கடும் எச்சரிக்கையுன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற அருச்சுனா எம்பி, அங்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று(16.12.2024) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார். இதன்போது எம்பி இராமநாதன் அர்ச்சுனா , கடும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சாதனையாளர் கௌரவிப்பு!!

வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. முன்னதாக அதிதிகள் பிரதான வீதியில் இருந்து பான்ட் அணிவகுப்புடன் மாலை அணிவித்து வரவழைக்கப்பட்டதுடன் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது, கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள், 2022 மற்றும்,

2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாகாணம், மாவட்டம், வலயம் ஆகிய மட்டஙகளில் சாதனைகளை நிலைநிறுத்திய மாணவர்கள் என 77 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு அதிதிகளால் சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுகளில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர்கள்,

அயல் பாடசாலை அதிபர்கள், பள்ளித் தலைவர்கள், பாடசாலை அபிவிருததிச்சங்க உறுப்பினர்கள், அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலச்து கொண்டனர்.

யாழில் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் சுற்றித்திரியும் கனடா தம்பதிகள்!!

கனடாவிருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தம்பதிகள் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தம்பதிகள் வடமராட்சி-பருத்தித்துறை, மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த வித்தியாசமான துவிச்சக்கர வண்டி இணைப்பை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இலங்கையில் மனைவி, மகள் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்ட இளம் தந்தை!!

மீகொட நாகஹவத்தையில் காரில் பயணித்த 32 வயதுடைய நபர் ஒருவர் வாகனத்தில் பதுங்கியிருந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (14.12) இரவு பாதிக்கப்பட்ட நபர் தனது சகோதரரின் வசிப்பிடத்திலிருந்து மீகொட நாகஹாவத்தையில் உள்ள தனது சொந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் அவரது வாகனத்தை நிறுத்திய போது, ​​மற்றுமொரு நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் அவரது ஒரு வயது மகளும் காருக்குள் இருந்தனர்.

உயிரிழந்தவர் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றி வந்தவர்.

சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் : தொடரும் சோக சம்பவங்கள்!!

யாழ்ப்பாணத்தில் சமீபக் காலமாக எலிக்காய்ச்சல் எனப்படும் ஒரு கொடிய நோய் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலால் இதுவரையில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில், கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞன் நேற்றிரவு (14.11.2024) 11:30 மணியளவில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கரவெட்டி – தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், அவரின் உடலில் நோய் அதிகரிக்க யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் குளத்தின் ஆற்றுப் பகுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று (15.12.2024) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் வனஜீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்துவருகின்றார்.

இந்த நிலையில் நேற்றயதினம் மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்டநேரமாகிய நிலையில் அவரை காணாத நிலையில் நிலையில் நண்பர்கள் தேடியுள்ளனர்.

அவரது சடலம் இன்று காலை குறித்த ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டது. சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

உலக இந்துக்களால் இன்று(14.12.2024) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி,

நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.

சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

வவுனியா முருகன் ஆலயங்களில் குமராலாய தீபம் ஏற்றி விசேட வழிபாடு!!

வவுனியாவில் முருகன் ஆலயங்களில் நேற்று (13.12.2024) மாலை குமராலாய தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.

அந்தவகையில் இன்றயதினம் கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் குமராலாய தீபம் இந்து சமய முறைப்படி ஏற்றி வைக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள பல முருகன் ஆலயங்களில் குமராலய தீபம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிவசிறி பிரபாகரக் குருக்கள் தலைமையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு மத்தியில் விசேட அபிடேக, பூஜை வழிபாடுகளின் பின் குமாரலய தீபம் ஏற்றப்பட்டது.

ஆலயத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட சொக்கப்பானையில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சாமி வெளி வீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்கள் திருடிய கும்பல் கைது!!

வடமாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப பிரிவு பொலிசார் இன்று (13.12) தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றது. அது போல வடக்கிலும் அவ்வாறான குழு ஒன்று செயற்பட்டு வந்தது.

அந்தகுழுவால், வவுனியா நகரப் பகுதியில் இருந்து சிவப்பு நிற முச்சக்கர வணடி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே தள்ளிவிட்டு, குறித்த முச்சக்கர வண்டியை கடந்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இது தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகரவின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலன் பெரேரா வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில்,

உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸதாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடாபான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யபபட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த முச்சக்கர வணடிக்கு நீல நிற வர்ண்ப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றபபட்டு விற்பனை செய்திருந்தை தெரிய வந்ததையடுத்து குறித்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது. வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கர வணடி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு அவரது ஒன்றகால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரிய வந்துள்ளது.

மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் செனறமை என்பனவும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த இரு நபர்களிடம் இருந்தும் முச்சக்கர வண்டி மற்றும் 4 அரைப் பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் ஹற்றன் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கனடாவில் இருந்து வந்த பார்சலில் போதைப் பொருள் டின்கள் மீட்பு!!

கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக செயலாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

இந்த கஞ்சா கையிருப்பு வவுனியா மற்றும் களுத்துறை முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள ஒருவருக்கு வந்த பார்சல் ஒன்றில் 08 டின் கஞ்சா இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பொதியின் எடை 5,324 கிராமாகும்.

வவுனியாவில் உள்ளவருக்கு வந்த பார்சலின் எடை 1755 கிராம் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கை தெரிவிக்கிறது. இதன் சந்தை மதிப்பு தனித்தனியாக 31,994,000 மற்றும் 10,530,000 ரூபாவாகும்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கொடூரம் : மைத்துனரை கொலை செய்த நபர்!!

மட்டக்களப்பில் குடும்பத் தகராற்றில் சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கி கொலை செய்ய சம்பமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று இரவு 11.00 மணியளவில் உயிரிழந்தவர் தனது மனைவியின் சகோதரருடன் மது அருந்தி விட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந் நிலையில் அது தகராறாக மாறி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் கணவன் – மனைவி இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக தடவியல் பிரிவு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

பேரூந்து சக்கரத்தில் சிக்குண்டு பெண் உயிரிழப்பு!!

பஸ் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று 12.12.2024) இரவு எல்பிட்டிய – பிடிகல வீதியில் தலகஸ்பே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலகஸ்பே பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் ஆவார்.

எல்பிட்டியவில் இருந்து பிடிகல நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கி விட்டு வலது பக்கமாக திரும்ப முயன்ற போது, வீதியில் பயணித் பெண் பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள சக்கரமொன்றில் சிக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியால் குழப்பம் : அரச அதிகாரிகள் ஆத்திரம்!!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விதண்டாவாதமாக கேள்வி கேட்டதால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அருச்சுனா எம்பியை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்டதை அடுத்து நிலைமை சுமூகமானதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) காலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.

கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற பெண்!!

கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகேயுள்ள தருமன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (30). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா(23), மகள்கள் கீர்த்தி(5), சங்கீதா(3).

கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, நேற்று முன்தினம் காலை சந்திரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவர் மீதான கோபத்தால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா, தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை திருமலை பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள கிணற்றுக்குச் சென்ற அவர் 2 குழந்தைகளையும் தள்ளிவிட்டார். ஆனால் பயத்தில் அவர் கிணற்றில் குதிக்கவில்லை.

பின்னர் திருமலை பகுதியில் மனக்குழப்பத்துடன் சுற்றித் திரிந்துள்ளார். நேற்று காலை அவரிடம் அப்பகுதியினர் விசாரித்தபோது, தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து வந்த மதகுபட்டி போலீஸார் கிணற்றில் கிடந்த இரு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ரஞ்சிதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

1996 உலகக்கிண்ண வெற்றியாளர்களால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை முதலீடு!!

1996 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் உறுப்பினர்களுடன் இணைந்து இந்திய முதலீட்டில் கட்டப்படவுள்ள 42 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு நேற்றையதினம்(12) அடிக்கல் நாட்டப்பட்டது.

பெலவத்தையில் உள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள காணியில், 240 வீட்டுத் தொகுதிகள் இடம்பெறும், ஒவ்வொரு தளத்திற்கும், இலங்கை அணியைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயர் உள்ளிடப்பட்டுள்ளது.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க(Arjuna Ranatunga) இந்த கட்டடத்துக்கான அடிக்கல்லினை நாட்டியுள்ளார்.

1996ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, உலகக்கிண்ண அணியில் பங்கேற்ற 14 பேருக்கும் தலா பத்து பேர்ச்சஸ் காணியை வழங்கினார்.

இந்தநிலையில், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த இடத்தில் 42 மாடி அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணிக்க ஒரு இந்திய முதலீட்டாளரை கண்டுபிடித்துள்ளதாக அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் 30 முதல் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான முதலீட்டை இலங்கைக்கு கொண்டு வரமுடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 1996 உலகக்கிண்ண அணி உறுப்பினர்களான அரவிந்த டி சில்வா, ரொசான் மஹாநாம, ரொமேஸ் களுவிதாரண மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

கைவிடப்பட்ட நிலையில் சொகுசுக் கார் மீட்பு!!

கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் ஒன்று நேற்று வி (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை, தங்காலை, வீரகெட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்கு அருகில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

வீரகெட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சொகுசு கார் கடவத்தை, விஜயபா மாவத்தை பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.