அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!!

IND

உலகக் கிண்ண டி20 போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதிக்கான 4 வது அணியைத் தேர்வு செய்வதற்கான முக்கிய போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மொஹாலி மைதானத்தில் போட்டியிட்டன.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலில் துடுப்பாடும் முடிவை மேற்கொண்டார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் அமோகமாக இருந்தாலும் அவர்கள் இறுதிநேரத்தில் அதிரடி காட்ட முடியாதளவுக்கு இந்தியப் பந்து வீச்சாளர்களால் தடுக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியா சார்பில் இன்றைய போட்டியின் ஆரம்ப வீரர்களாக களம்புகுந்த உஸ்மான் கவாஜா மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அடித்தாடுவதில் ஆர்வம் காட்டினர்.போட்டியின் முதலாவது பந்து வீச்சிலேயே கவாஜா அதிரடியாக 4 ஓட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.அதன் பின்னரான 5 பந்துகளிலும் எந்தவிதமான ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காது சிறப்பக பந்துவீசி முடித்தார் ஆசிஷ் நெஹ்ரா.

ஆயினும் 2 வது ஓவரை பந்துவீச அழைக்கப்பட்ட பூம்ராவின் ஓவரை கவாஜா துவம்சம் செய்தார்.அந்த ஓவரில் மட்டும் ஹட் ட்ரிக் பவுண்டரி அடிக்க பூம்ரா தனது முதல் ஓவரிலேயே 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.

பின்னர் பந்து வீச்சில் மாற்றம் கொண்டுவந்த டோனி, திருப்புமுனையை ஏற்படுத்த அவரது நம்பிக்கைக்குரிய சுழல் ஆயுதமான அஸ்வின் கையில் பந்தை ஒப்படைத்தார்.

யாரைக் குறிவைக்க வேண்டும் என்பதை ஆரம்பம் முதலே கணித்து அடித்தாடும் அவுஸ்திரேலியர்களின் தந்திரோபாயத்தில் அகப்பட்டுப்போனார் அஸ்வின்.

ஆரோன் பிஞ்ச் அடித்த 2 ஆறு ஓட்டங்களோடு அந்த ஓவரில் மட்டும் 22 ஓட்டங்களை இன்று விட்டுக்கொடுத்தார்.அஸ்வினின் பந்துவீச்சில் இதே அவுஸ்திரேலிய அணி ஒரே ஓவரில் 2003 இல் 24 ஓட்டங்களைப் பெற்றமையும் நினைவுபடுத்தக்கூடியதே. இப்படியான அதிரடி மூலமாக அவுஸ்திரேலிய அணி 3.4 வது ஓவரிலேயே தங்களது 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் 5 வது ஓவரின் முதல் பந்துவீச்சில் உஸ்மான் கவாஜாவை நெஹ்ரா ஆட்டமிழக்க செய்ய, போட்டியின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது.

அவுஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 10-15 ஓவர்கள வரையில் அவுஸ்திரேலிய அணியால் 33 ஓட்டங்களையே பெறமுடிந்தது.அதன்பின்னரான 16 வது ஓவரில் ஜடேஜா 15 ஓட்டங்களையும், 17 வது ஓவரில் பூம்ரா 15 ஓட்டங்களையும் விட்டுக்கொடுத்தாலும் ,18 வது 19 வது ஓவர்களில் அவுஸ்திரேலியாவால் அதிரடி காட்ட முடியாது போனது.

அந்த அணி இறுதி 5 ஓவர்களில் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

161 ஓட்டங்கள் எனும் இலக்கு இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவுக்கு, இந்தியா மைதானத்தில் இந்த ஓட்ட எண்ணிக்கை மிகக்கடினமானதாக இருக்கும் என்று யாரும் கணித்திருக்கவில்லை.

ஆனாலும் இந்த தொடர் முழுவதும் சொதப்பும் இந்தியாவின் ஆரம்ப நிலைத் துடுப்பாட்ட வீரர்களின் அசமந்த செயற்பாடு அவுஸ்திரேலியாவுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தது.

எல்லாப் போட்டிகளையும் போன்று நெருக்கடியான கட்டத்தில் மிக நல்ல, பெறுமதியான இணைப்பாட்டத்தைக் கொடுக்கும் யுவ்ராஜ் இன்று தன் சொந்த மண்ணில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாலும் கோஹ்லியுடன் இணைத்து 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுகொடுத்தார்.

முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத் தட்டுத்தடுமாறிய இந்தியாவுக்கு விராட் கொஹ்லி தனித்து நின்று வெற்றிக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

விரட்டிப் பிடித்து போட்டியை வெற்றிகொள்வதில் சூரனாய் இருக்கும் விராட் கொஹ்லியே இன்றும் அவுஸ்திரேலியாவுக்கு வில்லனானார். விராட் கொஹ்லி T20 போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடும் போது அவருடைய சராசரி 42 ஆகவும், 2 வதாக வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடுகையில் கோஹ்லியின் சராசரி 122 என்பதும் கவனிக்கத்தக்கது.

இறுதி 5 ஓவர்களில் 59 ஓட்டங்கள் தேவையெனும் நிலையில் போல்க்னரின் 18 வது ஓவரில் 19 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்தியாவுக்கு வெற்றி இலகுபடுத்தப்பட்டது. பின்னர் 19 வது ஓவரில் 16 ஓட்டங்களும் பெறப்பட இறுதி ஓவரில் நான்கு ஓட்டங்கள் தேவை எனும் நிலை வந்தது.

டோனி தனக்கே உரித்தான பாணியில் போட்டியை முடித்து வைக்க 5 பந்துகள் மீதமான நிலையில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அரை இறுதியை எட்டிப் பிடித்திருக்கிறது.

இன்றைய தோல்வி மூலமாக அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 6 வது தடவையாகவும் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அத்தோடு 6 வது உலக கிண்ணத் தொடரிலும் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியாத வேதனையோடு தொடருக்கு விடைகொடுத்தது அவுஸ்திரேலியா.

இன்று சிறப்பாக சகல வழிகளிலும் அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஷோன் வட்சன் சர்வதேச போட்டிகளிலிருந்து வேதனையோடு விடைபெற்றார்.

இதுவரையான அத்தனை T20 உலக கிண்ணப் போட்டிகளிலும் கலந்துகொண்ட 19 வீரர்களில் வோட்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அரை இறுதிக்கு நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் தேர்வான நிலையில், ஒரேயொரு ஆசிய அணியாக இன்றைய வெற்றிமூலமாக 4 வது அணியாக அரை இறுதிக்குள் இந்தியா நுழைந்தது.

அரை இறுதியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை சந்திக்கவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி!!

Afcan

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நாக்பூரில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

வழக்கம் போல் முகமது சஷாத் அதிரடியுடன் ஆரம்பித்தார். அவர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்தவர்கள் சோபிக்கவில்லை. அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

நஜிபுல்லா மட்டும் நிதானமாக ஆடி 48 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்கள் குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், சாமுல் பத்ரி 3 விக்கெட்டுகளையும், ரஸல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதன் பின்னர் 124 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியால் 3 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 117 ஓட்டங்களே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக, ஜோன்சன் ஜார்லஸ் 22 ஓட்டங்களையும், வெய்ன் பிராவோ 28 ஓட்டங்களை எடுத்தனர்.

ஆப்கான் அணியின் தரப்பில், முகமது நபி, ரசித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த தோல்வியால் மேற்கிந்திய தீவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

அதேசமயம் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி விளையாடிய 4 போட்டிகளில் 1ல் வெற்றி பெற்றுள்ளது.

வானில் எரிந்து போன மர்மபொருள் : பறக்கும் தட்டாக இருக்குமோ என்ற பீதியில் மக்கள்!!

Capture

மர்மமான பறக்கும் பொருள் ஒன்று வானில் இரண்டு நிமிடங்களில் முற்றாக எரிந்து போன சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதியின் சொந்த நகரமான சென்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரின் வான் பரப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மர்மமான பறக்கும் பொருள் எரிவதை Vyacheslav Golovkin என்பவர் கடந்த 22 ஆம் திகதி தனது கமராவில் பதிவு செய்துள்ளார்.

கடலுக்கு மேல் உள்ள வானில் எரியும் மூன்று வெளிச்சங்களை காணக் கூடியதாக உள்ளது. எரியும் பொருளானது சாதாரண விமானம் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இது சாதாரணமான ஒரு விமானம் அல்ல என்பதை மட்டும் உணர முடிகிறது. ஒருவேளை இது பறக்கும் தட்டாக இருக்குமோ?

விஜய், அஜித்தின் வசூல் சாதனையை முறியடித்த கார்த்தி!!

Karthi

தமிழ் சினிமாவின் கிங் ஒப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்கள் விஜய், அஜித். அவர்கள் சாதனையை கார்த்தி முறியடித்தார் என்றால் நம்பவா முடிகின்றது.

ஆனால், உண்மை இது தான், இந்தியாவில் இல்லை, அமெரிக்கா பொக்ஸ் ஒபிஸில் கார்த்தியின் தோழா வசூல் சாதனை படைத்து வருகின்றது.

இப்படம் முதல் நாளே தெலுங்கு பதிப்பு மட்டும் அமெரிக்காவில் 1.91 கோடி வசூல் செய்துள்ளது, இதன் மூலம் அஜித்தின் என்னை அறிந்தால், விஜய்யின் புலியின் ஆரம்பத்தை தோழா முறியடித்துள்ளது.

என்றும் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் தான் : மீண்டும் நிருபித்த ரஜினி!!

Rajani

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் நம்பர் 1 என்ற இடத்திற்கு தான் போட்டிப்போடுகிறார்கள். ஆனால், இன்றும் அந்த இடத்தை யாருக்கும் தராமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் ரஜினி.

இவருக்கான இளம் ரசிகர்கள் குறைந்துவிட்டார்கள், 40 வயதிற்கு அதிகமானோர் தான் ரஜினி ரசிகர்களாக உள்ளனர், இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் ஆதிக்கம் இல்லை என சிலர் கூறினார்கள்.

ஆனால், நேற்று வந்த கபாலி படத்தின் போஸ்டர் உலக அளவில் டுவிட்டரில் ட்ரண்ட் அடித்தது மட்டுமின்றி, பேஸ்புக்கிலும் ட்ரண்டிங்கில் இருந்தது. இதன் மூலம் ரஜினிக்கு எப்போதும் மாஸ் குறையவே குறையாது என நிருபிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டனை குறிவைத்து அணு ஆயுத தாக்குதல் : வடகொரியா வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ!!

Blast

உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

இதனால், உலகநாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென்கொரிய வீரர்கள் கடந்த ஏழாம் திகதியில் இருந்து தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்காவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்ட அறிக்கையில், எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன. அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். போர் மூண்டால் தென்கொரியா தலைநகர் சியோல் உட்பட அந்த நாடு முழுவதையும் எரித்து சாம்பலாக்குவோம். வடகொரிய ராணுவமும் தற்காப்புக்காக தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தங்கள் நாட்டின் அணு ஆயுத தாக்குதல் இலக்கின்கீழ் வாஷிங்டன் இருப்பதாக கூறி ‘கடைசி வாய்ப்பு’ என்ற பிரச்சார வீடியோ ஒன்றை வட கொரியா வெளியிட்டு உள்ளது. 4 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அமெரிக்க- கொரியா உறவுகளின் வரலாறு காண்பிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் நம்மை நோக்கி ஒரு அங்குலம் நகர்ந்தாலும் உடனடியாக அவர்களை அணுஆயுதம்மூலம் தாக்குவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

சூடு பிடிக்கும் சட்­டத்­த­ர­ணி நிதர்­ஷினி மரண விவகாரம் : கணவர் கைது!!

nitharsini

அம்­பாறை ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட பெண்­ சட்டத்­த­ர­ணியின் கண­வரை எதிர்­வரும் 6ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்கரைப்­பற்று மாவட்ட நீதவான் நீதி­மன்ற நீதி­ப­தியும், மேல­திக நீதவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான திரு­மதி நளினி கந்­த­சாமி உத்­த­ர­விட்டார். புதன்­கி­ழமை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்படுத்தியபோதே மேற்­படி தீர்ப்பை வழங்­கினார்.

பெண் சட்­டத்­த­ரணி சட­ல­மாக மீட்­கப்­ப­டு­வ­தற்கு சில மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்கு முன் சட்டத்தரணியும் அவ­ரது கண­வரும் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் சட்­டத்­த­ர­ணியை அவ­ரது கணவர் கையால் அடித்­த­தா­கவும் பொலி­ஸாரின் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணையில் இருந்து தெரியவந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து கையால் அடித்த குற்­றத்­துக்­காக சட்­டத்­த­ர­ணியின் கண­வரை பொலிஸார் சந்தேகத்­தின்­பேரில் கைது செய்து நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து விளக்கமறியலில் வைக்­கு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்டார். இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரியவரு­வ­தா­வது

அக்­க­ரைப்­பற்று -7ஆம்­பி­ரிவு கலா­சார மண்­டப வீதி­யைச்­ சேர்ந்த உயிரிழந்த பெண்­சட்­டத்­த­ரணி லோகராஜா நிதர்­ஷினி (28வயது) அக்­க­ரைப்­பற்று நீதி­மன்­றத்தில் கட­மை­யாற்றி வந்தார். கடந்த திங்­கட்­கி­ழமை மாலை கணவன் மனைவி இரு­வ­ருக்கும் இடையில் சண்டை ஏற்­பட்­டுள்­ளது.

அதன்பின் அன்­றி­ரவு 7.00 மணி­ய­ளவில் மனை­வி­யான பெண் சட்­டத்­த­ரணி வீட்டின் அறையொன்றி­லி­ருந்து தூக்கில் தொங்கி உயி­ரி­ழந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். இச்சம்பவம் தொடர்­பாக அக்­க­ரைப்­பற்று பொலி­ஸா­ருக்கு தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து, பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு சென்று விசா­ர­ணையை மேற்­கொண்­டனர்.

நீதி­பதி திரு­மதி நளினி கந்­த­சாமி சட­லத்தை பார்­வை­யிட்டு பிரேத பரி­சே­ாத­னையின் பின் சடலத்தை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார். இத­னை­ய­டுத்து சடலம் புதன்கிழமை தந்­தை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

கடுமையான வெப்பம் காரணமாக மயங்கி விழுந்து உயிரை விட்ட முதியவர்!!

heat-death

அதிக வெப்பத்தால் மயங்கி விழுந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மருதுநகர் பகுதியினை சேர்ந்த 60 வயதுடைய அஞ்சலிங்கம் தர்மதேவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் யாழில் உள்ள உறவினரை பார்க்க கடந்த 15ஆம் திகதி சென்றுள்ளார். இதன்போது, கடும் வெயிலால் வீதிக்கு அருகில் உள்ள கடையொன்றில் நின்று இளைப்பாறியபோது மயங்கி விழுந்துள்ளார்.

குறித்த நபரை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே நேற்றைய கடுமையான வெப்பத்தினாலும் அவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கை தமிழ் அகதி!!

Bottle

தமிழகத்தின் சேலம் – புது பஸ் ஸ்டாண்டில், கழுத்தை அறுத்துக் கொண்ட, திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சசிகுமார், (31). இவர், கோவையில் பெயின்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவது வழக்கம்.

நேற்று கோவையில் இருந்து, சேலம் பஸ்சில் வந்த அவர், புது பஸ் ஸ்டாண்டில், போத்தல் ஒன்றை உடைத்து, கழுத்தை அறுத்துக் கொண்டார் என, தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி பொலிசார், சசிகுமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பள்ளப்பட்டி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி துஷ்பிரயோகம் : தாயின் 2வது கணவர் கைது!!

Abuse

திருகோணமலை – மொறவெவ பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (26.03) கைதான குறித்த சந்தேகநபரை அடுத்த மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் மொறவெவ, கம்பங்கோட்ட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் எனவும், தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கே இவ்வாறு அநீதி இழைத்துள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

குறித்து சிறுமியின் தாயாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் மின் தடை!!

Power cut

நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 03.07 அளவில் இவ்வாறு மின் வெட்டு நிலை தொடர்பில் பதிவாகியுள்ளதாக, இலங்கை மின்சார சபை அத தெரணவிடம் குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாணம், நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை, குறுநாகல் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது நிலைமையை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அரையிறுதிக்குள் நுழைவது யார் : இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இன்று பலப் பரீட்சை!!

India-vs-Australia-World-T20-2016

T20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்கான லீக் போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.

மொகாலியில் நடக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.

குழு 2 பிரிவில் இடம்பெற்றுள்ள் இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கிறது.

ஏற்கனவே நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

அதேசமயம் இதில் தோற்கும் அணி உலகக்கிண்ண தொடரை விட்டே வெளியேறிவிடும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய அணி உலகக்கிண்ண தொடருக்கு முன் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் உலகக்கிண்ண தொடரில் அந்த அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லை. குறிப்பாக துடுப்பாட்டம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.

இந்திய அணி விராட் கோஹ்லியை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் காணப்படுகிறது. அவரை தவிர வேறு யாரும் அரைச்சதம் கூட அடிக்கவில்லை.

மேலும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் நிலைத்து நின்று அதிரடியான தொடக்கம் தர வேண்டியது அணிக்கு அவசியமாகும். யுவராஜ் சிங், அணித்தலைவர் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் அதிரடியால் ஓட்டங்களை குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள்.

பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் அஸ்வின், பும்ரா, ஜடேஜா, பாண்ட்யா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பகுதிநேரமாக ரெய்னாவும் சிறப்பாக வீசுகிறார். யுவராஜ் சிங்கிற்கும் வாய்ப்பளிக்கலாம்.

அவுஸ்திரேலிய அணி எப்போதும் முக்கியமான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். அந்த அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் வலுவான அணியாக உள்ளது.

அவுஸ்திரேலியா இதுவரை டி20 உலகக்கிண்ணத்தை வென்றது கிடையாது. அதனால் முதன்முறையாக டி20 உலகக்கிண்ணத்தை வசப்படுத்தி விட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது.

இதனால் இந்திய அணிக்கு அவுஸ்திரேலியாவை சமாளிப்பது என்பது சவாலாக இருக்கப் போகிறது.

கடும் வெப்பத்தால் குடிநீருக்குத் தட்டுப்பாடு : பலர் நோயால் அவதி!!

Water-Crisis

நாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் கடும் வரட்­சியால் பயிர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, மலை­ய­கத் தின் நீர்த்­தேக்­கங்கள் பலவற்றில் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது.

கொத்­மலை நீர்த்­தேக்­கத்தில் 25 சதவீதம் வரை நீர்­மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன், விக்­டோ­ரியா நீர்த்­தேக்­கத்­தின் நீர்­மட்டம் தற்­போது 50 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் இலங்கை மகாவலி அதி­கா­ர­சபை குறிப்­பிட்­டுள்­ளது.

காசல்றீ, மவு­சா­கலை மற்றும் சம­ன­ல ­வெவ ஆகிய நீர்த்­தேக்­கங்­க­ளிலும் வெகு­வாக நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ள­தாக மகா­வலி அதி­கா­ர­சபை சுட்­டிக்­காட்­டி­யுள் ­ளது.

மேலும், நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மான 63 நீரேந்து பகு­தி­களில் நீரின் கொள்­ள­ளவு 80 முதல் 85 வீதம் வரை காணப்­ப­டு­வ­தாக திணைக்­க­ளத்தின் நீர் முகா­மைத்­துவ பணிப்­பாளர் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் தற்­போது கடும் உஷ்­ணத்­துடன் கூடிய வெப்பக் கால­நிலை நிலவி வரு­கின்­றது. இதனால் மக்கள் அதிகம் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். கால­நிலை மாற்­றத்­தினால் சிறு­வர்கள், வயோ­தி­பர்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பகலில் அதிக உஷ்­ணமும் இரவு வேளையில் கடும் பனி நில­வு­வ­தாலும் மக்கள் காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற நோய்­க­ளுக்கு ஆளா­கி­வ­ரு­கின்­றனர்.

இதே­வேளை, இந்­நாட்­களில் மின்­சா­ரத்தை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­து­மாறு மின்­சக்தி அமைச்சு பொது­மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. நாடு­பூ­ரா­கவும் வரட்­சி­யான கால­நிலை ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து, நீர்மின் உற்­பத்தி 20 வீதத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­மையே இதற்குக் காரணம் என அமைச்சின் செய­லாளர் கலா­நிதி சுரேன் பட்­ட­கொட தெரி­வித்தார்.

வரட்சி நிலை தொடரும் பட்­சத்தில் எதிர்­கா­லத்தில் மாற்று மின் உற்பத்தி திட்டத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமையை எதிர்கொள்வதாயின், மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

urin

பொது இடங்­களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபா அப­ராதம் விதிக்கும்­படி மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. பிரதமர் மோடியின் சுகா­தார திட்­டத்தை வெற்றி பெறச் செய்ய, மத்­திய ஊரக மேம்­பாட்டு அமைச்­சகம் தீவிர நட­வ­டிக்கை எடுக்கத் தொடங்­கி­யுள்­ளது.

இது தொடர்­பாக அனைத்து மாநில தலைமை செய­லா­ளர்­க­ளுக்கும் ஊரக மேம்­பாட்டு அமைச்­சகம் கடிதம் அனுப்­பி­யுள்­ளது.

அதில், உங்கள் மாநி­லத்தின் முக்­கிய நக­ரங்­களில் பொது இடங்­களில் குப்பை கொட்­டு­ப­வர்கள், சிறுநீர் கழிப்­ப­வர்­க­ளுக்கு அப­ராதம் விதி­யுங்கள். ஏப்ரல் 30ஆம் திக­திக்குள் இதை அமுல்­ப­டுத்­துங்கள் என்று கூறப்­பட்­டுள்­ளது.

மேலும், எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு செப்­டெம்பர் 30ஆம் திக­திக்குள் அப­ராதம் விதிக்கும் நடை­மு­றையை 10 முதல் 15 நக­ரங்­களில் அமுல்­ப­டுத்­துங்கள்.

பொது இடங்­களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபா அப­ராதம் விதி­யுங்கள் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அப­ராத திட்­டத்தை அமுல்­ப­டுத்தும் முன்பு, நகர்ப்­ப­கு­தி­களில் உள்ள அனைத்து பொது இடங்­க­ளிலும் கழிவறை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மலேசியாவில் மூன்று தமிழர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!!

Malaysia

சர்வதேச மன்னிப்புச் சபையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மூன்று தமிழர்களின் மரண தண்டனையை மலேசிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த குணசேகர் பிச்சைமுத்து (35), ரமேஷ் ஜெயகுமார் (34), மற்றும் அவருடைய சகோதரரான சசிவர்ணம் ஜெயகுமார் (37) ஆகிய மூவருக்குமே நேற்று முன்தினம் அதிகாலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு ஒருவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இம்மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் போது குறித்த மூவரும் தம்முடைய தற்காப்புக்காகவே மேற்படி நபரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால் மூவரின் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூவருக்கும் மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சில தினங்களுக்கு முன்னதாக குணசேகரனின் தாயாருக்கு சிறை அதிகாரிகள் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அதில் அவருடைய மகனுக்குமரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதால், அவரை அடக்கம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தனர்.

இந்த மரணதண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனங்களை வெளியிட்டு மரணதண்டனையை ரத்து செய்யுமாறு மலேசிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் பல்வேறு எதிர்ப்புகளை மீறி மலேசிய அரசாங்கம் நேற்று மூவரின் மரணதண்டனையும் நிறைவேற்றியுள்ளதாக தற்போது அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மூவரின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்த போது, வெள்ளிக்கிழமை அதிகாலை 04.30 மணியிலிருந்து 05.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்தடை மேற்கொள்ளப்படலாம்!

Power cut

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு உண்மையை கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய 100 மெகாவோட்ஸ் மின்சார அலகை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கு இன்னும் நான்கு வாரங்கள் பிடிக்கும்.

இந்தநிலையில் மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் ஒரு மணித்தியால மின்சார விநியோகத்தடையை அமுல் செய்யவேண்டும்.

இந்த தீர்மானத்தை எடுக்காதுபோனால், நிலைமையை சமாளிக்க 500 மெகாவோட்ஸ் அலகை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் இலங்கையின் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்றும் வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.