பிரிட்டிஷ் பெண்ணொருவரின் அட்டையை திருடி மோசடி!!

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் வங்கி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேகநபர் ஹட்டன் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே நேற்று (19) கைது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் வங்கி அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இவர் கொள்ளையடித்துள்ளார்.

கொள்ளையிட்ட வங்கி அட்டை ஊடாக ஹட்டன் நகரில் தங்கை நகை, தொலைபேசி, ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளார். அதோடு தங்க நகையை ஹட்டனிலுள்ள தனியார் அடகு பிடிக்கும் நிலையமொன்றில் அடகு வைத்து 78 ஆயிரம் ரூபா பெற்றுள்ளார்.

தனது வங்கி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறையிட்ட நிலையில் அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணை வேட்டையில் இறங்கிய ஹட்டன் பொலிஸார், வாடகை வாகனமொன்றில் எல்ல நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

களவாடிய வங்கி அட்டையில் இருந்து வாங்கிய பொருட்களையும் மீட்டனர். பிரிட்டிஷ் பெண்ணை ஹட்டன் வரவழைத்து, வங்கி அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் , கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பியவரை அடித்துக் கொன்ற அயலவர்!!

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது. அதிக ஒலியை எழுப்பிய விதமாக பாடல் கேட்ட சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் காவல்துறையிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட வாக்குவாத்தின் போதே நபர் ஒருவர் மற்றுமொருவரை தாக்கியதில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!

நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (20) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . நேற்று முன்தினம் (17) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பகுதியில் பிரபல ஆசிரியர் ஒருவரின் புதல்வியான விஜயகுமார் சஞ்சிகா 15 அகவையுடைய மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் மாணவியின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்பனை செய்து மோசடி : அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது!!

அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாய்க்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாய்க்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பல பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை(20.01) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் டைபெறுவதால்,

நாளை (20.01.2025) நடைபெறவிருந்த தேர்வு பாடங்கள் சனிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மற்றும் மன்னார் உட்பட பல மாவட்டகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் உள்ள கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்றையதினம் (19.01.2025) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தீவில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் அதிக பலத்த மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குருணாகல் – கொழும்பு வீதியில் விபத்து ; பலர் காயம்!!

குருணாகல் – கொழும்பு பிரதான வீதி பொல்கஹவளை நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவகம் இடிந்து வீழ்ந்து விபத்து : பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு!!

ஹட்டன், கினிகத்தேன பகுதியிலுள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் கினிகத்தேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன நகருக்கு ஒரு பயிற்சி வகுப்பில் பங்கேற்க சென்ற மாணவர்கள், உணவு பெறுவதற்காக குறித்த உணவகத்திற்குச் சென்றுள்ளனர்.

மாணவர்கள் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் நின்ற தளம் இடிந்து சுமார் 15 அடி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. குறித்த உணவகத்தின் பாதுகாப்பற்ற கட்டுமானமே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை!!

டிக் டொக் (Tik Tok) செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் (US) உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இத்தடையை நிறைவேற்ற கூடாது என கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு பிறகு, தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் டிக்டொக் குறித்து எவ்வாறான நடவடிக்கை எடுப்பார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தடை குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஒப்படைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவில், டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் பாவனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா பயணிகள் பயணிக்க சிறந்த நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

2025ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் முதல் 10 இடங்களுக்குள் இலங்கையானது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பிபிசி டிராவல் (BBC Travel) இன் உலகின் தலைசிறந்த பயண இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியில் இலங்கை ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

சுற்றுலா வழிகாட்டியில் இலங்கையில் உள்ள மூடுபனி, மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள், சுற்றித் திரியும் காட்டு யானைகள், பழங்கால கோவில்கள் மற்றும் அலைச்சறுக்கு ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாக விவரிக்கப்பட்டுள்ளது,

பார்வையாளர்களுக்கு நம்பமுடியாத பயண அனுபவங்களையும் வழங்குகிறது.

கண்டியில் முதலாவது ஏழு நட்சத்திர ஹோட்டலை நிர்மாணித்தல், கொழும்பில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விடுதி நிர்மாணம் மற்றும் இலங்கையை தூர கிழக்குடன் இணைக்கும் புதிய விமான சேவையை ஆரம்பித்தல் உட்பட இலங்கையின் பல அபிவிருத்திகளை இந்த வழிகாட்டி முன்னிலைப்படுத்தியுள்ளது.

வளர்ப்பு நாயின் பிறந்த நாளை 5 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக கொண்டாடிய பெண்!!

பெண் ஒருவர் வளர்ப்பு நாயின் பிறந்த நாளுக்கு ரூ.5 லட்சம் செலவு செய்து பிரம்மாண்டமாக விழா நடத்தியுள்ளார்.

இந்திய மாநிலமான ஜார்கண்ட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்லப்பிராணியின் மீதான அன்பின் காரணமாக, தனது நாயின் பிறந்தநாளை ஆடம்பரத்துடன் கொண்டாடினார். இந்த நிகழ்விற்காக ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம், ஜம்சத்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சப்னா சோனா என்ற பெண் தனது வளர்ப்பு நாயின் 4-வது பிறந்த நாளுக்காக ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளார்.

சுமார் 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் நாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், வளர்ப்பு பிராணிக்காக ரூ.40,000 செலவில் கேக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க ஆரத்தி எடுக்கப்பட்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யாழில் சாரதி அனுமதி பத்திரத்தால் கனடா வாழ் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கனேடிய பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் போலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக கனடாவில் பிரஜாவுரிமை பெற்று வசித்து வரும் நபரே கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது நபர் ஒருவரின் உதவியுடன் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுள்ளார்.

அதன் பின்னர் கனடா சென்று, மீண்டும் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் (16) யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று தன்னுடைய தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க முயன்றுள்ளார்.

இதன்போதே அது போலியான அனுமதி பத்திரம் என அதிகாரிகள் கண்டறிந்தனர். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, போலி அனுமதி பத்திரத்தை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டார்.

மேலும் கைதான கனேடிய பிரஜையிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை!!

இலங்கையின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை இன்று (18) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடலில் மிதந்த பெண்ணின் சடலம் : உயிரிழந்தது யார்?

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்தொம்பே குடாகலபுவே பகுதியில் கடலில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று (17) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் சடலம் ஒன்று மிதப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொாடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

350 கிராம் எடையில் பிறந்த அதிசயக் குழந்தை!!

இந்தியாவின் கேரளாவில் 350 கிராம் எடையில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளது.

கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சஷிஷா என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது. உடனே, பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜோ ஜாய் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து தொடர்ந்து 100 நாட்கள் சிகிச்சை அளித்தனர்.

தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் எடை 1.850 கிலோ என்ற அளவில் உள்ளது.

தாயும், குழந்தையும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 350 கிராம் எடையுடன் பிறந்த நோவா, தெற்கு ஆசியா நாடுகளில் மிகக்குறைவான எடையுடன் பிறந்த முதல் குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளார்.