதியில் ரத்தம் கட்டி, வீங்கியுள்ளது, மிகுந்த வலியால் அவதியுற்ற சிறுமியை அவரது இரண்டு தோழிகள் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துசென்றுள்ளனர்.

மகளின் நிலமையை பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளித்துள்ளார், மேலும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததையடுத்து, பாடசாலைகளில் இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு இடம் கிடையாது எனக்கூறிய நிர்வாகம், ஆசிரியையை தற்காலிக நீக்கம் செய்துள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைக்கு பின்னர், ஆசிரியையை பணி நீக்கம் செய்தாலும் செய்வோம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

வவுனியாவில் பாரிய வாகன நெரிசல்!!(படங்கள்)

 
வவுனியா நகரை அண்மித்த பகுதிகளில் இன்று(09.04.2016) பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது.

வவுனியா நகரில் வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதால் இன்று வவுனியா நகரின் சில பாதைகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

20160409_092616 20160409_092619 20160409_092623 20160409_092627 20160409_092634

வவுனியா நெடுங்கேணி ஒலுமடு பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர் உதவி!!

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு உதவி வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு நிழப்பிரதி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

IMG_1763IMG_1760

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!

1 (72)

மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.77 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதத்துடன் சிறிய லொறியொன்று மோதுண்டமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.புகையிரத கடவை மூடப்பட்டிருந்த நிலையயிலும் லொறியை உட்செலுத்த முயற்சித்தமையே குறித்த விபத்திற்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், காயமடைந்த வாயில் காப்பாளர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 647 பேர் உயிரிழப்பு!!

Accident

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 647 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் , ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200 இற்கும் அதிக விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சபைத்தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் சுமார் 610 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிக மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் டொக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.