குளியாபிட்டிய பகுதியில் வாகனம் ஒன்று குடைசாய்ந்தமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்புராபொல பாலத்திற்கு அருகில் இன்று காலை ஜீப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குருநாகலை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டள்ளது.
இதன்படி நிலையில் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் வழிகாட்டலில் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த களவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இருவரையும் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குருணாகல் – கல்கமுவ பிரதேசத்தில் விரைவு ரயில் மோதி 2 வயது 2 மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (22-11-2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குழந்தை வளர்ப்பு நாயை பின்தொடர்ந்து ஓடியபோது கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி சென்ற விரைவு ரயிலில் மோதி துரதிஷ்டவசமாக தாய் கண்முன்னே உயிரிழந்துள்ளது.
கல்கமுவ, புத்ருவகந்த பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எம்.செஜன் ஹசரங்க என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
இந்த வீட்டிலிருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் வடக்கு ரயில் பாதை அமைந்துள்ளதால், குழந்தை வெளியில் செல்லாதவாறு வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வேலி அமைக்கப்பட்டிருந்த போதும் குழந்தை அதனை கவிழ்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய் குழந்தையுடன் கடைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த போது, கவர் கீழே விழும் சத்தம் கேட்டது.
குழந்தை ரயில் தண்டவாளத்தை நோக்கிச் செல்வதைக் கண்ட தாயார், ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றபோதும் விரைவு ரயில் குழந்தை மீது மோதி உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா (Vavuniya) உட்பட வடமாகாணத்தினுள் நடமாடும் இரு சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் கிடைப்பின் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் சுமார் 7 கோடி பெறுமதியான பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் சீதுவ பகுதியைச் சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.டி சமன் ரணசிங்க எனப்படும் இருவரும் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் தற்போது வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
எனவே, அந்த நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டால் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தொலைபேசி இலக்கமான 0718596422 ஊடாக அல்லது 0716360020 (சிந்தக்க) என்ற தொடர்பு இலக்கத்தக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் அறவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த 14 வயதான மாணவியே இன்றையதினம் (22.11.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன், குறித்த மாணவியின் பாட்டி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (23.11.2024) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க ஆகியோர் தலைமையில் நேற்றையதினம் (22.11.2024) இந்த கைச்சாத்தாகிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ மற்றும் மஹரகம பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்காக, கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டாவ பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது இரட்டைப் பதிவு தொழிலை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
இம்முறை சுமார் 20 வைத்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், மருத்துவராகப் பதிவு செய்துள்ள அர்ச்சுனா இராமநாதன், உத்தியோகபூர்வமாக தனது வேலையை விட்டு விலகாமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகத் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்ட போதும், அவர் மருத்துவத் தொழிலைக் கைவிடவில்லை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டிய நிலையில், அரசாங்கத்தில் உள்ள ஒருவர் அரசாங்கத்தில் மற்றொரு தொழில் மூலம் சம்பளம் பெற முடியாது என்பது இலங்கையில் உள்ள நடைமுறையாகும்.
இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிக்கல் நிலை தோன்றலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்னவும் தனது வைத்தியர் தொழிலை கைவிடாது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தமைக்காகவே அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவாகியுள்ளது.
வைத்தியர் ராஜித சேனாரத்ன தொடர்பான விவகாரம் இலங்கை அரசியல் மற்றும் சட்ட செயல்பாடுகளில் முக்கியமானதாகும். 1994இல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது மருத்துவர் தொழிலை தொடர்ந்திருந்தார்.
இந்த செயல் இலங்கையின் சட்டங்களின் கீழ் ஒரு அரச அதிகாரி அல்லது தேர்தல் பதவி வகிப்பவர் எந்த ஒரு வேறு தொழிலையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது என்ற விதிமுறைக்கு எதிராக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துச்செல்லப்பட்டபோது, அவர் வைத்தியர் தொழிலை நிறுத்திவிட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.சுயேட்சைக் குழு எம்.பி வைத்தியர் அர்ச்சுனா ஊடகங்கள் முன் பேசுபொருளானமையும் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பகுதியை சொந்த இடமாக கொண்ட 66 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காபுரே பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் 32 வயதான மகன் கைது செய்யப்பட்ட பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சைனை காரணமாக மகன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் லாப் எரிவாயுநிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடம் வினவப்பட்ட போது, தனது விநியோக நிறுவனத்திடம் இருந்து விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு இருப்புக்களை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக லாப் எரிவாயு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைமையால் நாடளாவிய ரீதியில் உள்ள லாப் எரிவாயு விற்பனை நிலையங்களிலும் லாப் எரிவாயு இல்லாமை மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதுளைக்கு (Badulla) களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்ட தனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார்.
கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்ததோடு, பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர்.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
எனினும், இன்று அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வடைந்துள்ளது.
கொழும்பில் விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொழும்பிலுள்ள விகாரையின் மலசலகூடத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பம் படித்துள்ளார். 25 வயதுடைய இந்த மாணவன் அனுராதபுரம், றம்பேவே கெந்தேவ, கோணகும்புக்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் இலத்திரனியல் தொழில்நுட்பம் தொடர்பான நடைமுறை பயிற்சிகளை பெற்றுக்கொள்ள குறித்த மாணவன் கொழும்பு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயிற்சி முடியும் வரை, ஜம்பட்டா வீதியில் உள்ள ஒரு விகாரையின் தங்கும் அறையில் தங்கியிருந்துள்ளார்.
அங்கு வந்த மாணவர் பொதுக் கழிப்பறைக்குச் சென்றுள்ளார், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், விகாரையின் நிர்வாகிகள் விடுதியில் தங்கியிருந்த மற்றவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கழிவறை கதவு திறக்காததாலும், உள்ளே இருந்து சத்தம் கேட்காததாலும் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அங்கு வந்து கதவை உடைத்தனர். விசாரணையில், அவர் கழுத்தை தானே அறுத்துக் கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கழுத்தை அறுப்பதற்கு பயன்படுத்திய கத்தியும் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கழிவறை கதவு உட்புறம் பூட்டியிருந்தமையினால், மூன்றாம் நபரின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் மாணவன் உயிரை மாய்ப்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
மாப்பிள்ளை 10வது பெயில் எனத் தெரிந்ததும் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண். உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகன் தன்னை விட கல்வியறிவு குறைவாக இருப்பதாக கூறி மணமகள் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.
சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கு 30 வயது இளைஞரை நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்ய இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மணப்பெண் அந்த நபரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
மணமகள் பட்டப்படிப்பை முடித்துள்ளார், ஆனால் மணமகன் 10 ம் வகுப்பில் தோல்வியடைந்துள்ளார். எனவே, 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்யமாட்டேன் என்று மணப்பெண் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மணமேடை ஏறிய நிலையிலும் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்காமல் உறுதியாக நின்றுள்ளார். இதைத் தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டதால் மணமகன் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த நகை மற்றும் பணத்தை மணமகள் வீட்டாரிடம் திருப்பி அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அருகே கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற கவுஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி . இவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், விசாரித்து பார்த்தால் சிகிச்சை அளித்தவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு கவுஞ்சியில் வசித்து வருபவர் 26 வயது விவசாயி சர்வேந்தன். இவருடைய மனைவி 24 வயது பிரியதர்ஷினி.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான பிரியதர்ஷினி, பிரசவத்துக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 25 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பிரியதர்ஷினி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷி கவுஞ்சியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய சில நிமிடங்களில் பிரியதர்ஷினி மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், செலுத்திய மருந்து பாட்டிலை எடுத்து கொண்டு மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரியதர்ஷினியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமமான கவுஞ்சியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் பிரின்ஸ்.
மருந்தாளுனர் படிப்பு முடித்த அப்பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் வீடு, வீடாக சென்று மருத்துவம் பார்த்து வந்தாராம். அங்கு சிகிச்சைக்கு வந்த பிரியதர்ஷினிக்கு ஆண்டிபயாடிக் செலுத்தியபோது மயங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ அதிகாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் . போலீசார் தனிப்படை அமைத்து, தலைமறைவாக உள்ள போலி மருத்துவர் பிரின்சை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குழந்தை பிறந்த 25 நாட்களில் தாய் உயிரிழந்த சம்பவம் கொடைக்கானல் மன்னவனுர் கவுஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையை மொத்தமாக மாற்றப் போதுமான பிட்காயின் தொகுப்பை குப்பையில் வீசியிருக்கலாம் என்று நம்பும் பிரித்தானியர் ஒருவர் தற்போது அதை மீட்டெடுக்கும் வகையில் போராடி வருகிறார்.
வேல்ஸில் நியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹோவெல்ஸ். இவர் தொலைத்ததாக கூறப்படும் 8,000 பிட்காயின்களை மீட்டெடுக்க, அதிகாரிகள் இவரை அனுமதிக்க மறுப்பதாக குறிப்பிட்டு தற்போது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
கவனக்குறைவால் குப்பையில் வீசியதாக கூறப்படும் பிட்காயின்களின் மதிப்பு 569 மில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என்றே அவர் நம்புகிறார். 39 வயதான ஜேம்ஸின் முன்னாள் காதலி கவனக்குறைவால் சில கணினி பாகங்களை குப்பையில் வீசியுள்ளார்.
அதில் ஒரு கணினி பாகத்தில் தான் பிட்காயின்களை அவர் சேமித்து வைத்திருந்துள்ளார். குப்பையில் வீசப்பட்ட அந்த பாகங்கள் தற்போது நியூபோர்ட் குப்பைக் கிடங்கில் காணப்பட வாய்ப்புள்ளதாகவே ஜேம்ஸ் நம்புகிறார்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தில், குப்பைகள் அதே கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளதால், தாம் தொலைத்ததாக கூறும் அந்த கணினி பாகத்தை தம்மால் மீட்டெடுக்க முடியும் என்றே ஜேம்ஸ் கூறுகிறார்.
மட்டுமின்றி, தற்போது நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ள ஜேம்ஸ், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய பிட்காயின் மதிப்பில் சுமார் 569 மில்லியன் பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் ரூ 6,038 கோடி) இருக்கும் என்றும்,
அதில் 10 சதவிகிதத்தை உள்ளூர் பகுதிக்கு நன்கொடை அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நகர சபை நிர்வாகம் தொடர்ந்து தமக்கு அனுமதி மறுத்து வருவதாக கூறியுள்ள ஜேம்ஸ், நியூபோர்ட் நகரை இன்னொரு துபாய் அல்லது லாஸ் வேகாஸாக மாற்றும் வாய்ப்பை அவர்கள் இழந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை நாடும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை என தெரிவித்தாலும், நகர சபை நிர்வாகத்தின் இந்த போக்கு தம்மை சட்ட நடவடிக்கை எடுக்க தூண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொலைக்கப்பட்ட பிட்காயின்கள் இன்று அல்லது இன்னொரு நாள் தம்மிடம் சிக்கும் என்றும், அப்போது அதன் மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என்றார். டிசம்பர் 3ம் திகதி இந்த வழக்கு தொடர்பில் கார்டிஃப் உயர் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.