மதுபோதையில் பிரசவம் பார்த்த பெண் மருத்துவர்: பரிதாபமாக உயிரிழந்த தாயார்!!

surgery

பிரான்ஸ் நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டு மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்தபோது நிகழ்ந்த கவனக்குறைவால் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென் மேற்கு பிரான்ஸில் உள்ள Bayonne நகரில் Kappa Clinic என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு பிரித்தானிய நாட்டை சேர்ந்த Xynthia Hawke என்ற பெண்மணி பிரசவத்திற்காக கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி சென்றுள்ளார்.இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்த Helga Wauters என்ற பெண் மருத்துவர் தான் இவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.சுகப்பிரசவம் வாய்ப்பு இல்லாததால், அவருக்கு அறுவை சிகிச்சை(சிசேரியன்) மூலம் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து சில தினங்களாக தாயார் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.பிரசவத்திற்கு வந்த தாயாரின் வழக்கறிஞர் பேசியபோது, ‘சிசேசிரியன் சிகிச்சையை முடித்த பிறகு, அந்த பெண் மருத்துவர் தன்னுடைய சக மருத்துவர்களுடன் ‘வோட்கா’ எனப்படும் மதுவை அருந்த சென்றுள்ளார்.

மது அருந்திய பிறகு, தாயாரிடம் திரும்பி வந்து அவருக்கு மயக்க மருந்தும், மூச்சு விட சிரமமாக இருந்ததால் ஆக்ஸிசன் குழாயையும் பொருத்த வந்துள்ளார்.ஆனால், மயக்க மருந்தை செலுத்தியபோதே அவருடைய கை நடுங்கியுள்ளது. பின்னர், ஆக்ஸிசன் குழாயை பொருத்த அவர் மிகவும் தடுமாறியுள்ளார்.

இதனை தாயார் கவனித்தது மட்டுமின்றி மருத்துவரிடமிருந்து மது வாசனை வருவதையும் அவர் உணர்ந்துள்ளார்.இந்நிலையில் தடுமாற்ற நிலையில் இருந்த அந்த மருத்துவர், ஆக்ஸிசன் குழாயை மூச்சு காற்று செல்லும் குழாயில் பொருத்துவதற்கு பதிலாக உணவு செல்லும் குழாயில் தவறதலாக பொருத்திவிட்டு சென்றுள்ளார்.

இதனால், மூச்சு விடமால் தவித்த அந்த தாயார் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து, பெண் மருத்துவரை உடனடியாக சோதனை செய்தபோது அவரது ரத்தத்தில் 2.16 கிராம் அளவு மது கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பெண் மருத்துவர் மீதும் இவருக்கு உதவியதாக மற்றொரு மருத்துவர் மீதும் கொலை வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு நீதிமன்றத்தில் பெண் மருத்துவர் வாக்குமூலம் அளித்தபோது, ‘நான் மது அருந்திருந்தது உண்மை தான். ஆனால், போதையில் இருந்தாலும் என்னுடைய பணியில் 70 சதவிகிதம் கவனமாக இருந்தேன்.

சில நேரங்களில் மருத்துவம் பார்ப்பதற்கு எனக்கு மது தேவையாக உள்ளது. இல்லையெனில் எனது கைகள் நடுங்க ஆரம்பித்து விடும்’ என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தற்போது இரு மருத்துவர்கள் மீதான விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

மலைக்க வைக்கும் விஜய் மல்லையாவின் சொத்துப்பட்டியல்!!

M_Id_481076_Vijay_Mallya

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மலைக்க வைக்கும் சொத்துப்பட்டியல் விபரம் வெளியாகியுள்ளது.2011ம் ஆண்டு வாக்கில் மல்லையாவின் சொத்து மதிப்பு ‌சுமார் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்றும் 2013ல் இது 4 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்ததாகவும், உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவல் தெரிவிக்கிறது.

மல்லையாவிடம் ‌உள்ள சொத்துக்களில் மிகவும் மதிப்பு வாய்ந்தது பெங்களூர் UB city ல் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் அலுவலக கட்டடம். இக்கட்டடத்தின் உரிமையில் 55% பங்குகள் மல்லையா வசம் உள்ளது.

34 அடுக்குகளை கொண்ட இது பெங்களூரின் வெள்ளை மாளிகை எனப்படுகிறது. இது தவிர பிரான்ஸின் ‌சசாலிடோ என்ற கடலோர நகரத்தில் மாளிகை, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு, தென்னாப்ரிக்காவிலும் ஸ்காட்லாந்திலும் மாளிகைகள் லண்டனி‌ல் பண்ணை வீடு உள்ளது.பிரான்ஸ் நாட்டின் செய்ன்ட் மர்குரிட் என்ற ஒரு தீவையே மல்லையா தனக்கு சொந்தமா‌க்கியுள்ளார்.

இது தவிர மான்டிகார்லோ தீவிலும் மல்லையாவுக்கு இடம் உள்ளது. இந்தியாவில் சுற்றுலா சொர்க்கமான கோவாவில் ஓ‌ய்வெடுப்பதற்கென்றே 90 கோடி ரூபாயில் கிங்ஃபிஷர் வில்லா, மும்பையில் கிங்ஃபிஷர் ஹவுஸ் என்ற பெயரில் அலுவலக கட்டடம் உள்ளது.

இமாலய மலையருகில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களையும் மல்லையா வாங்கிக் குவித்திருப்பதாக தகவல் உள்ளது.மல்லையாவுக்கு வாகனங்கள் என்றால் கொள்ளை பிரியம். ஜெட் விமானங்கள், பிரமாண்டமான சொகுசு படகுகள், ஹெலிகொப்டர்கள், விலை மதிப்பற்ற பழங்கால கார்கள் என மல்லையாவின் வாகன வரிசை நீண்டுகொண்டே செல்கிறது.மல்லையா 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய சொத்துக்களை தான் பெற்ற கடனுக்கு பிணையாக வைத்துள்ளார்.

 

கனடாவிலிருந்து காதலர் கதறக் கதற ஸ்கைப்பில் தற்கொலையை “லைவ்” செய்த காதலி!

canada

காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. கந்திராபாத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது.
இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில், பத்திரிக்கையாளராக பணியாற்றிய நிரோஷா, அண்மையில் தான் ஜெமினி டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார். நிரோஷாவின் காதலர் பெயர் ரித்விக் என்றும், அவர் கனடாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தமாதம் நிரோஷாவிற்கு திருமணம் நடைபெற இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தான் திடீரென தற்கொலை முடிவை நாடியுள்ளார் நிரோஷா. நிரோஷாவின் இந்த துயர முடிவிற்குக் காரணம் காதல் விவகாரம் தான் எனக் கூறப்பட்டது.தற்போது அதனை நிரூபிப்பதுபோல், தனது காதலருடன் ஸ்கைப் மூலம் வீடியோ அழைப்பில் பேசியவாறே, நிரோஷா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதோடு, கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்தில் இருந்துள்ளார் நிரோஷா.

அதே மனநிலையில் தனது காதலருடன் வீடியோ அழைப்பு ’ மூலம் பேசி உள்ளார் நிரோஷா. அப்போது தனது காதலரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.அதோடு, சொன்னபடி தூக்கிட்டும் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது காதலர் உடனடியாக நிரோஷாவின் பெற்றோருக்கும், அவர் தங்கியிருந்த விடுதிக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் விடுதி ஊழியர்கள் நிரோஷாவின் அறைக்கதவை தட்டியும் திறக்காததால், போலீசாரின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து, அவரது சடலத்தை மீட்டுள்ளனர். இதுகுறித்து ராம்கோபால் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, நிரோஷாவின் செல்போன் அழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அதி பிரமாண்டமான நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!!

Pulsar highly magnetized, rotating neutron star

பிரபஞ்சத்தில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டவைகளிலேயே அதி பிரமாண்டமான 9 நட்சத்திரங்களை பிரித்தானியாவின் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹபல் விண்வெளி ஆய்வு தொலை நோக்கியின் ஊடாக இவை கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய விஞ்ஞான சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது

சூரியனைக் காட்டிலும் 30 மில்லியன் மடங்கு பெரியவையாக இந்த நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.

பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 70ஆயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இந்த நட்டசத்திரங்களும், அதன் மண்டலமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் கல்லாறு சித்திவிநாயகர் வித்தியாலயத்தை பார்வையிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள்!!

 
வவுனியா செட்டிகுளம் கல்லாறு சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அமெரிக்கா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து ROOM TO READ இன் வெளிநாட்டு அலுவலர்கள் பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.

இன் நிகழ்வானது பாடசாலை அதிபர் திருமதி இ.கனகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் Global Literacy Director Claire Wyatt மற்றும் Alisha Berger, Peter Berger, Global Literacy Director (இலங்கை ) திரு ஆறுமுகம் செல்வரதினம் மற்றும் வவுனியா தெற்கு வலய பிரதிகல்விப் பணிப்பாளர் திருமதி மாணிக்கவாசகம் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான திரு விஜயகாந்த், திருமதி அருள்வாணி மற்றும் ROOM TO READ இன் நிகழ்ச்சி திட்ட அதிகாரி திரு பிராங்க்ளின் சொய்சா மற்றும் ROOM TO READ இன் வவுனியா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையின் கல்வி நடவடிக்கை சிறப்பாக உள்ளதாக வெளிநாட்டு அதிகாரிகள் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

image1 image2 image3 image4 image5 image6 image7 image8

வவுனியா வெண்கல செட்டிக்குளம் கோட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா வெண்கல செட்டிக்குளம் கோட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (17.03.2016) வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகாவித்தியலயத்தில் வெண்கலச்செட்டிக்குளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் ச.யேசுதாசன் தலமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களாக இ.இந்திரராசா, ம.தியாகராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_8285 IMG_8287 IMG_8292 IMG_8325 IMG_8336 IMG_8359 IMG_8369 IMG_8370 IMG_8371 IMG_8372 IMG_8378

தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டி- 2016!!

index

இலங்கையில் முதல் தடவையாக தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டியொன்றை நடத்த இலங்கை அபிவிருத்தி ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது.

நோக்கம்
புரதான நிலை ஊடகங்களில் தமது குரலுக்கான உரிய இடமும் பிரதிநிதித்துவமும் கிடைக்காத மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை இரண்டு நிமிடத்தில் வீடியோ கதையாக சித்திரிக்கும் இளைஞர் யுவதிகளை அடயாளம் காண்பது இப்போட்டியின் நோக்கமாகும்.

சமூக ஊடகத்தில் அதிக அக்கறை காட்டிவரும் இளைஞர் யுவதிகள் மத்தியில் சமூக வீடியோ கதையாக்கத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் மற்றுமொரு நோக்கமாகும்.

இன்று முதல் மின் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்!!

Power

இன்று முதல் மின்சாரம் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தலுக்கான மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

செயலிழந்துக் காணப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்றிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இடைக்கிடை துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பாவைனையில் இல்லாமல் கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ள எம்பிலிப்பிடடிய அனல் மின் நிலையம் மற்றும் புத்தளம் அனல் மின் நிலையம் ஆகியனவற்றை மீண்டும் செயற்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுபித்தலுக்கான மின்சக்தி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய எச்-1 பி வீசா விண்ணப்பங்கள் ஏப்ரல் 1முதல் ஏற்பு!!

H1B visa

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்-1 பி வீசாக்களை வழங்கி வருகிறது.

இந்த வீசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த வீசாக்களுக்கு நல்ல மவுசு உள்ளது.

2017ம் நிதி ஆண்டுக்கான இந்த வீசா விண்ணப்பங்களை அமெரிக்கா ஏப்ரல் 1ம் திகதி முதல் ஏற்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ம் திகதி தொடங்குகிற (அமெரிக்க) நிதி ஆண்டுக்கு 65 ஆயிரம் எச்-1 பி வீசாக்கள் வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

முதலில் பெறப்படுகிற அமெரிக்காவின் முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்றவர்களின் 20 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு, இந்த 65 ஆயிரம் எச்-1 பி வீசா என்ற எண்ணிக்கை வரையறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

வீசா விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிற முதல் 5 பணி நாட்களிலேயே 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு கூறி உள்ளது.

மேலும், மிக அதிக எண்ணிக்கையிலான எச்-1 பி வீசா விண்ணப்பங்கள் பெறப்படுகிற போது கணினி வழி லாட்டரி குலுக்கல் நடத்தி வீசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவர் இந்தியாவில் கைது!!

Arrest1

இலங்கையில் சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பந்தோலி பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய நபர் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டு, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.

சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்காக 05 பேரை இலங்கைக்கு அழைத்து வந்திருப்பதாக குறித்த சந்தேகநபர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசநோயினால் வருடத்துக்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு!!

asma

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கையின் பிர­காரம் வரு­ட­மொன்­றுக்கு உல­க­ளவில் 5 இலட்சம் பேர் காச நோயினால் உயி­ரி­ழப்­ப­தோடு இலங்­கையை பொறுத்­த­வரை ஒரு வரு­டத்­திற்கு மாத்­திரம் 14 ஆயிரம் பேர் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­வ­தாக இனங்­காணப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார கல்வி பணி­யகம் தெரிவித்­தது.

மக்கள் மத்­தியில் இந்நோய் தொடர்பில் எவ்­வ­ளவு தூரம் தெளிவின்மை காணப்­ப­டு­கின்­றதோ அந்­த­ளவில் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யினை குறைத்து காச நோயினை எமது நாட்டில் முற்று முழு­வ­து­மாக கட்­டுப்­ப­டுத்த முடியும் எனவும் தெளிவு­ப­டுத்­தி­யது. இம்­மாதம் 24ஆம் திகதி உலக காச நோயினை முன்­னிட்டு இந்நோய் தொடர்பில் ஊட­க­வி­யலா­ளர்­களை தெளிவு­ப­டுத்­து­வதன் மூலம் மக்­களை தெளிவுப­டுத்தும் விசேட செய­ல­மர்வு நேற்று கொழும்பில் அமைந்­துள்ள சுகா­தாரக் கல்வி பணி­ய­கத்தில் இடம் பெற்­றது.

இச்­செ­ய­ல­மர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் மஹி­பால ஹேரத் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.தொடர்ந்து உரை­யாற்­றிய சுகா­தார பணிப்­பாளர் மஹி­பால ஹேரத், காச­நோ­யினால் உல­க­ளவில் 5 இலட்சம் மக்கள் வரை உயி­ரி­ழப்­பது தொடர்பில் சுகா­தார உலக ஸ்தாபனம் தகவல் வழங்­கு­கின்­றது. அந்­த­வ­கையில் இந்­நோயின் தாக்­க­மா­னது குறிப்­பிட்டு கூறும் அளவு பார­தூ­ர­மா­ன­தல்ல.

அந்­த­ வ­கையில் இந்நோய் தொடர்பில் தெளிவின்­மை­யுடன் செயற்­பட்டு தொடர்ந்து இரண்டு வாரங்­க­ளுக்­கான சிகிச்­சை­யினை பெறும் பட்­சத்தில் குறித்த நோயினால் பாதிக்­கப்­படும் ஒருவர் வழ­மை­யான நிலைக்கு மாறி­வி­டுவார்.எமது நாட்டைப் பொறுத்­த­வரை குறித்த நோய் தொடர்­பி­லான பரி­சோ­த­னைகள் உட்­பட சிகிச்சை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நாட­ளா­விய ரீதியில் 26 மத்­திய நிலை­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அந்­த­வ­கையில் இந்­நோ­யினால் பாதிக்­கப்­படும் ஒருவர் மேற்­படி எமது நிலை­யங்­களில் சிகிச்­சை­களை பெற்றுக் கொள்ள முடியும். மறு­புறம் இந்­நோ­யினால் பாதிக்­கப்­படும் ஒருவர் சமூ­கத்­தி­லி­ருந்து புறக்­க­ணிக்­கப்­படும் நிலை­யா­னது மாற வேண்டும். அந்­த­வ­கையில் மக்­க­ளுக்கு இது தொடர்பில் தெளிவு­ப­டுத்­தல்கள் அவ­சி­ய­மாகும்.

இந்­நோ­யினால் பாதிக்­க­ப்ப­டு­ப­வர்கள், பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பி­லான தகவல்களை குறுகிய காலத்தில் நாம் சேகரித்து அவர்களுக்கான சிகிச்சைகளை உரிய வகையில் வழங்கும் பட்சத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் பிரகாரம் குறுகிய காலத்தில் இந்நோயினை நாட்டிலிருந்து முழுமையாக அகற்றலாம் என்றார்.

 

மருமகளை தாக்கிய மாமா விளக்கமறியல்!!

arrest (1)

திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் மரு­ம­களைத் தாக்­கிய மாமாவை இம்­மாதம் 30ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு திரு­கோ­ண­மலை நீதி­மன்ற நீதிவான் ருவான் திஸா­நா­யக்க உத்­த­ர­விட்டார்.

திரு­கோ­ண­மலை, ஆனந்­த­புரி, பகு­தியைச் சேர்ந்த 44வய­து­டைய ஒரு­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். குறித்த சந்­தேக நபர் தனது அக்­காவின் மக­ளுக்கு சாராயம் குடித்து விட்டு பணம் கேட்டு தாக்­கி­ய­தாக உப்­பு­வெளி பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்து திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

 

பொலிஸ் சீருடையில் மாற்றம் கொண்டுவர அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆர்வம்!

sri-lanka-dogs-wedding

பொதுமக்களின் அபிமானத்தையும் நல்லுறவையும் பெற்றுக்கொள்ளும் வகையில் தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் மாற்றமொன்றைக் கொண்டுவரவேண்டுமென சட்டம், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.

அமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு விஜயம் செய்த அவர், தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் தான் அதிருப்தி கொண்டிருக்கவில்லை எனவும், நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறும் பொதுமக்களின் நன்மதிப்பையும் நல்லுறவையும் விருத்திசெய்யும் வகையிலும் அது மாற்றப்பட்டால் நல்லதென நினைப்பதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் சீருடைகளில் மாற்றம் கொண்டுவருவதற்கான தனது ஆலோசனை பல்வேறு தரப்பிலும் தீர்க்கமாக ஆராயப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 

கிளிநொச்சியில் விபத்து: சுற்றுலாவிற்கு வந்த முதியவர் ஒருவர் பலி!!

1 (50)

கிளிநொச்சி கரடிப்போக்கில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.மின்சார சபை வாகனமும் தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாவுக்கு வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததுடன் பிக்கு உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்தோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி!!

SL

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இலங்கை – ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது.

அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய அஸ்கர் (Asghar Stanikzai) 62 ஓட்டங்களை விளாசினார். பின்னர், 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்த ஆப்கானிஸ்தான் 153 ஓட்டங்களைப் பெற்றது.

எனவே, 154 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை ஏழு பந்துகள் மீதமிருக்க (18.5வது ஓவரில்) நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி இலங்கை ஆறு விக்கெட்டுக்களால் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

இலங்கை அணி சார்பில் திலஹரட்ன டில்ஷான் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களைக் பெற்றதுடன் அவரே ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய கட்டட நிதிக்கான உதவி கோரல்!!

 
இலங்கையில் உள்ள நரசிங்கர் ஆலயங்களில் மிகப் பெரியதும் புகழ்பெற்றதுமான பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் கட்டட வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

ஆலயத்திற்கான நிலம் போடும் வேலைகள் நடைபெற்று வருவதுடன், இவ் வேலைகளை பூர்த்தி செய்வதற்கு பெருமளவான நிதி தேவைப்படுகின்றது.

எனவே பக்த அடியார்களை தங்களால் முடிந்த நிதியை வழங்கி ஆலயத்தை சிறப்பாக கட்டி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

கணக்கு இலக்கம் : 040100181641417
மக்கள் வங்கி வவுனியா கிளை
தொடர்புகளுக்கு 0242220447

1472105_883054401803283_1035484941_n 11924833_883054258469964_1378067897_n 12064387_883054221803301_999548328_n 12202464_883054285136628_229615405_n 12324930_883054318469958_1797196906_n 12380204_883054371803286_1075557050_n 12721547_883054205136636_28362539_n 12825334_883054411803282_957432823_n 12833279_883054178469972_888178480_n