உலகக் கிண்ண டி20 பெண்களுக்கான போட்டியில் நேற்று தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் தலைவர் ஜெயங்கானி 52 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். தென்னாபிரிக்கா தரப்பில் காப் மற்றும் லூஸ் இரு வீராங்கனைகளும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீராங்கனைகளான நியேகெர்க் 24 ஓட்டங்களும், செட்டி 26 ஓட்டங்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த இலங்கை அணி வீராங்கனை ஜெயங்கானி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இதனிடையே, ஆண்கள் பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் இலங்கை அணி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழ்வர் இந்தியாவின் ஹைதராபாத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது, இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், சந்தேகநபர்கள் வசமிருந்து 11 இலட்சத்து 12,500 இந்திய ரூபாய்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைதானவர்களில் பொறியியல் மாணவர்கள் இருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தின் குஷய்குடா நகரிலுள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் வைத்து அந்த நாட்டு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே, இவர்கள் சிக்கியுள்ளனர்.
அத்துடன், இதனுடன் தொடர்புடைய ஏனையவர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 14 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முகாமில் தற்போது 16 இலங்கைத் தமிழர்கள், ஒரு நைஜீரியர் என 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகேந்திரன் என்ற இலங்கைத் தமிழர், தன்னை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். 3வது நாளாக நேற்றும் அவரது போராட்டம் தொடர்ந்தது.
இந்தநிலையில், பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, இதே முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 13 பேர் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தகவலறிந்த கியூ பிரிவு டிஎஸ்பி பால்வண்ணநாதன், முகாம்களுக்கான தனித்துணை ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் அங்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவர்கள் அளித்த கடிதத்தை அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
எனினும், அதை ஏற்க மறுத்து, 14 பேரும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் என, இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 1960ம் ஆண்டு தொடங்கி இதுவரை 6 மொழிகளில் 17,695 பாடல்களை அவர் பாடியுள்ளார்.
இதன் மூலம் அதிக பாடல்களை பாடியவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கின்னஸ் புத்தக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி டார்க் சொக்லேட் உண்பது நல்லது எனத் தெரியவந்துள்ளது. சொக்லேட் உடலுக்கு கெடுதியானது. அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, பற்சொத்தை, சக்கரை நோய் உட்பட பல உபாதைகள் வந்துச்சேரும் என்று பலரும் கூறுகிறார்கள்.
ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோ, இதற்கு மாறான தகவல்களை வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன் மக்களே அதிகமான சொக்லேட்டை சாப்பிடுபவர்கள் என ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனில் இருக்கும் ஆறு பேரில் ஒருவர், சொக்லேட் சாப்பிடுவது வழமை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இதை ஒரு இலகுவான உணவாகவும் அனைவரும் பார்க்கின்றனர்.
கடும் கொக்கோ சேர்கப்பட்ட சொக்லேட்டை சாப்பிடுவதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுவதாக என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது இதயம் சீராக இயங்க சிறந்தது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
தான் அதிகமாக சொக்லேட் சாப்பிடுவதே, தனது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக, இயற்பியலுக்காக 2001ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற எரிக் கோர்னல் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் கூறியுள்ளார்.
மில்க் சொக்லேட் என்றழைக்கப்படும், முழு ஆடைப்பால் கொண்ட சொக்லேட் அவசியமற்றது எனக்கூறும் அவர், கடும் கொக்கோ சேர்கப்பட்ட சொக்லேட் உடலுக்கு சிறந்தது என்பதை தான் நம்புவதாக கூறுகிறார்.
சொக்லேட் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கொக்கோவில், அன்டியோக்ஸிடன்ஸ் எனும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமையினால், அது உடல் சுகாதாரத்திற்கும், மூளைக்கும் சிறந்தது எனக் கூறப்படுகிறது.
ஆனால் அதனை அளவுக்கு அதிகம் சாப்பிடுவதன் மூலம், உடலில் சக்கரை மற்றும் கலோரி அதிகரித்து உடலுக்கு கேடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாரத்தில் ஒருமுறையேனும் சொக்லேட் சாப்பிடுவதனால், ஞாபக சக்தி மற்றும் கற்றல் ஆற்றல் மேம்படுவதாக சமீபத்தில் சுமார் 1,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சொக்லேட்டில் காணப்படும் ஒருவகையான இராயசாயனம், 50 தொடக்கம் 59 வரையிலான வயதில் வரும் இயற்கையான ஞாபக மறதியை குறைக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிகளவில் சொக்லேட்டை சாப்பிடுவது சிலவேளை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனாலும், சொக்லேட் சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் மன அழுத்த அபாயங்களை குறைக்கும் வல்லமை கொண்டது எனவும் சிலர் வாதிடுகின்றனர்.
நீங்கள் சுகாதாரமான உடல் எடையைக் கொண்டவராக இருந்தால், சொக்லேட்டை அச்சமின்றி சாப்பிடலாம் என சுயேட்சையான நிபுணரான டொக்டர் டிம் சிக்கோ கூறுகிறார்.
அது இதயத்துடன் தொடர்புடைய நோயை கட்டுப்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், அதிக உடல் எடையைக்கொண்டவர்கள் அதிகளவில் சொக்லேட் சாப்பிடுவது பாதமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொக்டர் டிம் எச்சரித்துள்ளார்.
பொது இடத்தில் மதுபானம் அருந்தவேண்டாம் என கூறிய பொலிஸ் அதிகாரி ஒரவரின் அந்தரங்க உறுப்பை கடித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொஸ்கொட, துவேமோதரவில் பொது இடத்தில் இருவர் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். இதை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்தே மதுபோதையில் இருந்த இருவரும் சேர்ந்து, பொலிஸ் உத்தியோகஸ்தரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர்.
இதனால் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னியின் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் அன்மையில் வவுனியாவிலேயே மிகப்பெரிய அளவில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இவ் கண்பரிசோதனை முகாமில் கண் பரிசோதனை செய்யப்பட்டு மூக்குக்கண்ணாடிக்கு துண்டு வழங்கப்ட்டவர்களுக்கு இன்று (28.03.2016) மூக்குக்கண்ணாடிகள் வவுனியா குருமண்காட்டில் வைத்து வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டிற்கான 63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்றைய தினம் அறிவிக்கபட்டுள்ளது. அது தொடர்பான விபரம் வருமாறு :
சிறந்த நடிகர்- அமிதப்பச்சன். இவர் 4 வது முறையாக தேசிய விருதை பெறுகிறார். பிகு படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது
சிறந்த நடிகை – கங்கான ரெனாவத்.இவர் 3 வது முறையாக இந்த் விருதை பெறுகிறார். தானு வெட்ஸ் மானி ரிட்டர்ன் படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது
சிறந்த படம் – பாகுபலி
சிறந்த இயக்குனர் – சஞ்சய் லீலா பன்சாலி பாஜிரோ மஸ்தானி படத்திற்காக இந்த விருது கிடைத்து உள்ளது
சிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா ( தாரை தப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காக விருது வழங்கபடுகின்றது; இளையராஜா 5 ஆவது முறையாக தேசிய விருது பெறுகிறார்)
சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி விசாரணை படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது.
சிறந்த தமிழ்ப் திரைப்படம் – விசாரணை
சிறந்த படத்தொகுப்பாளர் – கிஷோர் ( விசாரணை படத்திற்காக)
சிறந்த இந்தி திரைப்படம் – டம் லகா கே ஹைசா
சிறந்த மலையாள திரைப்படம் – பத்தமாரி
இறுதி சுற்றில் நடித்த ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால் கைகளே இல்லாமல், ஒரு கிரிக்கெட்அணியின் தலைவராக பரிணமிப்பவர் தான் அமீர் ஹுசைன்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிர்க்கெட் அணியின் தலைவராக அமீர் ஹுசைன் செயற்படுகின்றார். எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் அமீர் ஹுசைன் இழந்தாலும் உறுதியை இழக்கவில்லை.
கைகள் இல்லாமல் அண்டை-அயலாரின் பரிகாசங்களுக்கு ஆளான அவர், விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் முதலீடாக்கி, வெற்றி எனும் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.
இரண்டு கைகளையும் இழந்த நிலையில் யார் உதவியும் இன்றி வாழவேண்டும் என்ற உறுதிப்பாட்டின் காரணமாக சாப்பாட்டைக் கூட நாய் நக்கிச் சாப்பிடுவது போல உண்பதற்கு பழகிக் கொண்டதாகவும், தனது பாட்டி காலில் கரண்டியை பிடித்து சாப்பிடுவதற்கு பழக்கிக் கொடுத்ததாகவும் கூறுகிறார் ஹுசைன்.
கைகள் போனாலும் கால்களால் வெற்றியீட்ட முடியும் என பாட்டி கொடுத்த தன்னம்பிக்கையே கிரிக்கெட் வீரராக உருவாக உறுதுணையாக இருந்தது எனக் கூறும் அவர், காலால் பந்து வீசக் கற்றுக்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு இப்போது முன்னேறியுள்ளதாக பெருமையாகக் கூறுகிறார்.
எந்த அளவுக்கு கைகளால் பந்தை வேகமாக வீசமுடியுமோ அதே அளவுக்கு தன்னால் காலால் பந்தை வீசமுடியும் என அமீர் ஹுசைன் கூறுகிறார். ஆடுகளத்தில் பந்துகளைத் தடுப்பதற்கு தனது கால்களையும் உடலையும் செவ்வனே பயன்படுத்தவும் அவர் கற்றுக்கொண்டுள்ளார்.
வெளிநாட்டுப் பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட விமானப்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை-ராகம்வெல கடற்பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்த வேளை குறித்த பெண்ணை விமானப்படை சிப்பாய் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.இதன்போது குறித்த படை சிப்பாயிடமிருந்து தப்பி வந்தப்பெண் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து ராகம்வெல பிரதேச கடற்படை முகாமில் பணிப்புரியும் 30 வயதான விமானபடைச் சிப்பாயை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.மேலும் குறித்த சந்தேகநபரை இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலை உணவை தவிர்ப்பது தவறு.ஏனெனில், இதனால் பசி மற்றும் இடைவேளைகளில் உணவு உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கும்.இந்த இடைவேளை உணவுப் பழக்கம் தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாகும்.எனவே, காலை உணவில் சிலவகை உணவுகள் உடல் எடையை தவிர்க்க உதவும்.
இலவங்கப் பட்டை
கலோரிகள் இல்லமால் உணவில் இனிப்பு சுவையை சேர்க்கும் தன்மைக் கொண்டது இலவங்கப் பட்டை.தானிய உணவுகள், ஓட்ஸ் மீல்ஸ், ஏன் காபியில் கூட கொஞ்சம் இலவங்கப் பட்டை தூவி உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலில் சர்க்கரை மூலம் சேரும் கலோரிகளை குறைக்கவும் பயனளிக்கிறது.இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை குறைக்க முடியும்.
முட்டை
முட்டையில் புரதம், விட்டமின் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இவை காலையில் உங்கள் உடற்சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது.மேலும், முட்டை குறைந்த கலோரியில் பசியை நிறைவு செய்யவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.
பழங்கள்
பழங்களில் இருப்பது இயற்கை இனிப்பு. மேலும், இவை இரத்தத்தில் உடனடியாக கலக்காது என்பதால், இரத்த சர்க்கரை அதிகரிப்பு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்கிறது.
நட்ஸ் பால்
நட்ஸ் கலந்த பால் பருகுங்கள். இதில் இருப்பது இயற்கை சர்க்கரை. மற்றும் கலோரிகள் குறைவு, உடற்சக்தியை ஊக்குவித்து, உடல் எடையை குறைக்கவும் இது உதவும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகம். இதில் சர்க்கரை அளவு அறவே இல்லை. மற்றும் பசியை குறைத்து, உடல் எடையை குறைக்க இதுவொரு சிறந்த உணவாகும்.
ஸ்ருதிஹாசன் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை கூறுவார். சில மாதங்களுக்கு முன் கூட, இவர் திருமண விஷயத்தில் ஒரு சர்ச்சையான கருத்தை கூறி, பின் நான் அப்படி கூறவே இல்லை என்றார். தற்போது S3 படப்பிடிப்பில் இருக்கும் இவர் ஒரு பேட்டியில் ஆண்கள் குறித்து கூறிய கருத்திற்கு பலராலும் பாராட்டு கிடைத்து வருகின்றது.
இதில் ‘அழகான பெண்கள் இருந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பதில் தவறே இல்லை.அதிலும், ஹீரோயின் என்றால் ரசித்து பார்க்கிறார்கள், அவர்கள் பார்வையில் ஒரு நேர்மை இருக்க வேண்டும், தவறான நோக்கத்தில் பார்த்தால் எனக்கு எரிச்சல் வரும்’ என கூறியுள்ளார்.
மிருதன் வெற்றியால் தன் அடுத்த படத்தை உடனே தொடங்கினார் ஜெயம் ரவி. இப்படத்திற்கு போகன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.இதில் அரவிந்த்சாமி, ஹன்சிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இவர் முகத்தில் பலத்த அடிப்பட்டுள்ளது.இதை தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். இச்செய்தி ரவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வவுனியா கல்மடு ஆலயத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா, கல்மடு ஆலயம் ஒன்றில் நேற்று (27.03) ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதன்போது இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்ப்பட்ட கருத்து முரண்பாடு சண்டையாக மாறியது. இதனை தடுக்க சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
.
இச் சம்பவத்தில் காயமடைந்த பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்