வவுனியாவில் காணமல் போண ஆணைக்குழு முன் 162 உறவுகள் சாட்சியம்!!

20160329_092015_1

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்று (29.03.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இவ் ஆணைக்குழு விசாரணைகளுக்கு 311 நபர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த பொழுதும் 162 நபர்களே ஆணைக்குழுக்கு தமது சாட்சியங்களை முன்வைத்தனர்.

நாளைய தினமும் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழுவின் விசாரணைக்களுக்காக 218 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.

விக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு : பி.சி.ஸ்ரீராம்!

1

நேற்று 63வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் ஐ படத்திற்காக உடலை இளைத்து, கூட்டி என மிகவும் கஷ்டப்பட்டு நடித்த விக்ரமிற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் தேசிய விருதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பி.சி. ஸ்ரீராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விக்ரமிற்கு விருது கிடைக்காதது அவருடைய இழப்பு இல்லை, இது தேசிய விருதுகளுக்கான இழப்பு என்று டுவிட் செய்துள்ளார்.

நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை : அஜித் பீ பெரேரா!!

Ajith P Perera

நாட்டில் “மின்வெட்டு” என்ற பேச்சுக்கே இடமில்லை. 24 மணிநேரமும் தொடர்ச்சியாக மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளிக்கும் அரசாங்கம். அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்த “ஜெனரேட்டர்”களை (மின்பிறப்பாக்கிகளை) வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதற்காக நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அரசு அறிவித்தது.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அரசு இதனை அறிவித்தது.

இங்கு உரையாற்றிய மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா மேலும் உரையாற்றுகையில்,

இன்று நாட்டில் ஒரு புறம் வரட்சி அத்தோடு மின்மாற்றின் பழுதடைவு, சில மின்மாற்றிகள் தீப்பிடிப்பு, பராமரிப்பு தொடர்பான நெருக்கடிகள் உள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடியாது. “மின்வெட்டை” அமுல்படுத்த வேண்டும் என அதிகாரிகள், பொறியியலாளர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் உண்மையுள்ளது மறுப்பதற்கில்லை. ஆனால் மக்களுக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே அதற்காக அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க தயாராகவே உள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் அரசும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. எனவே எந்தக் காரணம் கொண்டும் நாட்டில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அத்தோடு நல்லாட்சி மீது கடவுளும் கருணை காட்டியுள்ளார். நீர் தேக்கப் பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை நல்ல மழை பெய்திருக்கின்றது.

மின்சாரத்துறையில் இயந்திரங்கள் பராமரிப்பு, குறைபாடுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன, நெருக்கடிகள் இல்லாமல் இல்லை.

அவசரத் தேவைக்காக தற்காலிக அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து மின் பிறப்பாக்கிகளை (ஜெனரேட்டர்கள்) கொள்வனவு செய்யவுள்ளோம்.

அதற்காக நாளை புதன்கிழமை இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு விசேட அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எனவே இவற்றையெல்லாம் தற்போது பழுதுபார்த்து வருகின்றோம். எனவே சில சில நிமிடங்கள் மின்சாரம் இல்லாமல் போகலாம். ஆனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்றும் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

-வீரகேசரி-

வவுனியாவில் தந்தையை இழந்த மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!!

 
2008.09.04 இல் இனம்தெரியாத நபர்களால் சுட்டு கொலைசெய்யபட்ட பம்பைமடுவில் வசித்த அமரர் பொன்னன் மகேந்திரன் அவர்களின் மறைவின் பின்னர் அவரது மனைவியான மெட்டில்டா அவர்கள் இரு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளையுடன் அங்கிருந்து வெளியேறி வவுனியா குட்செட் வீதியில் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகிறார்.

தற்சமயம் மூத்த மகள் 10ம் ஆண்டில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் நடந்துசென்று கல்வி கற்றுவரும் நிலையில், அவருக்கு ஒரு துவிசக்கரவண்டி வழங்கும்படி மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தரும், வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவும் ,திருமதி ம.மெட்டில்டா அவர்கள் தமிழ் விருட்சம் அமைப்பிடம் நேரடியாக கேட்டதன் பிரகாரமும், லண்டனில் வசிக்கும் உறவால் துவிசக்கரவண்டி நேற்று (28.03.2016) கல்லூரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி, பகுதித் தலைவர் ஆசிரியை திருமதி இந்துமதி, வகுப்பாசிரியை திருமதி மைதிலி, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தருமான எஸ்.எஸ். வாசன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் உதயகுமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன் திருமதி ம.மெட்டில்டா, மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

DSCN1769 DSCN1771 DSCN1774 DSCN1781 DSCN1784 DSCN1790 DSCN1791 DSCN1796 DSCN1798 DSCN1802 DSCN1803 DSCN1808 DSCN1810 DSCN1812

எனது மகளை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர் : தாய் கதறல்!!

 
எனது மகளை இரானுவ உடையில் வந்தவர்கள் தான் பிடித்துச் சென்றனர் என காசிப்பிள்ளை ஜெரோனியின் தாயார் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று (29.03) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில்..

நாங்கள் 2009ம் ஆண்டு நடந்த செல்தாக்குதல் காரணமாக இரட்டைவாய்க்கால் புதுமாத்தன் பகுதிக்கு இடம்பெயர்ந்த சமயத்தின் எனது கணவரை 2009.03.03 விடுதலைப் புலிகள் பணிவேலைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பின் கடுமையான செல்த்தாக்குதல் காரணமாக எனது பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தோம்.

அதன் போது எனது மூத்தமகள் காசிப்பிள்ளை ஜெரோமியை (19வயது) இரானுவ உடையுடன் வந்தவர்கள் பிடித்தனர். நான் எவ்வளவே அழுதேன் ஆனால் எனது மகளை அழைத்துச் சென்றுவிட்டனர். எனது மகளை பிரிந்து வாடினேன். எனது மகளை தேடியபடியே திரிந்தேன்.

விடுதலைப் புலிகளினால் பிடித்துச்செல்லப்பட்ட எனது கணவர் பணிவேலைக்கு அவரை விட்டபோது அங்கிருந்து தப்பித்து வந்து எம்மை தேடிப்பிடித்து எம்முடன் இணைந்தார்.

2009.04ம் மாதம் வெள்ள முள்ளிவாய்க்காலுக்கு வந்தோம் 2009.05.16 இராணுவம் எம்மை முகாமிற்கு வருமாறு வற்புறுத்தினர். எனது மகள் இல்லாமல் நான் வர மாட்டேன் எனத் தெரிவித்தேன். அதன்பின் வற்புறுத்தல் காரணமாக எம்மை அழைத்துச் சென்று செட்டிக்குளம் இராமநாதன் முகாமில் அடைத்தனர்.

2009.12.25ம் திகதி கனகராயன்குளம் பாடசாலை முகாமிற்கு எம்மை இடமாற்றி 2010.01.15ம் திகதி எம்மை எமது இடத்திற்கு விட்டனர்.

எனது மகளைக் காணவில்லை என தினமும் அழுது கொண்டிருந்தேன். 2015.01.07 ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது எனது மகன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருந்த தேர்தல் பிரச்சாரத்துண்டினை காண்டேன்.

எனது மகள் ஜனாதிபதியுடன் இருக்கும் புகைப்படம் பற்றி உடனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அறிவித்தேன். 3ம் மாடிக்கும் என்னை அழைத்தனர். 8 மணித்தியாலங்களுக்கு மேல் என்னிடம் விசாரனை மேற்கொண்டனர்.

நான் ஒன்றுதான் தெரிவித்தேன் அது எனது மகள் தான் என. இன்னும் எனது மகள் கிடைக்கவில்லை. எனது மகள் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கின்றாள் என்ற போதும் எனது மகள் எங்கே? இறுதியாக உங்களிடம் வந்துள்ளேன் என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.

1 2 3

விமானம் கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியானது!!

 
எகிப்து விமானசேவைக்கு சொந்தமான A320 என்ற விமானம் அலெக்சான்ரியாவில் இருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்தபோது கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

கெய்ரோ சென்ற எகிப்து ஏர் பயணிகள் விமானத்தை இப்ராஹிம் சமஹா என்ற சந்தேக நபர் கடத்திச் சென்று சைப்பிரஸில் தரையிறக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சைப்ரஸில் அரசியல் தஞ்சம் கேட்டு விமானத்தை இப்ராஹிம் கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான கடத்தலில் ஈடுபட்ட இப்ராஹிமிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த மொழி பெயர்ப்பாளர் ஒருவரையும் இப்ராஹிம் கேட்டுள்ளான்.

மேலும் தமது கடிதத்தை முன்னாள் மனைவியிடம் கொடுக்குமாறும் விமானத்தை கடத்தியநபரான இப்ராஹிம் கோரியுள்ளார்.

அலெக்சாண்டிரியாவில் இருந்து 80 பயணிகளுடன் விமானம் கெய்ரோவிற்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டது. விமானத்திற்குள் இருந்த இப்ராகிம் சமஹா, விமானியை மிரட்டி பயணிகள் விமானத்தை சைப்ரஸ் நாட்டின் லர்நாகா விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

காலை 6.28 மணிக்கு அலெக்சாண்டிரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் 7.45 மணிக்கு கெய்ரோவில் தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால் விமானம் கடத்தப்பட்டு சைப்பிரஸில் தரையிறக்கப்பட்டநிலையில், விமானத்தை கடத்திய இப்ராஹிம் உடலில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் வெளியாகின.

கடத்தப்பட்ட விமானத்திலிருந்து முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சில வெளிநாட்டு பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை தவிர அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை. விமானம் கடத்தப்பட்டதால் சைப்ரஸ் நாட்டின் லார்நாகா விமான நிலையம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2 3

மயிலை வேட்டையாடியவர் சிக்கினார்!!

11

மயிலை வேட்டையாடிய நபர் தொடர்பில் நேற்று இணைய செய்திகளில் பரவலாக பேசப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை வன ஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியிருந்தது.

இதன்பிரகாரம், குறித்த நபர் தங்கொட்டுவை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மருமகன் என்ற விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆனமடுவ பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி மயிலை வேட்டையாடியுள்ளதுடன், அதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நபர் இத்தாலியிருந்து வந்தவர் என்பதுடன் குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்களை வன ஜீவராசிகள் திணைக்களம் திரட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12

மக்கள் எதிர்ப்பு காட்டியிருந்தால் என் கணவர் உயிர்தப்பியிருப்பார் : கௌசல்யா உருக்கம்!!

Kowsalya

எங்கள் மீதான தாக்குதலை ஒருவேளை மக்கள் குறைந்தபட்சம் ஒரு கல்லை எடுத்து வீசி எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கூட என் கணவர் காப்பாற்றப்பட்டிருப்பார் என உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்டட சங்கரின் மனைவி கெளசல்யா தெரிவித்துள்ளார்.

உடுமலையில் நடந்த ஆணவக்கொலையில் சங்கர் கொல்லப்பட்டார். அவரது மனைவி கௌசல்யா படுகாயம் அடைந்தார். 15 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு நேற்று தன் கணவர் சங்கர் வீட்டுக்குத் திரும்பினார்.

சாதி மாறி காதலித்து திருமணம் செய்ததால் தன் கணவரை கொன்றுவிட்டதாக தன் பெற்றோர், உறவினர்கள் மீது புகார் கூறி அவர்கள் கைதாக காரணமான கெளசல்யா அதோடு குற்றவாளிகளையும் அடையாளம் காட்டி, தன் பெற்றோருக்கு எதிராக நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.

கணவரைக் கொன்ற பெற்றோர் உறவினர்கள் மீதான கெளசல்யாவின் கோபம் இப்போது சங்கரின் கொலையை வேடிக்கை பார்த்த மக்கள் மீது திரும்பியுள்ளது.

எங்க அப்பா, அம்மா இந்த மாதிரி யோசிப்பாங்கனு நான் நினைச்சு கூட பாக்கலை. ஆனா அதை விட என் வருத்தம் இந்த சம்பவத்தை தடுக்காம வேடிக்கை பார்த்த மக்கள் மீதுதான்.

ரோட்டில் யாரோயோ அடிக்கறாங்கனு வேடிக்கை பார்க்கமா யாரோ ஒருத்தர், அவங்க மேல கல் எடுத்து வீசியிருந்தாலும் கூட அவரை காப்பாத்தியிருக்கலாம்.

அதிர்ச்சியோட வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் பக்கத்துல கூட வரலை. யாராவது எதிர்த்து ஒரு கல்லை எடுத்து அவங்க மீது வீசியிருந்தால் கூட எதிர்ப்பை பார்த்து அவனுங்க பயந்து ஓடியிருப்பாங்க.

பொதுமக்கள் அவனை காப்பாத்த கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம், என்று கண்ணீர் விட்டவர், கண்ணீரை துடைத்தபடி மீண்டும் பேசினார்.

அவங்க வருவாங்க. எங்க கூட வரச்சொல்லி கேட்பாங்க. அப்புறம் போயிருவாங்கனு தான் எதிர்பார்த்தோம். ஆனா கொலை செய்ற அளவுக்கு போவாங்கனு நினைச்சு கூடப் பார்க்கலை.

நான் இங்கேயே தான் இருக்கப் போறேன். என் கணவர் இடத்தில் இருந்து நான் இந்த குடும்பத்தை பார்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

அரசு ஏதாவது வேலை கொடுத்தால், இந்த குடும்பத்தை நான் பராமரிக்க வசதியாக இருக்கும். வேலைக்கு போயிட்டே படிக்கலாம்னு இருக்கேன், என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

கெளசல்யாவின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்பதாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உறுதி தெரிவித்திருந்த நிலையில், தான் வேலைக்கு போவதாக கெளசல்யா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீதிகளில் நிர்வாணக் கோலத்தில் அலைந்து திரிந்த பெண் கைது!!

Lady

மஹரகம பிரதேசத்தில் பல பகுதிகளில் நிர்வாண கோலத்தில் அலைந்து திரிந்த பெண்ணொருவரை இன்று முற்பகல் மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹரகம இளைஞர் சேவை மன்றம், புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களிலேயே இப்பெண் பிறந்த மேனியுடன் அழைந்து திரிந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த பெண் இருந்த இடத்துக்கு சென்ற பெண்பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர்.

அப்பெண்ணை கைது செய்யும் போது, அவரது உடலில் சட்டையொன்று போர்த்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் எல்பிட்டிய, பிட்டிகலயைச் சேர்ந்த பெண் திருமணமானவர் எனவும் இவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பகிடி வார்த்தை கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் பலி!!

Kathi

‘பகிடி’ வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முருகல் நிலை உருவாகி, கத்திக்குத்துவாக மாறி ஒருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பி.கே. அமரசேக்கர என்ற 45 வயது நிரம்பிய குடும்பஸ்தரே பலியானவராவார். இது குறித்து, கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையடுத்து, கொஸ்லந்தையைச் சேர்ந்த ஏ.சுப்ரமணியம் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்லந்தை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கமைய, கத்தியினால் குத்தியமையினாலேயே, மரணம் சம்பவித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கொலையைத் தொடர்ந்து, கொஸ்லந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை தோன்றியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மரக்கறி வகைகளில் விலை அதிகரிப்பு!!

Veg

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மரக்கறி செய்கை பாதிப்படைந்துள்ளமையால் மரக்கறி வகைகளின் விலை இரட்டிப்பாக அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் பண்டிகை காலத்தில் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

1 கோடிக்கு நாய்க் குட்டிகள் வாங்கிய தொழிலதிபர்!!

DOg

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு நாய் குட்டி வாங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சதீஷ் கடபோம் என்ற அந்த தொழிலதிபர் சீனாவின் பீஜீங்கில் கொரியன் தோசா மஸ்தீப் என்ற‌ அபூர்வ இனத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி நாய்க் குட்டிகளை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

விமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்ட அந்த நாய்க் குட்டிகளை ரோல்ஸ் ரோய்ஸ் காரில் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர் சிகிச்சை அளித்தார். இதையடுத்து தொழிலதிபரின் பிரம்மாண்டமான வீட்டில் அந்த நாய்க் குட்டிகள் விளையாடி மகிழ்கின்றன.

இன்று மாலை வேளையில் நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை!!

Rain

இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் நிலவும் உஷ்ணமான காலநிலையில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என, வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் லலித் சந்திரபால குறிப்பிட்டுள்ளார்.

எகிப்திய எயார் லைன்ஸ் விமானம் கடத்தல் : 76 பயணிகள் விடுவிப்பு! கடத்தியவர் யார்?

1

எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளனர். எகிப்து நாட்டை சேர்ந்த EgyptAir என்ற பயணிகள் விமானம் இன்று காலை அதே நாட்டில் உள்ள Alexandria என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு புறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் விமான குழுவினர் உள்பட 81 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பயணிகள் விமானத்தை மர்ம கும்பல் ஒன்று கடத்தியுள்ளனர்.

சைப்ரஸில் உள்ள Larnaca என்ற விமான நிலையத்தில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை கடத்தியவர்களும் வெடிகுண்டுகள் கட்டிய உடுப்புகளை அணிந்தவாறு விமானிகளை மிரட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

5 வெளிநாட்டவர். 7 சிப்பந்திகள் தவிர்த்து மற்ற 76 பேரும் விடுவிப்பு

எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள். 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள். 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை ஆயுதம் ஏந்திய ஒருவர் தான் கடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நபர் தனது உடலில் கட்டியுள்ள குண்டுகளை வெடிக்கச் செய்துவிடுவதாகக் கூறி மிரட்டி வருகிறாராம். இந்நிலையில் எகிப்து அதிகாரிகள் தீவிரவாதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள். 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 22ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் இன்று எகிப்து பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்துகளால் விமானத்தில் செல்ல மக்கள் அஞ்சும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் விமானத்தை கடத்தியவர் யார்? அவரின் கோரிக்கைகள் என்ன : விபரம் தெரிந்தது

எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

விமானத்தை கடத்திய நபர் எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா என்பது தெரிய வந்துள்ளது. எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள்இ 7 சிப்பந்திகள் இருந்தனர்.

இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தியது தெரிய வந்துள்ளது.

எகிப்து அதிகாரிகள் சமஹாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையின் பலனாக விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சமஹாவின் பிடியில் இருக்கும் 5 பயணிகளில் 3 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், ஒருவர் இத்தாலியர், ஒருவர் அயர்லாந்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சமஹா அரபு மொழியில் 4 பக்கத்திற்கு சைப்ரஸில் வசிக்கும் தனது முன்னாள் மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துள்ளாராம்.

அந்த கடிதத்தை அவரிடம் அளிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம். அவர் தனது மனைவியின் பெயரை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம்.

மொழி பெயர்ப்பாளரை கேட்டுள்ள அவர் தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறும் கோரியுள்ளாராம். அதிகாரிகள் சமஹாவின் முன்னாள் மனைவியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள பயணிகள், சிப்பந்திகளை மீட்க திட்டமிட்டுள்ளனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 22ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் இன்று எகிப்து பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே விபத்துகளால் விமானத்தில் செல்ல மக்கள் அஞ்சும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபைக் காப்பாளர் மீது தாக்குதல்!!

Fight

வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று(29.03) காலை 5.50 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக் காப்பாளர் மீது தனியார் பேரூந்து காப்பாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பேரூந்து நிலையத்தில் கடமை புரிந்த இலங்கை போக்குவரத்துச் சபைக் காப்பாளர் மீது இன்று 29.03.2016 காலை 5.30 மணியளவில் தனியார் பேரூந்தின் ( வவுனியா- யாழ்ப்பாணம் வழி) காப்பாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கை போக்குவரத்துச் சபைக் காப்பாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் காணமல் போனோர் ஆணைக்குழுவிற்கு கண்ணீருடன் உறவுகள் சாட்சி!!

 
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்று (29.04.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது .
காணாமல் போனமை தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டவர்களை சாட்சியமளிக்க வருமாறு காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடிதங்களை அனுப்பியுள்ளனர். இதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.

கடந்த யுத்த காலத்தில் தமது உறவுகளை தொலைத்த உறவுகள் கண்ணீருடன் காணமல் போனோர் ஆணைக்குழுக்கு சாட்சியம் அளித்து கொண்டிருக்கின்றனர்.

20160329_091944_1 20160329_091951_1 20160329_091956_1 20160329_092007_1 20160329_092015_1 20160329_092022_1 20160329_093208_1 20160329_093232_1 20160329_093253_1