வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு!!

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் 30.11.2014 அன்று காலை 10 மணிக்கு பழைய மாணவனும் கல்லூரியின் பிரதி அதிபருமான திரு ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு.யோயல் நிரோசன், செயலாளராக திரு..நிமலன், பொருளாளராக சுரேஷ்குமார், உப தலைவராக மோகன்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், நிர்வாக சபை உறுப்பினர்களாக திரு.மகிந்தன், திரு.பார்த்தீபன், திரு.பிரகாஸ், திரு.இராஜசேகர், திரு.ஜீவகுமார், திரு.அபிராம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

10432153_302931723250706_1259089242644477313_n 10624728_302931039917441_4123921602968123475_n

குஷ்புவை அலங்கார பொம்மையாக்கமாட்டோம் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!!

kushboo

குஷ்புவுக்கு பதவி கொடுத்து அலங்கார பொம்மையாக்க மாட்டோம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு முதல் முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று காலை வந்தார்.

அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் 34,000 கோடி ஒதுக்கியது.

இது தற்போது 23,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிதியை குறைத்தால் பஞ்சாயத்து, தாலுகா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

குஷ்புக்கு பதவி கொடுத்து அலங்கார பொம்மையாக்க மாட்டோம். பதவி மட்டும் அவருக்கு பெருமை தராது. உழைப்பால் மரியாதை பெற்றவர். மக்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறார்.

வாசன் இடத்தை நிரப்ப குஷ்புவை அழைத்து வந்ததாக கூறுகிறார்கள். அது தவறு, இன்னும் கிராமப்புறங்களில் மூப்பனார், ஜி.கே.வாசன் என்றால் யாருக்கும் தெரியாது. காமராஜர் படம் இல்லாமல் இனிமேல் எந்த நிகழ்ச்சியும் இருக்காது.

ஆனால், மூப்பனார் படம், பெயரை இனி முன்னிலைப்படுத்த மாட்டோம். ஏனென்றால் அவரது பெயரில் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்காக மூப்பனார் எந்த தியாகத்தையும் செய்யவில்லை. அவர் என்ன தியாகம் செய்தார் என்பதை ஜி.கே.வாசன் விளக்கட்டும்.

சட்டப்பேரவையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்காருவதற்கு ஏற்றார் போல் இருக்கை வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, காவிரியில் அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்வதாக கூறி நடிகையை பலாத்காரம் செய்த நடிகர் கைது!!

Act

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நடிகையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மணீத் மித்தா என்கிற அஹ்வான் குமார் இந்தி மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர். இவர் மீது சகநடிகை ஒருவர், மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஓசிவாரா பொலிசில் கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், மணீத் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கற்பழித்துவிட்டார் என்றும் தான் கர்ப்பம் அடைந்து அதை கலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பின்னர் மணீத்தை கைது செய்து விசாரித்துள்ளனர். பொலிஸ் விசாரணையில், மணீத் நிறைய பெண்களை இதுபோல் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மணீத் நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், எல்லோரிடமும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் என்றும் கற்பழிப்பு குற்றங்களிலும் ஈடுபட்டு உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் நாணயங்களால் செய்த பிரமிட் : உலக சாதனை படைத்த வாலிபர்!!

pyramid

லித்வேனியா நாட்டு வாலிபர் ஒருவர் 10 லட்சம் லிட்டாஸ் நாணயங்களை வைத்து பிரமிட் அமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

லித்வேனியாவில் வரும் ஜனவரி 1ம் திகதி முதல் யூரோ பயன்படுத்தப்பட உள்ளதால், அந்நாட்டின் நாணயமான லிட்டாஸ் இனிமேல் பயன்படுத்தப்படமாட்டாது.

இந்நிலையில் 26 வயது வாலிபர் டாமஸ் ஜோகுபாவ்ஸ்கிஸ், தமது நாட்டின் பணம் உலக அளவில் நினைவில் இருக்க வேண்டும் என்று லிட்டாஸ் நாணயங்களை கொண்டு பெரிய பிரமிட்டை உருவாக்க எண்ணியுள்ளார்.

இதற்காக ஒரு மில்லியன் நாணயங்களை சேகரித்து ஒருவாரம் செலவழித்து 1 மீட்டர் உயரமுள்ள பிரமிட்டை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்கு முன்னதாக 6 லட்சம் நாணயங்களை கொண்டு பிரமிட் உருவாக்கப்பட்டது உலக சாதனையாக இருந்தது.

மேலும், அதனை நாங்கள் எப்படியும் முறியடித்து விடுவோம் என்று உறுதியாக இந்த முயற்சியை எடுத்து 10 லட்சம் நாணயங்களை வைத்து உருவாக்கினோம் என்று தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நகரசபை நடாத்திய பரிசளிப்பு விழா!!

வவுனியா நகரசபையும் பொது நூலகமும் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று (29.11) காலை 9.00 மணியளவில் நகரசபை கலாசார மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் திரு.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கௌரவ திரு.எஸ்.திருவாகரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா, வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு.க. சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயதிலக்க, வவுனியா பிரதேச சபைகளின் செயலாளர்கள், கலாநிதி தமிழ்மணி அகளங்கன் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தலைவர் சேனாதிராசா, வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் சந்திரகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன், மற்றும் வாசகர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நகரசபை மற்றும் பொது நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு பாடசாலை, புது வாழ்வுப் பூங்கா மற்றும் கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

தொடர்ந்து தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டிகளுக்கான பரிசில்களுடன் புலமைபரிசில் சித்தியெய்திய 14 பாடசாலைகளைச் சேர்ந்த 42 மாணவர்களுக்கு வங்கி கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG_3782 IMG_3783 IMG_3785 IMG_3791 IMG_3793 IMG_3796 IMG_3807 IMG_3841 IMG_3847 IMG_3854 IMG_3876 IMG_3881 IMG_3886 IMG_3892 IMG_3940 IMG_3945

வன்னியின் முன்னாள் பா.உ இராஜ குகனேஸ்வரன் ஐ.தே.கவில் இணைவு!!

rajathurai

வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இராஜ குகனேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று இணைந்து கொண்டுள்ளார்.

1984 ஆம் ஆண்டில் இருந்து 1994 ஆம் ஆண்டுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் ஊடாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி பாராளுமன்ற உறுப்பினராகவும், 2000 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டுவரை மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் ஊடாக தமிழீழ விடுதலை இயக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானவர் இராஜ குகனேஸ்வரன்.

இவர் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்தார்.

2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி!!

SL

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில், இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இரண்டாவது போட்டி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முன்னதாக மழை காரணமாக போட்டி 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் 43வது ஓவரிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இங்கிலாந்து 185 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஜந்த மெண்டிஸ் மூன்று விக்கெட்டுக்களையும், தில்ஷான் மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி 186 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 34.2 ஓவர்களில், 2 விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்த நிலையில் இலக்கை (186) எட்டியது.

இதன்படி 64 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றியை ருசித்தது. இலங்கை அணி சார்பில் மஹெல ஜெயவர்த்தன 77 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 67 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இதன்படி ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. இதேவேளை இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக மஹெல ஜெயவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் சொகுசு பஸ்சில் இருந்து கேரள கஞ்சா மீட்பு!!

kanja

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 அளவில், யாழ். நீதிமன்றத்திற்கு அருகாமையில், பஸ்ஸின் பின் இருக்கையில் இருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

பஸ்ஸில் பயணித்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, கஞ்சாவினை கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாரையும் கைதுசெய்யவில்லை என்றும், கஞ்சாவினை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் இவற்றை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நல்ல வாழ்க்கைத் துணைக்கான 7 குணங்கள்!!

love

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர்.

நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான். ஆனால் மற்ற நல்ல அம்சங்கள் மற்றும் அவர்களின் இதர குணங்களை கவனிப்பதில்லை. அதற்காக வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும் பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர் என்று கூறுவது தவறல்ல.

ஆனால் அது மட்டுமே எல்லாம் என்றாகி விடாது. ஆகவே வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையை தேட கூடாது. ஏனெனில் அது ஒரு சிறு சதவீதம் மட்டுமே. இப்போது வாழ்க்கை துணையாக வருபவரிடம் என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள கீழே படித்து பாருங்கள்.

நீங்கள் நீங்களாகவே இருப்பதனால் உங்களை விரும்புவார்கள்..

நீங்கள் நீங்களாக இருக்கும் போதே, உங்களை விரும்பினால், அது வாழ்க்கை துணையின் நல்ல பண்பாகும். ஏன் இதை கூறுகிறோம் என்றால், சில பேர் தன் வாழ்க்கை துணை நல்லதை செய்தால் மட்டுமே விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் மற்றொரு முகத்தை காண அவர்கள் விரும்பமாட்டார்கள்.

ஆனால் இதுவே நல்ல பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால், நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும் உங்களை விரும்புவதோடு, கஷ்ட காலங்களில் உங்களுக்கு தோள் கொடுப்பார்.

தன் வார்த்தையை காப்பாற்றுவார்கள்..

நல்ல வாழ்க்கை துணை கஷ்ட காலங்களின் போது நழுவாமல் இருப்பதோடு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள், அது தொலைபேசியில் அழைப்பதாகட்டும் அல்லது வெளியில் அழைத்து செல்வதாகட்டும். ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கான பொறுப்பான காரணத்தை தெரிவிப்பாரே தவிர, சிறு பிள்ளைத்தனமான காரணத்தைக் கூறமாட்டார்கள்.

பக்கபலமாக இருத்தல்..

ஒரு நல்ல வாழ்க்கை துணை, உங்களின் வளர்ச்சியை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். அந்த புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின் அலுவலக முன்னேற்றத்திலும் கூட. மேலும் உங்களின் வெற்றியை அவருடைய சாதனையாக கருதுவார். அதுமட்டுமல்லாமல், உங்களின் வெற்றிக்கு உங்களை ஊக்கப்படுத்த முற்படுவார்.

தன் காதலை காலநேரம் பார்க்காமல் வெளிகாட்டுவார்கள்..

ஒரு நல்ல துணை என்பவர், கால நேரம் எதுவும் பார்க்காமல், தன் காதலை வெளிப்படுத்துவார்கள். மேலும் தன் காதலை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, இந்த உலகத்திலேயே மிகவும் அழகானவராக, வசீகரமுள்ளவராக, தனித்தன்மை உள்ளவராக உங்களை கருதுவார்கள். மற்ற அழகான நபரை கண்ட போதிலும், அவர் மனதில் நீங்கள் மட்டும் தான் குடி கொண்டிருப்பீர்கள்.

பொறுமையுள்ளவராக இருப்பார்கள்..

ஒரு உண்மையுள்ள வாழ்க்கைத் துணை, எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட காரியங்களிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். மேலும் எப்போதும் வலுக்கட்டாயப்படுத்தாமல், உங்கள் மனதை கவர, அவர்களின் காதலை நீங்கள் புரிந்து கொள்ளுமாறு நடந்து கொள்வார்கள்.

தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்வார்கள்..

ஒரு நல்ல வாழ்க்கைத் துணை என்பவர், தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்காக உடனடியாக மன்னிப்பும் கோருவார்கள். இதுவே தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், உங்கள் மீது பழியை போட நினைப்பவர் வாழ்க்கை துணையாக வந்தால், கண்டிப்பாக அவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்க முடியாது.

உங்களுக்காக எப்போதும் நேரம் ஒதுக்குபவராக இருப்பார்கள்..

எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் சரி, ஒரு நல்ல வாழ்க்கை துணை உங்களுக்காக தன் நேரத்தை ஒதுக்க தவறமாட்டார்கள். “சொரி, வேலையில் பிசியாக இருந்து விட்டேன்” என்ற வாக்கியத்தை நல்ல வாழ்க்கை துணையிடம் இருந்து எப்போதும் கேட்கவே முடியாது. ஏனென்றால் அவர் உங்களுடன் இருந்தால், மலையை அசைக்கலாம், கண்டம் விட்டு கண்டம் தாண்டலாம், நாடு விட்டு நாடு பறக்கலாம் என்ற எண்ணங்கள் அவருக்கு ஏற்படும் என்பதால் தான்.

இஸ்லாமிய மதத்தை அவமதித்த பிரபல நடிகைக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

v v1

பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் என்பவருக்கு மதத்தை அவமதித்த கூறி 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் பஷீர் ஆகியோர் நடித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பட்டது.
அப்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வது போன்ற ஒரு காட்சியின்போது, இஸ்லாம் மத பாட்டு ஒன்று பின்னணியில் ஒளிபரப்பப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு உள்ள மத அடிப்படைவாதிகள் பலரும் இந்நிகழ்ச்சி எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமின்றி நீதிமன்றங்களில் மனுக்களும் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மதத்தை அவமதித்து விட்டதாகக் கூறப்பட்டது.

எனவே தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் மிர் ஷகில் உர் ரஹ்மான், நடிகை வீணா மாலிக், பஷீர் மற்றும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஷைஸ்டா வாகிதி ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி எதிர்ப்பு வந்தவுடன், அந்த தொலைக்காட்சி நிறுவனம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!!

Ebola

எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆபிரிக்காவில் லைபீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவலாக உள்ளது.

இந்த உயிர் கொல்லி நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே நோயை கட்டுப்படுத்த பல நாடுகள் தாங்கள் கண்டு பிடித்த மருந்துகளை பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவில் எபோலாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நோய் பாதிப்பு தெரிந்த 20 பேருக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.

அவர்களில் அதிக அளவு நோய் தாக்கி 39 டிகிரி செல்சியஸ் காய்ச்சல் இருந்த 2 நோயாளிகளுக்கு ஒரே நாளில் குணமாகி விட்டது. அதை தொடர்ந்து எபோலா மருந்து சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தில் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரித்து எபோலா நோய் அதிகம் பாதித்த மக்களுக்கு வழங்கி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறைவேறாமல் போன பிலிப் ஹியூக்ஸூன் ஆசை!!

philip

சீன் அப்போட் என்ற பந்துவீச்சாளரின் பவுன்சர் பந்தில் அடிபட்ட அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர் ஹியூக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் இதுவரை 26 டெஸ்டில் விளையாடி 3 சதம், 7 அரைசதம் உள்பட 1,535 ஓட்டங்களும், 25 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம், 4 அரைசதத்துடன் 826 ஓட்டங்களும், டி20 போட்டியில் ஒன்றில் ஆடி 6 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

இதே போல் முதல்தர கிரிக்கெட் போட்டியில் 114 ஆட்டங்களில் 26 சதத்துடன் 9,023 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

25 வயதான பிலிப் ஹியூக்ஸ் 1988ம் ஆண்டு நவம்பர் 30ம் திகதி அவுஸ்திரேலியாவின் மாக்ஸ்வில்லே என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். அங்கு அவரது தந்தை கிரேக், வாழை தோட்டம் வைத்து உற்பத்தி செய்து வருகிறார்.

தனது தந்தையின் வாழைப்பண்ணைக்கு ஹியூக்ஸ் அடிக்கடி செல்வார். அப்போதெல்லாம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணையும் வைக்க ஆசைப்படுவதாகவும், அதுவே தனது கனவு என்றும் கூறுவார். ஆனால் விதி அவரது வாழ்க்கையில் வேறு விதமாக விளையாடி விட்டது.

ஹியூக்ஸ் எப்போதும் பவுன்சர் எனப்படும் எகிறி வரும் பந்துகளை சமாளிப்பதில் தடுமாறுவது உண்டு.

தொடர்ந்து பவுன்சர் பந்து வீச்சுக்கு திணறியதால் ஒரு முறை ஆஷஸ் தொடரில் இருந்தும் கழற்றி விடப்பட்டார். கடைசியில் அப்படிப்பட்ட ஒரு பவுன்சர் பந்தே அவரது உயிரை பறித்து விட்டது.

சென்னையில் கைதான இலங்கையரான பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!!

terrorist
ஜாகீர் உசேன் சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையரான பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

இலங்கை கண்டியைச் சேர்ந்த முகம்மது ஜாகீர் உசேன் (37) சென்னையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தமிழக கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

உசேனிடம் போலீஸார் பல கட்டங்களாக விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், துணி வியாபாரம் செய்வதாக போலி பாஸ்போர்ட் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது, வெளிநாட்டுத் தூதரகங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைப் புகைப்படங்கள் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

குறிப்பாக, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் நாட்டு துணைத் தூதரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவற்காகப் புகைப்படம் எடுத்திருப்பதும், அந்தப் புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் வழங்கியிருப்பதும் தெரியவந்தது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மட்டுமன்றி ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றியும் அவர் தகவல் சேகரித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக கொச்சி கடற்படைத் தளம், விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்ததாக உசேன் போலீஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் தளங்களைக் குண்டு வைத்துத் தகர்க்கும் நோக்கத்தோடு தகவல்களைச் சேகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அவர் தனது வாக்குமூலத்தில் இலங்கைத் தூதரக அதிகாரிகள் அமீர் ஜூபைர் சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகியோரது உத்தரவின்பேரிலேயே இந்தத் தகவல்களைச் சேகரித்ததாகக் கூறியிருந்தார்,

உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் உசேன் சதித் திட்டங்களைத் தீட்டியிருப்பதாகக் குற்றம்சாட்டி கியூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஜாகீர் உசேனின் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு பங்கு இருப்பதால் இந்த வழக்கு தேசியப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரை தேசியப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு வியாழக்கிழமை (நவ.27) விசாரணைக்கு வந்தபோது “நான் பாகிஸ்தான் உளவாளிதான், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரின் தூண்டுதலின் பேரில் இந்தியாவின் இறையாண்மை, பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டேன்” என நீதிபதி மோனியிடம் ஜாகீர் உசேன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளியான ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

 

100 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த 8 மாத கர்ப்பிணி!!

pregantlady

பிரித்தானியாவை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி ஒருவர் 100 கிலோ எடை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

பிரித்தானியாவின் ஃப்ரைடன் நகரை சேர்ந்த கட்ஜா ஹர்ஜனா (39) என்ற பெண்மணி 8 மாத கர்ப்பிணியாக இருந்த காலத்திலும் தனது பலு தூக்கும் பயிற்சியை நிறுத்தவில்லை.

மேலும் இவ்வாறு பலு தூக்கினால் தான் பிரசவ காலத்தில் ஆரோக்கியமாக இருக்கும் என நம்பி வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களாக பயிற்சி செய்து வந்த கட்ஜா தனது கர்ப்பகாலத்தில் பயிற்சி செய்வதை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் இவர் இணையதளத்திலும், மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்று மேலும் தனது பயிற்சியை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து கட்ஜா கூறுகையில், நான் வாரத்தில் 5 முறை பயிற்சி செய்கிறேன் என்றும் கர்ப்பமான பின்பு தனது உடல் எடையை குறைக்க ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார்.

கட்ஜாவின் கணவர் ஜாசன் இவருக்கு உறுதுணையாக இருந்ததினால் தான் இவ்வாறு ஆரோக்கியத்துடன் செயல்பட்டுள்ளதா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் தங்களின் முதல் குழந்தையின் பிறப்புக்காக காத்திருக்கின்றனர்.

pregantlady - Copy

அப்பிளின் அதிரடி மாற்றம்!!

apple

அப்பிள் நிறுவனம் 2007ம் ஆண்டில் முதலாவது iPhone ஐ அறிமுகம் செய்ததிலிருந்து iOS இயங்குதளங்களில் இயல்புநிலை (Default) தேடு இயந்திரமாக கூகுளை தேர்வு செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் 2010ம் ஆண்டில் இதற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன்படி 2015ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் முடிவடைகின்றது.

எனவே 2015ம் ஆண்டிலிருந்து Yahoo அல்லது Bing இனை அப்பிளின் மொபைல் சாதனங்களில் இயல்புநிலை தேடுபொறியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதேவேளை மைக்ரோசொப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள் அப்பிள் நிறுவனத்துடன் சிறந்த உறவைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மகன்!!

father killer

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த நாதன் (27) என்ற இளைஞர் தனது தந்தை ரொபின்சனை (48) துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை தொலைக்காட்சி ஸ்டாண்டாக உபயோகப்படுத்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் தங்கள் குடியிருப்பு கட்டடத்தில் ஒன்றாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையில் நடந்த மோதலில் இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

முதலில் தனது தந்தையை கொலை செய்யவில்லை மறுத்து வந்தாலும், தற்போது ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.