விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெய்ல் : இங்கிலாந்தை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி!!

Gayle

T 20 உலகக்கிண்ணம் போட்டியின் சூப்பர் 10 பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கெய்லின் மின்னல் வேக சதம் காரணமாக மேற்கு இந்திய அணி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் துவக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஹால்ஸ் களமிறங்கினர். 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஹேல்சுடன் ரூட் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.
இந்நிலையில் 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரூட் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் மோர்கன் 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் டுவைன் பிராவோ, ரஸ்ஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆடத்துவங்கியது.

துவக்க வீரர்களாக ஜான்சன் சார்லஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் களமிறங்கினர். சார்லஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் இணைந்த சாமுவேல்ஸ் கெயில் இணை பொறுப்பாக விளையாடியது. சாமுவேல்ஸ் நிதானமாக ஆடினார். மறுமுனையில் கெயில் தனது ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் சாமுவேல்ஸ் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் எண்ணிக்கை 57 ஓட்டங்களாக இருந்தது. பின்ன்னர் வந்த ராம்தின் 12 ஓட்டங்களிலும் பிராவோ 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் நங்கூரம் போல் நிலைத்து நின்ற கெயில் தனி ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

கெயில் 48 பந்துகளில் 5 பவுண்டரி, 9 சிக்ஸர் உட்பட 100 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இப்படி ஒரு அபார பிடியெடுப்பை நீங்கள் பாத்ததுண்டா?(காணொளி இணைப்பு)

Catch

கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷக்கும் இடையிலான குழு 2 இற்கான சுப்பர் 10 உலக இருபது 20 கிரிக்கட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தான் 55 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இப்போட்டியில் அரபாத் சனி வீசிய 16.4 ஓவரில் முஹமட் ஹபிஸின் பிடியெடுப்பை எல்லை கோட்டில் வைத்து சார்கார் அற்புதமாக பிடியெடுத்தார்.

அந்த அசத்தலான பிடியெடுப்பின் காணொளி உங்களுக்காக..

முதலாவது வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி!!

PAK

இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி கொல்கொத்தாவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீ்ஸ் (Mohammad Hafeez) 64 ஓட்டங்களையும் அஹமட் செஷாத் (Ahmed Shehzad) 52 ஓட்டங்களையும், அப்ரிடி 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் (Taskin Ahmed), அறபாத் சன்னி (Arafat Sunny) ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் சார்பாக துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் 50 ஓட்டங்களையும் சபிர் றஹ்மான் 25 ஓட்டங்களையும் தமிம் இக்பால் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மெஹமத் ஆமிர், ஷஹித் அப்றிடி ஆகிய இருவரும் தலா 27 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கட்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சயிட் அப்பரிடி தெரிவு செய்யப்பட்டார்.

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா : அவசியம் படியுங்கள்!!

Lemon Juice

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை.

ஆம் எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை.

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லீட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கல்சியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கல்சியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கல்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் அசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் கற்பகவிருட்ச உற்சவம்!!(படங்கள்)

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவம்-2016  இன்  மூன்றாம் நாளான நேற்று 16.02.2016 புதன்கிழமை  மாலை கற்பகதரு காட்சி உற்சவம் இடம்பெற்றது .

மேற்படி உற்சவத்தின் போது  நாட்டிய நடன நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

10325416_1117135965004379_263321267269785636_n

1012601_1117135421671100_1590895213634216428_n 1044222_1117135665004409_7820620235083586741_n 1723087_1117135731671069_4917977242049339519_n 12107951_1117135611671081_1335863433667320844_n 12801160_1117135358337773_1894000335062337564_n (1) 12801160_1117135358337773_1894000335062337564_n

இங்கிலாந்தின் புதிய சட்டத்தால் வெளியேறும் மக்கள்!!

UK

சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு புதிய சட்டம் கொண்டு வந்தது. அதன் படி ‘டயர்–2’ விசாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஆண்டுக்கு 35 ஆயிரம் பவுண்டுகள் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கு தங்க முடியும். இல்லாவிடில் குடியேறிய 5 ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி முதல் குடியேறியவர்களுக்கு இப்புதிய சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 55,589 வெளிநாட்டினர் இங்கிலாந்தில் இருந்து வெளியேற வேண்டும். அவர்களில் 31,058 பேர் இந்தியர்கள். இது அங்கிருந்து வெளியேற வேண்டியவர்களில் 78 சதவீதமாகும்.

உங்கள் அந்தரங்கங்கள் வெளிச்சத்துக்கு வரும் அபாயம் : அவதானம்!!

SPY

பெண்கள் மற்றும் தம்பதிகள் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கமரா மூலம் உங்கள் அந்தரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை தடுக்க புதியமுறை உங்களுக்காக.

முதலில் அறைக்கு வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள கமராவை ஒன் செய்யுங்கள், மேலும் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுக்கும்போது வரும் flash வெளிச்சத்தை ஓப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதைவைத்து அறையினுள் இரகசிய கேமரா பொருந்தியுள்ளதை அறியலாம்.

வவுனியா விபத்தில் 4பேர் காயம்!!(படங்கள்)

 
வவுனியா ஏ9 வீதியில் ஒமந்தை மத்திய மகாவித்தியாலயம் பாடசாலைக்கு அருகில் வயல்வெளியில் இன்று காலை 10.15 மணியளவில் வாகனம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஒன்று ஒமந்தை பகுதிக்கு அருகே காணப்படும் வயல்வெளியில் தரண்புரண்டதில் 4பேர் சிறு காயங்குள்ளானர்கள்.

அதிக வேகத்தில் பயணித்ததின் காரணமாக இவ் விபத்து இடம்பெற்றதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

accdint omanthai (1)accdint omanthai (2)accdint omanthai (3)

மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி?

Wife

ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான விடயம் இல்லை.

அப்போது மனதில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது.
மேலும் அந்த நேரம் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். முதலில் வாழ்க்கைத்துணை உண்மையில் ஏமாற்றுகின்றனரா, இல்லை நமக்கு சித்தப்பிரம்மை பிடித்துள்ளதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கணவர் எப்போதும் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது வெளியே செல்லும் போது சீக்கிரம் செல்வது தொடர்ந்தாலோ, அதை கவனிக்க வேண்டும்.
இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான அதிகமான நடத்தைகளும் பார்க்கலாம்.

அதிலும் ஏமாற்றுபவர்கள் மொபைல் போனை மறைத்து வைக்க முயல்வர். அந்த நேரம் ஏதாவது நீங்கள் கேட்டால், அதனை மறைப்பதற்கு வேடிக்கையான விஷயங்களையும் அல்லது முக்கியமானவற்றையும் கலந்து பேசாமல் தவிர்க்க நினைப்பர்.
அதுவும் உங்களுக்கு அதிகம் பிடித்த விஷயங்களை செய்து, அவர்களுடைய தவறிலிருந்து தப்பிக்க முயல்வர்.

சிலர் அதிகம் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சொல்லப்போனால், அவர்கள் மனதில் நீங்கள் முன்பு இருந்த நிலைக்கும், இப்பொழுது உள்ள நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும்.

போட்டு வாங்குவதன் மூலமும் அவர்கள் தவறு செய்கிரார்கள் என்று அறியலாம். அதற்கு அவர்களிடம் ஈ-மெயில், ஃபேஸ் புக் போன்றவற்றின் பாஸ்வேர்டு போன்றவற்றை அவர்களுக்கு தெரியாமல் பார்ப்பதன் மூலம் கண்டறியலாம். முக்கியமாக தப்பு செய்பவர்களை எளிதில் கண்டறியலாம்.

அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்படும். பொய் மேல் பொய் சொல்வர். ஏதாவது சில பொருள்களை கண்முன் படாமல் மறைத்து வைப்பர். நம்மை பிடிக்காத காரணத்தினால் நம்மிடம் அனைத்திற்கும் கோபமாக நடந்து கொள்வர். இத்தகைய செயல்களால் அவர்கள் ஏமாற்றுகின்றனர் என்று அறியலாம்.

கணவரிடம் வித்தியாசம் தெரிந்தால் உங்கள் கணவரிடம் முதலில் போனில் தொடர்ந்து பேசிய நம்பரை கண்டுபிடிக்கவும்.
பெரும்பாலும் அதற்கு அவர் சரியான பெயரைக் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஆணாக இருந்தால் பெண்ணின் பெயரும், பெண்ணாக இருந்தால் ஆணின் பெயரும் இருக்கும். அதனை சரியாக கையாண்டு துணைவருக்கு தெரியாத வகையில் தொடர்பு கொண்டு, அதனை நிரூபித்துக்கொள்வது முக்கியம்.

எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இத்தகைய பிரச்சனைகள் உங்கள் கணவரிடம் இருந்தால் இதனை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும். இல்லையெனில் குடும்ப உறவுகள் சிதையக் கூடும்.

வவுனியாவில் வைத்தியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

 
இலங்கையில் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை நிறுவுதல் மற்றும் எட்கா எனும் இலங்கை இந்திய பொருளாதார ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(16.03.2016) காலை வவுனியா வைத்தியர்கள் விடுதியிலிருந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஹொறவப்பொத்தானை வீதியூடாக மணிக்கூட்டுக் கோபுரம் வீதிவழியாக கார்கில்ஸ் புட்சிட்டியை வந்தடைந்து அங்கு வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, வைத்தியத்துறைக்கு ஆபத்து, நோயாளிகளை பலிக்கடா ஆக்காதீர், ஈ.ரி.சி.ஏ. ஜ இரத்துச் செய், நோயாளர்களின் உயிர் விற்பனைக்கில்லை, போன்ற பல்வேறு கோசங்களை முன்வைத்து வைத்தியர்கள் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

DSC_0003 DSC_0007 DSC_0011 DSC_0012 DSC_0013 DSC_0017 DSC_0023 DSC_0025 DSC_0035 DSC_0037 DSC_0041 DSC_0049

அஞ்சலியுடனான நட்பு காதலாக மாறினாலும் மாறலாம் : ஜெய்!!

Jai

சுப்பிரமணியபுரம், சென்னை-28, திருமணம் எனும் நிக்கா, கோவா, ராஜா ராணி, எங்கேயும் எப்போதும், பிரியாணி, வடகறி ஆகிய படங்களில் நடித்தவர், ஜெய். அடுத்து இவர் நடித்து, புகழ் என்ற படம் வெளிவர இருக்கிறது. இது தொடர்பாக, நிருபருக்கு ஜெய் பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெய் அளித்த பதில்களும் வருமாறு..

கேள்வி:- புகழ் எந்த மாதிரி கதையம்சம் உள்ள படம்?

பதில்:- இது, அரசியல் சார்ந்த கதை. பொதுவாக, பிரச்சினைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்கிற இளைஞன் ஒருவன், எல்லா ஊர்களிலும் இருப்பான். புகழ் படத்தில் அப்படிப்பட்ட இளைஞனாக நான் வருகிறேன். இதனால் எனக்கும், ஒரு அரசியல்வாதிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினை எப்படி தீர்க்கப்படுகிறது என்பதே கதை.

கேள்வி:- உங்களுக்கும், நடிகை அஞ்சலிக்கும் காதல் இருப்பதாக பேசப்படுகிறதே, அது உண்மையா?

பதில்:- 2011ல் எனக்கும், அஞ்சலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. அவர் தெலுங்கு பட உலகுக்கு போனபின், இரண்டு பேருக்கும் இடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன், நானும் அஞ்சலியும் மீண்டும் சந்தித்துக் கொண்டோம். அப்போது எங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். சில பொது இடங்களுக்கு சேர்ந்து சென்றோம். எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. அது, காதலாக மாறினாலும் மாறலாம்.

கேள்வி:- இருவரும் திருமணம் செய்து கொள்வீர்களா?

பதில்:- எனக்கு திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லை. இப்போதைய திருமண உறவுகள் நீடித்து இருப்பதில்லை. பெரும்பாலான ஜோடிகள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். அதைப்பார்த்து எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை போய் விட்டது. காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதில் தப்பு இல்லை.

கேள்வி:- அஞ்சலி தவிர, சினிமாவில் உங்களுக்கு வேறு சினேகிதிகள் இருக்கிறார்களா?

பதில்:- நயன்தாரா, எனக்கு நல்ல சினேகிதிதான். அவர் அவ்வப்போது எனக்கு போன் செய்வார். நான் சோகமாக இருக்கும்போதும், குழப்பமாக இருக்கும்போதும் எனக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். நிறைய முறை இது நடந்திருக்கிறது’’ என்று ஜெய் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளத்தில் குறைநிவர்த்தி செய்யும் நடமாடும் சேவை!!

 
வடமாகாண சபையும், மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் குறைநிவர்த்தி செய்யும் நடமாடும் சேவையானது இன்று (16.03.2016) காலை 09.00 மணி தொடக்கம் 04.00 மணிவரை வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பான்ட் வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டது. இதன் பின்னர் காணி உறுதிப் பத்திரங்கள், மற்றும் மாவட்ட செயலாளரின் மேற்பார்வையில் நடைபெற்ற குலுக்கல் முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 150 000 காசோலையும் வழங்கப்பட்டது.

வடமாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பினை நாம் பெறுப்பேற்ற பின்னர் வடமாகணத்தில் பல பாகங்களிலும் நாடமாடும் செவைகளை நடாத்தி அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்குறிய தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை செய்து வருகின்றோம்.

அந்தவகையில் வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவிலே நடமாடும் சேவை நாடத்தப்படுகின்றது. நடமாடும் சேவை மக்களின் தேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு நடத்தப்படுகின்றது என வடமாகாண சபை முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியினை வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாணசபை முதலமைச்சரின் சார்பாக வடமாகான கல்வி அமைச்சர் குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, ம.தியாகராஜா, இ.இந்திரராசா, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கௌரவ முதலமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் , செட்டிக்குளம் பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC_0001 DSC_0002 DSC_0007 DSC_0010 DSC_0012 DSC_0013 DSC_0015 DSC_0018 DSC_0019 DSC_0021 DSC_0023 DSC_0025 DSC_0028 DSC_0031 DSC_0032 DSC_0039 DSC_0043 DSC_0044 DSC_0052 DSC_0059 DSC_0061 DSC_0069 DSC_0072 DSC_0075

நிகழ்ச்சித் தொகுப்பாளினி மற்றும் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!!

Sucide

சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினி மற்றும் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

23 வயதான கே.நிரோஷா செகண்ட்ராபாத்தைச் சேர்ந்தவர். பிரபல தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.

கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும், அக்காதல் கல்யாணம் வரை நிச்சயிக்கப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் திருமணம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த விடுதி அறையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சாய்பிரசாந்த் இறந்து மூன்று தினங்கள் கூட முடிவடையாத நிலையில் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரத்தின் தற்கொலை சினிமா, மற்றும் சின்னத்திரை உலகைச் சேர்ந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை இந்து மாமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் மு.கதிர்காமநாதனின் அஞ்சலி நிகழ்வு!!

 
அகில இலங்கை இந்து மாமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் அமரர் மு.கதிர்காமநாதனின் அஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

அமரரின் உருவப்படத்தையும், “எமது பண்பாடு – அன்றும் இன்றும்” எனும் பொருளில் தமிழருவி த.சிவகுமாரன் நினைவுப் பேருரை ஆற்றுவதையும் கந்தையா நீலகண்டன் தலைமையுரையாற்றுவதையும் மேடையில் பிரமுகர்கள் அஞ்சலி செய்வதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

1 3 4 6 14

வவுனியா நகரசபையின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

 
வவுனியா நகரசபையில் கடமைபுரியும் சுகாதார ஊழியர்களின் பிள்ளைகள் 48 பேருக்கு வவுனியா நகரசபையின் ஊழியரும், சகாயமாதாபுரம் சனசமுக நிலைய தலைவருமான ஜோன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ராம் பவுண்டேசன் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா சகாயமாதாபுரத்தில் வசிக்கும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கே, சகாயமாதாபுரம் சனசமுக நிலைய கட்டிடத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்க பட்ட இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,வவுனியா நகரசபையின் ஊழியரும் சகாயமாதாபுரம் சனசமுக நிலைய தலைவருமான ஜோன், வவுனியா நகரசபையின் ஊழியரும், சகாயமாதாபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவருமான திருச்செல்வம், சகாயமாதாபுரம் சனசமுக நிலைய செயலாளர்
கலிஸ்டன், பொருளாளர் அஸ்வினி, உபசெயலாளர் நிமல்ராஜ், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் சிவபாலன், ஊடகவியலாளர் காந்தன் உட்பட ஊழியர்கள், பிள்ளைகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSCN1437 DSCN1439 DSCN1450 DSCN1459 DSCN1464 DSCN1473 DSCN1487 DSCN1495 DSCN1497 DSCN1503 DSCN1507 DSCN1513 DSCN1537

நண்பர்களுக்கு இடையிலான மோதலில் பலியான தாய் : ஓர் பரிதாப சம்பவம்!!

Fight

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் நண்பர்களுக்கிடையிலான மோதலை விலக்க சென்ற 65 வயதுடைய பெண் ஒருவர் தாக்குதலுக்கு இழக்காகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இத்தோட்டத்தை சேர்ந்த ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 24ம் திகதி மாலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் இரு நண்பர்கள் மது அருந்திவிட்டு வாய் தர்க்கம் ஒன்று கைகலப்பில் முடிந்துள்ளது.

இத் தோட்டத்தில் தொடர் வீட்டு குடியிருப்பில் பக்கம் பக்கமாக இருக்கும் இந்த நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தவிர்ப்பதற்காக மோதலில் ஈடுப்பட்டுள்ள ஒருவரின் தாயார் இதனை தடுக்க முற்பட்டுள்ளார்.

இதில் தாயாரின் கையில் காயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த தாயார் இந்த நண்பர்களுக்கிடையில் சிக்குண்டு தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த தாயார் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்த பின் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 2 தினங்களில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய இவர் தாக்குதலில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட இவர் 14.03.2016 அன்று இரவு உயிரிழந்துள்ளார். இவரின் மரண விசாரணை நேற்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர்.குடாகமவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் குறித்த தாயாரின் வயிற்றில் குடல் பகுதி வெடித்து காணப்பட்டதை உணர்ந்த மரண விசாரணை அதிகாரி இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்து இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து தலவாக்கலை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுப்பட்ட பிரிதொரு நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த நபர் 2 பிள்ளைகளின் தந்தையாவர். இவர் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக உயிரிழந்த பெண் முன்னரே தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்ததை அடிப்படையாக கொண்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை பொலிஸ் விசாரணையின் பின் இன்று மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதாக விசாரணையை மேற்கொள்ளும் தலவாக்கலை குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.