கட்டாரில் வாகனத்தில் உயிரிழந்த இலங்கையர்!!

கட்டாரில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் அவர் பயணித்த வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளத்தை சேர்ந்த 48 வயதான மொஹமட் அன்வர் மொஹமட் ஷிப்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையிலுள்ள குடும்பத்தினரின் தகவலுக்கமைய, அவர் சுமார் 22 ஆண்டுகளாக கட்டாரில் சாரதியாக பணிபுரிந்து வருகிறார், கடைசியாக அல் பர்டான் நகரில் பணியாற்றியுள்ளார்.

மொஹமட் பணியாற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் அவரை தொடர்பு கொண்ட போதும், அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அல் பர்தான் பொலிஸாரிடம், அவர் பணியாற்றும் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.

அதற்கமைய, அந்த நபர் ஓட்டிச் சென்ற டிரக் வீதியின் அருகே நிறுத்தியிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

வாகனத்தில் பாதுகாப்பு சீட் பெல்ட் அணிந்திருந்த ஓட்டுனரைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த மொஹமட் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப மரணம் : யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில்(Jaffna) கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் ஒருவர் நேற்றையதினம்(05) உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி சவர்க்காரத்தின் மீது கால் வைத்து வழுக்கியதால், குறித்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் என்ற 4 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடிவிட்டு வாளியைக்கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளார்.

இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் வைத்ததால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  எனினும், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

சிறுவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

உலகை திரும்பி பார்க்க வைத்த கனடா வாழ் ஈழத்தமிழ் அமைச்சரின் செயல்!!

கனடாவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சமீபக் காலங்களில் அந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்திகளாக மாறி வருகின்றனர்.

கனடாவில் உள்ள ரொறன்ரோ, ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா போன்ற பல மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வாழ்வதுடன், அங்கு பல்வேறு அரசியல் களங்களிலும் கால் பதித்துள்ளனர்

இதன் காரணமாக கனடாவிலும், சர்வதேச ரீதியிலும் அங்கு வாழும் இந்தியத் தமிழர்கள், மற்றும் இலங்கைத் தமிழர்களின் அரசியல், மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உள்ள முக்கியத்துவம் தற்போது அதிகரித்து வருகிறது.

இவ்வாறான நிலையில், கனடாவின் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி தமிழர்கள் தொடர்பில் முன்வைத்த பிரேரணையானது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோதே அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொல்லால் தாக்கி கொல்லப்பட்ட யுவதி : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

23 வயதுடைய முன்னாள் இராணுவ பெண் சிப்பாயை, கொட்டனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் யுவதி கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் எம். அஹிம்சா சமன்மாலி என்ற இந்த யுவதியே உயிரிழந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி – சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல, கிலிமலே வெலேகொட வீதியில் நேற்று முன்தினம் (04) காலை 7.30 மணியளவில் யுவதி படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் கொட்டனால் தாக்கியதில் படுகாயமடைந்த யுவதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி நான்கு வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றியவர்.

முச்சக்கரவண்டியில் நடமாடும் பாண் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் பலமுறை காதலிக்கக் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் யுவதியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யுவதி நடந்து சென்ற போது பின்னால் வந்து அவரது தலையில் தாக்கியதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியை பொலிசார் கண்டுபிடித்ததுடன், தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையுண்ட யுவதி இரத்தினபுரி நகரில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் அலமாரி ஒன்றை எடுத்து வருவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற வேளையில் சிறிபாகம சுதாகல வீதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (05) முன்எடுக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

டிப்போ காவலாளியை கொலை செய்து ஒன்பது இலட்சம் ரூபாய் திருட்டு!!

நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இக்கொள்லை சம்பவம் நேற்றிரவு (5) இடம்பெற்றுள்ளது. டிப்போவில் காவலராக பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தை சேர்ந்த கே.லோகேஸ்வரன் என்ற 85 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிலர் காவலாளியை கொன்றுவிட்டு டிப்போவில் இருந்த அலுமாரியில் இருந்து சுமார் ஒன்பது லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவலாளி தனது பாதுகாப்பு அறையில் காத்திருந்தபோது கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

கொலைச் சம்பவத்தின் போது, ​​டிப்போவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும், காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

நுவரெலியா லங்கம டிப்போவில் வியாழக்கிழமை (05) பிற்பகல் ஓடிய பஸ்களின் வருமானம் வங்கியில் வைப்பிலிடுவதற்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக அந்த டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலசல குழியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி : தாயின் இரண்டாவது கணவன் அரங்கேற்றிய சம்பவம்!!

14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருகையில் ,

கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் நேற்று (05) முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் , வீடொன்றில் உள்ள மலசல குழியிலிருந்து சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் தேங்காயின் விலை : நெருக்கடியில் மக்கள்!!

இலங்கையில் அண்மைய நாட்களில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியயுள்ளது.

இந்நிலையில் கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேங்காய் விலை 200 ரூபாவை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் நாட்களில் 220 ரூபாயை தாண்டலாம் என சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் நுகர்விற்கு தேவையான அளவு தேங்காய் கிடைக்காததால், அதன் விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமைக்கு தீர்வாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்ய தென்னை அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திற்கு சொந்தமான கூட்டுத்தாபனத்தின் ஊடாக 110 ரூபாவிற்கு தேங்காய் கொள்வனவு செய்யப்பட்டு சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிறந்த நாளில் ஏற்பட்ட விபரீதம் – மதில் வீழ்ந்து உயிரிழந்த தந்தை!!

நாடாளுமன்ற வீதியில் வீட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம ரைகம, பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் பிறந்த நாளான கடந்த 2ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர, நாடாளுமன்ற வீதியில், கும்புக்கஹதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மதிலில் இருந்த பழைய இரும்பு வேலியை உயிரிழந்த நபரும் அவரது மகனும் அகற்றியுள்ளனர்.

பின்னர் புதிய வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது உயிரிழந்த நபரின் மகன் கடை ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் மதிலின் மீதமிருந்த பகுதியை தந்தை அகற்றும் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, ​​சுவர் இடிந்து விழுந்ததுடன், குறித்த நபர் அதன் அடியில் சிக்கியதாகவும் இதனால் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகவுள்ள காற்று சுழற்சி!!

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ஆம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 19ஆம் திகதி அன்று மீண்டும் ஒரு தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதிரிகள் இது ஒரு புயலாக வலுப்பெறும் என வெளிப்படுத்துகின்றன. அதேவேளை சில மாதிரிகள் இதனை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மித்து வரும் என காட்டுகின்றன.

எவ்வாறாயினும் இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

எனவே எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையும் பின்னர் 21 முதல் 25ஆம் திகதி வரையும் சில பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேவேளை எதிர்வரும் 09ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இடையிடையே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபிக்ஸ் கியூப்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி அனுரவின் உருவம் படைத்த சாதனை!!

1,200 ரூபிக்ஸ் கியூப்களைப் பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி சிறுவன் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

சன்சுல் செஹன்ஷ லக்மால் என்ற 11 வயது சிறுவனே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளார்.

சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நேற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில் முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

சோழன் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸின் பொதுச் செயலாளர், இந்திரநாத் பெரேரா, துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, STEPS இன் இயக்குநரும், சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவருமான பிரான்சிஸ் ஜேசுதாசன்,

பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் இயக்குநர் மற்றும் சோழன் புக் ஒஃப் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸ் இன் செயற்குழு உறுப்பினர் ஆகியோர், சிறுவனின் சாதனை முயற்சியை முறையாக கண்காணித்தனர்.

இந்நிலையில் சன்சுலின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், அமைப்பாளர்கள், ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து,

அவருக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவற்றுடன் , சிறுவனின் பெரும் சாதனையை கௌரவிக்கும் வகையில் கோப்பையும் வழங்கப்பட்டது.

23 வயது பெண்ணின் உயிரைப் பறித்த காதல் : காதலன் தப்பியோட்டம்!!

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டவல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர், காதலனால் பொல்லினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாக்குதலில் காயமடைந்த இளம் பெண் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்,

தாக்குதல் நடத்திய நபருடன் காதல் உறவில் ஈடுபட்டதாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொல்லினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் செத்துப்போன மனித நேயம் : பாடசாலை சென்ற மாணவன் பரிதாப உயிரிழப்பு!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (5) யாழ்ப்பாணம், சுழிபுரம் சந்திப்பகுதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனான முருகசோதி சிறிபானுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நோயாளர் காவு வண்டி மாணவர்களை கொண்டுசெல்ல வராததோடு, வீதியால் பயணித்த வேறு வாகனங்களும் மாணவர்களை ஏற்ற பின்வாங்கியுள்ளன.

நீண்ட நேர பரிதவிப்பின் பின்னர், அங்கிருந்தவர்கள் பட்டா ரக வாகனமொன்றில் மாணவர்களை ஏற்றி, மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மாணவனும், படுகாயமடைந்தவரும் மோட்டார் சைக்கிளில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார்.

அதேவேளை மகன் விபத்துக்குள்ளாகியிருப்பதை கண்டு, விபத்து இடம்பெற்ற இடத்தில் மயங்கி விழுந்த தாயொருவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல கேட்கப்பட்டபோதும், அவரை ஏற்றிச்செல்ல நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் மறுத்துவிட்டு, திரும்பிச் சென்றுள்ளனர்.

விபத்து தொடர்பில் கேள்வியுற்ற விபத்துக்குள்ளான மாணவர்களின் உறவினர்களும், நண்பர்களும் சம்பவ இடத்துக்கு வந்த பின்னர் காயமடைந்த இருவரையும் பட்டா ரக வாகனமொன்றில் ஏற்றி அங்கிருந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும் மாணவன் உயிரிழந்திருந்த நிலையில் மாணவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சகோதரன் மற்றும் மனைவியின் செயலால் 19 வயது யுவதி உயிர்மாய்ப்பு : தவிப்பில் பெற்றோர்!!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பனாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த யுவதியின் சகோதரனும் சகோதரனின் மனைவியும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சமூகத்தில் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்களினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த யுவதி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாய், தந்தை, மகள் கொலை : பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

டெல்லியில் தாய், தந்தை, மகள் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுன் (20) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (4) ராஜேஷ் தன்வார், மனைவி கோமல், மகள் கவிதா மூவரும் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.

காலையில் ஜாக்கிங் சென்று வீட்டுக்கு வந்த மகன் அர்ஜுன் மூவரின் சடலத்தை கண்டு அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்ததுடன் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீசார், இந்த கொலை சம்பவம் பணம், நகைக்காக நடந்தப்படவில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்நிலையில் ஒரு குடும்பத்தில் ஒருவரை தவிர, மற்ற மூன்று பேரும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டிருப்பது பொலிசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. கன் அர்ஜுனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பொலிசாருக்கு வந்த சந்தேகம்

அத்துடன் அவருடைய கையில் புதிதாகக் காயம் காணப்பட்டதுடன், கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அர்ஜுனுக்கும் அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினருடனான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இவ்வாறு கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு அர்ஜுன் குறித்து வீட்டில் பெரிய பிரச்சினை வெடித்துள்ளது. அப்போது, மகன் கீழ்படியவில்லை என தந்தை தண்டித்ததுடன், தனது சொத்தை மகள் பெயருக்கு எழுதி வைக் உள்ளதாக கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் தந்தை, தாய், சகோதரி மூவரையும் கொலை செய்ய திட்டமிட்டு பெற்றோரின் 27வது திருமண நாளான நேற்று அரங்கேற்றியுள்ளார்.

இந்நிலையில் மகனே , தன் குடும்பத்தை கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது : இலங்கையில் கண்ணீரை வரவழைத்த சம்பவம்!!

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த தாயின் சடலத்தை ஏற்றுக்கொள்ள பிள்ளைகள் எவரும் முன்வராத துயர சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்தேறியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த தாயின் உடலை , ஹொரவபொத்தானை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு,

ஹொரவபொத்தானை பொது மயானத்தில் அவரது சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இறந்த இந்த தாய் பல மாதங்கள் சிகிச்சைக்காக ஹொரவபொத்தானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த தாயாருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தும், நோய்வாய்ப்பட்ட தாயை பார்க்க யாரும் வரவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த தாயார் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் தாயின் சடலைத்தி கூட பிள்ளைகள் யாரும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவரது உடல் அரச செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹொரவபொத்தானை லேவசபிரி ஏரி கிராமத்தில் வசித்து வந்த இந்த தாய் இறந்துவிட்டதாக பிள்ளைகளுக்கு தெரிவிக்கப்பட்டதும் ஒரு பிள்ளை வந்து தாயாரை வந்து பார்த்ததாகவும், எனினும் பின்னை சொல்லாமல்கொள்லாமல் மருத்துமனையை விட்டு வெளியேறியதாகவு கூறப்படுகின்றது.

அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இந்த தாய்க்கு மிகுந்த அன்பையும் அக்கறையையும் அவர் இறக்கும் வரை அளித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பெற்ற பிள்ளைகள் ஐவர் இருந்தும் தாயின் மரணத்தில் கூட அவர்கள் பங்கெடுக்காத சம்பவம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.