வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் இளங்கதிர் முன் பள்ளியின் பிரியாவிடை வைபவம்!!

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் இளங்கதிர் முன் பள்ளியில் ஆரம்ப கல்வி கற்று தரம் 01க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் 04.12.2014 அன்று இளங்கதிர் முன் பள்ளியில் ஆசிரியை செல்வி வீ .ரேணுகா தலைமையில் இடம் பெற்றது .

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட பிரதி திட்ட பணிப்பாளர் டி.எ.டி.ரஞ்சித் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட ஊழியர்கள் சந்திரகுமார் (கண்ணன் )துளசிகன் , குணசேகரம் (குணம் ) மற்றும் கிராமசேவையாளர் செல்வி செ.அனுசியா , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , மாதர் சங்க தலைவி உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .

நிகழ்வில் உரையாற்றிய மீள் எழுச்சி திட்ட பிரதி திட்ட பணிப்பாளர் டி.எ.டி.ரஞ்சித் அவர்கள் மாணவர்கள் நன்கு கற்று நல்ல பிரஜை ஆவது மட்டும் இன்றி இன மத மொழி பேதமின்றி சேவை செய்யும் குடிமகனாகவும் ஆக வேண்டும் என கேட்டு கொண்டார் .

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட ஊழியரும்.தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவருமான சந்திரகுமார் (கண்ணன் ) அவர்கள் கல்வியே இனி எம் எதிர்கால மூலதனம் எனவே நீங்கள் நன்றாக கற்று நற்பிரசைகளாக வரவேண்டும் என்று கேட்டு கொண்டார் .

பின்னர் மாணவர்களுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்களும், முன்பள்ளியால் சான்றிதழ்களும் வழங்க பட்டன. முன் பள்ளி ஆசிரியையின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

DSCN2847 DSCN2863 IMG_5940 IMG_5942 IMG_5947 IMG_5948 IMG_5949 IMG_5951 IMG_5955

 

வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி சங்கத்தின் “கல்விகரம்” செயற்றிட்டம்!!

வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி சங்கம் தமிழ் மாணவர்களின் கல்வி மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு “கல்விகரம்” எனும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வெள்ளி (05.12.2014) அன்று வவுனியா கணேசபுரம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

10269622_810559885649377_7164967872642900728_n 10523863_810559882316044_4172922990392198139_n DSC00802 DSC00809

வவுனியாவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 135ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

வவுனியா கலை,இலக்கிய நண்பர்கள் வட்டம் ,வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 135ம் ஆண்டு நினைவு தினம் வவுனியா இலுபையடியில் அமைந்துள்ள நாவலர் பெருமான் சிலையடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகர பிதாவும் சிலையை கட்டி திறந்தும் வைத்த திரு.G.Tலிங்கநாதன், வவுனியா நகரசபை செயலாளர் திரு க.சத்தியசீலன் ,கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன், இன்தமிழ் இனியன் திரு எஸ்.எஸ்.வாசன், முன்னாள் உப நகர பிதா திருசந்திரகுலசிங்கம் (மோகன் ), வவுனியா CCTMS பாடசாலையின் அதிபர் திரு.பஸ்தியாம்பிள்ளை, தமிழ் ஆசிரியர் திரு.கதிர்காமசேகரன், முன்னாள் அதிபர் திரு.வையாபுரிநாதன், முன்னாள் கோவில்குளம் இந்து கல்லூரி அதிபர் திரு சிவஞானம்,

இலங்கை வங்கி முகாமையாளர் ரோய் ஜெயக்குமார், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), கலைஞர் மாணிக்கம் ஜெகன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ப.சத்தியசீலன் ,பிரதேசபை உறுப்பினர் சிவம், வர்த்தகர் நந்தன், சமுக ஆர்வலர்கள் பாலா, சேகர், இமயவன், வவுனியா C C T M S பாடசாலையின் உயர்தர மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய தமிழ் மணி அகளங்கன் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் பெருமைகளை பறை சாற்றினார் அவர் “எமது இந்து சமயத்துக்கு மட்டும் இன்றி கிறிஸ்தவ சமயத்துக்கும் பெரும் சேவை செய்துள்ளார் .
வெஸ்லியன் கல்லூரி தற்போது சென்றல் கல்லூரி அதிபராக இருந்த பாதிரியார் பீட்டர் பார்சிவல் கேட்டு கொண்டதுக்கு இணங்க பைபிளை மொழிபெயர்த்து கொடுத்த பெருமையும் ஆறுமுக நாவலரையே சாரும்.

மேலும் யாழ் வண்ணார் பண்ணையில் சைவபிரகாச வித்தியாலயம் தொடங்கி இலங்கை முழுவதும் சைவபிரகாச கல்லூரிகள் தொடங்க அடித்தளமிட்ட பெருமை இவரையே சாரும் எனவும். ஆங்கில அறிவின் அவசியத்தை அறிந்து ஆங்கில பாடசாலைகளை திறந்த பெருமை இவரையே சாரும் என்றார்.

மேலும் யாழ் மக்கள் சிறந்த கல்விமான்களாக திகழ இவரின் பங்கு அளப்பரியது” என உரையாற்றினார் .
பின்னர் உரையாற்றிய வடமாகாணசபையின் உறுப்பினர் திரு G.த.லிங்கநாதன் ,அவர்கள் “1996 இல் தான் வவுனியா நகர சபையின் தலைவராக இருந்த காலத்தில் தொலைகாட்சியில் வவுனியா சம்மந்தமான நிகழ்வு ஒன்றை காட்டும் போது ராணுவ கமாண்டர் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் சிலையை காட்டி நிகழ்வை காட்டியதாகவும் அந்த கணத்தில் இரவோடு இரவாக ஜோசித்து வந்த யோசனையின் பிரகாரம் வந்ததே இந்த தமிழ் பெரியார் சிலைகளை நிறுவுதல் என்ற திட்டம். அதற்கு தனக்கு ஒத்துழைத்த புளொட்டின் முன்னாள் ராணுவ தளபதி மாணிகதாசனுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டதுடன் மேலும் தன்னோடு ஒத்துழைத்த முன்னாள் உப நகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன் ) அப்போது எதிர்கட்சி உறுப்பினராக இருந்த பெனடிக் , ஆரிப் மற்றைய உறுப்பினர்கள் ,நகரசபை ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

தமிழ் பெரியார் சிலைகளை நிறுவி 17 வருடங்களுக்கு பின் நானே திறந்து வைத்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 135ம் வருட நினைவு நிகழ்வில் முதன் முதலாக கலந்து கொள்வது மகிழ்ச்சி எனவும் ஏற்பாட்டாளர்களான சந்திரகுமார் (கண்ணன்), மாணிக்கம் ஜெகன் ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொண்டார் .

பின்னர் உரையாற்றிய கதிர்காமசேகரன் ஆசிரியர் அவர்கள் 19ம் நூற்றாண்டில் தமிழ், இலக்கிய வரலாற்றில் முதல் பாதி யாழ் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரினதும் , மிகுதி யாழ் சிறுபிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளை குறியது எனவும் உலகத்தார் போற்றும் அளவுக்கு வாழ்ந்த பெருமகன் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர் பெருமைகளை நயம்பட உரைத்தார்.

இறுதியில் சந்திரகுமார் (கண்ணன்) தனது நன்றி உரையில் இந்த விழாவுக்கு பூமாலைகளை வாங்கி தந்த வாணி கூலர் உரிமையாளர் நந்தன் அவர்களுக்கும், சிற்றுண்டி ,தேநீர் வழங்கிய கிருஸ்னபவன் உரிமையாளர் சுதா அண்ணா அவர்களுக்கும் தன்னோடு சிரமதானம் செய்து சிலை அடியை துப்பரவாக்கி கழுவ உதவி புரிந்த மாணிக்கம் ஜெகன் அவர்களுக்கும் ,கலந்து கொண்டவர்களுக்கும். குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கும்” தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

DSCN2885 DSCN2891 DSCN2893 DSCN2896 DSCN2907 DSCN2923 DSCN2926 DSCN2928 DSCN2935 DSCN2938 DSCN2939

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!!

petrol

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளில் விலைகளில் குறைப்பு செய்யப்படுகிறது.

நேற்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் சகல பெற்றோல் வகைகள் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 7ரூபாவால் குறைக்கப்படுகின்றன. மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

crime

மோதரை – மட்டக்குளிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்குளிய, ஃபாம் வீதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவராவார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, மோதரை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலைதீவில் தண்ணீரின்றி தவிக்கும் மக்கள் : ஒரு இலட்சம் போத்தல்களை அனுப்பும் இலங்கை!!

maldives

மாலைதீவின் தலைநகர் மலேயில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நீர் விநியோகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேயில் நீரை விநியோகிக்கும் பிரதான நிறுவனத்தின் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நீரின்றி அவதிப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அயல் நாடுகளிடமிருந்தும் உடனடியாக நீரை பெற்றுக்கொள்ள உதவி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு லட்சம் குடிநீர் போத்தல்களை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்சமயம் குடிநீர் போத்தல்கள் வானுர்தி மூலம் அனுப்பபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்திய அரசாங்கமும் ஐந்து வானுர்திகள் மூலம் 200 தொன் நீரை அனுப்பி வைத்துள்ளது. மேலும் இரண்டு கப்பல்களில் நீரை அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

தீப்பரவல் காரணமாக அந்த நாட்டின் நீர் விநியோக நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாக கைவிடப்பட்டிருந்தது.

இதன்காரணமாக, மாலைதீவின் நாளாந்த நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 15 வரை கட்டணம் செலுத்தாவிடினும் நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!!

Water

நீர் கட்டணம் செலுத்தாமல் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் திட்டம் இன்று (06.12) தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என நீர்வள மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று தொடக்கம் ஜனவரி 15ம் திகதிவரை நீர் விநியோகம் தடை செய்யப்பட மாட்டாதென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

க.பொ.த சா.த பரீட்சை மற்றும் சர்வ மத உற்சவங்கள் இக்காலத்தில் நடைபெறவுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இது குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் இன்றி தவிக்கும் மாலைதீவு மக்கள் : நெருக்கடி நிலை பிரகடனம்!!

Water11

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலைதீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு வேகமாகக் குறைந்துவரும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன.

அந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தொடங்க ஐந்து நாட்கள் ஆகும் என்று மாலத்தீவின் அரசும் கூறுகிறது.

எனினும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் பிரத்யேகமாக கடல்நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் செயல்பட்டு வருவதால் அவர்கள் யாரும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்படவில்லை.

மகளின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் ஒளித்து வைத்த தாய் : அதிர்ச்சி சம்பவம்!!

lady

அமெரிக்காவில் 9 வயது மகளின் பிணத்தை அவரது தாயார் பதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஆம்பர் கெய்ஸ்(35) என்ற பெண் அவரது அய்ஹன்ன கோம்ப் என்ற 9 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

தனது மகள் மனவளர்ச்சி குன்றியவளாக இருந்ததால் ஆம்பர் தனது மகளை சித்ரவதை செய்து வேண்டா- வெறுப்பாக வளர்த்து வந்துள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் மகளை காணவில்லை என ஆம்பர் நாடகமாடிள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆம்பரின் மற்றொரு மகளும் அவளது தோழிகளும் வீட்டில் ஏதாவது சாப்பிட இருக்கிறதா என குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளனர். அப்போது அங்கு அய்ஹன்ன பிணம் இருப்பதை கண்டு பயந்து போன அவர்கள் விட்டை விட்டு ஓடி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து ஆம்பர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் கடந்த ஜனவரி 29ம் திகதி எனது மகள் எழுந்திருக்கவில்லை. நான் பலமுறை எழுப்பிப் பார்த்தும் அவள் எழுந்திருக்கவில்லை என்றும், அதனால் ஒரு துணியில் சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டேன் எனவும் கூறியுள்ளார்.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் கார்திகைத் தீபத் திருநாளான இன்று இடம்பெற்ற சொக்கப்பானை உற்சவம்!! (படங்கள், வீடியோ )

கார்திகைத் தீபத் திருநாளான இன்று மாலையில் வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் சொக்கப்பானை எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கார்த்திகைத் தீபத் திருநாளான இன்று பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபட்டதோடு ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து “சொக்கப்பானை”க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து கொண்டாடபட்டது.

-கஜேந்திரன்-

 

6 5 4 3 2 1

வவுனியாவில் இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள் காட்சிகள்!! (படங்கள், வீடியோ)

இன்று (05.12) வவுனியாவில் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி, நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

-கஜேந்திரன்-

283 4 5 6 7 9 10 11 12 13 14

துபாய் ஆசிரியை படுகொலையில் திருப்பம் : பர்தா அணிந்த பெண்ணின் ரகசியங்கள் அம்பலம்!!

DUbai

துபாய் ஷோப்பிங் மாலில் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த பர்தா அணிந்த பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள பவ்டிக் ஷோப்பிங் மாலிற்கு இபோல்யா ரியான் (46) என்ற அமெரிக்க ஆசிரியை தனது இரட்டை குழந்தைகளுடன் கடந்த 1ம் திகதி சென்றிருந்தார்.

அங்கு கழிவறை தொடர்பாக அவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பர்தா அணிந்த பெண் ஆசிரியையை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனையடுத்து படுகாயமடைந்த அப்பெண் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

பெரிய வில்லாவில் இருந்த அந்த 38 வயது பெண் கைது செய்யப்பட்டதோடு அவரது வீட்டில் இருந்த வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான பெண் அமீரகத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் இபோல்யாவை கொன்ற பிறகு ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் கழித்து கார்னிச் பகுதியில் உள்ள அலி அன்ட் சன்ஸ் கட்டிடத்தில் வசிக்கும் 46 வயது எகிப்து-அமெரிக்க டாக்டரின் வீட்டு வாசலில் வெடிகுண்டை வைத்துள்ளார்.

மருத்துவரின் மகன் மாலை நேர தொழுகைக்கு மசூதிக்கு செல்கையில் வாசலில் வெடிகுண்டு இருந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து வெடிகுண்டை செயலழிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி வீடியோவில் அந்த பெண் செய்த குற்றங்கள் பதிவாகியுள்ளன. அவர் பர்தா அணிந்து மாலுக்குள் நுழைவது, கொலை செய்த பிறகு தப்பித்து ஓடுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது.

அதன் பின்பு கருப்பு நிற பெட்டியை இழுத்துக் கொண்டு டாக்டரின் வீட்டுக்கு செல்வது, அதே பெட்டியுடன் அங்கிருந்து வெளியே வந்து காரில் செல்வது, காரில் உள்ள நம்பர் பிளேட்டை அமீரக கொடியால் மறைத்தது உள்ளிட்டவையும் கமெராவில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து இந்த வழக்கை தீவிரவாத வழக்காக கருதி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குறித்த பெண்ணுக்கும், தீவிரவாத இயக்கத்திற்கும் தொடர்பிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பெற்ற பிள்ளையை சாப்பிட்ட கொடூரத் தாய்!!

சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(24) என்ற பெண் தனது கர்ப்ப காலத்தில் வீதியில் உலாவிய படி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பிரசவ வேதனையால் துடித்ததால் அக்கம் பக்கத்தினர் இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன்பின் ஆண் குழந்தையை ஈன்ற இவர், அக்குழந்தையை சாப்பிட விரும்பியுள்ளார்.

எனவே குழந்தையின் கையில் தன் பற்களை வைத்து பலமாக கடித்துள்ளார். அப்போது இதனை பார்த்த செவிலியப் பெண் குழந்தையை காப்பாற்றியதுடன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் லி சென்கூவாவை கைது செய்து விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார், மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் செயல்களை விரும்பாத இவரது மாமியார் இப்பெண்ணை வீதியில் அடித்து விரட்டியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

1 2

விபச்சாரத்தில் கைதான நடிகைக்கு கிடைத்த பதவி!!

SWETHA_BASU

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசுக்கு திரைக்கதை ஆலோகர் என்ற புதிய பதவி கிடைத்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு சமீபத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஹைத்ராபாத்தின் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் இத்தொழிலை செய்ததாக ஒப்புக்கொண்ட அவர், மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.

இவரின் பரிதாப நிலையை கண்டு கருணை கொண்டு திரையுலகம் தற்போது நடிக்க வாய்ப்பு தந்துடன் திரைக்கதை ஆலோகர்(ஸ்கிரிப்ட் கன்சல்டண்ட்) என்ற புதிய பதவி ஒன்றை கொடுத்துள்ளது.

பூமியை விழுங்குமா சூரியப் புயல்?

sun

சூரியப் புயல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாக விண்வெளி இயற்பியல் துறை பேராசிரியர் டேனியல் பாக்கர் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் கொலராடோ-பௌல்டர்(Colorado paultar) பல்கலைக்கழக விண்வெளி குழு கூறியதாவது,

சூரியன் எந்த நேரமும் காந்தப் பண்புகள் அடங்கிய மாபெரும் வாயு வெடிப்பை (SOLAR FLARE) வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இத்துடன் சூரிய மண்டலத்தில் ஏற்படும் பெரு வெடிப்பு நிகழ்வான, தீவிர உயர் ஆற்றல் கதிர்வீச்சு வெடிப்பும் (CORONAL MASS EJECTION) சேர்ந்து கொள்ளும் போது, அது சூரியப் புயல் என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் சூரியப் புயலின் போது அதிதீவிர வெப்ப ஆற்றலானது சூரியனின் மேற்பரப்பிலிருந்து விண்வெளியை நோக்கி எறியப்படுகிறது.

மேலும் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் கரும்புள்ளிகளே (SUN SPOT) வாயு வெடிப்புக்கு வழிவகுக்கின்றன.

தற்போது சூரியப் புயல் பூமியின் காந்தப் புலப் பாதையைத் தாக்கினால், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் இதன் மூலம் அமெரிக்காவில் மட்டும் 0.6 முதல் 2.6 டிரில்லியன் டொலர் வரை சேதம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த அக்டோபர் 24ம் திகதி சூரியனில் ஒரு மாபெரும் கரும்புள்ளி தோன்றியதாகும், ஏஆர் 12192 என்ற பெயரிடப்பட்ட அந்தக் கரும்புள்ளியானது பூமியின் விட்டத்தைவிட 10 மடங்கு பெரியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சவுதியில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இலங்கைப் பிரஜை!!

saudi

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றி வந்த இந்த இலங்கை பிரஜைகளின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி அந்நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இலங்கை பிரஜையிடம் இழப்பீட்டை பெற்றுக்கு மன்னிப்பு வழங்கினார். இதனையடுத்து அவர் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

உயிரிழந்தவரின் தந்தைக்கு மூன்று லட்சம் ரியால்களை இழப்பீடாக வழங்குமாறு இலங்கை பிரஜைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.