இளம் யுவதியின் விபரீத முடிவு : அதிர்ச்சியில் தாய்!!

புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவர் நேற்று இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 20 வயதுடைய பியுமி மல்ஷானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான தொலைபேசி உரையாடலின் பின்னர் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடருந்து வரும் தண்டவாளத்தை நோக்கி மகள் ஓடியதை கண்ட தாயார் அலறியடித்து ஓடிய போதிலும் அவர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சாரதி தொடருந்தினை நிறுத்தி யுவதியின் சடலத்தை மதுரங்குளிய ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் : நடந்தது என்ன!!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அமுதலிங்கம் நிவேதன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக காணப்படுகின்றார். குறித்த இளைஞன் தனது வீட்டு வளவிலேயே, இருந்த நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025இல் கோவிட்டை விட மோசமான ஒரு வைரஸ் : திகில் கிளப்பும் ஆவிகளுடன் பேசும் நபர்கள்!!

2025ஆம் ஆண்டில், கோவிடைவிட மோசமான வைரஸ் ஒன்று கொள்ளைநோயை உருவாக்கும் என்று கூறி திகில் கிளப்பியுள்ளார்கள் ஆவிகளுடன் பேசும் நபர்கள்.

கோவிடின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் உலகம் முழுமையாக விடுபடாத நிலையில், 2025ஆம் ஆண்டில், கோவிடைவிட மோசமான ஒரு கொள்ளை நோய் உலகைத் தாக்கும் என்று கூறியுள்ளது, ஆவிகளுடன் பேசுவோர், ஜோதிடர்கள் மற்றும் குறி சொல்லுவோரைக் கொண்ட குழு ஒன்று.

அதுமட்டுமின்றி பல பயங்கர விடயங்கள் 2025இல் நடக்கும் என்றும் கணித்துள்ளார்கள் அவர்கள். ஜேர்மனி, ஸ்பெயின், போலந்து முதலான பல நாடுகளில் 2025ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஜோதிடக்கலையின் அடிப்படையில் அந்த நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ இருப்பதாக தெரிவித்துள்ளனர் அந்த எதிர்காலத்தைக் கணிக்கும் குழுவினர்.

Tarot card என்னும் அட்டைகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் சிலர், 2025இல் கோவிடைவிட மோசமான ஒரு கொள்ளைநோய் உலகைத் தாக்கும் என்று கூறியுள்ளார்கள்.

அத்துடன், மார்ச் 14ஆம் திகதி ஒரு முழு சந்திர கிரகணமும், செப்டம்பர் 21ஆம் திகதி பகுதி சூரிய கிரகணமும் ஏற்படும் என்றும், அவை முடிவுகளுக்கும், மாற்றங்களை ஏற்படுத்தும் துவக்கங்களுக்கும் அடையாளம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஜோதிடக்கலையின்படி, AIயின் வளர்ச்சி பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும், அதனால், அதைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்றும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

ஆவிகளுடன் பேசுபவர்கள், 2025ஆம் ஆண்டில், விண்வெளி தொடர்பான பல முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் பெரிய அளவில் துவங்கும் என்று கூறியுள்ளார்கள்.

அத்துடன், ஜோதிடக்கலையின் அடிப்படையில், சமுதாயம் மற்றும் கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளார்கள் அவர்கள்.

குறிப்பாக, கிறிஸ்தவ மதத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சி, எழுச்சி ஏற்படும் என்றும், உணவு, உடை மற்றும் கலாச்சாரத்தில், பாரம்பரிய கொள்கைகள் மீண்டும் திரும்பும் என்றும் அவர்கள் கணித்துள்ளார்கள்.

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கிய இளைஞன் உயிரிழப்பு : ஜோதிடரால் நடந்த விபரீதம்!!

குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை நம்பிய இளைஞரின் உயிர் பிரிந்துள்ளது.

இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லை.

இதற்காக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரும் குழந்தைபேறு இல்லை. இதையடுத்து, தந்தையாக வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு பரிகாரங்களை ஆனந்த் யாதவ் செய்து வந்தார்.

இந்நிலையில், குழந்தை வரம் வேண்டி உள்ளூர் ஜோதிடர் ஒருவரை ஆனந்த் யாதவ் அணுகியுள்ளார். அப்போது அவர், “குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்” என்று கூறினார்.

இதனால், உயிருடன் இருக்கும் கோழிக்குஞ்சை அவர் விழுங்கியுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. பின்னர் அவர் மயங்கி விழுந்ததும் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறினர். பின்னர், அவருக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டபோது அவரது தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அதுவும், கோழிக்குஞ்சு உயிருடன் இருந்துள்ளது. மூட நம்பிக்கையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு : பலர் மாயம்!!

காங்கோ நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆறுகளால் சூழப்பட்ட, கப்பல் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும் மத்திய காங்கோவில் ஒரு ஆற்றில் நெரிசல் மிகுந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளனாதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர் என்றும் 12க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்திலிருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ஃபிமி ஆற்றின் வழியே பயணம் செய்துக் கொண்டிருந்த போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

“படகில் அதிகளவிலான நபர்கள் ஏற்றப்பட்டிருந்ததே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இதுவரை சடலமாக 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்” என்று இனோங்கோவின் நதி ஆணையர் டேவிட் கலெம்பா கூறினார்.

கவிழ்ந்த படகில் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் ம்பும்பா தெரிவித்தார். “இறந்தவர்களில் குழந்தைகளும் இருந்தனர். படகில் நிறைய பயணிகள் இருந்தனர்,”

என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். காங்கோ அதிகாரிகள் அடிக்கடி அதிக சுமைகளை ஏற்றுவதற்கு எதிராக எச்சரித்து வந்துள்ளனர். நீர் போக்குவரத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களை தண்டிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

அக்டோபரில் நாட்டின் கிழக்கில் அதிக சுமை ஏற்றப்பட்ட படகு மூழ்கியதில் குறைந்தது 78 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததும்,

ஜூன் மாதம் கின்ஷாசா அருகே இதேபோன்ற விபத்தில் 80 பேர் உயிரிழந்ததும் இந்த வருடத்தில் காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளான நான்காவது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி அது படிப்படியாக விருத்தியடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் தாக்கம் காரணமாக இன்றைய தினம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று அதிகாலை A9 வீதியில் இடம்பெற்ற விபத்து!!

இன்று அதிகாலை (18.12.2024) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த NCG க்கு சொந்தமான அதிசொகுசு பேரூந்தும், பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி, பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உம் மோதியதில் இவ் விபத்து,

A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூந்தில் பயணித்த சாரதி உதவியார் உட்பட, Landmaster சாரதி மற்றும், உதவியாளர் காயம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கணினி வேலையால் மன அழுத்தம் : கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த ஊழியர்!!

பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஊழியர் ஒருவர் தனது கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான குஜராத், சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா (32). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர் தனது தந்தை உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருடைய இடது கையின் 4 விரல்கள் வெட்டப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

அப்போது சாலையில், தான் மயங்கி விழுந்ததில் இருந்து விரல்களை காணவில்லை என்று மயூர் கூறியுள்ளார்.முதலில், சூனியம் செய்யும் எண்ணத்தில் அவருடைய விரல்கள் வெட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

ஆனால், மயூரின் வாகனம், தொலைப்பேசி, பணம் ஆகியவை திருடப்படாமல் இருந்தது தெரியவந்தது. பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில் மயூர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், “கடந்த வாரத்தில் சிங்கன்பூரில் உள்ள சார் ரஸ்தா அருகே உள்ள கடையில் கத்தி ஒன்றை வாங்கினேன்.பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு அம்ரோலி ரிங் ரோடுக்கு சென்று வண்டியை நிறுத்தி இடதுகையின் 4 விரல்களை வெட்டினேன்.

அப்போது, ரத்தம் கசியாமல் இருக்க முழங்கையின் அருகே கயிறை இறுக்கமாக கட்டினேன். அதன்பிறகு, வெட்டப்பட்ட விரல்களை பையில் போட்டு தூக்கி எறிந்தேன்.

தந்தையின் உறவினர் நிறுவனத்தில் எனக்கு வேலை செய்ய எனக்கு விரும்பவில்லை. இதை யாரிடமும் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. விரலை வெட்டிக்கொண்டால் கணினியில் வேலை செய்ய முடியாது என்பதால் இவ்வாறு செய்தேன்” என்று வாக்குமூலம் கொடுத்தார்.

சுற்றுலா சென்று திரும்பிய புதுமண தம்பதி உட்பட 4 பேர் விபத்தில் பரிதாபமாக மரணம்!!

ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு, திரும்பிய புதுமண தம்பதியர் விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் புதுமண தம்பதியரைக் காரில் அழைத்துச் சென்ற இருவரும் சேர்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியை சேர்ந்தவர் எப்பன் மத்தேய்.

இவரது மகன் நிகில் எப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிஜு ஜார்ஜ் மகள் அனுவுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணமானது. இதையடுத்து ஹனிமூனுக்காக நிகில், அனு தம்பதியர் மலேசியாவுக்கு சென்று விட்டு, நேற்று அதிகாலை கேரளா திரும்பினர்.

தம்பதியரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து அவர்களது தந்தையர் இருவரும் காரில் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இவர்கள் ஓட்டிச் சென்ற கார் முரிஞ்சக்கல் என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த புதுமண தம்பதி நிகில், அனு மற்றும் இவர்கள் இருவரின் தந்தையர் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

ஹனிமூனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கார் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா செட்டிகுளம் – மன்னார் வீதியில் டிப்பருடன் யானை மோதி விபத்து!!

செட்டிகுளம் – மன்னார் வீதியில் டிப்பருடன் மோதுண்ட யானை ஒன்று காயமடைந்த நிலையில் வீதியருகில் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது , இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம் – மன்னார் வீதியில் உள்ள ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் அவ் வீதியால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த யானை வீதியோரத்தில் உள்ள நீர் உள்ள குழி ஒன்றில் காயத்துடன் விழுந்து கிடந்து உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்!!

காலி, கத்தளுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கோரவிபத்து : மூவர் காயம்!!

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி மூவர் காயமடைந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் அதிவேகமாக அம்புலன்ஸ் மோதியமையால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் , நோய் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து புறப்பட்டு,

களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் நோய் காவு வண்டியின் முன் பகுதிக்கும் பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சலூன் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு, வெலிக்கடை பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றில் சேவையை பெற்றுக்கொண்ட பெண்ணொருவரின் தலையில் இருந்து முடி உதிர்ந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க வெலிக்கடை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, வெலிக்கடை பொலிஸார் முன்வைத்த தகவல்களை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அந்தப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வெலிக்கடை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முறைப்பாடு செய்த பெண், தான் முன்னர் வெலிக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த அழகு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,

மீண்டுமொரு நாள் அங்கு சென்று தலையில் சிகிச்சை பெற்று தலைமுடி உதிர்தல் மற்றும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், முறைப்பாட்டாளரின் மருத்துவ அறிக்கையை கோரியுள்ளதாகவும், அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், உரிய அறிக்கை கிடைத்த பின்னர், நீதிமன்றத்தில் சமர்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!

யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (16) அவரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 11 பேரும் இந்நோய்க்காகச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை (14) இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் இதுவரை யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

இவர்களில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எலிக்காய்ச்சல் அபாயம் மீண்டும் தீவிரம் பெற்று வரும் நிலையில் கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 10 வயது சிறுமி கொலை : தப்பியோடிய சந்தேக நபருக்கு நேர்ந்த கதி!!

 

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15 ஆம் திகதி 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற குறித்த நபர் நேற்று (15) திருகோணமலை,

குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர் நேற்றையதினம் (16.12.2024) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் நேற்றைய தினம் காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!!

கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (16.12.2024) மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள கனகாம்பிகை குளம் முன்பாக இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அழகுக் கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளம் பெண் வழமை போன்று தான் தங்கும் இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம், வான் ஒன்றில் சென்ற குழுவினர் கட்டாயப்படுத்தி பெண்ணை ஏற்றி சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த பெண்ணின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், பூர்வாங்க விசாரணைகள் குற்றத்தடுப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.