முஸ்லீம்களின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ்!!

875411139pop2

ரோம் நகரில் அகதிகள் முகாம் ஒன்றில், கத்தோலிக்க திருச்சபையின் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் பிரார்த்தனை நிகழ்வு ஒன்றின் போது, போப் பிரான்ஸிஸ் முஸ்லீம் மற்றும் பிற குடியேறிகளின் கால்களைக் கழுவினார்.

கேஸ்டல்நுவோ டி போர்டோ என்ற இடத்தில் உள்ள , தஞ்சம் கோரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முகாம் ஒன்றுக்கு அவர் விஜயம் செய்த போது இது நடந்தது. பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்களை அடுத்து எழுந்திருக்கும் கொந்தளிப்பான உணர்வுகள் நிலவும் சூழலில் இந்த விஜயம் வந்திருக்கிறது.

பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் ஆற்றிய உரையில், போப் பிரான்ஸிஸ் ,பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களை ரத்த வெறி பிடித்தவர்கள் செய்யும், போருக்கான சமிக்ஞை என்று வர்ணித்தார்.

குண்டுத்தாக்குதல் நடத்தியவர்களின் உலகப் பார்வையை தனது கூட்டத்தில் கூடியிருந்தோரின் மனப்பாங்குடன் மாறுபடுத்தி ஒப்பிட்டு அவர் பேசினார். “எம்மிடம் பல கலாசாரங்களும், மதங்களும் இருக்கின்றன ஆனால் நாம் எல்லோரும் சகோதரர்கள் , அமைதியாக வாழவே விரும்புகிறோம்”, என்றார் அவர்.

 

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசகர் கைது!!

arrest

அம்பாறை, கோமாரி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் வயோதிப பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமாரி மணல்சேனை பகுதியைச் சேர்ந்த (வயது 65) நிரம்பிய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருடன் தொடர்புகளை வைத்திருந்த குறித்த பூசகர், இச்சிறுமிக்கு ஆபாச வார்த்தைகளைக் கூறி பழகி வந்துள்ளதோடு பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.பின்னர் இச்சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியினையடுத்து இவருடைய தாயார் இச்சிறுமியை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்ததைத் தொடர்ந்து வைத்தியர்கள் மேற்கொண்ட உடல் பரிசோதனைக்கிணங்க சிறுமி தாய்மை அடைந்திருக்கின்ற விடயம் தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாயார் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளுக்கமைய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

 

65 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கு எதிராக வடமாகாண சபையில் அவசர பிரேரணை நிறைவேற்றம்!!

NPC-02-11-15

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத் திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதுவரையில் அந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோருகின்ற அவசர பிரேரணையொன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் ​நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக நேற்று வியாழக்கிழமை (24) தொலைநகல் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவைத்தலைவர் கூறினார்.

தலா 2.1 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்படும் இந்த வீடுகள் வடமாகாணத்துக்கு பொருத்தமில்லாத வீடுகள் என வடமாகாண சபை இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஜப்பானிய இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!!

MSMajestyOfTheSeasEdit1

ஜப்பானின் இரண்டு கடற்படை கப்பல்கள் இலங்கை வந்துள்ளன கொழும்பு துறைமுகத்தில் இந்த இரண்டு கப்பல்களும் நேற்று நங்கூரமிட்டன.யுடாச்சி மற்றும் யுகாரி என்ற என்ற கப்பல்களே நல்லிணக்க விஜயத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் பயணித்தவர்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பை அளித்தனர்.இதன்போது இலங்கையின் மேற்கு பிராந்திய கடற்படை தளபதிக்கும் கப்பலின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.இதேவேளை அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்று நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

பிரித்தானியாவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன 13 மாத குழந்தையின் உயிர்!!

uk_baby01

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் க்லேஹால் பகுதியில் உள்ள க்லெஹால் அவன்யூவில் வசித்துவருபவர்கள் வஜிட் ஆலாம் மற்றும் நசியா ஆலாம். இவர்களது 13 மாத குழந்தையான சாரா ஆலாமுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள A&E மருத்துவமனையில் காலை 7 மணியளவில் அனுமதித்தனர்.

அப்போது குழந்தையின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக செவிலியர் தெரிவித்துள்ளார்.பின்னர் இரவு பணியில் இருந்த மருத்துவர் வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் குழந்தைக்கு ஒன்றுமில்லை என்றும் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோரும் குழந்தையை வீட்டுக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரம் கழித்து குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது.

இதையடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனாது. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட 4 மணி நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்நிலையில் சாராவின் மரணத்துக்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என அவளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மரணவிசாரணை நடத்தும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

கொழும்பில் வரலாறு காணாத வெப்பம்! உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும். கர்ப்பிணிகளுக்கும் எச்சரிக்கை!!

hot weather construction

கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் சென்னை உள்ளிட்ட பிரதேசங்களில் வருடந்தோறும் நிலவும் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் உயர்வெப்ப நிலைக்கு சமாந்தரமான முறையில் கொழும்பிலும் தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது.

கொழும்பில் தற்போது 33.3 செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றது. பொதுவாக மனித உடல் 31 செல்சியஸ் வரையான வெப்ப நிலையை மட்டுமே தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது.அதற்கு கூடிய வெப்ப நிலை நிலவும் போது சிறுநீரகங்கள், இருதயம் மற்றும் மூளையின் செயற்பாடுகள் பாதிப்படையாம் என்று கூறப்படுகின்றது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய வான் வெளியின் உயர்அடுக்கில் வீசும் காற்றில் போதுமான ஈரப்பதன் இல்லாதிருப்பதன் காரணமாக மேகங்கள் உருவாகும் நிலை தடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே வெப்ப நிலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் தற்போதைய வெப்பநிலையானது எதிர்வரும் மே மாதம் வரையிலும் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப நிலை தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போத அசாதாரணமான வெப்ப நிலைமை காணப்படுகின்றது.கர்ப்ப்பிணி பெண்களின் சாதாரண உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது கருவை பாதிக்கும் என மகப்பேற்று மருத்துவ நிபுணர் டொக்டர் ருவான் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மாரின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.38 செல்சியஸ் பாகை வெப்பநிலையில் கர்ப்பிணிகள் நான்கு மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும்.அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க கர்ப்பிணி தாய்மார் அதிகளவு நீரை பருக வேண்டும் என டொக்டர் ருவான் சில்வா தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் 14 ½ கலா கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது!!

 
வவுனியாவில் நேற்று 14 ½ கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து பொதி செய்யப்பட்டு வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவினை வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் பேதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் திட்டமிடப்பட்ட அடிப்படையிலேயே கஞ்சா விற்பனையாளர்களிடம் தொடர்பு கொண்டு டீல் பேசியே கஞ்சாவினை வவுனியாவிற்கு எடுத்துவரும்படியும் அதனை வவுனியாவில் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து பருத்தித்துறை பகுதியிலிருக்கும் 19 வயதுடைய இளைஞரே மேற்படி கஞ்சாவினை எடுத்துவந்து வவுனியா சாந்தசோலைப் பகுதியில் வைத்திருந்தபோது பொலிசார் கஞ்சாவினையும் இளைஞனையும் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

image-2cf82ed3bdb2c1ab783a9e31acb584194b76f8eecb7b4d39a65d7b1a36c732f7-V image-6fcaeb8ee3987ba1d8d0e7f49ca70fc971aedfe3f2d5e974ac17d44c9d03ed11-V image-7dd5dfa1ce6128cd47d44fe0dc611d75dbfe5151a232505f94a3f41c38d1405d-V image-8524a6de84b91f7f73d7a51f52180726002b2ae1d085fe88d05246b37104cad6-V

ஏன் வெற்றிபெற்றேன் எனத் தோன்றுகின்றது : ஆனந்த் உருக்கம்!!

Aravind

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதை தொடர்ந்து வெளிவந்த செய்திகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனந்த் ஏற்கனவே படங்களில் பாடியவர், இந்த தொலைக்காட்சி மக்களை ஏமாற்றிவிட்டது என கூறினர். இதுக்குறித்து ஆனந்த் ‘கடந்த இரண்டு தினங்களாக நான் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி இருக்க வேண்டும்.

ஆனால் இந்த வெற்றி எனக்கு அப்படியான ஒரு சந்தோஷத்தைத் தரவில்லை. இந்தத் தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கும், தொலைக்காட்சிக்கும் நன்றி, நான் பல இசையமைப்பாளர்கள் வீட்டிற்கு முன் வாய்ப்பிற்காக தெருவில் நின்று இருக்கிறேன். அப்போது கூட நிம்மதியாக இருந்தேன், ஆனால், தற்போது மிகவும் கஷ்டமாக உள்ளது’ என உருக்கமாக கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோர்களுக்கு எச்சரிக்கை : குழந்தைகளுக்கு ஆபத்தான நோய் பரவுகின்றது!!

Skin

தற்போது நாட்டில் நிலவும் அதிகூடிய வெப்பநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் ஒருவித தோல் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தோல் நோய் தொடர்பில், றுகுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுஜீவ அமரசேன விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு,

இந்த காலப்பகுதியில் நிலவிவரும் அதிகூடிய வெப்பநிலை காரணமாக குழந்தைகள் உடலில் வியர்குரு போன்று ஒருவகை தோல் நோய் பரவி வருகிறது.

குறித்த தோல் நோய்க்கு கிரீம் பயன்படுத்துவதால் எவ்வித பயனும் இல்லை.
இது இரண்டு அல்லது மூன்று நாட்களில் தானாகவே மறைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறீர்களா?..கட்டுப்படுத்த இதோ சில வழிகள்!!

bigstock-portrait-of-young-angry-man-52068682

கோபம் தலைக்கேறினால் பத்து வரை எண்ணுங்கள் என்ற அறிவுரை சிறு பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல.உச்ச கட்ட கோபத்தில் இருக்கும் போது நிதானமாக கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து சுவாசித்து, ஒன்று முதல் பத்து வரை பொறுமையாக எண்ணுங்கள்.இந்த திடீர் நிதானம், கோபத்தை தணிக்க உதவும். வேண்டும் என்றால், அந்த இடத்தை விட்டு அகல்வதும் சரியான ஆலோசனை.

பெரும்பாலும், கோபம் என்பது மற்ற மனக் கிளர்ச்சிகளின் வெளிப்பாடு. நீங்கள் நிஜமாகவே கோபம் ஏற்படுத்திய விஷயத்தின் மீது கோபத்தில் இருக்கிறீர்களா ? அல்லது மன உளைவு, அவமானம், பாதுகாப்பின்மை, புண்பட்ட நெஞ்சம், பயம் ஆகிய ஏதேனும் உணர்ச்சியின் உள்ளீடு தான் உங்கள் கோபமா? என்பதை முதலில் ஆராய வேண்டும்.

கோபத்தின் வேர் தெரிந்தால் அதற்கான தீர்வு காண முடியும். சினத்தின் தணலில் வாடும் போது, எதிராளியை நோக்கி வாய்க்கு வந்ததை சுலபமாக சொல்லி விட்டு, பிறகு வருந்துவதே மனித இயல்பு.

நேர்மாறாக, சில நொடிகளை செலவழித்து மனதை ஒருமுகப்படுத்தி, கோபத்திலும் என்ன பேச வேண்டும் என்று நம் மனதுடன் ஆலோசித்து விட்டு பேசினால் எந்த பிரச்னையும் சுமூகமாக முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சினத்தை எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய சவால் தான். கடுமையான கோபம் தணிந்தவுடன், உங்கள் கோபத்தை நல்ல முறையில் எடுத்துரைத்து புரிய வைக்க வழிகளை தேடலாம்.

கோபத்தில் இருக்கும் போது, கோபம் ஏன் வந்தது, எதற்கு வந்தது, யாரால் வந்தது என்று மட்டுமே ஆராய்ந்து ஆராய்ந்து மூளையை சூடாக்குவதை நிறுத்தி விட்டு, கோபம் வந்த காரணியை கண்டுபிடித்து அதற்கு ஒரு உடனடி தீர்வு காண்பது மிக்க அவசியம்.கோபம் எதையும் சீராக்காது, மேலும் மேலும் பிரச்சனைக்கே வழிகோலும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா? : டோனி ஆவேசம்!!

Dhoni

இந்தியா வெற்றிபெற்றது உங்களுக்குப் பிடிக்கலையா என்று இந்திய நாட்டு செய்தியாளரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் அணித் தலைவர் டோனி.

‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் டோனி இப்போதெல்லாம் அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார். தனது கோபத்தையம் அவர் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் நேற்று பங்களாதேஷிடம் போராடி இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை டோனி சந்தித்தபோது ‘நெட் ரன் ரேட்’ குறித்து இந்திய செய்தியாளர் ஒருவர் ஹிந்தி மொழியில் கேட்ட கேள்விக்கு கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

‘நெட் ரன் ரேட்’; நமக்கு சாதகமாக இல்லையே என்று அந்த செய்தியாளர் கேட்டபோது, ஒரு நிமிடம்…! இந்தியா வென்றது உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று நினைக்கிறேன். உங்களுடைய கேள்வி, கேள்வி கேட்கும் முறை எல்லாவற்றையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது என கோபமாக கூறினார்.

தொடர்ந்து டோனி கருத்து தெரிவிக்கையில், நாம் நாணய சுழற்சில் வெற்றி பெறவில்லை. இந்த ஆடுகளத்தில் எவ்வாறு துடுப்பெடுத்தாட முடியும் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த ஆடுகளத்தில் எம்மால் ஏன் அதிகம் ஓட்ட எண்ணிக்கையை எடுக்க முடியவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வெளியில் உட்கார்ந்து கொண்டு இதைப் பற்றியெல்லாமல் யோசிக்காமல் இருந்தால் நீங்கள் கேள்வியே கேட்கக் கூடாது என்றார்.

இதேவேளை குறுக்கிட்ட செய்தியாளர், டோனி சொல்வது போன்று இந்த வெற்றியால் இந்தியாவுக்கு சந்தோஷம்தான் என்றாலும் கூட, நெட் ரன் ரேட் நமக்குப் பாதகமாகத்தான் உள்ளது. அடுத்து நாம் அவுஸ்திரேலியாவுடன் இறுதி லீக் போட்டியில் ஆடவுள்ளோம். இப் போட்டியில் நாம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

அப்படி வெற்றி பெறத் தவறினால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்றார்.

136 ஆண்டுகளின் பின் அதிக வெப்பமான காலநிலை!!

Temp

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம் தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பெப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவானது கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும் போது, பெப்ரவரி மாதத்தில் பதிவான அதிகளவு வெப்பநிலை என நாசா தெரிவித்துள்ளது.

அது மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல் நினோ காரணமாக இந்த பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

1880ம் ஆண்டு முதல் உலக அளவில் வெப்ப நிலை மாற்றம், மழை அளவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகபாம்பை திருமணம் செய்துகொள்ள முயற்சித்த இளைஞர்!!

news_08-04-2015_5snake

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நாகப்பாம்பொன்றை திருமணம் செய்துகொள்வதற்கு முயற்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான சந்தீப் பட்டேல் எனும் இந்த இளைஞர், சில வருடங்களுக்கு முன் பாரிச வாதத்துக்குள்ளானவர். இதனால், பாம்பு போன்று ஊர்ந்து செல்லும் இவர், தன்னை மனித உருவிலுள்ள பாம்பு எனக் கூறிக்கொள்கிறார்.

இவர் நாகப்பாம்பொன்றை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். அழகிய பெண்ணாக இருந்து பாம்பாக மறுபிறப்பெடுத்துள்ள ஒருவரை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இவர் கூறினார். அதையடுத்து, 12,000 இற்கும் அதிகமான மக்கள் இத்திருமணத்தை காண்பதற்கு சந்தீப் பட்டேலின் ராஜ்பூர் கிராமத்தில் திரண்டனர். வாரணாசி மாவட்டத்திலிருந்து மாத்திரமல்லாமல், அருகிலுள்ள அலஹாபாத், சோனேபத்ரா, அஸாம் கார்த் போன்ற மாவட்டங்களி லிருந்தும் மக்கள் அங்கு சென்றனர்.

அருகிலுள்ள மலையொன்றில் வசிப்பதாக கூறப்பட்ட மணமகளான பாம்பு திருமண வைபவத்துக்காக வரும் என நம்பிய மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் அப்பாம்பு அங்கு வரவில்லை. இம்மக்கள் கூட்டத்தை உள்ளூர் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் பல்வேறு பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். மக்களை கலைந்துசெல்லுமாறு பொலிஸார் கோரியபோதும் திரண்டிருந்த மக்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டது. பாம்புக்கும் சந்தீப் பட்டேலுக்கும் திருமணம் நடத்திவைக்கவிருந்த மதகுரு பொலிஸாரைக் கண்டவுடன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் சந்தீப் பட்டேலையும் அவரின் தந்தையான தயாசங்கர் பட்டேலையும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்தனர்.
இவர் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரியாது. இவர் மனித உருவிலுள்ள பாம்பு என சிலர் வதந்தி பரப்புகின்றனர். இந்த நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சந்தீப் பாம்பு போன்று நடிக்க ஆரம்பித்துவிட்டார்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 

வவுனியா பொது வைத்தியசாலையில் காச நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!!

 
உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் காச நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு வவுனியா வைத்தியசாலை காசநோய் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

காச நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் முச்சக்கர வண்டிகளில் காசநோய் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டு நகரில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றதுடன், மக்களுக்கு விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.

இதில் காசநோய் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரிகள், தாதிய மாணவர்கள், பொலிஸார், முச்சக்கர வண்டி சாரதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

news (1) news (2) news (3)

பிளாஸ்டிக் பைகளில் காற்று விற்பனை- சீனாவில் வினோதம்!!

fresh-air-vendors-2

பிளாஸ்டிக் பைகளில் காற்றை அடைத்து விற்பனை செய்கின்ற விநோத சம்பவம் சீனாவில் இடம்பெற்று வருகின்றது. சீனாவின் லியாங்ஷன் மலைப் பகுதியில் வாழும் மக்கள் அங்கு குவியும் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மையான காற்றை பிளாஸ்டிக் பைகளில் உள்ளடக்கி விற்பனை செய்கின்றனர்.

இதன் மூலம் மலையேறும் போது கடுமையான பனிப்புகையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் பயன் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சாரதி இன்றி இயங்கும் ரோபோ!!

20120619-video-pizza-delivery-robot

தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்பாக, வாடிக்கையாளரின் வீடு வீடாக சென்று பீட்சாவை விநியோகம் செய்யும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உலக அளவில் பீட்சா விநியோகத்தில் முன்னணியில் உள்ள ‘டொமினோஸ்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தற்பொழுது உலகின் பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகின்றது. நிறுவனங்களின் வரவேற்று, பொருட்கள் தயாரிப்பு, வாடிக்கையாளர்களுக்கு அதனை விநியோகம் செய்தல் என பல வேலைகளை ரோபோக்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில், தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், மனிதர்களைப் போன்று வாகனத்தில் சென்று குறித்த வாடிக்கையாளரைத் தேடிப் பிடித்து பீட்சாவை விநியோகம் செய்யும். இந்த ரோபோவுக்கான சோதனை ஓட்டம் நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் நகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோக்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் சாரதி இன்றி இயங்குகின்றன. இதற்கு பெட்டரியின் மின்சக்தி பயன்படுத்தப்படுகின்றது. இதில் பொருத்தப்பட்டுள்ள நகரும் திறன் அவை தங்கு தடையின்றி பயணம் செய்யவும் உதவுகிறது. சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் இயங்கக்கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.