அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து!!

NZ

6ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து எட்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் அவ்வணியின் வெற்றி தொடர்கின்றது.

குழு இரண்டுக்கான போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தர்மசாலாவில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 8விக்கெட்டுக்களை இழந்து 142ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குப்டில் 27 பந்துகளில் 4ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 39ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றார். அணித்தலைவர் வில்லியம்ஸன்(24), எலியட்(27) கணிசமான ஓட்டங்களைப் பெற்றனர்.

ஆஸி.பந்து வீச்சில் ஜேம்ஸ் ப்பாலுக்நனர் கிளன் மக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பெற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் ஹவாஜா(38), மெக்ஸ்வெல்(22), மிச்சல் மார்ஷ்(24), வொட்சன்(13) ஓட்டங்களைப் பெற்றபோதும் ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்கத்துடன் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 9விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களையே அவுஸ்திரேலியாவால் பெற்றுக் கொள்ளமுடிந்தது.

மூன்றுவிக் கெட்டுக்களைக் கைப்பற்றிய நியூஸிலாந்தின் வெற்றியை உறுதிசெய்த மிச்சல் மெக்கிளரன் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து இப்போட்டியிலும் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும்!!

Court

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இன்றைய வழக்கு விசாரணையின் போதும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் டி.என்.ஏ அறிக்கை உட்பட அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை.

அந்நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் தொடர்பில் பரிசீலிக்க முடியுமா என நீதவானிடம் கோரினார்.

அதற்கு பதிலளித்த நீதவான் வழக்கு ஓரிரு மாதங்களில் மேல் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்படும் என்றும் அங்கு பிணை விண்ணப்பத்தினை கோர முடியும் என்றும் கூறி வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் சந்தேக நபர்களே. அவர்கள் தொடர்பில் செய்திகள் வெளியிடும் போது அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் செய்திகள் வெளியிட வேண்டும்.

ஊடகங்கள் சந்தேக நபர்களை குற்றவாளிகள் எனும் விதமாக செய்திகளை வெளியிட்டால் அது மக்கள் மத்தியில் இவர்களை குற்றவாளிகள் எனும் எண்ணப்பாட்டை தோற்றுவிக்கும்.

இவர்கள் குற்றவாளிகளாக இன்னமும் இனம் காணப்படவில்லை எனவே பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என கோரினார்கள்.

மாணவி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டவேளை மாணவிக்காக நாம் இலவசமாக வாதாடி மாணவியின் குடும்பத்திற்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என சட்டத்தரணிகள் சிலர் தாமாக முன்வந்தது அறிக்கைகள் விட்டு இருந்தனர்.

முதல் ஓரிரு வழக்கு தவணையின் போது சில சட்டத்தரணிகள் மாணவி சார்பில் முன்னிலையாகி இருந்தனர். தொடர்ந்து வந்த வழக்கு தவணைகளின் போது ஓரிரு சட்டத்தரணிகள் முன்னிலையாகி வந்த வேளை அவர்களும் இன்றைய வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகவில்லை.

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளது. மிக விரைவில் சாட்சிகளின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

-அத தெரன-

கலாபவன் மணி மரணத்தில் திருப்பம் : உடலில் விஷம் இருந்ததாக இரசாயன பரிசோதனை அறிக்கை!!

kalabhavanmani

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மேலும் அவரது உடலில் மெத்தனால் என்ற போதை அளிக்கும் இரசாயனம் இருந்தது வைத்தியர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் இதுபற்றி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகம் தகவல் கொடுத்தது.

லாபவன் மணியின் மரணத்திற்கு அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது தான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்து.

அதன் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கலாபவன் மணியின் உடல் உள்ளுறுப்புகளின் மாதிரிகள் இரசாயன பரிசோதனைக்காக காக்கநாட்டில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகள் இன்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், அவரது உடல் உள்ளுறுப்புகளில் சைக்ளோபைரிபோஸ் என்ற பூச்சிக்கொல்லி தடயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இத்தகவல், வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது பண்ணை வீட்டில் மது விருந்து நடந்த போது அவர் குடித்த மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே கலாபவன் மணியின் உதவியாளர்கள் அருண், பிஜின், முருகன் ஆகியோரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

Arrest

வவுனியாவில் நேற்று (17.03.2016) காலை ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று காலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தில் ஒன்றரைக்கிலோ கேரளா கஞ்சாவினை பொதி செய்து மறைத்து வைத்து கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது, வவுனியா போதைப் பொருள் தடுப்புப்பிரிவு பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்று காலை 11 மணியளவில் குறித்த பேரூந்தில் ஏறிய பொலிசார் கஞ்சாவுடன் சென்ற நபரைக் கைது செய்ததுடன் குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவர். விசாரணையின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு பெரியகுளம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா வடக்கு பெரியகுளம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.செ.ஜெயபாலசிங்கம் தலைமையில் இன்று (18.03.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினராக வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் திரு.V.ஸ்ரீஸ்காந்தராசா மற்றும் கெளரவ விருந்தினராக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.சந்திரகுமார் மற்றும் பகுதி கிராம சேவையாளர் S.பிரமிளா மற்றும் மன்னகுளம் பகுதி கிராம சேவையாளர் உ.பிரதீபா, கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொஸிஸ் உத்தியோகத்தர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இம் மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை கனடாவில் வசிக்கும் குகேந்திரன்(குகன்) அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

01 (1) 01 (2) 01 (5) 01 (8) 01 (10) 01 (11) 01 (12) 01 (14) 01 (18) 01 (20) 01 (21) 01 (23) 01 (25) 01 (29) 01 (31) 01 (32) 01 (40) 01 (43)

லசித் மலிங்க உலக கிண்ணத் தொடரிலிருந்து நீக்கம்!!

Malinga

நடப்பு உலக சாம்பியனான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உலக கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

உபாதைகளால் அவதிப்பட்டுவந்த லசித் மலிங்க, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலங்கையின் உலக கிண்ண அணியில் 15 வது வீரராக இடம்பிடித்தார்.

ஆயினும் தொடர்ந்தும் அவரது உபாதை குணமடையாத நிலையில் அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் முடிவெடுத்துள்ளது. இதுவரையில் இவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

இரண்டு பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் குலசேகர மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். மூன்றாமவராக அணியில் இடம்பிடித்துள்ளார்.

அவர்களோடு அணித்தலைவர் மத்தியுஸ் , திசர பெரேரா ஆகியோரும் வேகபந்து வீசக்கூடியவர்கள் எனும் அடிப்படையில் மேலதிக வேகப்பந்து வீச்சாளரை தவிர்த்து ஒரு சுழல் பந்து வீச்சாளர் அணிக்கு தேர்வாவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் இருக்கிறது.

எது எப்படியோ இலங்கை அணியின் துல்லியமான வேகப்பந்து வீச்சாளரான மலிங்கவின் இழப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் இழப்பாகவே இருக்கப்போகிறது.

1 கோடியில் ஆரம்பரக் கார் : புதிய சர்ச்சையில் சிக்கிய டோனி!!

Dhoni

டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கார், பைக் பிரியரான டோனி, கடந்த 2009ல் ரூ.1 கோடி மதிப்புள்ள ‘ஹமர் எச்2’ என்ற ‘ஸ்போர்ட்ஸ்’ கார் ஒன்றை வாங்கினார். இதை ராஞ்சியின் போக்குவரத்து துறை அலுவலகத்தில் பதிவு செய்தார்.

அப்போது ‘ஹம்மர்’ என்ற பெயருக்கு பதிலாக ‘ஸ்கார்பியோ’ என தவறுதலாக பதிவு செய்யப்பட்டது. இதனால் 4 லட்சத்திற்கு பதில் 53 ஆயிரம் மட்டும் வரியாக செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டதால் 2010 முதல் தற்போது வரை வரியை அபராதத்துடன் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராஞ்சி போக்குவரத்து அதிகாரி நாகேந்திர பவான் கூறுகையில், டோனியின் ‘ஹமர் வகை கார் வெளிநாட்டை சேர்ந்தது. இது போக்குவரத்து துறையின் பட்டியலில் இல்லை.

மேலும், இதை ‘ஸ்கார்பியோ’ எனவும் தவறாக பதிந்து விட்டனர். இதனால் போக்குவரத்து விதிப்படி அவர் அபராதத்துடன் வரியை கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உளவு பார்த்தவர்களின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

 
ஈராக் அரசாங்கத்துக்காக தங்களை உளவு பார்த்தவர்களின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்யும் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆட்சி செய்து வருகின்றனர். தங்களுக்கு எதிரான நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகின்றனர். மேலும் தங்களுக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபடுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈராக் அரசாங்கத்துக்காக தங்கள் அமைப்பை உளவு 6 பேரை கொலை செய்யும் வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் கழுத்தில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட கம்பியின் மூலம் முடிச்சு போடும் தீவிரவாதிகள் வெடிக்குண்டை வெடிக்க செய்து கொலை செய்கின்றனர்.

அடுத்ததாக அவர்களின் பிடியில் உள்ள இரண்டு பொலிசாரை தலையில் சுட்டுக்கொலை செய்கின்ற காட்சிகளும் அந்த வீடியோவில் அடங்கியுள்ளன.

தங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் பெயர்கள் மற்றும் விபரங்களை கசியவிட்ட குற்றம், அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக அந்த ஆறு பேரையும் கொன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தங்கள் இயக்கத்தை உளவு பார்த்ததாக 3 பேரை இம்மாதத்தின் தொடக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4

குதிரையின் காலை உடைத்த பாஜக எம்எல்ஏ கைது : குதிரைக்கு செயற்கைக் கால் பொருத்தம்!!(வீடியோ)

horse_leg_002

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த போராட்டத்தின் போது தாக்கப்பட்ட குதிரைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநில அரசை கண்டித்து பாஜக சார்பில் டேராடூனில் கடந்த 14ம் திகதி போராட்டம் நடந்தது.
இதில் பொலிஸ் குதிரைப்படையை சேர்ந்த சக்திமான் என்ற குதிரையின் முன்னங்காலை பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தடியால் அடித்து காயப்படுத்தினார்.

இந்த வீடியோ வைரலாக பரவவே, எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பொலிசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில் குதிரையை தாக்கிய எம்எல்ஏ-வை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் குதிரையை கீழே தள்ளிய பிரமோத் போராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே தாக்கப்பட்ட குதிரைக்கு அறுவை சிகிச்சை மூலம், உடைந்து போன கால் நீக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது என்றும், குதிரையால் தற்போது நிற்க முடிகிறது எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜினமோட்டோ சந்தையில் இருந்து முற்றாக அகற்றப்படும்!!:

Ajinamoto

அஜினமோட்டோ சுவையூட்டியை சந்தையில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

மேலும் உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காக பொதுவாக, சந்தையில் பயன்படுத்தப்படும் மொனோசோடியம் குளுடமைட் மற்றும் எம்.எஸ்.ஜீ இரசாயன சுவையூட்டிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமையவே குறித்த இரசாயன சுவையூட்டிகளை சந்தையில் இருந்து முற்றாக அகற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுவையூட்டிகள் கொரியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சுவையூட்டிகளை அளவுக்கு மீறி உணவுகளில் சேர்க்கப்படும் சந்தர்ப்பத்தில் தலைவலி, உடல்நடுக்கம், முதுகுவலி உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதோடு இதை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் போது நீரிழிவு நோய், உடற்பருமன் போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுபடியும் சிம்புவுடன் மோதும் விஷால்!!

1 (7)

தமிழ், தெலுங்கு படங்கள் வேறொரு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒரு விஷயம். கொரடலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற படம் டெம்பர்.

தற்போது இந்த வெற்றி படத்தின் ரீமேக்கில் விஷால் நடிப்பதாக உறுதியாகியுள்ளது. அனல் அரசு இயக்கயிருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் தாகூர் மது தயாரிக்க இருக்கிறார்.இப்படத்தின் ரீமேக்கில் முதலில் சிம்புதான் நடிக்க இருப்பதாக இருந்தது. தற்போது அந்த பட வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்துள்ளது.

 

கோடை காலத்தில் கூந்தல் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்!!

making_hair_grow_faster

செம்பருத்தி இலை 1 கைப்பிடி, வேப்பந்தளிர் 5 – இரண்டையும் அரைத்து அப்படியே தலையில் தடவி 5 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால், வெயிலின் பாதிப்பால் மண்டைப் பகுதியில் உண்டாகிற வியர்க்குரு, அரிப்பு போன்றவை நீங்கி, கூந்தல் சுத்தமாகும்.

இதையே இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்பவர்கள், அரைத்த விழுதுடன் 3 டீஸ்பூன் பூந்திக்கொட்டை தூள் சேர்த்துக் கலந்து குளிக்கலாம். அது கூந்தலுக்குக் கூடுதல் பளபளப்பைத் தரும்.

* தேங்காய்ப் பால் அரை கப், பயத்த மாவு அரை கப், வெந்தயத் தூள் 2 டீஸ்பூன் முன்றையும் கரைசலாகக் கலக்கவும். அதை அப்படியே தலைக்கு ஷாம்பு போல உபயோகித்து அலசவும். வாரம் 2 அல்லது 3 முறை இப்படிச் செய்யலாம். தலைக்கு எண்ணெய் வைப்பதை விரும்பாதவர்களுக்கு ஏற்ற சிகிச்சை இது. எண்ணெய் வைக்காமலேயே எண்ணெய் வைத்த மாதிரியான தோற்றத்தைத் தரும். அதிகப் பயணம் செய்கிறவர்களுக்கும், ஏ.சி. அறையிலேயே இருப்பவர்களுக்கும் கூந்தல் சீக்கிரமே வறண்டு போகும். எண்ணெய் வைத்தால் கூந்தலில் பிசுக்கும் வியர்வையும் சேர்ந்து கொள்ளும் என்பதால் அதைத் தவிர்க்க நினைப்பார்கள். அதையும் இந்த சிகிச்சை தவிர்க்கும்.

* ஒரு டீஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் துவரம் பருப்பு, 2 புங்கங்காய் மூன்றையும் முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை அரைத்து பேக் மாதிரி போட்டு, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால் கோடையின் பாதிப்புகளில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படும். ஒரு இளநீரின் வழுக்கையுடன் 3 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். க்ரீம் மாதிரியான இதைத் தலையில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

* ஓமம், மிளகு, வெந்தயம் மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 100 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து, வாரம் ஒரு முறை தலையில் தடவி, எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற மாதிரி அலசினால், உடல் சூடு தணியும். கூந்தல் பொலிவடையும்.

 

திரிஷாவிற்கு கொலை மிரட்டல்? அதிர்ச்சியில் திரையுலகம்!!

trisha-story_650_050815103940

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் குதிரையை தாக்கியது குறித்து, அவரை கடுமையாக திட்டியிருந்தார்.இதைக்கண்டித்து தன் டுவிட்டர் பக்கத்திலும் எதிர்ப்பை காட்டியிருந்தார்.

இதற்கு, இவருக்கு ஆதரவு குவிந்தது.ஆனால், அந்த அரசியல் பிரமுகர் கட்சி தொண்டர்கள் திரிஷாவிற்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

 

தெருவில் வாழும் நபருக்கு 14 இலட்சம் ரூபா பரிசு!!

1458144412-2944

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் சிறையிலிருந்து தப்பித்த இரு கைதிகளை பிடிக்க பொலிஸாருக்கு உதவியதற்காக, தெருக்களில் வாழும் ஒருவருக்கு 14 இலட்சம் ரூபா பரிசாக வழங்கப்படவுள்ளது.உள்ளூராட்சி சிறையிலிருந்து 6 நாட்களுக்கு முன்பு தப்பித்த இவர்களை பிடிக்க மாகாண அளவில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதனையடுத்து, சிறையிலிருந்து தப்பித்திருந்த குறித்த இரு கைதிகளின் புகைப்படத்தை செய்திகளில் பார்த்த மேத்தியூ ஹே சாப்மான் அவர்களை ஒரு திருடப்பட்ட வேனில் அடையாளம் கண்டுள்ளார்.குறித்த இந்த பரிசு தொகை 4 பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டாலும், ஹே சாப்மானுக்கு அதிக பங்கு தொகையை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட பெண்: அருகில் இருந்து உதவிய கணவர்!!

makeup_girl_004

அமெரிக்காவை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர் தனது பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் அலாஹா மஜித். அழகுக்கலை நிபுணரான இவருக்கு ஒப்பனை செய்துகொள்வது என்பது விருப்பமான ஒன்று.

விதவிதமாக ஒப்பனை செய்துகொண்டு அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் அலாஹா பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் 15ம் திகதி அலாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது பிரசவ அறையில் இருந்துகொண்டே அலாஹா தனது முகத்துக்கு ஒப்பனை செய்துள்ளார்.

அவருக்கு வலி அதிகமாக இருந்த சமயத்தில் அவரது கணவர் ஒப்பனை செய்துள்ளார்.இறுதியில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அலாஹா பிரவத்தின்போது தான் செய்துகொண்ட ஒப்பனைகள் தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

 

ஒரே நேரத்தில் கருத்தரிக்க வேண்டும்: சகோதரிகளின் ஆசை!!

twins_prganant_002

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகளுக்கு, தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.உலகில் இரட்டை குழந்தைகள் பிறப்பது ஒன்றும் புதிதான விடயம் அல்ல, ஆனால் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வரும் Lucy மற்றும் Anna DeCinque(30) என்ற இரட்டை சகோதரிகள் தங்களுடைய வினோதமான வாழ்க்கை நடைமுறைகளால் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

இதுவரை, பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமான இவர்கள் இருவரும், Ben Byrne (32) என்ற நபரை காதலித்து கடந்து ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்ளும் இவர்கள், ஒரு வருடத்திற்கு மட்டும் தங்களின் அழகினை பராமரித்துக்கொள்வதற்காக(உதடு, செயற்கை புருவங்கள், மார்பகம், இமைகள்) $250,000 டொலர் செலவிடுகின்றனர்.

காரணம், இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி SBS’s Insight என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள், இரட்டை சகோதரிகளுக்கு 99.9 சதவீதம் ஒரே மாதிரியான மரபணு, பாலியல், சுகாதார பிரச்சனைகள் போன்றவை ஒருமித்ததாகவே இருக்கும்.எனது சகோதரி சில மீற்றர் தூரம் நடந்துசென்றால், நானும் அதே தூரம் நடந்துசெல்வேன், ஏனெனில் எங்கள் இவரும் ஒரே அளவில் கலோரிகளை குறைக்கவேண்டும்.

அதுமட்டுமின்றி, நாங்கள் சாப்பிடும் உணவு மட்டுமின்றி, குடிக்குத் தண்ணீரின் அளவு கூட ஒரே அளவாக இருக்கும், ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கினால் கூட இருவரும் சம அளவு சாப்பிடுவோம்.தற்போது நாங்கள் இருவரும் கர்ப்பம் தரிக்க ஆசைப்பட்டுள்ளோம், ஏனெனில் குழந்தைகள் என்றால் எங்களுக்கு கொள்ளை பிரியம், இதனால் செயற்கை கருத்தரித்தல் முறையினை பயன்படுத்தி கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம் என தெரிவித்துள்ளனர்.