அவுஸ்ரேலியா வீசாக்களில் புதிய மாற்றங்கள்!!

Australian Visa

தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டம் செனட்டில் வெற்றிபெறும் வகையில் அரசு முன்பு முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளன என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், செனட் அவை இந்த புதிய மாற்றத்தை ஏற்றால் வேலைசெய்ய உரிமை மறுக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க அரசு தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் நடந்த சூடான விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் வருகின்ற நத்தார் பெருநாளுக்கு முன்பதாக இந்த பிரேரணை வெற்றி பெற்றால் தற்போது அடிமை விசாவில் உள்ள அனைவருக்கும் தொழில் செய்யும் உரிமை வழங்கப்படும்.

மனிதநேய அடிப்படியில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளப்படும் என பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கி உள்ளதால் இந்த சட்ட மூலம் செனட் சபையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல வருடங்களாக தங்களது அகதி கோரிக்கைகளுக்காக காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் துரிதப்படுத்தப்படும் எனவும் மொரிசன் தெரிவித்துள்ளார்.

படகில் வந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தர பாதுகாப்பு வீசாவினை பெற்றுக் கொள்ளவும் இந்த சட்டம் வகை செய்யும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நிலுவையில் உள்ள 30 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பப்படிவங்களும் 3 வருடத்துக்குள் பரிசீலிக்கப்படும் எனவும் கோரியுள்ளார்.

நேற்று நடந்த குறுக்கு மேசை செனட் அமர்வுகளின் போது நடந்த விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மசோதா பற்றி தெரிவிக்கையில் தான் திருப்த்தி அடைந்துள்ளதாக மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதனுள் பாமர் கட்சியுடன் ஒத்துக் கொண்டவைகளும் இச் சட்ட மாற்றத்தில் உள்ளடங்கியுள்ளது. 2013 யூலை 19 முதல் 2013 யூலை 31ம் திகதிக்குள் வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்ரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள். அவர்களின் கோரிக்கைகளும் அவுஸ்திரேலியாவில் பரிசீலிக்கப்படும்.

இதன் காரணமாக 100 க்கு அதிகமான சிறுவர்களும் விடுவிக்கப்படப்படும் எனவும், சிலர் நத்தார் பெருநாளுக்கு முன்னரே விடுவிக்கப்படலாம் எனவும் மொரிசன் தெரிவித்துள்ளார்.

சில குறிப்பிட்ட பிரதேசங்களில் சென்று தொழில் செய்ய படிக்க விரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள 5 வருட சேப் கெவன் என்று அழைக்கப்படும் வீசா வழங்கப்படும். அது போன்று அவர்கள் ஒரு பாதுகாப்பு வீசாவுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்று மொரிசன் தெரிவித்துள்ளார்.

தற்காலிக பாதுகாப்பு வீசா மீண்டும் வந்தால் சமுதாயத்தில் தற்போது அடிமை வீசாவில் உள்ள 25000 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தொழில் செய்யும் அனுமதியும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்து இடம்பெறவுள்ள 2 வஜட்டிலும் லேபர் அரசாங்கம் அகதிகளை உள்வாங்கியத்தை விட கூடுதல் அகதிகளையும் உள்வங்குவதற்கு ஓப்புக் கொண்டுள்ளார்.

மற்றைய செனட் சபை அங்கத்தவர்கள் இந்த புதிய வீசா நடைமுறையில் திருப்பதி இல்லை இருந்தாலும் தற்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்த போதும் ஒரு சில செனட்டர்கள் இந்த சட்ட மூலத்துக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

எது நடந்தாலும் தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன் கருதி அடிமை வீசாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி அனைவருக்கும் ஏதோ ஒரு வீசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3 ஆண்டுகள் கடந்தும் எந்தவிதமான நன்மைகளும் இன்றி வீசாக்கள் காலாவதியகிய நிலையில் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் உள்ளனர். அது போன்று இவர்களை வைத்து கொள்ளை லாபம் தேடும் சில வர்த்தகர்களுக்கு சிறந்த பாடம் படிப்பிக்க வேண்டும்.

இவ்வளவு தூரம் மொரிசன் தனது தோல்வியை கருத்தில் கொண்டு தற்போது சிறிதளவு ஆறுதல் தரக் கூடிய அளவுக்கு பணிந்து வந்துள்ளமை புகலிடக் கோரிக்கையளார்களுக்கு வெள்ளை இனத்தை சேர்ந்த அகதி ஆவலர்களுக்கு கிடைத்த சிறிய வெற்றி.

ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!!

eng

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதால் தடங்கள் ஏற்பட்டது.
பின்னர் 50 ஓவர்கள் 35 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 242 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பாக குமார்சங்கக்கார 63 ஓட்டங்களையும் லகிரி திருமானே ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் விளாசினர்.

இதனையடுத்து சீரற்ற காலநிலை காரணமாக இங்கிலாந்துக்கு 236 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை விளாசி வெற்றிவாகை சூடியது.

இதன்படி ஏழுபோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என இலங்கை முன்னிலையில் உள்ளது.

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீவிபத்து : மோட்டர் சைக்கிள் எரிந்து நாசம்!!(படங்கள், வீடியோ)

வவுனியா நகர மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் வவுனியா தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றது.

மேற்படி சம்பவத்தில் மோட்டர் சைக்கில் ஒன்று முற்றாக எரிந்து சாம்பலானது. மேற்படி சம்பவம் குறித்த மோட்டார் சைக்கில் இயங்கு நிலையில் (engine starting condition) இருந்தவாறே எரிபொருளை நிரப்ப முயற்சித்த வேளையில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக வவுனியா போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-கஜேந்திரன்-

 

1 2 3 4 5 6 7 8

பிலிப் ஹியூஸ் இறுதிப்பயணம்!!

phillip-hughes

பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்ற வருகிறது. அதனையொட்டி நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும் பேசிவருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் அருகில் உள்ள அவரது சொந்த ஊரான மேக்ஸ்வில்லி உயர்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் இந்த வழியனுப்பு நிகழ்வில் இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி, மேலாளர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் டங்கன் ப்ளெட்சர் ஆகியோர் உள்பட 5000 பேர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைவர் கிளார்க் உள்பட அனைத்து வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பேசிய ஹியூக்சின் சகோதரர் ஜேசன் ஹியூக்ஸ், அவரை விட நல்ல தம்பியை நான் கேட்கமுடியாது, அவருக்கு நான் இறுதி மரியாதை செலுத்துவதை என்னால் நம்பமுடியவில்லை, இந்த நேரத்தில் எங்கள் குழந்தைப்பருவ நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கிறேன்.

நாங்கள் இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நானும் பிலிப்பும் சேர்ந்து மோஸ்மேன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ஓட்டங்கள் எடுத்தோம். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, நாள் முழுவதும், தொடர்ந்து மறுநாள் முழுவதும் துடுப்பாட்டம் செய்வதை பிலிப் பெரிதும் விரும்புவார் என ஜேசன் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மைதானத்துக்குள் ஹோர்ன்கள் கொண்டுவரத் தடை!!

horn

இலங்கை கிரிக்கெட் சபை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்கள் ஹோர்ன்களை (horn) மைதானத்துக்குள் கொண்டு வர தடை செய்துள்ளது.

இவற்றால் ஏனையோருக்கு ஏற்பாடும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவை மைதானத்துக்குள் காணப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!!

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த யாழ் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் மைதானம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதற்கான நிதியுதவி சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. செலவிடப்பட்ட தொகை 100 மில்லியன் ரூபாவாகும்.

யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள இந்த மைதானத்தினை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ஜோசவ் செப் பிளட்டர் அவர்கள் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

வடமாகாணத்தில் காற்பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் றஞ்சித் ரொட்ரிக்கோ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்த அளுத்கமேக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் ஜுர்ஜன் மொர்ஹாட்டி, மற்றும் மாகாண அமைச்சர்கள் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு!!

European_union

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

நீதிமன்றின் தீர்ப்பானது புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.

புலிகளுக்கு எதிராகவும், புலிச்செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

mansarivu

இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண் சரிவுகள் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி பஹிரவகந்த பகுதியில் மண் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக சுமார் 35 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது குடியிருப்புகளில் இருந்து வெளியேறி நேற்றிரவு முழுவதும் கண்டி பேராதனிய வீதியில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பஹிரவகந்த பகுதியில் மண் மேடொன்று சரிந்து வீதியில் விழுந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய தமது அதிகாரிகள் இன்று குறித்த பகுதிக்கு சென்று மண் சரிவு அபாயம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தின் அதிபர் திரு.சிதம்பரப்பிள்ளை வரதராஜா அவர்கள் ஜனாதிபதியினால் கௌரவிப்பு!!

satha10002

இலங்கையின் மத்தியஸ்த செயற்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைபடுத்துவதில் மிகுந்த அர்பணிப்புடன் செயற்பட்ட உன்னதமான பணியை வரவேற்க்கும் பொருட்டு 2014.12.01ம் திகதி அன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்தியஸ்தர்களை கௌரவிக்கும் தேசிய வைபவத்தின் போது வவுனியா மத்தியஸ்தசபை (262) தவிசாளர் திரு.சிதம்பரப்பிள்ளை வரதராஜா அவர்கள் ஜனாதிபதியினால் கௌரவிக்க பட்டார் .

இவர் வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தின் அதிபரும் சிறந்த சமுக சேவையாளரும் ஆவார்.

 

காற்பந்து மைதானத்தில் ஓடிய பேய் : பரபரப்பு வீடியோ!!

ஆஜென்டினாவில் காற்பந்து மைதானத்தில் பேய் ஒன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஜென்டினாவில் ரேசிங் கிளப் மற்றும் ரிவர் பிளேட் ஆகிய அணிகள் மோதிய காற்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றபோது மைதானத்தில் பேய் ஒன்று ஓடியுள்ளது.

பேய் ஓடியது கமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்ட இரண்டே நாட்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

வீடியோவில் அந்த நிழல் போன்ற உருவம் மைதானத்தில் முன்னும், பின்னுமாக ஓடியுள்ளது. ஆனால் போட்டியை நேரில் பார்த்தவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை.

இந்த வீடியோவில் இருக்கும் நிழல் உருவம் பேய் இல்லை என சிலர் கூறியுள்ளனர். ஆனால் வேறு சிலரோ இதே பேய் வேறு ஒரு போட்டிக்கும் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

ghost_001 ghost_002 ghost_004

பிரான்ஸில் கடுமையான வெள்ளம் : 5 பேர் பலி!!

பிரான்ஸின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை மற்றும் பலத்த புயலால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு பிரான்ஸில் கடந்த சில தினங்களாக வீசும் கடும் புயலால் பலத்த மழைபெய்து வருகிறது. இந்த தொடர்மழையினாலும் பலத்த புயல் காற்றினாலும் தெற்கு பிரான்சில் வசித்துவரும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.

இந்த இயற்கை பேரிடரால் இதுவரை தெற்கு பிரான்சில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், அங்கு வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இடங்களை காலி செய்துவிட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

f f1 f3

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் 5ம் திகதி மூடப்படும்!!

schoo

இவ்வருடத்திற்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் 5ம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக 5ம் திகதி மூடப்படும் எனவும் 2015ம் ஆண்டு முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 5ம் திகதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணை ஏப்ரல் 8ம் திகதிவரை இடம்பெறும். முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக 5ம் திகதி மூடப்பட்டு 2015 முதலாம் தவணை ஜனவரி 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு ஏப்ரல் 10ம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

2014 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸின் இறுதி சடங்கு நாளை!!

huge

அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதல்தர போட்டியில் பந்து தாக்கி மரணம் அடைந்தார். சிட்னியில் கடந்த 25ம் திகதி நடந்த உள்ளூர் போட்டியில் சியான் அபோட் வீசிய பவுன்சர் பந்து அவரது தலையில் பலமாக தாக்கியது. மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் அவர் நினைவு திரும்பாமலேயே கடந்த 27ம் திகதி மரணம் அடைந்தார்.

ஹியூக்ஸ் மரணம் கிரிக்கெட் உலகையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது இறுதி சடங்கு சொந்த ஊரான மேக்ஸ்வெல்லில் நாளை நடக்கிறது. இதில் அவுஸ்திரேலிய வீரர்கள், கிரிக்கெட் சபை நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்திய அணியின் தற்காலிக தலைவர் வீராட் கோலி, பயிற்சியாளர் பிளட்சர், அணி இயக்குனர், ரவிசாஸ்திரி மற்றும் 4 வீரர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்கள். ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!

exam

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

புள்ளிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

A6

வவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வைப்பிலிடச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார், விடத்தல்தீவுப் பகுதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே வவுனியா பொலிஸாரால் நேற்று செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வவுனியா நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்றபோது பணத்தில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் இருந்தமை வங்கி உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து வங்கி நிர்வாகம் இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா திருநாவற்குளத்தில் மாணவர்கள் கௌரவிப்பும், கற்றல் உபகரணங்கள் வழங்கலும்!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சமூக ஆர்வலர் திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களினால் தரம் 05 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50 மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வும் 30.11.2014 காலை 9.30 மணியளவில் திருநாவற்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா, கிராம சேவையாளர் திரு.கோணேஸ்வரலிங்கம், வவுனியா நகரசபை முன்னாள் உபநகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முல்லை மாவட்ட இணைப்பாளர் திரு.க.சிவநேசன்(பவன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராஜசேகரம் (சேகர்) நிருத்திய ஸ்ருதி நாட்டிய கலாலய அதிபர் திருமதி.செல்வராசா கௌரிதேவி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய அதிபர் திருமதி.திருவருள்நேசன், அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் திரு.கிருபாகரன், திருநாவற்குள பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.ரத்னமால மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புலம்பெயர்ந்த தமிழர்களில் குறிப்பிட்ட சிலர் மாத்திரமே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ் வாதார மேம்பாட்டிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் ஒரு சமுதாயம் வளர வேண்டும் என்றால், சிறுவர்களின் கல்வி வீதம் வளர்ச்சி காணவேண்டும். எமது தோழர் நாகராஜா வன்னி மண்ணுக்கு ஆற்றிவரும் சேவைகள் அளப்பரியது, அவரைப் போன்று ஏனைய புலம்பெயர் உறவுகளும் தங்களால் இயன்ற உதவிகளை சமூகத்துக்கு செய்ய முன்வர வேண்டும் அத்துடன் சமூகத்தில் இன்னும் பல நாகராஜாக்கள் உருவாகி சமூகப்பணியாற்ற வேண்டும் எனவும்,

30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமானால், புலம் பெயர் உறவுகளின் உதவிகள் நிச்சயமாக தேவை. புலம் பெயர் உறவுகளின் உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மறுமலர்ச்சி, சிறுவர்களின் கல்வி வளர்ச்சியை பெற முடியும். நிகழ்காலத்தில் ஒரு அரசியல் தீர்விற்காக மீண்டும் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. யுத்தத்தால் பாதிக்கபட்ட போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு புலம் பெயர் உறவுகளின் உதவிகள் இன்றியமையாததாகும் எனவும் தெரிவித்தார்.
IMG_0698

IMG_0704

IMG_0708

IMG_0714

IMG_0748

IMG_0768

IMG_0776

IMG_4029

IMG_4033

IMG_4037

IMG_4074

IMG_4147

IMG_4241

IMG_4243