தென்னாசியாவில் அதிவேக இணைய வசதி கொண்ட நாடாக இலங்கை!!

Internet

இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரத்தின்படி “Fourth Quarter, 2015, State of the Internet Report” இன் தரவுகளின் பிரகாரம் இலங்கை தென்னாசியாவில் அதிகூடிய வேகம் கொண்ட இண்டர்நெட் வசதி கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டு தோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்றாக கருதப்படுகிறது.

உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது. மிகக்குறைந்த சராசரி வேகத்தில் இண்டர்நெட் சேவையை கொண்டிருக்கும் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் இண்டர்நெட் சராசரி வேகத்தில் பிரிட்டன் 26.8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயின் 14 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஈரான் மற்றும் வியட்நாம் நாடுகள் மிகவும் குறைந்த வேகத்தில் மொபைல் இண்டர்நெட் சேவையை வழங்குகின்றன.

அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தின் சராசரியில் சிங்கப்பூர் (135.7 எம்.பி.பி.எஸ்) முதலிடத்திலும் இந்தியா (21.2 எம்.பி.பி.எஸ்) கடைசி இடத்திலும் உள்ளன. தென்னாசிய வலயத்தில் குறைந்த வேக இண்டர் நெட் சேவையை வழங்கும் நாடாக ஆப்கான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அலைக்கற்றை ஒழுங்கின் பிரகாரம் இந்தியாவை விட அந்நாட்டின் இணையத்தள வேகம் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சுவரொட்டிகள்!!

rahuman-poster

ஏ.ஆர். ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் முருக சேனை எனும் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கவிருக்கிறதாம். ஏப்ரல் 23ம் திகதி நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் இதுபோன்றதொரு இசைநிகழ்ச்சி நடந்ததில்லை, எனவே இந்த இசை நிகழ்ச்சியைத் தவற விடாதீர்கள் என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரோஜா படத்தில் இடம்பெற்ற சின்னச்சின்ன ஆசை பாடல் மற்றும் அது உருவான விதம் ஆகியனவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கு அப்படி விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிற அதேநேரம் சென்னையில், கொழும்பில் நடக்கும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கக்கூடாது என்கிற கோரிக்கையை வைத்து முருகசேனை என்கிற அமைப்பின் சார்பில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அவற்றில் உலகத் தமிழினம் போற்றும் இசைமேதையே இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இரத்தக்கறை படிந்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஒரு நாளில் திருப்பதி உண்டியலில் 3.27 கோடி ரூபா காணிக்கை!!

Thiruppathi

திருப்பதி கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை 15 மணிநேரத்தில் 36 ஆயிரத்து 198 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 31 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 12மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக நடந்துவந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 14 அறைகளில் காத்திருந்து 10 மணிநேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் ரூ.3.27 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

12 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குடும்பஸ்தர் கைது!

Abuse

பொகவந்தலாவ பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்த 35 வயது குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த வேளை, நேற்று பிற்பகல் தனது வீட்டில் குறித்த சிறுமி தனிமையில் இருந்ததை அறிந்து கொண்ட குடும்பஸ்தர் அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது, சிறுமி அலரி அடித்துக் கொண்டு வெளியே ஒடியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று (26.03) மாலை சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுமி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபர் இன்று (27.03) ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீரில் மூழ்கி இருவர் மாயம்!!

River

தேதுருஓயவில் நீராடச் சென்ற இருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு வந்த ஒரு குழுவினர் பின்னர் சிலாபம் – தேதுருஓயாவுக்கு சென்றுள்ளனர். இதில் சிலர் உணவு அருந்திக் கொண்டிருந்த வேளை, ஏனையவர்கள் நீராடியுள்ளனர்.

இவர்களில் மெனிக்திவேல – திஸ்மட பகுதியைச் சேர்ந்த ஈ.ஜீ.வீரக்கோன் எனும் 53 வயதான நபரும், ரஞ்சித் பிரேமகுமார் எனப்படும் 39 வயதான நபரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஈஸ்டர் திருநாளில் ஒப்பற்ற அருள்கிட்ட பிரார்த்திக்கின்றேன் : ஜனாதிபதி!!

easter

மனித உயிர் ஒப்பற்றது என்பதனாலேயே அனைத்து தியாகங்களை விடவும் உயிர்த தியாகம் உன்னத தியாகமாகக் கருதப்படுகின்றது. மனிதாபிமானத்தையும் மிஞ்சிய தேவத்துவத்தினை அடைந்து கொள்வதற்காக யேசுக்கிறிஸ்துநாதர் செய்த மாபெரும் தியாகத்தின் புண்ணியத்தன்மையினை அனுஷ்டிக்கும் முகமாகவே உலகவாழ் கிறிஸ்தவர்கள் யேசுக்கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ஈஸ்டர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும், ஒருவர் மற்றவர் மீது காட்டும் அன்பு, கருணை மற்றும் கௌரவம் என்பவற்றிலேயே இயேசுக்சிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளின் மகிமை தங்கியுள்ளது. “ஒருவர் இன்னொருவருக்காக தியாகம் மேற்கொள்ள முடியுமானதாக இருப்பின், அவரது தியாகத்தின் மூலம் மனிதாபிமானம் மேன்மையானதாக அமையும்” என்பது இயேசுக் கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் பற்றிய செய்தியின் உலகளாவிய பிரகடனமாகும்.

அதிகார மோகம், சூழ்ச்சி மற்றும் பொய்மை ஆகியவற்றை தோற்கடித்து உன்னத நிலையை எய்திய இயேசுக்கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளில் வாய்மையினதும் தியாகத்தினதும் மறுபிறப்பு மீள உருவெடுக்கிறது. வாய்மையினை ஒருபோதும் தோற்கடிக்க முடியாதென்பதே இதன் அர்த்தமாகும்.

சமத்துவத்துடன் உலகை நோக்குவதற்கு மாந்தர்களை பழக்கப்படுத்திய மேன்மை தங்கிய மதங்கள் காரணமாகவே, மனிதாபிமானம் எப்போதும் இத்திருநாளில் ஒளிவீசி பிரகாசிப்பதுடன் குரோத உணர்வு போன்ற தீய சிந்தனைகள் இல்லாதொழிகின்றன.

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள், இந்த மனிதாபிமானத்தின் மகிமையை தத்ரூபமாக எடுத்துக்காட்டிய மத வழிபாடாகும். அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், இயேசு கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளின் ஒப்பற்ற அருள் கிட்டுவதற்கும், அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கும் இந்நன்னாளில் பிரார்த்திக்கின்றேன்.

அதிக நேரம் உட்கார்ந்தே வேலைசெய்பவர்கள் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள்!!

Trends-set-to-shape-the-snacks-market-in-2016_strict_xxl
உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை.

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன.

ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் எப்போதும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. இனிமேல் இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.

* டீ, காப்பியுடன் பஜ்ஜி, போண்டா, வடையில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள். பஜ்ஜி, போண்டா, வடையை எண்ணெயில் போட்டால் எப்படி ஊதி பெரியதாக வருவதை போல் அதன் சுவைக்கு அடிமையாகும் ஆண்கள், தங்களின் தொப்பையும் பெரியதாகும் என்பதை உணர்வதில்லை.

* சிலர் ஜிலேபி, ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.

இந்த உணவுகளை காபி, டீ சாப்பிடும் போதும், இடைவேளையில் போதும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. அப்படி தவிர்க்க முடியாதவர்கள் அளவாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எதுவும் சாப்பிடும் போது அமிர்தமாக இருந்தாலும் அதனால் உடலுக்கு உபாதைகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

 

அரையிறுதியில் இங்கிலாந்து அணி : இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் வாய்ப்பை இழந்தன!!

ENG

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில், இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்கே சென்ற இங்கிலாந்திடம் 10 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியை பறிகொடுத்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஜே.சி பட்லர் 66 ஓட்டங்களையும் ஜே.ஜே.ரோய் 42 ஓட்டஙகளையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் வெண்டர்சே 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியதும் அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்தது.

இலங்கை அணி ஆரம்பத்திலேயே 4 விக்கட்டுக்களை இழந்து தடுமாறினாலும் மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி தடுமாறியது.

இலங்கை அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை பெற்றதுடன், கப்புகெதர 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இறுதி ஓவரில் இலங்கை அணி 15 ஓட்டங்களைப் பெற வேண்டி இருந்த போதிலும் 05 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

 
வவுனியா சூசைபிள்ளையார்குளம் சந்தியிலிருக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உருவச்சிலைக்கு அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று(26.03.2016) காலை மலர் மாலை அணிவித்து நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கள், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், முன்னாள் உப நகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த் தேசிய இளைஞர் கழக தலைவர் எஸ்.காண்டீபன், செயலாளர் சிறிகேசவன், த.நிகேதன், வ.பிரதீபன், எஸ்.கயூரன், மற்றும் சமூக ஆர்வலர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8)

வவுனியா வந்தடைந்த தென்னிலங்கை ஊடகவியலாளர்கள்!!

 
தமிழ்- சிங்கள ஊடகவியலாளர்களின் நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தை முன்னிட்டு தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் குழு இன்று(26.03.2016) மதியம் வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர்.

இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து யாழ். தேவி புகையிரதம் மூலமாக புறப்பட்ட இக்குழு மதியம் 2.00 மணியளவில் வவுனியா வந்தடைந்தனர். தொடர்ந்து வவுனியாவிலிருந்து மதியம் 2.15 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவித்தாரண, மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்தக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

“வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் கடந்த கால போர்ச்சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கின் தமிழ் ஊடகவிலாளர்கள் தொடர்பில் தென்னிலங்கையின் நேசக்கரத்தை நீட்டுவதாகும்.

P1200038 P1200039 P1200040 P1200041 P1200042 P1200045 P1200046 P1200048 P1200049 P1200052 P1200053

வவுனியா மாவட்டத்தின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் வஜிர அபேகுணவர்தன!!

 
இன்று(26.03.2016) வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் வஜிர அபேகுணவர்தன வவுனியாவில் உள்ள குறைகளை கேட்டறிந்துகொண்டார்.

இன் நிகழ்வு இன்று (26.03.2016) காலை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன , வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , சாந்தி சிறிஸ் கந்தராசா, காதர் மஸ்தான் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் , வடமாகண சபை உறுப்பினர்கள் , அமைச்சின் இணைப்புச் செயலாளர்கள், வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

P1200005 P1200007 P1200014 P1200016 P1200017 P1200018 P1200020 P1200021 P1200026 P1200027 P1200033 P1200034

கோடைக்கால வெப்பத்தைத் குறைத்துக்கொள்ள சில குறிப்புக்கள்!!

Health

அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர், குறிப்பாகப் பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குளிர்ந்த தண்ணீர் ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே திருப்தி தரும். அது உண்மையிலேயே தாகத்தை தணிக்காது.

தர்ப்பூசணி , அன்னாசி, கொய்யா, நாரத்தம்,ஒரேஞ்ச், திராட்சை ஆகிய பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைத் தரும்.

வெள்ளரிக்காய், கரட், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவை அடங்கிய சலட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது.

உப்புக் கலந்த எலுமிச்சை ஜூஸ், நீர்மோர், இளநீர் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்பானங்கள்.

சீனியும் முட்டையும் கலந்த பால், ஜெலி, மில்க் ஷேக்ஸ் போன்ற இனிப்புகள் தேவையான ஊட்டச் சத்துகளை வழங்கும்.

மோர் கலந்த பழைய சோற்றை ஊறுகாய் மற்றும் வெங்காயத்துடன் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சியையும் இயற்கைச் சத்தையும் கொடுக்கும்.

ஒரேஞ்ச், தர்ப்பூசணி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை ஆகிய பழங்களின் அறுசுவை பானம் உடல் நலத்துக்கு நல்லது.

கோடைக் காலத்தில் சூட்டைக் கிளப்பும், சாப்பிடக் கூடாது என சொல்லப்படு உணவுகள் குறித்த கட்டுக் கதைகளும் உண்மைகளும்…

பப்பாளி சூட்டைக் கிளப்பும் பழம் என்பதால் அதை இளம் பெண்களும் கருவுற்றிருக்கும் தாய்மார்களும் உண்ணக் கூடாது.

உண்மை : பப்பாளியில் விட்டமின் ஏ சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துகள் இருக்கின்றன. பப்பாளி எந்த விதத்திலும் கருவை பாதிக்காது.

மாம்பழம் உடல் சூட்டைக் கிளப்பும் என்பதால் சாப்பிடக் கூடாது.

உண்மை: உண்பதற்கு முன் மாம்பழத்தைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்ட பிறகு சாப்பிடலாம். ஏதேனும் பிரச்னை இருந்தால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம், சரியாகிவிடும்

குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்க்ரீம் சளியை ஏற்படுத்தும்.

சளிக்குக் காரணம் வைரஸ் கிருமிகள். குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளி ஏற்படாது. குளிர்ந்த உணவு அல்லது நீர் ஒவ்வாமை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் ஏற்படும்.

கோடை காலத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

தண்ணீர் அருந்துவது அவரவர் இருக்கும் சூழலைப் பொறுத்தது. வெயிலிலும் சூரிய வெப்பத்திலும் அலைபவர்கள் உடலின் தேவையைக் கருத்தில் கொண்டு தேவையான 1 அல்லது 2 லீட்டர் தண்ணீரைக் குடிக்கலாம். வெப்பம் குறைந்த அல்லது குளிர்சாதன அறையில் இருப்பவர்களுக்கு மேற்கண்ட தண்ணீர் அளவு தேவைப்படாது.

எதிரணிக்கு அழிவை உண்டாக்கும் ஹேரத் : சுழல் தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை அணி!!

SL

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று இலங்கை வீரர் சந்திமால் தெரிவித்துள்ளார்.

இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. பிரிவு 1ல் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளில் இங்கிலாந்து 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

அதேசமயம் இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 1 தோல்வி என 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றையப் போட்டி பற்றி இலங்கை வீரர் சந்திமால் கூறுகையில், ”இலங்கை அணியில் நடுவரிசை தடுமாற்றத்துடன் இருப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது.

இருப்பினும் எங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. டெல்லி ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஓய்வு பெற்றவர்களின் இடத்தை இளம் வீரர்கள் இன்னும் நிரப்பவில்லை என்பதையே மோசமான ஆட்டத்துக்கு காரணமாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

இனிமேல் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். கிடைத்த 6 நாட்கள் ஓய்வு பயனுள்ளதாக இருந்தது. இந்த நாட்களில் முந்தைய போட்டிகளில் செய்த தவறுகள் குறித்து அலசி ஆராய்ந்தோம்.

மேலும், ரங்கண ஹேரத் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் எதிரணிக்கு எளிதில் அழிவை உண்டாக்கிவிடுவார். தென்னாபிரிக்க அணி சுழலில் தடுமாறியது நன்றாக தெரிந்தது.

எங்கள் அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்டர்சே, சேனநாயக்க சிறப்பாக உள்ளனர். ஹேரத்திடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறோம். அவருக்கு நெருக்கடியை எப்படி சமாளிக்க முடியும் என்பது நன்றாக தெரியும்“ என்று தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவை எரித்து சாம்பலாக்குவோம் : வட கொரியா எச்சரிக்கை!!

Korea

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதிகளில் கடந்த மார்ச் 7ம் திகதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன.

அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். போர் மூண்டால் தென்கொரியா தலைநகர் சியோல் உட்பட அந்த நாடு முழுவதையும் எரித்து சாம்பலாக்குவோம்.

தற்காப்புக்காக வடகொரிய ராணுவமும் தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்!!

ajith-kumar-so-sorry

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கலைஞன் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் தான்.

இந்நிலையில் அஜித் நாம் முன்பே கூறியிருந்தது போல் தன் அடுத்த படத்திற்கு ரூ 40 கோடி சம்பளமாக பெறுவது உறுதி.இதன் மூலம் சம்பள விஷயத்தில் கமல்ஹாசனை, அஜித் பின்னுக்கு தள்ளி விட்டார், ரஜினிக்கு அடுத்த இடத்தில் தற்போது உள்ளார்.

 

பிரபல நடிகரை நீண்ட நாட்களாக காக்க வைத்த நயன்தாரா!!

Simbu-failed-complaint-against-Nayantara

நயன்தாரா கையில் தற்போது ஆறு படங்கள் உள்ளது. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்தும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று நடந்த திருநாள் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜீவா, ‘இந்த படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
ஆனால், அவர் அந்த நேரத்தில் பிஸியாக இருந்தார், இருப்பினும் எங்கள் காத்திருப்பிற்கு பலனாக அவரே வந்து நடித்துக்கொடுத்தார்’ என கூறியுள்ளார்.