கர்ப்பமாக இருக்கிறேன் : அப்ரிடி தான் தந்தை : பரபரப்பைக் கிளப்பிய நடிகை அர்ஷிகான்!!(வீடியோ)

AFridi and Apsi Khan

பாகிஸ்தான் நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷி கான் அப்ரிடி பற்றி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் அணித்தலைவர் ஷாகித் அப்ரிடி இந்தியாவில் நடக்கும் T20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்று வருகிறார். அவர் அங்கு சென்ற போது இந்திய ரசிகர்களை புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அது சற்று தணிந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது. பாகிஸ்தான் நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷி கான் இந்திய செய்தி ஊடகம் ஒன்றிற்கு வீடியோ பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த குழந்தைக்கு அப்ரிடி தான் தந்தை எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அப்ரிடி தனது காதலர். அவர் சிறந்த நண்பர். முழுமையான பண்புள்ள மனிதர் மற்றும் படுக்கையில் ஒரு நல்ல காதலன் எனவும் கூறியுள்ளார். இவரது வீடியோவால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்காக பாகிஸ்தான் மதவாதிகள் அவருக்கு பத்வா விதித்திருந்தனர்.

மருத்துவமனையில் நடிகை ரோஜா!!

Roja

ஆந்திர சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் ஏற்பட்ட போராட்டத்தால் நடிகை ரோஜா மயங்கி விழுந்துள்ளார்.

கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசியதாக கூறி, சபாநாயகர் சிவபிரசாத் ராவால் சபையில் இருந்து ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து ரோஜா தொடர்ந்த வழக்கில், ஆந்திர சட்டசபை சபாநாயகர் விதித்த ஓராண்டு நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நடிகை ரோஜா நேற்று காலை வந்துள்ளார், அவரை சபைக்குள் நுழைய விடாமல் சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ரோஜாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பந்தை எறிகிறார்கள் : வங்கதேச வீரர்கள் தஸ்கின், சன்னிக்கு இடைக்காலத் தடை!!

Ban

வங்கதேச பந்துவீச்சாளர்களான தஸ்கின் மற்றும் அராபத் சன்னிக்கு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது வங்கதேச அணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச பந்துவீச்சாளர்கள் தஸ்கின் அகமது (வேகம்), அராபத் சன்னி (சுழல்) இருவரது பந்துவீச்சும் எறிவது போல் உள்ளதாக நடுவர்கள் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர்களது பந்துவீச்சு பாணி குறித்து சென்னையில் உள்ள ஐசிசி அங்கீகாரம் பெற்ற மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவை விட முழங்கை கூடுதலாக வளைவதாக கண்டறியப்பட்டது.

இதனால் தஸ்கின், சன்னி இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது.
அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சேர்க்க வங்கதேச அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னணி பந்துவீச்சாளர்களான இவர்களுக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால், வங்கதேச அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

என் கணவரின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் : கலாபவன் மணியின் மனைவி!!

Kalabhavan-Mani-family-Wife-Nimmy

என் கணவர் கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவரது மனைவி கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணவரின் உடல் இரசாயன பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், இந்த மரணம் குறித்து உயர் மட்டக் குழு அமைத்து விசாரிக்கவும் தயார் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கலாபவன் மணி மனைவி நிம்மி அளித்த பேட்டியில், எனது கணவர் கலாபவன் மணி வாழ்க்கையின் மிகவும் கஷ்டப்பட்ட முன்னுக்கு வந்தவர்.

எனவே அவர் ஒருபோதும் தற்கொலை செய்யமாட்டார். அவர் மன உறுதிமிக்கவர். தற்கொலை எண்ணம் அவருக்கு வராது.

சமீப காலமாக அவர் மது அருந்துவதை நிறுத்தி இருந்தார். நண்பர்கள் வற்புறுத்தி தான் மது விருந்தில் அவரை மது அருந்த வைத்துள்ளனர்.
அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்றார்.

T20 உலகக்கிண்ண போட்டி சம்பியன் அணியின் பரிசுத் தொகை 24 கோடி!!

ICC

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

தற்போது 10 அணிகள் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று வருகின்றன. இதில் இருந்து அரையிறுதிக்கு 4 அணிகள் முன்னேறும்.

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் ஏப்ரல் 3ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன.

இதில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 24 கோடி ரூபா பரிசுத் தொகையாக கிடைக்கும். இது கடந்த தொடரை விட 5.70 கோடி ரூபா அதிகமாகும்.

அதேபோல் இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 10.3 கோடி ரூபாவும், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு 5.14 கோடி ரூபாவும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

உலக கிண்ணத்தை வென்று 20 வருடம் பூர்த்தியை முன்னிட்டு விசேட கண்காட்சிப் போட்டி!!

1

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கண்காட்சி கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

கொழும்பு சீ.சீ.சீ. மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பழைய மற்றும் புதிய கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற அர்ஜூன ரணதுங்க தலைமையிலான அணியின் வீரர்களும், சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் ரோய் டயஸ் தலைமையிலான அணியும் விளையாடிய போட்டியை கண்டுகளித்த ஜனாதிபதி, அவர்களுக்கான பரிசுகளையும் வழங்கினார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் ஆரம்பம் முதல் விளையாடிய சிரேஷ்ட வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதியின் கையால் அவர்களுக்கு இந்த பரிசுகள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை இன்று நடத்தப்பட்ட போட்டியில் திரட்டப்பட்ட நிதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சிறுநீரக நோயாளர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் அதற்கான காசோலையை சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம ஜனாதிபதியிடம் கையளித்தார்.

2 3 4 5 6 7 8 9 10 11 12

மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்லமாட்டேன் : மிஷல் ஒபாமா!!

Obama

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல மாட்டேன் என்று முதல் பெண்மணி மிஷல் ஒபாமா அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டு தடவைக்கு (மொத்தம் 8 ஆண்டுகள்) மேல் இருக்க முடியாது என்பது விதியாகும். இரண்டாவது தடவையாக பதவியேற்ற ஜனாதிபதி ஒபாமாவின் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதால் வெள்ளை மாளிகையிலிருந்தும் வெளியேற வேண்டும்.

கடந்த எட்டு ஆண்டுகளாக ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, முதல் பெண்மணியாக பல்வேறு சமூக நலப்பணித்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். குறிப்பாக, குழந்தைகள் நலன் மீது அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.

பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் வழியில், மிஷல் ஒபாமாவும் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஒபாமா போலவே, இலனாய் மாநிலத்திலிருந்து செனட்டர் பதவிக்கு முதலில் போட்டியிடுவார். தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளராகவும் களம் காண்பார் என்ற பேச்சும் எழுந்த்து.

இந்நிலையில், விழா ஒன்றில் பங்கேற்ற மிஷல், தனக்கு மீண்டும் வெள்ளை மாளிகை செல்ல விருப்பமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். கட்சி சார்ந்த அரசியல் இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக இருந்து சமூகப்பணி ஆற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எட்டாண்டுகளாக தனது குழந்தைகள் வெள்ளை மாளிகை வாழ்க்கையில் மிகவும் தனிமைப்பட்டு விட்டனர். இனி அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றார். மிஷல் ஒபாமாவின் இந்த முடிவு நிரந்தரமான ஒன்றா அல்லது குழந்தைகள் பெரியவர்களானதும் அரசியல் பக்கம் வருவாரா என்பது தற்போதைய புதிராகும்.

ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி : புலம்பும் நடிகை!!(வீடியோ)

Afridi

பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார்.

முன்னர், ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார்.

இந்த மாதிரி பைத்தியத்தை தலைவராக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில், கடந்த வாரம் குவான்டீல் பலூச் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார்.

T20 உலக கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் இரு முறை மோதுகிறது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் முழுதேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அந்த வீடியோ செய்தியில் அவர் கூறியிருந்தார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்தார். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் என அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிவாகை சூடியது. இந்தியாவின் இந்த அபார வெற்றி, பாகிஸ்தான் இரசிகர்களுக்கு எத்தகைய வெறியை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கும் விதமாக சர்ச்சை நடிகை குவான்டீல் பலூச் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் தலைவர் ஷாஹித் அப்ரிடியை அந்த வீடியோவில் திட்டித் தீர்த்திருக்கிறார். ஏன் என்னை ஏமாற்றி விட்டாய், அப்ரிடி என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பும் குவான்டீல் பலூச், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களையும் எச்சரித்துள்ளார்.

இனி நீங்கள் பாகிஸ்தானுக்கு வரக்கூடாது. வரவேக் கூடாது. வந்தால் பாகிஸ்தான் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் எனவும் அவர் மிரட்டியுள்ளார்.

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் விபரம்!!

Exam-results

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில்…

1 ஆம் இடம் – சத்சரணி ஹெட்டியாராச்சி – விசாகா வித்தியாலயம், கொழும்பு

2 ஆம் இடம் – சாமல் புன்சர – நாலந்தாக் கல்லூரி, கொழும்பு

3 ஆம் இடம் – ஆர்.எம். ரத்நாயக்க – தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு

3 ஆம் இடம் – ஐ. ரத்நாயக்க – மாகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி

4 ஆம் இடம் – எம்.எம். ரனிது அர்ஜூன ஹேரத் – நாலந்தாக் கல்லூரி, கொழும்பு

5 ஆம் இடம் – நெவிலி அமரஜித் வல்பிட்ட – ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு

6 ஆம் இடம் – எம்.ஜே. இரூஷா நெத்சரா – பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

7 ஆம் இடம் – தருசா அன்ஜலிகா – ஶ்ரீ சுமங்கலிகா பெண்கள் வித்தியாலயம் – களுத்துறை

7 ஆம் இடம் – டிநெத் சன்சுலா ஜயகொடி – மேரிஸ்டெலா கல்லூரி – நீர்கொழும்பு

8 ஆம் இடம் – டபிள்யூ.டி.ஐ. சதுரங்க விஜயசிங்க – ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு

8 ஆம் இடம் – ஏ.எஸ். அமாயா நானயக்கார – சவுத்லன்ட்ஸ் கல்லூரி, காலி

8 ஆம் இடம் – டபிள்யூ.எஸ். டயஸ் வெல்லப்புளி – ராகுல கல்லூரி, மாத்தறை

பளை பகுதி கிணற்றில் இருந்து ஒன்றறை மாத சிசு, தாயின் சடலம் மீட்பு!!

Kinaru

பளை பகுதியிலுள்ள கிணறொன்றில் இருந்து தாய் மற்றும் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அவர்கள் சடலத்தை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதன்போது பலியானவர்கள் 32 வயதான பெண்ணும் அவரது ஒன்றறை மாத குழந்தையும் எனத் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகள் மூலம் நீரில் மூழ்கியமையே மரணத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடரும் சோகம் : மீண்டும் இந்திய அணியிடம் வீழ்ந்த பாகிஸ்தான்!!

IND

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான T20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இந்தப் போட்டிகள் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு மாலையில் கடுமையாக மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மாலை 07.30க்குத் தொடங்குவதாக இருந்த ஆட்டம் 8.10க்கே ஆரம்பமானது. அதன் பிறகு போட்டிக்கான ஓவர்கள் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் 18 ஓவர்கள் வீச முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் பந்து வீச்சைத் தேர்வுசெய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.

119 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 15.5 ஓவர்களில் 119 ஓட்டங்களை பெற்று இன்றைய போட்டியை தமதாக்கிக் கொண்டது.

விராட் கோலி 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தார்.

உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 11 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பது விஷேட அம்சமாகும்.

2015 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன!!

OL

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை இப்போது www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

அல்லது உங்கள் டயலொக் கையடக்கத்தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவௌியின் பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வவுனியா கருப்பனிசங்குளம் பாடசாலையில் சர்வதேச உணவூட்டல் தினம்!!

 
சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல் தினம் வவுனியா கருப்பனிசங்குளம் பாடசாலையில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியா கோட்டக்கல்விப் பணிமனையின் உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.வரதகுமார் கலந்து சிறப்பித்தார்.

அன்றை தினம் சிரமதானப் பணிகளும் சிறப்பான உணவு வழங்கலும் இடம்பெற்றது. இதன்போது பாடசாலைக்கு சிறந்த கிணறு ஒன்றை கட்டுவதற்கு நலன் .விரும்பிகளின் உதவியை நாடுவதாக அதிபர் தெரிவித்தார்.

20160303_114523 20160303_120351 20160303_120400 20160304_101238

வவுனியா நகரகோட்ட பாடசாலை மாணவர்களுக்கான திறனாய்வு போட்டி!!

 
வவுனியா நகரகோட்ட தமிழ்ப் பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான திறனாய்வு போட்டி கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஞா. இளையதம்பி தலைமையில் நேற்று (18.03.2016) மாலை நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி செ.அன்ரன்சோமராஜா மேலும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி சிதம்பரநாதன், வைத்தியர் புவிகரன், நகரசபை கணக்காளர் ஆகியோர் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை சார் நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

20160318_145012 20160318_145603 20160318_155317 20160318_155350 20160318_155434 20160318_160755 20160318_161448 20160318_161800 20160318_161906

வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைத்து துணிகரத் திருட்டு!!

Kalavu

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இயங்கிவரும் பிரபல்யமான ஜஸ்கிறீம் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில் நேற்று (18.03.2016) இரவு திருடர்கள் புகுந்து பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இயங்கிவரும் பிரபல்யமான ஜஸ்கிறீம் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நேற்று வேலைகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணியின் பின்னர் நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ளார் உரிமையாளர். எனினும் அங்கு பணிபுரியும் இருவர் நிறுவனத்தின் பின்புறமாக இருக்கும் அறையில் தங்கியிருப்பது வழமையானது சம்பவ தினம் இருவரும் அங்கு தங்குவதற்கு சென்றுள்ளனர்.

திருடர்கள் ஜஸ்கிறீம் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் செயற்படும் பகுதிக்கு போடப்பட்ட சிறியகம்பியிலான கதவினை உடைத்து அதனூடாக உட்புகுந்து அதனுடன் இணைந்திருந்த விற்பனை நிலையத்திற்குள் சென்று காசாளர் மேசையிலிருந்த ரூபா 10.000-ஆயிரம் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றதுடன் நிலையத்திற்குப் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவின் முக்கிய பகுதியினையும் களவாடிச் சென்றுவிட்டதாக அதன் உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்தலத்திற்குச் சென்ற வவுனியா பொலிசார் விசாரணையினை மேற்கொண்டதுடன் கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்ணிடம் பட்டப்பகலில் தங்கச் சங்கிலி அறுப்பு!!

Chain

வவுனியாவில் இன்று(19.03.2016) காலை கர்ப்பிணிப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலி ஒன்றை அறுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து திருடன் தப்பி ஓடியுள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பறநாட்டாங்கல் பகுதியில் வசித்து வந்த 5 மாதமான குறித்த கர்ப்பிணிப் பெண் சாந்தசோலையிலிருக்கும் குடும்பநல சுகாதார நிலையத்திற்கு இன்று காலை10 மணியளவில் சென்றுவிட்டு திரும்ப வீடு செல்வதற்கு வந்து கொண்டிருக்கையில் சாந்தசோலையிலிருக்கும் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் சென்று கொண்டிருக்கையில் பிரதான வீதியிலிருந்து வேகமாக பல்சர் மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர் ஒருவர் வயல் பகுதியை அண்டிய பகுதியில் திடீரென குறித்த பெண்ணின் கழுத்திலிருந்த ஒன்றரைப்பவுன் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு வேகமாகச் சென்றுள்ளார்.

கர்ப்பிணிப்பெண் கூச்சலிட்டு அலறிய சத்தத்திற்கு அருகிலிருந்த கடை உரிமையாளரின் உதவியுடன் அவசர பொலிஸ் தொலைபேசிக்கு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வவுனியா பொலிசார் அவ்விடத்திற்குச் சென்று விசாரணையினை மேற்கொண்டனர்/

கழுத்தில் கைவைத்து தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது கர்ப்பிணிப் பெண்ணுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து முறைப்பாட்டினை மேற்கொண்ட பொலிசார் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு தெரிவித்ததுடன் மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.