தமிழகத்தின் மகளாக, மருமகளாக கேட்கின்றேன் : நடிகை குஷ்பு உருக்கம்!!

Kushboo

தமிழகத்தின் மகளாக, மருமகளாக நான் கேட்கிறேன் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியை வெற்றிப் பெற வையுங்கள் என குஷ்பு பேசியுள்ளார்.

நாகர்கோவில் நகர காங்கிரஸ் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அதில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க–காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் மனுதாக்கல் செய்யவில்லை. கட்சி தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன்.

இந்த தேர்தலில் ஜனநாயகம் ஜெயிக்க வேண்டுமென்று எண்ணுகிறோம்.
ஜனநாயகம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது என பேட்டியளித்துள்ளார்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசுகையில், காங்கிரஸ் கட்சி இந்தியாவில் 130 ஆண்டுகளுக்கு முன்னர் வளர ஆரம்பித்த ஒரு ஆலமரம்.

அதில் உள்ள கிளைகள்தான் இன்று பா.ஜ.க மற்றும் தமிழக திராவிடக் கட்சிகள். அதில் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவராகத்தான் நானும் உள்ளேன்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ‘இலைகள்’ உதிரும், ‘சூரியன்’ உதயமாகும். ‘கைகள்’ உதவும். இது சாதாரண கை இல்லை. இந்தியாவில் வாழும் மக்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை.

வரும் தேர்தலில் நாங்கள் ஜெயித்தால் யு.கே.ஜி. முதல் கல்லூரி வரை இலவச கல்வி கொடுப்போம். தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று கூறி வருகிறார்கள். அந்த மாற்றம் நிச்சயம் வரும்.

அதை தி.மு.க–காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே கொண்டு வர முடியும். கொண்டு வருவோம். காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியை ஜெயிக்க வைப்போம். தமிழகத்தின் மகளாக, மருமகளாக நான் கேட்கிறேன்.

மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க– காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என பேசியுள்ளார்.

100 குழந்தைகள் பெரும் முயற்சியில் வைத்தியர்!!

Doct

பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14 மகன்கள் உள்ளனர்.

இவருக்கு கடந்த வாரம் தான் 2ஆவது மற்றும் 3ஆவது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன.

இவ்வளவு பெரிய குடும்பத்தை சிரமமின்றி நிர்வகிப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘சமீபத்தில் எனது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதனால் தற்போது எனது குழந்தைகள் எண்ணிக்கை 35 ஆகிவிட்டன.

இதனால் மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு 4ஆவது திருமணம் நடந்தால் 100 குழந்தைகளை பெற வேண்டும். அதுவே எனது ஆசையும் இலட்சியமும் ஆகும்.

எனது 3 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பராமரிக்க மாதம் 1 இலட்சம் ரூபா வரை செலவாகிறது. நான் தரமான வைத்தியராக இருக்கிறேன். சிறிய அளவில் வியாபாரமும் செய்கிறேன். அதன் மூலம் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியகிறது’ என்றார்.

குறைந்த இண்டர்நெட் வேகம் : நாடுகளின் விபரம்!!

Internet

இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் “Fourth Quarter, 2015, State of the Internet Report” வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னோலஜிஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்றாக கருதப்படுகிறது.

உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது.

மிகக்குறைந்த சராசரி வேகத்தில் இண்டர்நெட் சேவையை கொண்டிருக்கும் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. மொபைல் இண்டர்நெட் சராசரி வேகத்தில் பிரிட்டன் 26.8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்பெயின் 14 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. ஈரான் மற்றும் வியட்நாம் நாடுகள் மிகவும் குறைந்த வேகத்தில் மொபைல் இண்டர்நெட் சேவையை வழங்குகின்றன.

அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தின் சராசரியில் சிங்கப்பூர் (135.7 எம்.பி.பி.எஸ்) முதலிடத்திலும் இந்தியா (21.2 எம்.பி.பி.எஸ்) கடைசி இடத்திலும் உள்ளன.

வவுனியாவில் மருதநிலா விளையாட்டுக்கழகத்திற்கான அலுவலகம் திறந்துவைப்பு!!

 
வவுனியாவில் முன்னணி விளையாட்டுக்கழகமாக மருதநிலா விளையாட்டுக்கழகத்திற்கான அலுவலகம் இன்று (25.03.2016) காலை வவுனியா கற்குழியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி. நட்ராஜ், சிறிரேலோ கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. ஜனா ஜனகன், ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுக்கழகத்தின் அலுவலகத்தினை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் கற்குழி அம்மன் கோவில் நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் சங்கம், சமுர்த்திச்சங்கம், சனசமூக நிலையம், வவுனியா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

20160325_084657 20160325_084734 20160325_085509 20160325_093351 news (1) news (2) news (3)

வவுனியாவில் 98 காச நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!!

Kaasam

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு 98 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக வவுனியா பொது வைத்திசாலையின் காசநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையால் உலக காசநோய் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

காசநோய் ஒரு பரம்பரை நோயல்ல மாறாக அது மாற்றக்கூடிய ஒரு நோயாகவே இருக்கிறது என தெரிவித்த அவர், வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 98 காச நோயாளர்களும், இலங்கையில் பத்தாயிரம் காச நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

கோடையில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை!!

Beauty-Tips

கோடை வெயிலில் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே வரும். இத்தனை நாட்கள் காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இதனை தவிர்க்க கோடை வெயிலில் வெளியில் சென்று வந்த பின் இதை முகத்திற்கு போட்டு வந்தால் சருமத்தின் நிறத்தை பாதுகாக்கலாம்.

எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள்.

• பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

• வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

• ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

• கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

• மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

• சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.

 

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா தூதுவர்களாக நியமனம்!!

Nayanthara-and-AnushkaTrisha

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந் திகதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பிறமொழி நடிகர்களும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள். ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டு உடல் நிலையை கருதி முதல் பந்தை வீசி போட்டியை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் கமல்ஹாசன் ஒரு அணி சார்பில் விளையாடுவார் என்று தெரிகிறது.

நட்சத்திர கிரிக்கெட்டில் 8 அணிகள் மோதுகின்றன. ஒரு அணியில் 6 நடிகர்கள் இருப்பார்கள். இதன்மூலம் எல்லா அணிகளுக்கும் சேர்த்து 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும்.

முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதியில் மோதும். அதில் ஜெயிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும். காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விளையாட்டுகள் நடைபெறும்.

சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ், ஜீவா, விஷ்ணு உள்ளிட்ட 8 பேர் அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கதாநாயகி தூதுவராக இருப்பார். நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட கதாநாயகிகள் தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
ஒவ்வொரு அணிக்கும் சென்னை, மதுரை, திருச்சி என்று ஊர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. நடிகர்கள் தற்போது படப்பிடிப்பு ஓய்வில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நட்சத்திர கிரிக்கெட்டில் அனைத்து நடிகர்-நடிகைகள் மற்றும் வெளி மாநில நடிகர்கள் பங்கேற்க இருப்பதாலும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரள்வார்கள் என்பதாலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் தேர்தல் கமிஷனரிடமும் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஸ்டேடியத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

 

சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!

Surya Latest HD Photos  (2)

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் விரைவில் 24 என்ற படம் திரைக்கு வரவிருக்கின்றது.ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்து ரசிகர்களை கவர, பாடல்கள் எப்போது வரும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் மார்ச் 28ம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கும் என கூறிய நிலையில், தற்போது இந்நிகழ்வை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்களாம். இச்செய்தி சூர்யா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம்!!

159364166cruyff2

நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை மூன்று முறை பெற்றவர் ஜோஹன் கிரப். இவரது தலைமையிலான நெதர்லாந்து அணி 1974-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தது.

 

மரண அறிவித்தல் : தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம்!!

Thevathasan

தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம்
தோற்றம் 1954-02-28 மறைவு 2016-03-24

வவுனியா கோவிற்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை அன்று காலமானார்

அன்னார் அமரர் திரு திருமதி தேவதாசன் அவர்களின் அன்புப் புதல்வனும், நேசராணியின் அன்புக்கணவரும் நொய்லின் நிலானி, ஜெரால்ட் நிக்ஷன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஞானசூரியன், அபர்னா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி எதிர்வரும் 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு இறுதி நல்லடகத்திற்காக இறம்பைக்குளம் புனித அந்தோனியார் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கோள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

இறந்ததாக கருதப்பட்ட மாணவி உயிர் பிழைத்த அதிசயம்!!

1 (44)

இறந்ததாக கருதப்பட்ட மாணவி உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ்தெரு பகுதியை சேர்ந்தவ பாட்ஷா பரீதா தம்பதியருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இதில், மூத்த மகள் யாஸ்மின் (16), சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 19ம் திகதி இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாட்ஷா, மகள் யாஸ்மினை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த யாஸ்மின் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து பூச்சி மருந்தை குடித்துள்ளார்.இதையடுத்து சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அவரை இனி காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறிய நிலையில் நேற்று முன் தினம் யாஸ்மின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.அவசர ஊர்தியில் யாஸ்மினை வீட்டிற்கு அழைத்து சென்றபோது யாஸ்மின், திடீரென பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார்.அவர் இறந்து விட்டதாக நினைத்த பெற்றோர் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, நேற்று முன் தினம் மாலை உறவினர்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, உறவினர் ஒருவர் யாஸ்மினின் கையை பிடித்து பார்த்த போது நாடி துடிப்பு இருந்ததை அறிந்து ஆச்சர்யமடைந்துள்ளார்.எனவே அவரை உடனடியாக சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய ரயில் போக்குவரத்து நேர அட்டவணை அறிவிப்பு!!

Sri_Lankan_trainNorthern_LineSri_Lanka

இலங்கை ரயில்வே திணைக்களம் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

பிரதான ரயில் மார்க்கங்கள், வடக்கு ரயில் மார்க்கம், கடற்கரை ரயில் மார்க்கம் மற்றும் மாத்தளை ரயில் மார்க்கம் ஆகிய மார்க்கங்களினூடாக பயணிக்கும் ரயில்களுக்கே புதிய நேர அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் தேவைக்கு ஏற்ப இதில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

அனுமதிப்பத்திரமின்றி வளர்க்கப்பட்ட 37 யானைக் குட்டிகள் மீட்பு!!

tumblr_o2esz2dhNG1up2jnio1_1280

சட்டவிரோத அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளை மீட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வளர்க்கப்பட்ட 37 யானைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீட்கப்பட்ட யானைகளில் 18 யானைகள் பின்னவல யானைகள் சரணாலயத்திலும், 12 யானைகள் உடவலவை யானைகள் சரணாலயத்திலும், மேலும் 4 யானைகள் உடவலவ யானைக் காப்பகத்திற்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருடன் இணைந்து சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட யானைக் குட்டிகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!!

1 (19)

கம்பொளை பிரதேசத்தில் பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22ம் திகதி 10 வயதுடைய குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக நேற்று சிறுமியின் தந்தையினால் கம்பொளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.52 வயதுடைய ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

 

வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!!

arrest (1)

75 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QL 669 என்ற விமானத்தில் ஸார்ஜா நகரம் நோக்கி செல்ல முற்பட்ட போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

சந்தேகநபர் 44 வயதுடைய இந்தியப் பிரஜை என தெரிய வந்துள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துத் தடை!!

 
வவுனியாவில் இன்று காலை(25.032016) பாரியளவான ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதான வீதியின் போக்குவரத்துத் தடைப்பட்டதுடன் வாகனப் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பெரும் திரளான பொது மக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போகஸ்வலாவே பகுதியிலுள்ள தமது 32 கிலோ மீற்றர் தூரமான வீதியை செப்பனிடுமாறு கோரியே அப்பகுதி மக்கள் இன்று காலை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அத்துடன் நோயாளரை வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த நோயாளர் காவு வண்டியை செல்லவிடாது வழிமறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

P1190963 P1190964 P1190965 P1190966 P1190967 P1190968 P1190969 P1190970 P1190971 P1190972 P1190973 P1190974 P1190988 P1190991 P1190992 P1190994 P1190995 P1190996 P1190997 P1190998 P1190999 P1200002 P1200003 P1200004