விஜயகாந்தின் கட்சி இரண்டாக உடைந்தது : மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சி!!

MTMK

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் எம்.எல்.ஏ இன்று மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சந்திரகுமார் தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சேலம், ஈரோடு, கும்மிடிபூண்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேமுதிகவினர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்தகுமார் மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஒரு இயக்கமாகவே செயல்படும் என்றும் அரசியல் கட்சியாக செயல்படாது. இந்த இயக்கத்தின் தமிழகம் முழுவதும், தேமுதிகவால் அதிருப்தி அடைந்து மனகுமுறலில் உள்ள உறுப்பினர்கள், நிர்வாகிகளை அரவணைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என கூறியுள்ளார்.

பிரேமலதா பற்றி குறிப்பிட்ட அவர், அண்ணியாக இருந்த பிரேமலதா, சித்தியாக மாறியதால் தற்போது மக்கள் தேமுதிக தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அ.தி.மு.க. ஆட்சியை அகற்றவே மக்கள் தேமுதிக அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த்தை என்றும் குறை சொல்ல மாட்டோம்.

தே.மு.தி.க.வை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. வைகோவைப் போன்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.திக. இணைந்தது வருத்தமளிக்கிறது என சந்திரகுமார் பேட்டியில் கூறியுள்ளார்.

விரைவில் இலங்கையில் மின்சார ரயில்!!

Train

மின்சாரத்தின் உதவியால் பயணிக்கக் கூடிய ரயில் சேவையை இலங்கையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாணந்துறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை : மூவர் கைது!!

Pro1

வெள்ளவத்தைப் பிரதேசத்தில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த மூன்று பெண்களையும் கைது செய்திருப்பதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22,24 மற்றும் 29 வயதுடைய பெண்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தப் பெண்கள் சிலாபம், அக்மீமன மற்றும் பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் இரண்டு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூனைக்குட்டி புலிக்குட்டியாக மாறிய வினோதம்!!

Cat

பூனைக்குட்டி ஒன்று புலிக்குட்டியாக மாறிய சம்பவம் ஒன்று ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் அநாதரவான நிலையில் காணப்பட்ட பூனைக்குட்டியொன்றை பெண்ணொருவர் தனது இல்லத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பிறகு பூனையின் செயற்பாடுகளை நன்கு அவதானித்த பின்னர் அது புலிக்குட்டி என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஹட்டன் பொலிஸாருக்கு இந்த விடயம் தொடர்பாக அறிவித்ததுடன், குறித்த புலிக்குட்டியை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முதல் வெற்றியை ருசித்த தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ்!!

IPL

மும்பை இண்டியன்ஸ் அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

9வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவில் போட்டிகள் நேற்று தொடங்கியது. மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும்– புதிய அணியான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்ஸும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். மும்பை அணி இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது.

பின்னர் சிம்மன்ஸ் 3.5 ஓவரில் 29 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 7 ஓட்டங்களுடனும் சிம்மன்ஸ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. பாண்டியா 9 ஓட்டங்களுடனும், பட்லர் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல், பொல்லார்டு ஒரு ஓட்டத்துடனும், கோபால் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

68 ஓட்டங்களுக்குள் மும்பை அணி 7 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது. கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராய்டு 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதிவரை நின்று ஹர்பஜன் சிங் போராடினார். அவர் 30 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்தார். அதனால் மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 121 ஓட்டங்கள் எடுத்தது. புனே அணி தரப்பில் மார்ஸ், இசாந்த சர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் 122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் புனே அணி களமிறங்கியது. ரகானேவும், டு பிளிஸ்சிஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களை எடுத்தது. டு பிளிஸ்சிஸ் 34 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானேவுடன் பீட்டர்சன் இணைந்தார். புனே அணி 14.4-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 42 பந்துகளில் 66 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கடையில் இறங்கி 2 சிக்ஸர்களை விளாசிய பீட்டர்சன் 14 பந்துகளில் 21 ஓட்டங்களை எடுத்தார்.

சென்னை அணியை விட்டு முதல் முதலாக தற்போதையை புனே அணியில் தோனி களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். நாளையை போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

மோடியின் இதயத்தை உலுக்கிய சம்பவம்!!

Modi

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 86 ஆக அதிகரித்துள்ளது. 350 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கேரளாவின் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து சம்பவம் இதயத்தை உலுக்கிவிட்டதாகவும் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து நேரில் அறிய, பிரதமர் மோடி கேரளா வருகிறார் என்று தகவல். முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளார் மோடி.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இளைஞர் கைது!!

arrest

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சுற்றுலா பயணியாக சென்னை வந்த இலங்கையை சேர்ந்த கோபிநாத் (35) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்தநிலையில் அவர் கொண்டு வந்த பையில் தலா ஒரு கிலோ கொண்ட 5 தேயிலை பாக்கெட்டுகளையும் பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 13 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதையடுத்து அதிகாரிகள், தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். கோபிநாத்தின் கடவுச்சீட்டை ஆய்வு செய்தபோது, அவர் பலமுறை இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்து சென்றது தெரிந்தது.

இதனால், அவர் இதுபோன்று பலமுறை தங்கத்தை கடத்தி வந்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், தீவிரமாக விசாரிக்கின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!!

shooting

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் சாரதி மீதே இனந்தெரியாத சிலரால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் பலியானவர் எம்பிலிபிடிய – மோதரவான பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்த மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியதால் வந்த வினை : மின்னல் தாக்கி இளைஞர் பலி!!

Thunder

குருவிட – படதொட பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் படதொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

கேரளாவில் ஆலயத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் : 100ற்கும் அதிகமானோர் பலி!!(வீடியோ)

Kerala

இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு 350 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் பராவூர் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 3 மணியளவில் 10,000 முதல் 15,000 பேர் வரையில் கலந்து கொண்ட மதப் பண்டிகை ஒன்றின் போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காயமடைந்தவர்கள் திருவாணந்தபுரத்திலுள்ள அரசமருத்துவக் கல்லூரியில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் உயிரிழந்த மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவிப்பதோடு காயமடைந்தோருக்காக பிரார்த்திப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புரிந்துணர்வு..

12980392_1062331873808396_168053481_n

வான், கடலைப் புரிந்ததால் மழை நீரானது
மண், வித்தை புரிந்ததால் விளைச்சலானது

கதிரவன், ஒளியைப் புரிந்ததால் பசுமையானது
இருள், நிலவைப் புரிந்ததால் பௌர்ணமியானது

நான், உன்னைப் புரிந்ததால் உனக்கேயானேன்
நீ, என்னைப் புரிந்தால் நாமாய் ஆனோம்

உண்மை, வாய்மை புரிந்ததால் சத்தியமானது
நியாயம், நேர்மை புரிந்ததால் நீதியுமானது

கடவுள், நம்பிக்கை புரிந்ததால் சமயமானது
சாத்திரங்கள், பொய்கள் புரிந்ததால் சாதியானது

அரசன், நல்லாட்சி புரிந்ததால் சமாதானமானது
மக்கள் உழைப்பைப் புரிந்ததால் வளமாயானது

வாழ்வு நம்பிக்கை புரிந்ததால் வெற்றியுமானது
கோபம் பொறுமை புரிந்ததால் நிதானமானது

அழகு அன்பைப் புரிந்ததால் பெருமையானது
அறிவு பணிவைப் புரிந்ததால் பண்பாயானது

காந்தி அகிம்சை புரிந்ததால் சுசுதந்திரமது
திரேசா கருணை புரிந்ததால் அன்னையானார்

கணவன் மனைவி புரிந்ததால் குடும்பமானது
நண்பர்கள் நட்பைப் புரிந்ததால் முகநூல் வளர்ந்தது

இனிய புத்தாண்டில் நலமாய் புரிந்து
மகிழ்வாய் வாழ இறை ஆசிகள்.

-குமுதினி ரமணன்-
ஜேர்மனி.

வவுனியா ஓமந்தை பொற்கோவிலின் கும்பாபிசேக தினமும் மணவாளகோலமும்!!(படங்கள்)

வவுனியா ஓமந்தைஅரசர் பதி  வண்ணாங்குளம் ஸ்ரீ  கண்ணகை அம்மன்ஆலயத்தில்09.04.2016  இன்று இடம்பெற்ற  கும்பாபிசேக தினமும் மணவாளக்கோலவிழாவும் இடம்பெற்றன .
வவுனியாவில் பொற்கோவில் என அழைக்கப்படும் ஓமந்தை கண்ணகி அம்ம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற  கும்பாபிசேக தினநிகழ்வில் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் கீழ் இயங்கும் அருளக  மாணவிகளின் நடன  நிகழ்வுகளும் இடம்பெற்றன .
12439377_996388910447972_5708535087313676788_n 12439377_996388910447972_5708535087313676788_n 12523843_996388600448003_4363319743933695753_n 12924377_996388530448010_2874247220121607668_n 12924412_996388763781320_8023219817851886095_n 12928356_995846823835514_7576356205566716213_n 12932712_996387870448076_7957833449607821150_n 12932725_996387993781397_276045489147864220_n 12933019_996387940448069_3124899904098673533_n 12936595_996388097114720_2716470892942920513_n 12936703_996388167114713_763581778264094513_n 12938193_995847023835494_4603629151446963111_n 12974288_996389007114629_3405407269614088614_n 12985463_996388477114682_6864440341233715717_n 12985621_996388407114689_4131614091258616223_n 12986993_996389057114624_7037792423321653714_n 12987126_996388640447999_3307413445207598767_n 12993407_996387793781417_2980740470481767559_n 12993615_996387817114748_892661679244939885_n 12994518_996389103781286_4716910009474374646_n

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!(படங்கள்)2ம் இணைப்பு

image-6b6c5d629f9039ca9d55195cbd1cb54ad582056736e5a1be39fd4a7ced2b065d-V - Copyவவு

னியா மகாறம்பைக்குளத்தில் இன்று(09.04.2016) மாலை 4.50 மணியளவில் தூக்கில் தூங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் வீரபத்திரர் கோவில் வீதியை சேர்ந்த சின்னத்துரை தயாளன் என்ற 43 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேதே பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

image-6b6c5d629f9039ca9d55195cbd1cb54ad582056736e5a1be39fd4a7ced2b065d-V image-b42a70a688f324414dd8e95289995678de025e523099449a5ec7387299d6654c-V image-f908b1b123a6b96ca71d9163dac4adf94a475391dfd7e8d7931983a5967d2042-V

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

Hang

வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று(09.04.2016) மாலை 4.50 மணியளவில் தூக்கில் தூங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் வீரபத்திரர் கோவில் வீதியை சேர்ந்த சின்னத்துரை தயாளன் என்ற 43 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்

400 ஆண்டு தடையை மீறி சனி பகவான் கோவிலுக்குள் நுழைந்த பெண்கள்!!

Sani Pakavan

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டம் அருகே உள்ள சிங்கனாப்பூர் சனி பகவான் கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபட 400 ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. பூமாதா என்ற பெண்கள் அமைப்பினர் இதனை கண்டித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் கடந்த 1ம் திகதி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அந்த தீர்ப்பில், கோவிலுக்குள் சென்று வழிபடுவது பெண்களின் அடிப்படை உரிமை, பெண்கள் கோவிலுக்குள் செல்வதை யாராவது தடுத்தால், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோவிலின் நிர்வாக குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆலோசனையின் முடிவில் பெண்களை கோவில் கருவறைக்குள் அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பெண்கள் சனீஸ்வர பகவான் சிலை அமைந்துள்ள உட்பிரகாரத்திற்குள் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர்.

கணவர் மிக வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண்!!

health-graphics-20_1079924a

எகிப்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் அதிக வசீகரமாக இருப்பதாகக் காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இப் பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் ஒரு மருத்துவராவார். ஆனால், அண்மையில் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரி இப் பெண் நீதிமன்றத்தை நாடினார்.

தனது கணவர் மிக கம்பீரமானவராக, வசீகரமானவராக இருப்பதால் அவரை தான் நம்பவில்லை என அப் பெண் தெரிவித்துள்ளார். தனது கணவரை எந்நேரமும் வேறு பெண்கள் பார்ப்பதாகவும் வேறு பெண்களுடன் அவருக்குத் தொடர்புகள் இருக்கக்கூடும் என தான் அஞ்சுவதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.இதனால், தான் துயரமான ஒரு வாழ்க்கையே வாழ்வதாகக் கூறி, தனக்கு விவாகரத்து வழங்குமாறு அப் பெண் கோரியுள்ளார்.