சாய் பிரசாந்தை தொடர்ந்து தொகுப்பாளனி நிரோஷாவின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல தெலுங்கு நடிகர், நடிகைகள் அவருக்காக தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் தற்கொலை செய்வதற்கு முன் தன் காதலருடன் ஸ்கைபில்(Skype) பேசியுள்ளார். இதில் அவருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
மேலும், தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் அவர் தன் காதலரிடம் தெரிவிக்க, உடனே காதலர் நிரோஷாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு இதுக்குறித்து பேசியுள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் இப்படி ஒரு தவறான முடிவை நிரோஷா எடுத்துள்ளார்.
நயன்தாராவின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் உள்ளது. இவர் நடிக்கின்ற அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.
இந்நிலையில் பாலிவுட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற குயின் படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இதை நயன்தாரா முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், நிறைய படங்களை ஒப்பந்தம் செய்திருப்பதால் இந்த படத்திற்கு என்னால் கால்ஷிட் ஒதுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
லண்டன் நகரில் உள்ள மாசு அளவை புறா மூலம் கண்காணிப்பதற்கான நூதன முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் காற்றில் உள்ள மாசுவின் அளவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுவுக்கான அளவையும் அந்நகரம் கடந்துள்ளது. அடுத்த 5 வருடங்களில் லண்டன் உள்ளிட்ட மற்ற நகரங்களில் நைதரசன் டை ஒக்சைடின் அளவு கணிசமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து லண்டன் நகரின் மாசு அளவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக புறாக்களின் உடலில் நுண்ணிய கருவிகள் பொருத்தி அதன் மூலம் மாசுவின் அளவை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கருவிகள் காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஒக்சைட், ஓசோன் வாயுகள் போன்றவற்றை ஆய்வு செய்யும்.
இதை வைத்து நகரின் மாசு அளவு அதிகமாக உள்ளதா அல்லது நடுத்தர அளவில் உள்ளதா என்பது கணிக்கப்படும்.
Pigeon patrol என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோந்து பணிக்காக லண்டனில் புறநகரில் இருந்து 10 புறாக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாட்டில் நாய்களை சரியாக வளர்க்காமல் அவற்றால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உரிமையாளர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்க வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய நாட்டின் தண்டனை வழங்கும் கவுன்சில் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘2014ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆபாத்துமிக்க நாய்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.
இந்த திருத்தங்கள் மூலம் நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது கடுமையான விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. புதிய நடைமுறைகளில் சிலவற்றை பார்ப்போம்.
*ஆபத்தான மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட நாய்களை பொதுமக்கள் வளர்க்க கூடாது.
* நாய்கள் மற்றவர்கள் மீது மிகுந்த ஆவேசம் அடையும் வகையில் அவற்றிற்கு பயிற்சி அளிக்க கூடாது.
* நாய்களினால் மற்றவர்களுக்கு காயம், படுகாயம் ஏற்பட்டால் அந்த நாயின் உரிமையாளருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
* ஒரு நாயால் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அந்த நாயின் உரிமையாளருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் உள்ளிட்ட புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.
தடைசெய்யப்பட்ட நாய்கள்:
பிட் புல் டெரியர் (pit bull terrier)
ஜப்பானிய டோசா (Japanese tosa)
டோகோ அர்ஜெண்டினோ (dogo Argentino)
ஃபிலா பிரேசிலீரோ (fila Braziliero) போன்ற நாய்களை வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிபதி Richard Williams பேசியபோது, ’கடந்த 10 ஆண்டுகளில் நாய்களினால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 76 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2015ம் ஆண்டு மே மாதம் வரை எடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 13 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் நாய்கள் தாக்கியதால் மரணமடைந்துள்ளனர்.
எனவே இந்த குற்றங்களை தடுக்க தற்போது ஏற்படுத்த உள்ள சட்ட திருத்தங்கள் எதிர்வரும் யூலை மாதம் முதல் நடைமுறைக்க வரவுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் தனது குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்தராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொலிசார் இதுகுறித்து கூறுகையில், செகந்தராபாத் டீச்சர்ஸ் கொலனியில் வசித்து வரும் வினய் பரிசுப்பொருட்கள் விற்பனை அங்காடி வைத்துள்ளார். இவரது மனைவி சரோஜா என்ற ரஜினி. இவர்களுக்கு தன்ஷிகா (7), தன்வி (3) என இரண்டு பெண் குழந்தைகள்.
இந்நிலையில், ரஜினிக்கு தனது கணவர் வினய், மூத்த மகள் தன்ஷிகாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகித்ததால், அடிக்கடி சண்டை வந்துள்ளது.
ரஜினி நேற்றிரவு 8.30 மணியளவில் தனது மூத்த மகள் தன்ஷிகாவை குளியலறைக்கு அழைத்துச் சென்று உடைந்த கண்ணாடி போத்தலால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர், இளைய மகளையும் அதே பாணியில் படுக்கையறையில் வைத்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது நெருங்கிய உறவினர் இருவருக்கு, வினயிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றிவிட்டேன் என்றும், குழந்தைகளை கொன்றுவிட்டதாகவும் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இரவு வீடு திரும்பிய வினய் குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அவரது மனைவியை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில் ரஜினி கூறுகையில், என் மூத்த மகள் என் கணவரை கண்டாலே பயப்படுகிறாள்.
வினய் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். எனவே என் குழந்தைகளைக் கொன்று வினயிடமிருந்து காப்பாற்றியுள்ளேன் என கூறியுள்ளார்.
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்கள் குதிரை பந்தய போட்டி ஒன்றின் போது கேவலமாக நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
செல்டென்ஹாம் நகரில் நடந்த குதிரை பந்தய திருவிழாவுக்கு சில இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் சென்றிருந்தனர். அவர்களுடன் சில தொலைக்காட்சி நடிகைகளும், மொடல் அழகிகளும் சென்றிருந்தனர்.
அப்போது குதிரை பந்தய போட்டியை பார்த்துக் கொண்டே மது அருந்திய அவர்கள் மோசமாகவும் நடந்து கொண்டனர்.
கால்பந்து வீரர்களில் சிலர் மது அருந்திய கிளாசிலே சிறுநீர் கழித்து அதை பால்கனியில் இருந்து கீழே ஊற்றி மோசமாக நடந்து கொண்டனர்.
தவிர அவர்களுடன் வந்த மொடல் அழகிகளில் சிலர் தங்களது மார்பகங்களை காட்டி போஸ் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
குறட்டை என்பது பாரிய நோய் இல்லை எனினும் இது பலரது தூக்கத்தை தொலைக்கக்கூடியது. இதனால் விவாகரத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்கள் கூட அறிந்திருப்பீர்கள்.
குறட்டையினை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்ற போதிலும் அவை நூறு சதவீதம் வெற்றியளிப்பதில்லை.
ஆனால் தற்போது இதற்கான மாற்றுவழி ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது குறட்டையை நிறுத்த முடியாவிட்டாலும் அதன் மூலம் வெளியேறும் சத்தத்தினை குறைப்பதற்கு ஒட்டும் பட்டை (Patch) ஒன்றினை அமெரிக்காவினை தளமாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த பட்டையினை தூக்கத்திற்கு செல்லும்போது மூக்கின் மீது ஒட்டினால் போதும் நாம் மட்டுமின்றி நம்மை சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாக தூங்க முடியும்.
முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி.குணராஜா சிவகுமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சிறார்களின் இன்னிசை வாத்தியத்துடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
அரியானா மாநிலம் ரோட்டாக்கை அடுத்துள்ள ரிதால் கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் சுக்விந்தர்சிங். 24 வயதான சுக்விந்தர்சிங் நேற்று முன்தினம் மாலை பயிற்சியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே செல்போனில் பேசிய படி நடந்து வந்து கொண்டு இருந்த போது சாலையில் எதிரே ஸ்கூட்டரில் வந்த 2 மர்ம நபர்கள் சுக்விந்தர்சிங்கை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் மார்பில் குண்டு பாய்ந்த சுக்விந்தர்சிங் தரையில் சரிந்தார். அருகில் வந்து பார்த்த அவர்கள் மீண்டும் தலையில் சுட்டு விட்டு தப்பி சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே சுக்விந்தர்சிங் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.
தெஹிவளை – கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிரபல வர்த்தகர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட நான்கு பேர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று காலை 10 மணிக்கு தெஹிவளை பொலிஸாருக்குச் செய்யப்பட்ட முறைப்பாடொன்றை அடுத்தே குறித்த வர்த்தகர், அவரது மனைவி, அவர்களது மகள் மற்றும் அவர்களின் உறவுக்காரர் ஒருவரின் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கேஷர் வீதியில் பிரபல இலத்திரனியல் வர்த்தகரான ஹுசைன் மெளலானா (வயது 65), முன்ஸிரா மெளலானா வயது (58), ஹுஸ்னா மெளலானா (வயது 13) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோரும் அவர்களுடன் நேற்று முன் தினம் இரவு குறித்த வீட்டில் தங்கியிருந்த அவர்களது உறவுக்கார சிறுமியான நிஸ்னா மெளலானா (வயது 13) என்ற சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை 10. 00 மணிக்கு தெஹிவளை பொலிஸ் நிலையம் சென்றுள்ள, உயிரிழந்த வர்த்தகரின் முன் வீட்டில் வசிக்கும் உறவுக்காரர், தனது முன் வீட்டில் உள்ள உறவினருக்கு ஏதோ இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்தாவின் கீழான பொலிஸ் குழு உடன் ஸ்தலத்துக்கு சென்றுள்ளது.
பொலிஸார் அங்கு செல்லும் போதும் இலக்கம் 40 பீ, கவுடான, தெஹிவளை எனும் முகவரியில் உள்ள குறித்த மூன்று மாடி வீட்டின் கீழ் மாடியின் கதவுகளை உறவினர்கள் உடைக்க முயற்சி செய்துகொண்டிருந்துள்ளனர். முழுமையாக அடைக்கப்பட்டு குளிரூட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் பிரதான கதவை பொலிஸாரின் உதவியுடன் உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போதே நால்வரும் சடலமாக இருந்தமை உறுதியானது.
பொலிஸார் உள்ளே சென்று பார்த்த வேளையில் வர்த்தகரான ஹுஸைன் மெளலானா பிரதான கதவருகே உள்ள கதிரையொன்றிலும், அவரது மனைவியான முன்ஸிரா மெளலானா வீட்டின் அறையொன்றிலும் 13 வயதுகளை உடைய இரு சிறுமிகளும் வீட்டின் பிரதான அறையின் நிலத்திலும் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.
வீட்டில் இருந்த பெண்ட்ரி கபட் ஒன்று தீயினால் சேதமடைந்திருந்ததை அவதானித்த பொலிஸார் அதன் அருகே இருந்த இலத்திரனியல் அவன், பிளெக் டொப் ஆகினவும் தீயினால் கருகியிருந்ததை அவதானித்தனர்.
அத்துடன் வீட்டின் சுவர், நிலத்தில் கறுப்பு நிர துகல்கள் ஒட்டியிருந்த நிலையில் ஆங்காங்கே அதில் கை அச்சுக்கள் பதிவாகியிருந்தன. அத்துடன் எரிந்திருந்த பிளக் டொப் வீசுண்டிருந்ததுடன் வீட்டின் மின் கட்டமைப்பில் இருந்த ரிப் ஆளிகளில் இரண்டு கீழ் நோக்கி வீழ்ந்திருந்தன. இதன் ஊடாக ஏதோ ஒரு காரணத்தால் மின் தடைப் பட்டுள்ளமை பொலிஸாரினால் ஊகிக்கப்பட்டது.
ஸ்தலத்துக்கு விரைந்த தெஹிவளை பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கொட்டச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்தவின் தலைமையில் குற்றவியல் பிரிவின் அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொலிஸ் தடயவியல் பிரிவினர் ஸ்தலத்துக்கு வருகை தந்ததுடன் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள், மின்னியல் பொறியியலாளர்களும் ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன் போது நேற்று முன் தினம் இரவு 9.00 மணியளவில் குறித்த வீட்டின் முன் வீட்டில் வசிக்கும் உயிரிழந்த வர்த்தகரின் உறவினர்களுடன் இந்த குடும்பத்தார் உரையாடியுள்ளனர். அதன் பின்னர் இரு குடும்பத்தாரும் நித்திரைக்கு சென்றுள்ளனர்.
உயிரிழந்த வர்த்தகரின் மகளும் அங்கு தங்கியிருந்த உறவுக்கார சிறுமியும் நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலையில் கல்விகற்று வருகின்றனர். இந் நிலையில் நேற்று காலை அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் வண்டி வீட்டின் அருகே வந்துள்ளது. வண்டி ஒலி எழுப்பியும் வீட்டில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் முன் வீட்டில் வசிக்கும் உறவுக்காரர்கள் குறித்த வர்த்தகருக்கு தொலைபேசி அழைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். எனினும் அதற்கும் பதிலளிக்கப்படவில்லை. இதனையடுத்து அவ்வீட்டார் முன் வீட்டை நோக்கி சென்ற போது அங்கு கறுப்பு நிற துகல்கள் உள்ளிருந்து கதவின் கீழால் உள்ள சிறிய இடைவெளியூடாக கசிவதை அவதானித்துள்ளனர். இந் நிலையிலேயே அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதுடன் கதவை உடைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்விடயம் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குளிரூட்டப்பட்ட அந்த வீடானது முழுமையாக சீல் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென எற்பட்ட மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட புகையுடன் கூடிய விஷ வாயுவை அவர்கள் சுவாசித்திருக்கலாம் எனவும் அதன் காரணமாக மூச்சுத் திணறி அவர்கள் உயிரிழந்திருக்க வேண்டும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வர்த்தகரின் மனைவி முன்ஸிரா மெளலானா அறையில் மரணமடைந்திருந்த விதம், இரு சிறுமியரும் வீட்டின் பிரதான அறையில் அருகருகே முகங்குப்பற விழுந்திருந்த நிலைமை, வர்த்தகரான ஹுசைன் மெளலானா கதிரையிலேயே உயிரிழந்திருந்தமை ஆகியவறறை வைத்தே பொலிஸார் இவ்வாறு சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
வீட்டின் சுவர்களில் படிந்திருக்கும் கறுப்பு நிற துகல்கள் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட தீயினால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார், தீ பரவ ஆரம்பித்த போது முழு வீட்டையும் புகை சூழந்துகொன்டிருக்க வேண்டும் எனவும், வீடு முழுமையாக குளிரூட்டப்பட்டிருந்ததாலும் அப்புகை வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே சுற்ற அது விஷமாக மாறியிருக்கும் எனவும் சந்தேகிக்கின்றனர்.
அதனை வீட்டில் இருந்த இந் நால்வரும் சுவாசித்திருப்பதாக நம்பும் பொலிஸார் அங்கிருந்து தப்ப அவர்கள் முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும் வீட்டை முழுமையாக சூழந்திருந்த புகையால் அவர்களுக்கு கதவினை நோக்கி செல்வது சிரமமாக இருந்திருக்க வேண்டும் எனவும் சிறுமிகள் இருவரும் முகங்குப்பற வீழ்ந்திருந்தமையானது அவர்கள் தப்பிக்க ஓடியுள்ளதை காட்டுவதாகவும், வர்த்தகரும் கதவை திறக்க முயன்றுள்ள நிலையிலேயெ அதன் அருகே இருந்த கதிரையிலேயே உயிரை விட்டுள்ளதாகவும் சந்தேகிப்பதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வறாயினும் குறித்த நால்வரும் எதனால் உயிரிழந்தார்கள் என்ற உறுதியான காரணம் நேற்று மாலை வரை தெரியவரவில்லை.
நேற்று பிற்பகல் ஸ்தலத்துக்கு கல்கிஸை மேலதிக நீதிவான் ஜி.ஜி.எஸ். ரணசிங்க வருகை தந்து சடலங்களை பார்வையிட்டார். இதன் போது சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார். இந் நிலையில் நேற்று மாலை களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் ஸ்தலத்திற்கு விரைந்து பார்வையிட்டதுடன் சடலங்களையும் பொறுப்பேற்று பிரேத பரிசோதனைகளுக்கக கலுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்.
எவ்வாறாயினும் இந்த நான்கு மரணங்களும் வெளியில் இருந்து வந்த ஒருவரால் ஏற்படுத்தப்பட்டது என்பதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை என தெரிவிக்கும் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோத்கர் பிரதீப் நிஸாந்த, திடீரென ஏற்பட்ட மின்னொழுக்கினால் உருவான விஷ வாயுவை இவர்கள் சுவாசித்திருக்கலம் எனவும் அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மரணம் சம்பவித்திருக்கலாம் எனவும் நம்புவதாக குறிப்பிட்டார். எனினும் பிரேத பரிசோதனையின் பின்னரேயே உறுதியான உண்மைக் காரணியை கண்டறிய முடியும் என சுட்டிக்காட்டிய அவர் சதி முயற்சி ஒன்றுடாக இம்மரணங்கள் நிகழ்ந்துள்ளமைக்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவானது என சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட ஆகியோரின் மேற்பார்வையில் கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கொட்டச்சியின் ஆலோசனையில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்த தலமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கௌடான வீதியில் நேற்று இச்சம்பவத்தையு அடுத்து நூற்றுக்கனக்கான பொது மக்கள் கூடினர். அப்பிரதேசத்தில் பாரிய போக்கு வரத்து நெரிசலும் காணப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் அங்கம் வகித்த ரொசான் மஹனாமா, உபுல் சந்தன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க,
1996ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை எதிர்கொள்வதற்கு ஒன்றரை -இரண்டு வருடங்களுக்கு முன்னரே அணியை தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும், எந்தவொரு தலையீடும் இல்லாமல் வீரர்களை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு அன்றைய காலத்தில் இருந்தததாகவும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது தேவையற்ற தலையீடுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
வடக்கிலுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்தால், இலங்கை கிரிக்கெட் அணியில் மேலும் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மின் வெட்டு இன்று முதல் வழமைக்குத் திரும்பும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நுரைசோலை அனல் மின்நிலையத்தின் திருத்தல் பணிகள் பூர்த்தியாகியுள்ளமையினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பியகம உப மின்நிலையத்தில் மின்மாற்றி வெடித்ததை அடுத்து நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. இதனை சீர்செய்வதற்கு காலம் தேவைப்பட்டது.
இதன்காரணமாக இடைக்கிடையே மின் விநியோகம் பல பிரதேசங்களுக்கு தடைப்பட்ட வண்ணமிருந்தது. இருந்தபோதிலும் அதற்கான நேர காலத்தை வகுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இல்லையேல் மக் கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதனை அறிந்தோம்.
இதன் அடிப்படையில் இதற்கான நேர அட்டவணை ஒன்றை வழங்கியிருந்தோம். இருந்த போதிலும் நேற்றைய தினம் நுரைச்சோலை அனல் மின்நிலைய சீர்திருத்தப் பணிகள் நிறைவடைந்தமையை அடுத்து இன்று முதல் சீரான மின் விநியோகத்தை வழங்க முடியும் என்றார்.
இதேவேளை, நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதாவது காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையுள்ள மூன்று மணித்தியாலங்களும், பிற்பகல் 1.00 மணி முதல் முன்னிரவு 06.30 மணி வரையுள்ள ஐந்தரை மணித்தியாலங்களும், முன்னிரவு 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையுள்ள இரண்டு மணித்தியாலங்களுமாக பத்தரை மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறையிலிருந்தது.
பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களில் 35,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் பாடசாலை ஆசிரியர்கள், தொழிநுட்ப வல்லுனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆண்டு தொடக்கத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டு அதை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்திருந்தனர்.
திறமையான வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் பிரித்தானியாவில் குடியிருக்க வேண்டும் எனில்,
*வேலை தரும் நிறுவனம் ஒன்று அவருக்கு 20,800 பவுண்டு ஊதியமாக வழங்க வேண்டும்.
*வங்கிக்கணக்கில் குறைந்தது 90 நாட்களுக்காவது 945 பவுண்டு சேமிப்பு இருக்க வேண்டும்.
*வேலை வழங்குபவர்களிடம் இருந்து Sponsorship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*சுகாதார கட்டணமாக 200 பவுண்டு அளிக்க வேண்டும்.
*ஆங்கில மொழியில் திறமையை நிரூபிக்க வேண்டும்.
Tier – 2 இந்த விசா கைவசம் வைத்திருப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் முடிவில் புதிதாக மனு அளிக்க வேண்டும், இப்படி மனு அளிப்பவர்கள் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து 35,000 பவுண்டுகள் வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
தற்போது மருத்துவ தாதியர்களை மட்டும் தாற்காலிகமாக இந்த சட்டத்தில் இருந்து விடுவித்துள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் தாதியர்களுக்கும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு இந்த புது சட்டத்தில் இருந்து விடுப்பு வழங்கப்படவில்லை. மேலும் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக குடியேறிவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனவும் அவர்கள் வெளியேற்றப்பட மாட்டாது எனவும் கூறுகின்றனர்.
மேலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இந்த புது சட்டம் பொருந்தாது, மட்டுமின்றி அவர்களுக்கு ஊதிய வரைமுறை கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் மாணவருக்கான விசாவில் இருப்பவர்கள் நேரிடையாக தொழில் முறை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் புது வருவாய் வரைமுறை தொழில் முறை விசாவிற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது.
பிரித்தானிய குடிமக்களை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இந்த புது சட்டம் பொருந்தாது.
இச் சட்டம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும், இது தொடர்பில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதாயின் 0300 123 2241 என்னும் இலக்கத்தில் தொடர்பினை ஏற்படுத்தலாம் என பிரித்தனைய குடியகல்வு குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு இது குறித்து விசாரணை செய்த பொலிஸார் சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
இதன்படி, இவர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 24, 32 மற்றும் 35 வயதான சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வவுனியா கூமாங்குளம் சித்திவினாயகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கடந்த 28.02.2016 அன்று அகில இலங்கை ரீதியில் அம்பேபுஸ்ச சிங்க றெஜிமன்ட் தலமைச் செயலகத்தின் வளாகத்தில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் மூன்று தங்கப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் தமதாக்கியுள்ளனர்.
கூமாங்குளம் சித்திவினாயகர் வித்தியாலத்தின் பழைய மாணவி ரீ.தர்சிகா வினோசினி மற்றும் மாணவர்களான நந்தகுமார் மனோகர், தியாகராஜா நாகராஜா, பந்துல சுஜிவலக்மால் ஆகிய நான்கு மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் 48 கிலோகிராம் நிறையுடையவர்களுக்கான குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து தங்கள் பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமைசேர்த்துள்ளதோடு சர்வதேச ரீதியிலும் அவர்கள் சாதிக்க ஆர்வமாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இம்மாணவர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு சரியான உபகரணங்கள் மற்றும் குத்துச்சண்டை மேடை இல்லாத நிலையிலும் வெறும் சீமெந்து நிலத்தில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இன் நிலையில் இவர்களை விளையாட்டுத்துறை அதிகாரிகள், அமைச்சுக்கள் கண்டுகொள்ளாமை மற்றும் கௌரவிக்காமை மிகவும் கவலையளிப்பதாகவுள்ளது.
இவ் வெற்றி குறித்து மாணவர்கள் கருத்து தெரிவித்தபோது..
அகில இலங்கை ரீதியில் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் சாதிக்க ஆர்வமாகவுள்ளோம். அதற்கான வசதிகள் எங்களுக்கு கிடைக்குமிடத்து சாதிப்போம். அத்துடன் எங்கள் வெற்றிக்கு காரணமாகவிருந்த பாடசாலை அதிபர் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
மாணவர்களின் பயிற்றுவிப்பாளரான எஸ்.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில்..
எனது மாணவர்கள் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது பெருமையாகவுள்ளது. அதேபோல் இலைமறைகாயாக உள்ள வீரர்களை போட்டியில் கலந்துகொள்ள செய்ய முடியும். அவர்களுக்கான உதவிகளை விளையாட்டு அமைச்சு மேற்கொள்ளும் பட்சத்தில் சாதிக்க முடியும் என குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும்போது சமூகத்தில் குற்றங்கள் குறைவடையும் என சுட்டிக்காட்டினார்.
வவுனியா சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016 வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது.
மேற்படி மகோற்சவம் 18.03.2016 தொடக்கம் 27.03.2016 வரை இடம்பெற உள்ளது.