இங்கிலாந்தில் தங்கையின் குழந்தைக்கு தந்தையான நபருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் விவரங்கள் சட்ட காரணங்கள் கருதி வெளியிடப்படவில்லை.
இவருக்கு 21 வயது இருக்கையில், இவரது சகோதரிக்கு 15 வயதாகியுள்ளது, அப்போது தனது தங்கையுடன் தவறான உறவு கொண்டுள்ளார்.இதனால் கருவுற்ற தங்கை, பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார், இந்த சம்பவம் நடைபெற்று காலங்கள் கடந்துவிட்ட நிலையில், அக்குழந்தையானது உடல் வளர்ச்சி தாமதம், கற்றல் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளது.
இதனால், மருத்துவரிடம் அனுகியதில், அக்குழந்தையின் தந்தையின் மரபணுவை சோதனை செய்து பார்த்ததில், இவர்களது குடும்பதினருடன் ஒத்த மரபணுவாக இருந்துள்ளது. விசாரணையில், தனது தாயின் சகோதரன் தான் இக்குழந்தைக்கு தந்தை என தெரியவந்துள்ளது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, பொலிசார் அக்குழந்தையின் தாயாரிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக பெற்றுக்கொண்டனர்.
பின்னர், இதுதொடர்பான வழக்கை விசாரித்த Bristol Crown நீதிமன்றத்தில் நீதிபதி, Barry Cotter QC, இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் ஆகும் என்றும் இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் எனக்கூறி அந்நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார். 26 வயதான சென் குப்தா என்ற யுவதி கடந்த 24ஆம் திகதி காலி கோட்டைப் பிரதேசத்தில் வைத்து காணாமல் போயிருப்பதாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போன யுவதி இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து இங்கு வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளத்துள்ளனர்.
இதேவேளை,காணாமல் போன இந்திய யுவதி தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் குறித்த யுவதியைத் தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருப்பதாக தெரிவித்ததுள்ளனர்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறுகள் திருப்தியின்மையால் மற்றுமொரு தமிழ் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிரிஎல்ல, கலதுரவத்த, மடபத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான அசோகநாதன் – வாசப்பிரியா என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி குறித்த மாணவியின் பெற்றோர்கள் தொழிலுக்கு சென்ற பின்னர் தனது அறையில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும்,ஒரு இளைய சகோதரரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாக்தாத்தில் உள்ள கால்பந்து மைதானத்தினுள் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 29 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இஸ்காண்டிரியா என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது தீவிரவாதி ஒருவர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்
இந்த குண்டு வெடிப்பில் சுமார் 29 பேர் பலியாகியுள்ளதாகவும் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பெற்றுள்ள ஐ.எஸ்.அமைப்பு தாக்குதலில் ஈடுபட்ட இளம் ஜிகாதியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
முன்னதாக அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். பிடியில் இருந்த நகரை ஈராக் படையினரும் சன்னி பழங்குடி போராளிகளும் மீட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா ருஸொல் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐ.எஸ். அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வெலிசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 5 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றிரவு குறித்த நபரை கைதுசெய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிவேக வீதி மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்மூலம் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக கருமபீடங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாதென அந்த பிரிவின் பணிப்பாளர் அனுர தம்மிக்க குமார கூறியுள்ளார்.
முற்கொடுப்பனவு முறையின் மூலம் வாகனங்கள் அதிவேக வீதியூடாக தொடர்ந்து பயணத்தை முன்னெடுக்க இயலும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த புதிய முற்கொடுப்பனவு முறையில் தங்களைப் பதிவுசெய்து கொள்வதற்காக வாகனப் பதிவு சான்றிதழின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் பிரதி மற்றும் சாரதி அனுமதிப்பத்திர பிரதி என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான புகையிரத பாதையில் மஹவையிலிருந்து தாண்டிக்குளம் வரையான புகையிரதப் பாதை சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.இதில் 120 கிலோ மீற்றர் தூரத்திற்கான பகுதியே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா இந்தப் பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்ட பின்னர் இந்தப் பாதையை புனரமைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் குறித்த புனரமைப்பு வேலைகளுக்காக 25 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புனரமைப்புப் பணிகளை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று (25.03.2016) பாடசாலை சக்திவள கழகங்களை ஸ்தபித்தலும் இயங்கச் செய்தலும் எனும் தொனிப்பொருளில் மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை மின்சார அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய கலந்துகொண்டார்.
பாடசாலை மாணவர்களிடையே சிக்கனமாக மின்சாரத்தை பாவிப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரை நிகழ்த்திய சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய..
வாழ்விலே சிக்கனம் என்பது மிக முக்கியமானது. சிக்கனமாக வாழ்வதன் மூலம் மனிதவளத்தை, பௌதிக வளத்தை சிறப்பாக்க முடியும். 2020 ஆம் ஆண்டு 400 மெகா வாட்ஸ் மின்சாரத்தை இந்த நாட்டிற்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.
ஆகவே இத்திட்டத்தை மாணவர்களினுடாக எடுத்து செல்லவேண்டிய தேவை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சம்பூர் மின்நிலையம் இயங்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம் ஆனால் இது சிக்கலான நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கிறது.
கடந்த வாரம் பேசும் பொருளாக இருந்தது என்னுடைய அமைச்சின் விவகாரம் நீர் மின் உற்பத்தியானது 50 வீதத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் காரணமாக நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. நீரை மையமாக வைத்து பார்க்கும் போது முதலாவது குடிநீருக்கும் இரண்டாவது விவசாயத்திற்கும் மூன்றாவதாக மின் உற்பத்திக்கும் பயன் படுத்தப்படுகின்றது. ஆகவே நீரை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
ஷூ அணிபவர்களுக்கு லேஸ் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். ஷூ தயாரிக்கும் பிரபல நிறுவனமான நைக்கி, தானாக இயங்கக்கூடிய ஷூக்களை உருவாக்கியிருக்கின்றது.
1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, 2015 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றுவிட்டது.
நைக்கி ஹைபர் அடாப்ட் 1.0 (Nike Hyperadapt 1.0)என்ற ஷூக்களை வாங்கி, கால்களை நுழைத்தால் தானாகவே இறுகிக்கொள்ளும். அதைத் தளர்த்த வேண்டும் என்றால் ஷூக்களின் பக்கவாட்டில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் போதும். 2 நொடிகளில் தளர்த்திவிடும், காலை வெளியில் எடுத்துவிடலாம்.
ஷூ வாங்கி 2 வாரங்கள் வரை இப்படி பொத்தானை அழுத்தும் வேலை இருக்கும். பிறகு ஷூ தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும்.
பெட்டரியில் இந்த ஷூ இயங்குகிறது. 2 வாரங்களுக்கு ஒருமுறை பெட்டரியைச் சார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.
இது ஆரம்ப முயற்சி தான், இன்னும் ஷூக்களில் பல புதுமைகளைச் செய்ய இருக்கிறோம் என்கிறார்கள் நைக்கி நிறுவன உரிமையாளர்கள்.
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஷூக்கள், பல வண்ணங்களில் கிடைக்கும்.
சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்தார். தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இரவு, உதயகுமாரி சவுதி அரேபியாவில் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக உறவினர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உதயகுமாரியின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைக்கான சவுதி தூதரகம் அறிவித்திருந்தது.
சவுதி அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உதயகுமாரியின் பூதவுடல் மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியை நாளை நடைபெறவுள்ளது.
இந்த நாட்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வறட்சியான காலநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, நீர்மின் உற்பத்தி 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட குறிப்பிட்டார்.
வறட்சி நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் மாற்று மின் உற்பத்தி திட்டத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமையை எதிர்கொள்வதாயின், மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் வரையில், மின்பிறப்பாக்க செயற்பாடுகளை உரியவாறு முகாமைத்துவம் செய்வதற்கு எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் சகல பாகங்களிலும் டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாடு முழுவதிலும் 12,360 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். ஜனவரியில் 6541 பேரும், பெப்ரவரியில் 4,220 பேரும், மார்ச்சில் 1,600 பேரும் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாதங்களிலும் இந்நோய்க்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த 2014இல் 47 ஆயிரம் நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் 96 பேர் மரணமடைந்தனர். கடந்த வருடத்தில் 29,770 நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.
இந்நிலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அரசு இதுவரை ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. இவ்வருடத்தில் இந்த நோயை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 29 தொடக்கம் ஏப்ரல் 4 வரை டெங்கு குடம்பிகளை அழிப்பதற்கான தேசிய மட்டத்திலான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையில் சுகாதார சேவை அமைச்சு அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் போன்றவை பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகூடிய வெப்பநிலை நிலவுகின்றது.
வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ் கிருமிகளின் தாக்கமும் அதிகரித்திருப்பதனால் சிறுவர்கள், மற்றும் கர்ப்பிணிகள் விரைவில் நோய் தாக்கங்களுக்கு உள்ளாக நேரிடுமென்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வீசும் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் இடைப்பருவப்பெயர்ச்சி மழையில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியன காரணமாகவே நாட்டின் வெப்பநிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரி நிமல் பண்டார கூறினார்.
காலநிலையில் ஏற்பட்டிருக்கும் இத்திடீர் மாற்றம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடலும் வழமையிலும் அதிகமான வெப்பநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய வான்வெளியில் உயர் அடுக்கில் வீசும் காற்றில் போதுமான ஈரப்பதன் இல்லாமையினாலும் மேகங்கள் உருவாகும் நிலை தடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒன்றிலிருந்து இரண்டு வரையான பாகை செல்சியஸில் வெப்பநிலை அதிகரிக்கப்பட்ட போதும் குருநாகல், அநுராதபுரம், வவுனியா, பெரிய இளுப்பள்ளம ஆகிய இடங்களில் வழமைக்கும் மாறாக நான்கு பாகை செல்சியஸினால் வெப்பநிலை அதிகரித்திருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
கடந்த 48 மணித்தியாலங்களில் அநுராதபுரத்திலேயே ஆகக்கூடியதான 37.9 செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியுள்ளது.
பொதுவாக இக்காலப்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் வெப்பநிலை நிலவுவது வழமையாகும். எனினும் இம்முறை இந்தியாவில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வெப்பநிலை சற்று குறைவாகவே நிலவுவதாகவும் அவதான நிலையம் கூறுகின்றது.
ஏப்ரல் நடுப்பகுதியளவில் இடைப்பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மாலை வேலைகளில் மின்னலுடன் கூடிய அடைமழை பெய்ய வாய்ப்புண்டு. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் வெப்பநிலை தற்காலிகமாக குறைவடையலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டிய விழிப்புணர்வு செயற்பாடுகள் குறித்து சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை டொக்டர் எஸ். கோகுலேந்திரா கூறியதாவது:
அதிக வெப்பநிலைக் காரணமாக வழமையிலும் கூடுதலான நீர் உடம்பிலிருந்து வெளியேறும் என்பதனால் சிறுவர்கள், கார்ப்பிணித் தாய்மார் உள்ளிட்ட அனைவரும் அடிக்கடி நீர் அல்லது நீராகாரங்களை பருக வேண்டும்.
களைப்பு ஏற்படும் வகையில் திறந்த வெளியில் பயி்ற்சிகள் செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகளவில் பழங்களை உட்கொள்ள வேண்டும்.
வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ் தாக்கமும் அதிகரிக்கும் என்பதனால் வைரஸ் தொற்றுக்களை தவிர்க்கும் வகையில் முற்காப்புடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார் இதுபோன்ற வைரஸ் தொற்றுக்கு உள்ளானால் தாய், சேய் இருவரும் பாதிக்கப்படுவதுடன் மருந்துகளை உட்கொள்வதும் பொருத்தமாகாது என்பதனால் அதிக சனநடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதனை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் அதிகரித்துள்ள உஷ்ண நிலை காரணமாக சிறுவர்களும் குழந்தைகளும் பெருமளவில் கை, கால், வாய் நோய்க்கு ஆளாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரட்ன ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பகிரங்கமாக கண்ணீர் விட்டு அழுத அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
தான் இன்னும் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கப் போவதில்லை என்று கூறிய அவர், எனினும் கட்சியின் மீதுள்ள அன்பில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.
இதன் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்பதாகவும், கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு எவருக்கும் இடமளிப்பதில்லை என்றும் கூறினார்.
தான் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதாகவும் அவர் கூறினார்.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தென் ஆபிரிக்க அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டி தென் ஆரிக்காவுக்கு மிகவும் முக்கியமான ஒரு போட்டியாகும்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தென் ஆபிரிக்க அணி முதல் பந்திலேயே நட்சத்திர ஆட்டக்காரரான ஹஷீம் அம்லாவை இழந்தது.
அதன் பின்னர் சீராக விக்கெட்டுகள் சரிய, அந்த அணி தமது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு மொத்தமாக 122 ஓட்டங்களை எடுத்தனர்.
தென் ஆரிக்க அணியில் குவிண்டன் டி கொக் மட்டுமே ஓரளவுக்கு நிதானமாக ஆடி அதிகபட்சமாக 47 ஓட்டங்களை எடுத்தார்.
அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஆரம்பம் முதலே ஆட்டம்காண ஆரம்பித்தது. அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 4 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
ஆனாலும் அவருடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜோன்ஸன் சார்ஸ்லும், பின்னர் ஆடவந்த மார்லன் சாமுவேல்ஸும் ஓரளவுக்கு அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினர்.
இரண்டு போட்டிகளில் ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடும் அழுத்தங்களுக்கு உள்ளான தென் ஆபிரிக்க அணி அதை சமாளிக்க முடியாமல் இரண்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தப் பிரிவில் இரண்டாவதாக யார் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள் இன்று சனிக்கிழமை இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகே தெரியவரும்.
இதேவேளை மொஹாலில் நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
மொஹாலில் நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி தமது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை எடுத்தனர்.
அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அற்புதமாக ஆடி 61 ஓட்டங்களை எடுத்தார். அதில் ஏழு பவுண்ட்ரிகளும் அடங்கும்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காராக களம் இறங்கிய ஷார்ஜீல் கானும், மூன்றாவதாக ஆடவந்த காலித் லத்தீஃபும் உறுதியுடன் ஆடி ஓட்டங்களை தொடர்ச்சியாக குவித்து வந்தனர்.
எனினும் ஷார்ஜீல் கான் ஆட்டமிழந்த பிறகு காலித் லத்தீஃப், உமர் அக்மல் ஆகியோர் நிதானமாக ஆடினாலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை.
பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளும் சீராக விழத் தொடங்கின. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் ஜேம்ஸ் ஃபால்க்னெர் மிகச்சிறப்பாக பந்துவீசி 28 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் 23/03/2016 புதன்கிழமை இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிக்கு அபிசெகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.தொடர்ந்து ஆலயத்திலிருந்து கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கோவில் நோக்கி பாற்குட பவனி இடம்பெற்றது.
ஒன்பது மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் பத்து மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.தொடர்ந்து வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது .