மன்னிப்புக் கோரிய பேஸ்புக் நிறுவனம்!!

FB

சமூக வளைத்தளமான பேஸ்ப்புக் நிறுவனம் சர்வதேச ரீதியில் மன்னிப்புக் கோரியுள்ளது.

பேஸ்ப்புக் நிறுவனம் அறிமுகப்படுத்திய safety Check நேற்று சிலமணி நேரம் இயங்காமல் போனமைக்காகவவே குறித்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

குறிப்பாக திடீர் அசம்பாவிதங்கள் ஏற்படும் சந்தர்ப்பபத்தில் அப்பகுதியின் பேஸ்ப்புக் பாவனையாளர்களுக்கு safety Check Notifications அது தொடர்பான அறிவித்தல் விடுக்கும்.

இந்நிலையில், நேற்று பாக்கிஸ்தான்-தாகூர் வெடிப்பு சம்பவ நேரத்தில் அப்பகுதியின் பேஸ்ப்புக் பாவனையாளர்களுக்கு safety Check இயங்காமல் போயிருந்துள்ளது.

இதனால் பேஸ்புக் பாவனையாளர்களின் அதிர்ப்தியினை தொடர்ந்து பேஸ்ப்புக் நிறுவனமானது மன்னிப்புக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளுக்காக ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண்!!

Male

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நகரம் தென்வசிரீஸ்தான். ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள இப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் கோட்டையாக திகழ்கிறது.

உலக அளவில் மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. இங்கு பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது. கல்வி கற்கவோ, ஆடம்பர உடை அணியவோ அனுமதி இல்லை.

இவ்வளவு கட்டுப்பாடு மிக்க இப்பகுதியில் ஒரு பெண் ஆண் போன்று வேடம் அணிந்து வசித்தார். ஒரு விளையாட்டு வீராங்கனை ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்ற அவ்வாறு வாழ்ந்தார். அவரது பெயர் மரியா துர்பாக்கை.

இவர் 4 வயதிலேயே ஆண்கள் போன்று உடையணிந்து அப்பகுதியை வலம் வந்தார். அவருக்கு தந்தை பக்க பலமாக இருந்தார். மரியா முதலில் தனது பெயரை சென்ஜிஸ்கான் என மாற்றி கொண்டார். முதலில் பளு தூக்கும் வீரராக திகழ்ந்த அவர் பின்னர் ஸ்குவாஷ் விளையாட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்ட வீராங்கனையாக மாறினார்.

இந்நிலையில் தீவிர மன அழுத்தம் காரணமாக தான் பெண் என்ற உண்மையை வெளியுலகுக்கு வெளிப்படுத்தினார். இதனால் தனது எதிர்காலம் வீணாகப் போய் விடும் என கருதினார்.

எனினும் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தானின் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனையாக இருந்து வருகிறார். மேலும் உலக அளவில் சிறந்த வீராங்கனை பட்டியலில் 46வது இடத்தில் உள்ளார்.

இவர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் பாகிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் அடையும் துன்பங்கள் குறித்தும், தனது வாழ்க்கையின் இளமைப் பருவம் தொடர்பாகவும் கூறியுள்ளார்.

விமானத்தில் திடீர் புகை : 120 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்!!

Fli

ஐதராபாத்தில் இருந்து இன்று காலை மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் அதில் வந்த 120 பயணிகளும் அவசரவழி வாயிலாக வெளியேற்றப்பட்டனர்.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் இன்று காலை 7.20 மணியளவில் மும்பையில் தரையிறங்கியது. ஓடுபாதை வழியாக ஊர்ந்துச் சென்று பயணிகளை இறக்கிவிடும் இடத்தை நோக்கி நகர்ந்தபோது, என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்ததை கண்டு பதற்றமடைந்த விமானி, வயர்லெஸ் மூலமாக இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தார்.

உடனடியாக, மீட்புப் படையினருடன் தீயணைப்பு வாகனங்கள் அந்த விமானத்தை நோக்கி விரைந்து வந்தன. விமானத்தில் இருந்த 120 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட ஆறு சிப்பந்திகள் அவசர ‘சூட்’ வழியாக கீழே இறக்கப்பட்டனர். பின்னர், விமானத்தினுள் சென்று பார்த்தபோது புகை அடங்கிப்போய் இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வவுனியாவில் சற்றுமுன் பஸ் விபத்து!!

 
வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகே சற்றுமுன் 3.00 மணியளவில் பஸ் – வான் விபத்து ஒன்று இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ் மீது கண்டி வீதியிலிருந்து பஸ் நிலையத்திற்கு செல்ல முற்பட்ட வான் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றது. இவ் விபத்தில் எவருக்கு உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை.

20160328_150707 20160328_150711 20160328_150720 20160328_150723

வவுனியாவில் வெப்பத்தைத் தனித்த மழை : மக்கள் மகிழ்ச்சி!!

 
வவுனியாவில் அண்மைக்காலமாக கடும் வெயிலினால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று (28.03.2016) பெரும் இடிச் சத்தங்களுடன் மழை பெய்தது. கடும் வெப்பத்தினால் சிரமப்பட்டு வந்த மக்கள் இம் மழையால் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் வழமைக்கு மாறாக கடும் வெயில் சுட்டெரித்ததுடன். இலங்கையில் அதிகளவான வெப்பநிலையும் வவுனியாவில் பதிவாகியிருந்தது.

இக் கொழுத்தும் வெயிலினால் வவுனியா மட்டுமன்றி முழு இலங்கையும் பாதிக்கப்பட்டதுடன் நேற்று யாழ் நகரில் வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

12884455_463539407172713_97671346_n 12895360_463539230506064_132994820_n 12899801_463539237172730_1321305139_n 12899976_463539217172732_215231265_n 12910126_463539327172721_1918275752_n 12910704_463539200506067_606411394_n 12919049_463539353839385_1443236710_n 12921063_463539303839390_883939729_n 12921077_463539220506065_1188657602_n

மரண அறிவித்தல் : திருமதி செல்வநாயகம் இராசமலர்!!

Selvanayakam Rasamalar

கணுக்கேணி மேற்கு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 15, பிரதான வீதி, கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வநாயகம் இராசமலர்(சின்னமணி) அவர்கள் 27.03.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காங்கேசு சின்னமா அவர்களின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம் (ஓய்வுபெற்ற CTB உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும், ஜெயபாமா, ஜெயவனிதா, இளங்கோ, சசிகரன், சஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா( மதியாமடு மகாவித்தியாலய அதிபர்), திருச்செல்வம், தர்சிகா, சுபாஜினி, ஸ்ரீதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், பாக்கியம், செல்லத்துரை, அரசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வரத்தினம், நடராசா, திரவியம், சொக்கலிங்கம், காலம்சென்ற பவுண்மலர், பொன்ராசா, காலஞ்சென்ற முத்துராசா, விஜயரட்னம், தேவன், சுவேந்திரராசா, ராணி, அற்புதம் ஆகியோரின் மைத்துனியும்,

சியாளினி, பிரவின்ராஜ், சிந்துஜா, நிலு, நிஷாந், அனுஷ்கா, சபியா, டிலக்ஷன், ஜனுஷ், ஜதுஷ், அக்ஸா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 29.03.2016 செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தட்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
0771529440

வவுனியா கலைஞர்களின் ‘எனக்குள் நீயடி பாடல்’!!

12920974_271670946498299_1179885101_n - Copy

திவ்யாவின் இயக்கத்தில் தசராவின் தயாரிப்பில் புதிதாக ஒரு காதல் பாடலொன்று வெளிவரவிருக்கிறது.

நந்தனின் வரிகளில் வி.ஜி.எஸ் இசையமைக்க ஜேம்ஸ் பாடலை பாடியுள்ளார். நடனமைப்புக்களை வினோத் மற்றும் படத்தொகுப்பினை சிந்தனசுவிமல் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.

இப்பாடலின் மூலம் வவுனியாவை சேர்ந்த ஸ்ரீ ஏ.ஜே மற்றும் கொழும்பைச்சேர்ந்த லுக்சி ஆகியோர் புதுமுக நடிகர்களாக ஈழத்து சினிமாவில் கால்தடம் பதிப்பது சிறப்பம்சமாகும். இந்த பாடலிற்கான போஸ்டர் நேற்றையதினம் வெளியிடப்பட்டது.

இப் பாடல் வெற்றிபெற வவுனியா நெற் வாசகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துகின்றோம்.

12920974_271670946498299_1179885101_n

வவுனியாவில் இலங்கை சாரணர் சங்கத் தலைவரின் அஞ்சலி நிகழ்வு!!

 
இலங்கை சாரணர் சங்கத்தின் முன்னாள் பிரதம ஆணையாளரும், ஆசிய பசுபிக் சாரண வலயத்தின் முகாமைத்துவ உப குழுவின் முன்னாள் பணிப்பாளரும், 2014-2016 ஆம் ஆண்டுக்கான சாரணர் சங்கத்தின் தலைவருமான கௌரவ C.பட்டுவன்கல அவர்கள் கடந்த 25.03.2016 அன்று கொழும்பில் காலமானார்.

இவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று கொழும்பில் சாரண மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தினால் கடந்த மூன்று தினங்கள் சாரண தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டு, மாவட்டங்கள் தோறும் சாரண கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வவுனியா திரி சாரணர், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அஞ்சலிக் கூட்டம் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் உதவி மாவட்ட ஆணையாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் கௌரவ மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் திரு.கு.கமலகுமார், பெண் சாரண தலைவி திருமதி மோ.சுதர்ஷினி, திரி சாரணர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமரர் c.பட்டுவன்கல அவர்கள் 1947 ஆம் ஆண்டு தனது 12ஆவது வயதில் சாரணர் அமைப்பில் இணைந்து கொண்டதுடன் தனது சாரணர் வாழ்கையில் கால் பத்தித்தவர், 1958 ஆம் ஆண்டு பெரதெனிய இலங்கை பல்கலைக்கழகத்தில் தனது இளமானிப்பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன். தொடர்ந்து கட்டுகஸ்தோட்ட ராகுல வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பின்னர் இலங்கை இறப்பர் கூட்டுறவு உற்பத்தி சபையின் பொது முகாமையாளராகவும் கடமையாற்றினார்.

பின்னர் 1989 -1994 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்ட சாரண ஆணையாளராகவும், 1994 ஆம் ஆண்டு மேல் மாகாண உதவி சாரண ஆணையாளராகவும், தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு பிரதி பிரதம ஆணையாளராகவும், தொடர்ந்து 2007-2012 வரையான காலப்பகுதியில் இலங்கை சாரணர் சங்கத்தின் 17 ஆவது பிரதம ஆணையாளராகவும் செயற்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் 7 மாடிகள் கொண்ட தலைமை காரியாலயத்தினை நிறுவுவதற்கு ஆரம்ப வழிகாட்டலையும் திட்டமிடலையும் தொடர்ந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து 2014-2016 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சாரணர் சங்க தலைவராக போட்டிகள் எதுவுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 9வது சாரணர் தேசிய ஜம்போறியிலும் தனது சாரண பணியினை செவ்வனே செய்து தனது 81 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

scout2 scout3 scout4 scout5 scout6 scout7 scout8 scout9 scout10 scout11

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு விஷேட தள்ளுபடி!!

saveelectricity

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விசேட சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, மின்சாரக் கட்டணத்தை, முதல் மாதக் கட்டணத்தை பார்க்கிலும், அடுத்த மாதம் 10 வீதம் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு விஷேட தள்ளுபடி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்றது. எனினும், இக்காலநிலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.

எனவே, மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலேயே இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையொன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

உயிரைப் பறிக்கும் உஷ்ணத்திற்கு இன்று முற்றுப்புள்ளி!!

Rain

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலாவது சபாரி பூங்கா!!!!

Park

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச்சபாரி பூங்காவில் சிங்கவலயம், உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இப்பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

Strike

ஐ.டி.பி.ஐ. வங்கியில் தனது பங்கை 80 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளதை கண்டித்து அந்த வங்கியின் ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மும்பையில் ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க நிர்வாகி கூறுகையில், ‘மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் (கர்நாடகம் தவிர்த்து) இன்று முதல் 4 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதுதொடர்பாக 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தபோராட்டம் நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வேலைநிறுத்தத்தை கைவிட வலியுறுத்தி தொடர்ந்து பேசி வருகிறோம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில வங்கி கிளைகளை திறப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்று கூறினார்.

கடலில் மூழ்கி சீனப் பிரஜை பரிதாபமாகப் பலி!!

Sea

வெலிகம – மிரிஸ்ஸ உடுபில கடற் பகுதியில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட அவர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சீனப் பிரஜை பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் தாக்குதலில் 60 பேர் பலி!!

Pak

பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவுக்கு அருகில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, குறித்த பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தனர் எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தாலிபான்களின் ஒரு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

லாகூர் நகரிலுள்ள கிறிஸ்தவர்களை தெரிந்தே தாம் திட்டமிட்டு இலக்குவைத்து தாக்கியதாகவும் ஜமாத்-உல்-அஹ்ரார் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள்!!(படங்கள்)

 
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.

மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்து பின்னர் ஞாயிறு அன்று உயிர்தெழுந்தார்.

இதனை நினைவுகூரும் முகமாக உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று (27.03.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 1929838_952274758195947_2697697397986175655_n 9918839_952274694862620_326635961127678120_n 99257_951070078316415_7318808309093436690_n12072782_951618144928275_942135467431853031_n 12321181_952274638195959_8339282185324585556_n 12472306_952274731529283_2911162214119596556_n 12472419_951071854982904_1722187779764258057_n 12548896_951618131594943_6831439506310093875_n 12799054_951618158261607_8273883376955084240_n 12802717_951618168261606_7055266028413445393_n 12909504_951071868316236_6049954832696939670_o 12919814_952274661529290_8117369283365475672_n 12920335_952274754862614_5582085450514408314_n

இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம்?

India

இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம், இதை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தவுசீப் அகமது கூறியுள்ளார்.

பெங்களூரில் நடந்த டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா- வங்கதேச அணிகள் மோதியது. இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் வங்கதேச வீரர்கள் 3 பேர் வரிசையாக ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 1 ஓட்டத்தால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவும், இதை சர்வதேச கிரிக்கெட் சபை விசாரிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் வீரர் தவுசீப் அகமது கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வங்கதேச அணி நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.

அந்த போட்டியின் கடைசி நேரத்தில் அனுபவ வீரர்களே களத்தில் இருந்தனர். போட்டியை சமன் செய்து விட்டு பெரிய ஷொட்டுகளை அவர்கள் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் ஏன் அப்படி செய்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தப் போட்டி பற்றி என்ன கூறுவது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட் சபை இப்போட்டி குறித்து விசாரணை நடத்துவதில் தவறு இல்லை என்று கூறியுள்ளார்.