பெண் நடுவரை அரங்கை விட்டு ஓடவைத்த முதியவர்!!(வீடியோ)

தனது திறமையின் மூலம் நடுவர்களை அசர வைத்தது மட்டுமல்லாமல் பெண் நடுவரை அரங்கை விட்டு ஓடவைத்த இந்த முதியவரின் திறமையை பாருங்கள்..

பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தலை துண்டித்து படுகொலை!!

murder-scene

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் கார்கைவாடி கிராமத்தை சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நீண்டகாலமாகவே நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஒரு குடும்பத்தினர் மிகவும் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் அரிவாளால் மற்றொரு குடும்பத்தினரை வெட்டினர்.

இந்த சண்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகள் என 3 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர் என்று கிஷன்கஞ்ச் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

அமெரிக்கா பாரிய ஆபத்தை சந்திக்க உள்ளது : உலக வங்கி தலைவர் எச்சரிக்கை!!

usflag

அமெரிக்க பொருளாதாரம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக வங்கி தலைவர் ஜிம் யெங் கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேறாததால் பல அரசு துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக வங்கி தலைவர் ஜிம் யெங் கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கூறுகையில் இந்த அபாயத்தை தடுக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி விவாதித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும். கடன் வரம்பு பிரச்னைக்கு அமெரிக்கா தீர்வு காணாத பட்சத்தில் அது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அரசின் கடன் வரம்பு வரும் 17ம் திகதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் அரசின் செலவினங்களுக்கு நிதி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக அமெரிக்காவின் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இப்பிரச்னை முடிவுக்கு வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈபிள் கோபுரத்திற்கு மர்ம மனிதன் அச்சுறுத்தல்!!

eiffel_tower

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு நேற்று பிற்பகலில் மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு பார்வையிட பிற்பகல் 3 மணிமுதல் அனுமதி வழங்கப்பவில்லை. மாலை 5.30 மணி வரை அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வி : புலம்பும் டோனி!!

Dhoni

இந்திய அணியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என எதுவுமே சரியில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார் அணித்தலைவர் டோனி. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.

புனேயில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது. இதுகுறித்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில் புனே ஆடுகளம் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கும் அளவுக்கு இல்லை.

நாங்கள் தான் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை அதிக ஓட்டங்கள் எடுக்க விட்டுவிட்டோம். இடையில் எங்களது சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வர முயற்சித்தனர்.

ஜடேஜா, யுவராஜ் சிங் நன்கு பந்துவீசியும், அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில் ரோகித் சர்மா, விராத் கோலி இணைந்து நல்ல இணைப்பாட்டம் அமைத்தனர்.

ஆனால் மதிய வரிசையில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தனர். மற்றபடி தோல்விக்கு யாரையும் குறிப்பாக குற்றம் சொல்ல விரும்பவில்லை, துடுப்பாட்டம்- பந்துவீச்சு என எதுவுமே சரியாக அமையவில்லை.

அடுத்து வரும் போட்டிகளில் இதுபோன்ற தவறு நடக்காத வகையில் பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

காணிப் பிரச்சினையில் சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற சகோதரி!!

arrest1

காணி பிரச்சினை காரணமாக தனது சகோதரியின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரர் உயிரிழந்த சம்பவமொன்று கந்தான பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கந்தான – பண்டிகொட பகுதியில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய ஜயக்கொடி ஆராச்சிகே என்பரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் பண்டிகொட – அல்கேனவத்த பகுதியில் வசித்து வந்துள்ளனர். அதே பகுதியில் தான் ஜயக்கொடி ஆராச்சிகேவும் வசித்து வந்துள்ளார்.

இவர்களுக்கு இடையில் நீண்ட நாட்களாக காணிப் பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் போது சகோதரி தனது சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்!!!

Sivajilingam

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சமாதான நீதவான் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

நிஜ வாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த நான்கு சகோதரிகள் நடிக்கும் தமிழ்ப் படம்!!

Nithin_Sathya

பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய குரு ரமேஷ் தனது முதல் திரைப்படத்தை இயக்குகின்றார். என்ன சத்தம் இந்த நேரம் என்ற அவரது திரைப்படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் விலங்கியல் பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது.

நிதின் சத்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் நிஜவாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த நான்கு சகோதரிகள் இணைந்து நடிக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போவதும், பூங்காவின் காப்பாளரான நிதின் சத்யா ஒரு நாள் முழுவதும் செலவிட்டு அவர்களைக் கண்டுபிடிப்பதுவும் இந்தபடத்தின் கதையாகும்.

இது ஒரு மிகவும் சவாலான கதையாகும். இயக்குனரும், தயாரிப்பாளர் அனூப்பும் இந்தக் கதையை நன்கு திட்டமிட்டபின்னரே களத்தில் இறங்கியுள்ளனர். அதுபோல்,ஒன்றாகப் பிறந்த நான்கு பேர் திரைப்படத்தில் நடிப்பதும் புதிய முயற்சியாகும்.

நீண்ட தேடலுக்குப் பிறகு கிடைத்த சென்னை பார்க் கொன்வென்ட்டில் படித்துக் கொண்டிருக்கும் இந்த சகோதரிகள் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள். இந்தப் படத்தின் 95 சதவிகிதப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டது.

இதன் சில பகுதிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு நடத்திய முதல் குழுவினர் நாங்கள்தான் என்று அங்கிருந்த ஊழியர்கள் கூறினார்கள். தலக்கோணம் நீர்வீழ்ச்சியிலும் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

சில சிறப்பம்சங்களுக்காக இந்தப் படத்தினை லிம்கா சாதனை புத்தகத்திற்கும் அனுப்பியுள்ளோம் என்று நிதின் சத்யா தெரிவித்தார். இயக்குநர் ஜெயம் ராஜா மற்றும் மனு( காதல் மன்னன் புகழ்) போன்றோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரவுடி கோட்டை பட சர்ச்சை : வழக்குக்கு பயந்த நடிகை ஹன்சிகா!!

hansika

நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்த சீதாரா முல கல்யாணம் லங்காலே படத்தை தமிழில் ரவுடி கோட்டை’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இதற்கு ஹன்சிகா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

என் அனுமதி இல்லாமல் படத்தை தமிழில் வெளியிடக்கூடாது என்று கண்டித்தார். நடிகர் சங்கத்திலும் இது குறித்து புகார் அளித்து இருப்பதாக கூறினார். ஆனால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் சுந்தரலட்சுமி தெலுங்கு தயாரிப்பாளரிடம் முறைப்படி அனுமதி பெற்றுவிட்டோம் என்றும் படத்தை வெளியிட ஹன்சிகா இடையூறு செய்தால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து ஹன்சிகா தரப்பு அமைதி ஆகியுள்ளது. எதிர்ப்பை ஹன்சிகா கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத்திலும் ஹன்சிகா இதுவரை புகார் அளிக்கவில்லை. புகார் தராமலேயே புகார் கொடுத்ததாக ஹன்சிகா பொய் சொல்லி இருப்பதாக நடிகர் சங்க வட்டாரத்தில் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதையடுத்து ரவுடிக் கோட்டை படத்தை தமிழில் வெளியிடும் வேலைகள் விறுவிறுப்பாகியுள்ளன.

இப்படம் ஹன்சிகா சினிமாவில் அறிமுகமானபோது எடுக்கப்பட்டது. எனவே தாராள கவர்ச்சி காட்டியுள்ளராம். இதற்காகவே அது தமிழில் வருவதை எதிர்த்தார் என்கின்றனர்.

எனது இதயமே நின்றுவிட்டது : அமிதாப் பச்சன்!!

amirtap

டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவது குறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாவது..

டெண்டுல்கர் 200வது டெஸ்டோடு ஓய்வு முடிவை அறிவித்த செய்தியை கேட்டது என் இதய துடிப்பு நின்றுவிட்டதாக உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயதுடிப்பு நின்றுவிட்டது. அவரது செயல்பாட்டை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை.

அவருக்கு என்றும் தனி சிறப்புடன் ஆடியவர். இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம். விளையாட்டில் இருந்து அவரது ஓய்வு பெறும் கற்பனை தான். ஏனென்றால் அவர் இல்லாத கிரிக்கெட்டை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

நாட்டுக்காக அவர் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அவர் சாதனைகள் எல்லாம் நம்பமுடியாதவை. அவருக்கு எனது சிறந்த பாராட்டு என்று கூறினார்.

புதிதாக தயாராகும் 450 படங்கள்!!

kr

ராவண தேசம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் அஜெய் நூத்தகி கதாநாயகனாக நடித்து இயக்குகிறார். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. முதல் சி.டி.யை வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பெற்றுக் கொண்டார். விழாவில் கேயார் பேசியதாவது..

தமிழில் தற்போது நிறைய படங்கள் தயாராகி வருகிறது. பிலிம் இல்லாமல் டிஜிட்டல் படங்கள் எடுக்கலாம் என்ற நிலை வந்த பிறகு குறைந்த முதலீடு செய்து நிறைய பேர் படம் எடுக்க வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குப்படி தற்போது 400 முதல் 450 படங்கள் புதிதாக தயராகி வருகின்றன.

பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் படங்கள் தயாரிக்கலாம். ஆனால் அதை ரிலீஸ் செய்வதுதான் கஷ்டமானது. விளம்பரம், விநியோகம் செய்தல், திரையரங்கு என பல நிலைகளை தாண்டிதான் ஒரு படம் வெளியாக வேண்டி இருக்கிறது.

சிறிய படமாக இருந்தாலும் விளம்பரத்துக்கு மட்டும் 1 கோடி வேண்டும். அப்படியென்றால்தான் அது மக்களை சென்று அடையும். பெரிய படங்களுக்கு 3 கோடி முதல் 5 கோடி வரை விளம்பரத்துக்கு செலவு செய்கிறார்கள். இதுபோன்ற செலவுகள் குறைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தயாரிப்பாளர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி விழாவில் பேசும்போது அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அம்மா தேசம் என்ற பெயரில் படமாக எடுக்க உள்ளேன். முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு நிறைவேற்றிய அனைத்து சரித்திர சாதனை திட்டங்களும் இப்படத்தில் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர்கள் பிரமிட் நடராஜன், லட்சுமி காந்த், நடிகர்கள் சந்தோஷ் வாசன், கார்த்திக், நாயகன் அஜெய், நாயகி ஜெனீபர், இசையமைப்பாளர் சிவன், பாடலாசிரியர் சுரேஷ் ஜித்தன் ஆகி யோர் பங்கேற்றனர்.

15 கிலோ கஞ்சாவுடன் பருத்தித்துறையில் ஒருவர் கைது!!

arrest1

இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வந்த ஒருவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – வெற்றிலைக்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிலைக்கேணி கடற்படையினரால் குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 15 கிலோ 346 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் உடுத்துறை வடக்கு – தாழையடி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கஞ்சாவுடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸார் அவரை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.

தனியார் பஸ் கட்டணம் 7% அதிகரிப்பு!!

bus

தனியார் பஸ் கட்டணம் 07 சதவீதத்தால் அதிகரிக்கின்ற போதிலும் ஆகக் குறைந்த கட்டணமான 9 ரூபாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் தெரிவித்தார்.

அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்களுக்கான பட்டியல் அதிகாரிகளால் இன்று தயாரிக்கப்படுமெனவும் அவர் கூறினார். இதேவேளை 200 கிலோ மீற்றரிலும் கூடுதலான தூரங்களுக்கான ரயில் கட்டணத்தினை 80 ரூபாவால் அதிகரிப்பது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று நடத்தப்படவிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் வர்த்தகப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சிசிரகுமார நேற்றுத் தெரிவித்தார்.

தனியார் பஸ் கட்டணங்களை நவம்பர் முதலாம் திகதி முதல் 07 சத வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் புதிய பஸ் கட்டணங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்கழுவின் பட்டியல் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை தயாரிக்கப்பட்டும். இருப்பினும் ஆகக் குறைந்த பஸ் கட்டணமான 9 ரூபாவில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தப்படப் போவதில்லை.

பஸ் கட்டணம் 10 சதவீதத்தால் அதிகரிக்கும் பட்சத்திலேயே ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமெனவும் அவ்வதிகாரி கூறினார். ரயில்வே கட்டணங்கள் கடந்த 08 வருடங்களாக அதிகரிக்கப்படாத நிலையில் எதிர்வரும் மாதம் முதல் 200 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரமுடைய இடங்களுக்கான கட்டணத்தை 80ரூபாவால் மறுசீரமைக்க தீர்மானித்திருப்பதாக வர்த்தக அதிகாரி சிசிர குமார தெரிவித்தார்.

ரயில்வே கட்டணங்களில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்க்கும் முகமாகவே இந்த அதிகரிப்பு முன்னெடுக்கப் படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மாணவர்களுக்கு பகுதி நேர தொழில் வாய்ப்புடன் ஜப்பானில் உயர் கல்வி வாய்ப்பு!!

Japan-Flag_CI

இலங்கை மாணவர்களுக்கு பகுதி நேரத் தொழில் வாய்ப்புடன் ஜப்பானில் உயர் கல்வியை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ் உடன்படிக்கையில் இலங்கை உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்னவும், ஜப்பான் தொடர்பாடலுக்கான சர்வதேசப் பாடசாலையின் பிரதம பணிப்பாளர் டொமோகிரோ அன்ரகுவும் கையெழுத்திட்டுள்ளனர்.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக ஜப்பான் இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர் நாயகம் ஒதாசி மொட்டயுகி மற்றும் டொமொகிரு அன்ராகு ஆகியோர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று கடந்த வார இறுதியில் கொழும்புக்கு வருகை தந்திருந்தது.

இக்குழுவினர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தியுள்ளனர். இச்செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் குறிப்பிட்டதாவது..

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான கல்விப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்நாட்டு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழேயே நாம் இலங்கை உயர் கல்வி அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து இருக்கின்றோம்.

இத்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு ஆரம்பப் பகுதி முதல் இலங்கை மாணவர்கள் எமது கல்லூரிக்குச் சேர்க்கப்படுவார்கள். வருடத்திற்கு நான்கு தடவைகள் மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஒரு தடவைக்கு ஐம்பது மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர். தற்போது இலங்கையை சேர்ந்த பத்து மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

எமது கல்லூரி ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் அமைந்துள்ளது. இங்கு தற்போது 23 நாடுகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு கல்வி கற்போர்களுக்கு தங்குமிட வசதி, சுகாதார காப்புறுதி, உணவு என்பன இலவசமாக வழங்கப்படும். அவர்கள் கற்கை நெறிக்கே பணம் செலுத்த வேண்டும். அதனைத் தவணை அடிப்படையில் செலுத்தவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைப் பாடசாலைகளில் 13 வருடங்கள் கல்வி கற்ற 18-35 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எமது கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும். ஜப்பானில் கல்வி கற்க வருகை தருகின்ற வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 2020ம் ஆண்டாகும் போது 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இறந்த குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த பெண்!!

pra

இங்கிலாந்து மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் இந்தியப் பெண் ஒருவர் இறந்த குழந்தையை 2 நாட்களாக வயிற்றில் சுமந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமரேசன் என்பவர் பொறியியல் நிபுணர் வேலை காரணமாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி நிரஞ்சனாவுடன் இங்கிலாந்திற்கு சென்றார்.

அவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் உண்டு. 33 வயதான நிரஞ்சனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது அவருக்கு செப்டம்பர் 18ம் திகதி பிரசவத்துக்கான நாள் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட திகதியை தாண்டி மூன்று நாட்கள் சென்றபின்னரும் அவருக்கு பிரசவத்திற்கான அறிகுறி எதுவும் தோன்றவில்லை.

மேலும் குழந்தையின் அசைவும் அவருக்குப் புலப்படவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அந்தத் தம்பதியர் உடனடியாக வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் அண்ட் சேஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள்.

அங்கிருந்த இடைநிலை மருத்துவப் பணியாளர் அவரைப் பரிசோதித்துவிட்டு முதல்நாள் நிரஞ்சனாவிற்கு ஏற்பட்டிருந்த காய்ச்சலால்தான் குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கவில்லை என்றும் பின்னர் மருத்துவமனையில் இருந்த இதயத்துடிப்பு அறியும் கருவி சரிவர வேலை செய்யவில்லை எனவும் ஏதேதோ காரணங்களை சொல்லி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட அவர் மீண்டும் குழந்தையின் நிலை குறித்த சந்தேகத்தைத் தெரிவித்தபோதும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.

மேலும் இரண்டு நாட்களுக்கு மேல் இறந்த குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு மிக்க வலியுடனும், வேதனையுடனும் எந்தவிதமான மருத்துவ கவனிப்பும் இல்லாமல் பிரசவித்துள்ளார்.

அதைவிட வேதனை தரும் விடயமாக அந்தக் குழந்தையின் பிரேதப் பரிசோதனையை நடத்தக்கூடிய பொறுப்பாளரை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கூறிய நிர்வாகம் நான்கு நாட்கள் கழித்துதான் அதனையும் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்ற மாதம் 24ம் திகதி மருத்துவமனையின் அலட்சியப் போக்கு குறித்த புகார் ஒன்றினை இந்தத் தம்பதியினர் அந்நாட்டு தேசிய சுகாதார மையத்தில் அளித்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், தேசிய சுகாதார மையத்தின் விசாரணைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் ஒத்திவைப்பு!!

anathan_MP

மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது வடமாகாண சபை உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

14ம் திகதி முல்லைத்தீவில் நடைபெறவிருந்த வடக்கு மாகாணசபையின் ஒன்பது உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் என்னுடன் கலந்துரையாடினார். தற்பொழுது கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மனத்தாங்கல்கள் தீர்க்கப்பட வேண்டியதும் தீர்க்கப்படக்கூடியதும் ஆகும். ஆகவே நாளை நடைபெறவுள்ள பதவிப்பிரமாணத்தை நீங்கள் ஒத்திவைத்து அதனை மாகாணசபையின் தொடக்கத்தின்போதோ அல்லது அதற்கு முன்பாகவோ செய்வதினூடாக கூட்டமைப்பின்மேல் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்படி கேட்டிருந்தார்.

அவரது கோரிக்கை தொடர்பாக கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த சித்தார்த்தன் அவர்களுடனும் சிவாஜிலிங்கம் அவர்களுடனும் கலந்துரையாடப்பட்டது. அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதனை உறுதியான அமைப்பாக ஒருகட்சியாகப் பதிவு செய்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் தான் சகல கட்சிகளையும் அழைத்து மிகவிரைவாகப் பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவற்றைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக அவரது கருத்தை ஏற்று நாளை நடைபெறவிருந்த பதவிப்பிரமான வைபவத்தை நாங்கள் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். இதனை சபையின் ஆரம்ப நிகழ்வின்போதோ அல்லது அதற்கு முன்னதாக இன்னொரு திகதியிலோ எண்ணியுள்ளோம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று கூறினார்.