இலங்கையின் பத்தாவது பாராளுமன்றம் இன்றும் ஜனாதிபதி அனுரகுமார தலமையில் பெருமளவான புதிய உறுப்பினர்களுடன் ஆரம்பமானது. முதல் நாள் அமர்வான இன்று உறுப்பினர்கள் எந்தவொரு ஆசனத்திலும் அமர முடியும் என்ற கோட்பாட்டின் உள்நுழைந்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற மருத்துவர் அருச்சுனா அங்கு எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தால் குழப்ப நிலை ஏற்பட்டது.
எனினும் அங்கிருந்த அதிகாரிகள் அது எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனம் வேறு ஆசனங்களில் அமரும்படி கோரினர். எனினும் இன்றைய நாள் விதிமுறைகளை கூறிய அர்சுர்னா அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பின்னர், ஆசனத்தை மாற்றிக் கொண்டார்.
எந்தவொரு ஆசனத்திலும் அமரலாம் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தாலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆசனங்கள் அமர முடியாது என்பது மரபு.
அதேவேளை புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பதின்ம வயது பாடசாலை மாணவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து ஏமாற்றும் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை பயமுறுத்தி தகாத புகைப்படங்களை பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
பல்வேறு பயிற்சி வகுப்புகளின் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் மாணவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் தகாத புகைப்படங்களை இணைத்து மாணவர்களை அச்சுறுத்துவதாக தெரியவந்துள்ளது.
வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை இவ்வாறான ஆபத்தான நபர்கள் பதிவிறக்கம் செய்து, அந்த புகைப்படங்களை எடிட் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட புகைப்படங்களை உரிமையாளருக்கு அனுப்பி, அந்த புகைப்படம் தவறான இணையதளங்களில் விநியோகிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
அவர்களை பயமுறுத்துவதுடன், அதை அகற்ற விரும்பினால், இதுபோன்ற புகைப்படங்களை அகற்றும் சேவை மூலம் செய்யலாம் எனவும் அவர்களுக்குத் தெரிவித்து, தாங்கள் கூறுவதை போன்று செயல்பட அறிவுறுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த புகைப்படத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உண்மையான தகாத புகைப்படத்தைப் பதிவேற்றுமாறும் மோசடியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அந்தத் தொடர் வழிமுறைகளைப் பின்பற்றும் மாணவர்கள் தங்களின் உண்மையான அந்தரங்க புகைப்படத்தை இணைப்புகள் மூலம் அனுப்பத் தூண்டப்படுகிறார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகவும், உயர்தர வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இவ்வாறான சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல மேலும் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடா ( Bay of Bengal) கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை மறுதினமளவில் (23) தாழ் அமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, அத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் பாடசாலைப் பேருந்து மீது உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் அனுராதபுரம், இசுரு புரவில் வசிக்கும் 56 வயதுடைய விலங்கு அபிவிருத்தி ஆலோசகர் சம்பத் வடுகே என்பவரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மாங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (20-11-2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்தில் 31 வயதான மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விபத்தில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் திரைகளை நீண்டகாலமாகப் பயன்படுத்துவதால் 30 சதவீத சிறுவர்கள் கிட்டப்பார்வை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 2050ல் 50 சதவீதமாக உயரும் என உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் கண் மருத்துவர் அனுசா தென்னேகும்புர கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்
எனவே குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை கண்காணிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நீண்டகால சிக்கல்களைத் தடுக்க சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவது முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியலாளரான ஸ்வர்ணா விஜேதுங்க, அதிகப்படியான திரைப் பயன்பாடு கண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக இந்த நிகழ்வின்போது குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை கருதி, 18 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ளவர்களுக்கான திரை நேரம் பெற்றோரின் கண்காணிப்புடன், தினசரி அதிகபட்சம் ஒரு மணிநேரமாக வரையறுக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்
இதற்கிடையில், திரைகளில் தங்கியிருப்பதை விட, தரமான நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் விளையாட்டுக்களில் செலவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 2024 ஜனவரி தொடக்கம் டிசம்பர் 19 வரை 83 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட மழைவீழ்ச்சி தொடர்பாக ஊடகவியாளரால் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1400 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 994.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் வருகின்ற 40 நாட்களிற்குள் 300 மில்லி மீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும்.
இந்த வருடம் குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும்.
நவம்பர் இறுதி, டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும் எனவும் மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்ப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(19.11.2024) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வெளிநாடொன்றில் வசிக்கும் குறித்த பெண் அண்மையில் நாட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவருடன் இருந்த முரன்பாட்டையடுத்து சமூக வலைத்தளத்தில் கானொளிகள் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த நபர் தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்ப்படுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பெண் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (20.11.2024) மாலை 5.30 மணியளவில் மாங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம் 5ம் மைல் கல் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, 31 வயதான மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கம் விலையானது மீண்டும் அதிகரித்து செல்லுகின்றது. அதனபடி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 212,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 195,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ.விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் அமைக்கபப்ட்டுள்ளது.
அமைச்சர்கள் நியமனத்தை தொடர்ந்து புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ.விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் நிர்வாக சேவையில் அதி உயர் பதவிகளை வகித்த ஏ.விமலேந்திரராஜா யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் படித்தவர் ஆவார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் குறிப்பாக ஊழலுக்கு எதிரான குரலாக விளங்கிய வசந்தவின் தலைமையிலான அமைச்சிற்கு தமிழரான ஏ.விமலேந்திரராஜா உள்வாங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் ஆர்.எஸ்.ரஞ்சன் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (19.11.2024) சம்பவித்துள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த இவர் பல்வேறு ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ரஞ்சன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து நெல்லியடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வானும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் வானில் பயணித்த ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு கனேடிய (Canada) அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கனேடிய குடிவரவு குடியகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் காரை நகரை பிறப்பிடமாக கொண்ட தேசிங்கராசன் ராசையா (Thesingarasan Rasiah) என்ற நபரே இவ்வாறு புதிய கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த நபர் தொடர்பில் விசாரணை செய்த போது அவரிடம் புதிய கடவுச்சீட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டவிரோத ஆட்கடத்தல் வலையமைப்பிற்கு குறித்த நபர் தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த தேசிங்கராசன் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கையர்களை கனடாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை தேசிங்கராசன் ஒப்புக்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது கால்களுக்கு இலத்திரன்கள் பிரேஸ்லெட் ஒன்று போடப்பட்டு கடுமையான நிபந்தனை அடிப்படையில் வீட்டில் வசிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தேசிங்கராசன் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே தேசிங்குராசன் விடுதலை செய்யப்பட்டார்.
புதிய கடவுச்சீட்டு விண்ணப்பம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இலங்கையர் ஒருவரை அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு அழைத்து வந்த குற்றச்சாட்டில் தேசிங்குராசனுக்கு 15 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் அவர் தொடர்ந்தும் அதே குற்ற செயலில் ஈடுபட்டு வந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மே மாதம் மீண்டும் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் கடவுச்சீட்டு முறைமை பலவீனமாக காணப்படுவதாக பல்கலைக்கழக பேராசிரியர் கெலி சன்ட்பர்க் தெரிவிக்கின்றார்.
எனினும் இந்த இலங்கைத் தமிழர் எவ்வாறு இரண்டாவது தடவையாக கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
தேசிங்குராசனுக்கு எவ்வாறு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பது குறித்து குடிவரவு அமைச்சர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த நிலையில் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெற்றுள்ளமை இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிந்துஜாவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (19-11-2024) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தான் குறித்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தனர்.
இதுவரை காலமும் மன்னார் மடு பொலிஸார் குறித்த வழக்கு விசாரணையை B வழக்காக பதிவு செய்யாது சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி டெனிஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் கோரிக்கையை ஏற்று குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்தி 2 வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் மேலும், வழக்கை B அறிக்கையாக தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 3 திகதி தவணையிடப்பட்டுள்ளதுடன் சில மாதங்களுக்கு முன் சிந்துஜாவின் விடயத்தில் தங்களை முன்னிறுத்தி விளம்பரம் தேடிய எவரும் வழக்கு விசாரணைக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.