வவுனியாவில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு விளக்கமறியல்!!

Jailவவுனியா பம்பைமடு கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிவரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியரான எஸ்.குணசேகர் என்பவரே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் (08.02) மதியம் பம்பைமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர கடந்த 10 நாட்களாக வவுனியாவில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேற்று காலை வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

நெல்சன் மண்டேலாவின் காதிற்குள் மறைந்துள்ள முயலை நீக்குமாறு உத்தரவு!!

Mandelaதென் ஆபிரிக்க தலைவர் மறைந்த நெல்சன் மண்டேலாவின் வெண்கல சிலையின் காதுக்குள் அனுமதி பெறாமல் வடிவமைத்த முயல் சிற்பத்தை நீக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா விடுதலைக்குப் பின் அந்நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின் 95வது வயதில் கடந்த மாதம் காலமானார். மண்டேலாவுக்கு அந்நாட்டு அரசு 30 அடி உயர வெண்கல சிலையை அமைத்துள்ளது. மண்டேலாவின் இறுதி சடங்கு முடிந்த அடுத்த நாள் இந்தச் சிலை திறக்கப்பட்டது.

இந்நிலையில் மண்டேலாவின் சிலையை வடித்த சிற்பிகள் சிறிய முயல் சிற்பத்தை சிலையின் காதில் வடிவமைத்திருந்தனர். இந்த முயல் தலைவரது சிலைக்கு அவமான சின்னமாக உள்ளதாக, அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதையடுத்து சிலையின் காதிற்குள் மறைவாக செதுக்கப்பட்ட, முயல் சிற்பத்தை நீக்கும்படி சிலை அமைத்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

போர்க் கைதியாக மாறிய நாய்!!

Dogகிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரின் நாய் ஒன்றைத் தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக தாலிபான் அமைப்பினர் கூறுகிறார்கள்.

கறுப்புப் பட்டை அணிந்த ஒரு பழுப்பு நிற சிறிய நாய் ஒன்றின் புகைப்படம் ட்விட்டர் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கர்னல் என்ற பெயர் கொண்ட இந்த நாயை தாங்கள் டிசம்பரில் ஒரு தாக்குதல் நடவடிக்கையின் போது பிடித்ததாக தாலிபான்கள் கூறுகிறார்கள்.

இந்த நாய் மீது ஒரு டோர்ச் விளக்கு, சிறிய கமரா, மற்றும் செய்கோள் உதவியுடன் அது இருக்கும் இடம் காட்டும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக தாலிபான்கள் கூறுகிறார்கள்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புப் படையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் இந்த இணையத்தளத்தில் பிரசுரித்திருக்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் மூத்த தாலிபான் தளபதி ஒருவர் இந்த நாயுடன் காணப்பட்டார் என்று சமீப வாரங்களில் செய்திகள் வந்ததாகவும் இந்த நாய் இப்போது போர்க் கைதியாக மாறிவிட்டது போல தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணின் வயிறு வெடித்து தீ தோன்றிய அதிசயம்!!

Stomach Fireசீனத் தலைநகரான பீஜிங்கில் நடந்த விநோதமான சம்பவம் ஒன்றில் மது அருந்தியபின் அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது அவரது வயிறு வெடித்தது.

58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது.

அவரது வயிற்றில் உள்ள குடல் முழுவதையும் அகற்ற முடிவு செய்துள்ளதாக நான்ஜிங் டிரம் டவர் வைத்தியசாலையைச் சேர்ந்த வாங் ஹாவ் என்ற மருத்துவர் தெரிவித்தார்.

அவரது வயிற்றில் இருந்த எதில் ஆல்கஹாலுக்கும், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மின் அறுவை கத்திக்கும் ஏற்பட்ட தொடர்பினால் இச்சம்பவம் நடந்ததாக ஹாவ் மேலும் கூறினார்.

 

பாடசாலை விடுதிக்குள் 15 வயது மாணவி மீது காதலன் பாலியல் வல்லுறவு!!

Abuseமாணவி ஒருவரை பாடசாலை விடுதிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ – தோனிகல பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மாணவி 10ம் தரத்தில் கல்வி பயின்று வருவதுடன் கைது செய்யப்பட்ட 18 வயதுடைய சந்தேகநபர் அதே பாடசாலையில் 12ம் தரத்தில் கல்வி பயில்வதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சில வாரங்களுக்கு முன்னரே இவ்விருவரிடையே காதல் மலர்ந்துள்ளதாக தெரியவருகிறது. தனியார் வகுப்புக்குச் செல்லும் வேளை இவ்விருவரும் பாடசாலை விடுதிக்குள் சென்றுள்ள போது இந்த வல்லுறவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின் மாணவி தனது மாமாவிற்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பின் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவி மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மாணவி வைத்திய பரிசோதனைக்கென ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தொழுநோயை ஒழிக்கப் போராடும் இலங்கை : ஆண்டுக்கு 2000 நோயாளிகள்!!

Tholu nooiஇலங்கையில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பல தரப்பிலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது.

எனினும் ஏற்கனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துவந்த இடங்களிலேயே தற்போதும் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் பிபிசி தமிழோசையிடம் கூறியது.

குறிப்பாக 2013ம் ஆண்டில் மேல்மாகாணத்திலேயே 44 வீதமான தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. அடுத்தபடியாக, 14 வீதமான நோயாளர்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நாடெங்கிலும் பதிவான தொழு நோயாளர்களில் 177 பேர் சிறார்கள் என்று தொழு நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ தமிழோசையிடம் கூறினார்.

2020இல் ஆண்டுக்கு 1000 நோயாளிகளாக குறைப்பது அரசின் இலக்கு இந்த சிறார் நோயாளிகளில் கூடுதலானோர் வடக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 40 சிறார்கள் கடந்த ஆண்டு தொழு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

1000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

இலங்கையில் தொழு நோய் ஒழிக்கப்பட்டதாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தொழு நோய் இலங்கையில் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இனிமேலும் இருக்கமுடியாது என்ற அர்த்தத்திலேயே 1995ம் ஆண்டு அறிவிப்பு வந்தது என்றும் தொழு நோயை முழுமையாக ஒழிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ கூறினார்.

2020ம் ஆண்டில் இலங்கையில் தொழு நோயை ஒழிப்பதற்கு அரசு இலக்கு வைத்துள்ள போதிலும், தொழு நோயை முற்றாக ஒழிப்பது என்பது சந்தேகத்துக்குரியதே.

இலங்கையில் புதிதாக பதிவாகும் தொழு நோயாளிகளின் எண்ணிக்கையை 2020ல் ஆண்டுக்கு 1000 என்ற அளவுக்குள் குறைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே தமது நிகழ்ச்சித்திட்டம் செயற்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தொழு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் கூறினார்.

மைகோபக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பக்டீரியா மூலம் தொற்றும் தொழு நோயின் அறிகுறிகளை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் எடுக்கலாம் என்பதே இந்த நோயை ஒழிப்பதில் உள்ள பெரிய சவால் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்களின்படி, ஆண்டுக்கு 1000க்கும் அதிகமான தொழு நோயாளர்கள் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-

 

மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்!!

Mannarமன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.

அவ்வப்போது இவர்களுக்கிடையில் முறுகல் நிலை, கைகலப்பு, பொலிஸ் முறைப்பாடு, விசாரணை என்று விரிவடைந்து பின் போக்குவரத்து அமைச்சு வரை நீடித்து செல்கின்றது.

அண்மைக்காலமாக வடமாகாணத்தில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்கள் தமக்குள்ளும் இலங்கை போக்குவரத்து சபையுடனும் மோதிக் கொள்ளுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் பஸ்கள் ஒன்றிணைந்த நேர சூசி அடிப்படையில் சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

இதனால் பயணிகள் பல்வேறு இடர்களுக்கும், தாமதமான பயணங்களுக்கும் முகம் கொடுப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பில் 39 பிச்சைக்காரர்கள் கைது!!

beggersகொழும்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 93 பிச்சைக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் விசேட நடவடிக்கையின்போது, கோட்டை, கொம்பனித் தெரு, விஹாரமாதெவி பூங்கா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்கள் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

அண்ணன்- தங்கை காதல் : வாலிபரை அடித்துக் கொன்ற உறவினர்கள்!!

Murderதூத்துக்குடி அருகே காதலில் ஈடுபட்ட ஏரலை சேர்ந்த வாலிபரை, பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்தனர். அவர்களில் இருவர் செங்கோட்டை நீதிமன்றிலும்,. மற்றொருவர் பொலிசிலும் சரணடைந்தார்.

ஏரலை சேர்ந்த கணேசன் மகன் ஸ்ரீராம்(20). ஆழ்வார் கற்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகள் சோனியா(19). இவர் பாளையங்கோட்டை கல்லூரியில் 2 ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். ஸ்ரீராம் திருவிழாவிற்காக ஆழ்வார் கற்குளத்தில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றபோது சோனியாவுடன் காதல் ஏற்பட்டது.

ஆனால் இருவருக்கும் அண்ணன், தங்கை உறவுமுறை இருந்துள்ளது. இந்த தகாத காதலுக்கு இசக்கிமுத்து எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 2013 ஆக. 2ல், சோனியாவும், ஸ்ரீராமும் தலைமறைவாகினர். இசக்கி முத்து ஸ்ரீவைகுண்டம் பாலிசில், தனது மகள் சோனியாவை கடத்தியதாக, ஸ்ரீராம், அவரது அக்கா செல்வி, அக்கா கணவர் சிவா மேலும் மதுரையில் குடியிருந்து வந்த மூவர் மீது புகார் செய்தார்.

இந்நிலையில், இசக்கி முத்து 2013 செப்., 2 ல் மதுரை நீதிமன்ற கிளையில் சோனியாவை ஆஜர்படுத்தக்கோரி ஹேபியஸ் கார்பஸ்´ மனு தாக்கல் செய்தார். மறுநாள் சென்னை ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஸ்ரீராமும், சோனியாவும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் செப். 25ல் பொலிசார் இருவரையும் மதுரை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

அங்கு சோனியா தனது தந்தை இசக்கிமுத்துவுடன் செல்வதாக கூறியதால் அவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்ரீராம் மதுரையில் உள்ள அக்கா செல்வி வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பிறகும் சோனியா, ஸ்ரீராம் தொடர்பு நீடித்தது.

இதையறிந்த இசக்கிமுத்து ஸ்ரீராமிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி ஆழ்வார் கற்குளம் வரும்படி அழைத்தார். இது குறித்து தனது அக்கா செல்வியிடம் தெரிவித்து விட்டு, ஸ்ரீராம் ஆழ்வார் கற்குளம் சென்றார். அதன்பின் திரும்பி வரவில்லை. அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

மதுரையிலிருந்து செல்வி 2013 நவ13ல் ஸ்ரீவைகுண்டம் பொலிசாருக்கு பதிவு தபாலில், தனது தம்பி ஸ்ரீராமை காணவில்லை என புகார் அனுப்பினார். பொலிசார் தனிப்படை அமைத்து ஸ்ரீராமை தேடி வந்தனர். திருமணத்திற்காக வந்த ஸ்ரீராமை, இசக்கிமுத்து மணக்கரை அருகேயுள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு அவருடன் இசக்கிமுத்து, சுப்பிரமணியன், ஸ்ரீகாந்த், ராஜா, சாயர்புரத்தை சேர்ந்த ராமசாமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியபோது தகராறு ஏற்பட்டது. அவர்கள் ஸ்ரீராமை அடித்து கொலை செய்து உடலை பிளக்ஸ் பேனரில் சுருட்டி, தூக்கி வீசியது தெரியவந்தது.

பொலிசாரின் விசாரணை வளையம் நெருங்குவதை அறிந்த இசக்கிமுத்துவும், ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் செங்கோட்டை நீதிமன்றில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். இதைதொடந்து கொலையில் ஈடுபட்ட சாயர்புரத்தை சேர்ந்த ராமசாமி வி.ஏ.ஓ சுரேஷிடம் சரணடைந்தார். தலைமறைவான ஸ்ரீகாந்த், ராஜாவை பொலிசார் தேடி வருகின்றனர்

 

முதல் டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி!!

NZநியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஒக்லாந்தில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ஓட்டங்களையும், இந்திய அணி 202 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 105 ரன்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் இந்திய அணிக்கு 407 ரன்கள் என்ற கடின இலக்காக நிர்ணயித்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 87 ஓட்டங்களுடன் இருந்தது.

இன் நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆடிய இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 366 ஓட்டங்கைப் பெற்று 40 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. தவான் 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது.

 

அகதிகள் வருகை கணிசமான வீழ்ச்சி அடைந்துள்ளது : அவுஸ்திரேலிய பிரதமர்!!

Ausஇலங்கை அகதிகளின் வருகை கணிசமான அளவு குறைவடைந்திருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அரசாங்கம் படகு மூலம் வருபவர்களில் தங்களது வழக்குகள் யாவும் தோல்வி அடைந்தவர்களையும் அவுஸ்திரேலியா சட்டத்தை மீறி செயல்பட்டவர்களையும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையலர்கல்தான் தமது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பபபடுள்ளனர் என பிரதமர் டோனி அபட் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 50 நாட்களில் அகதிகளுடன் எந்த ஒரு படகும் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது தமது அரசாங்கம் அமுலாக்கியுள்ள புதிய அகதிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்தார்.

 

கொழும்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 82 பேர் கைது!!

Arrestகொழும்பு, புறக்கோட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 82 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புறக்கோட்டை, ஓல்கோட் மாவத்தை மற்றும் மல்வத்த வீதி உள்ளிட்ட 5 இடங்களில் பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட முகாமையாளர் 82 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

சிறப்பாக நடைபெற்ற நஸ்ரியாவின் நிச்சயதார்த்தம்!!

Nasriya

தமிழில் நேரம், நையாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நஸ்ரியா நசீம். இவருக்கும் பிரபல இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசிலுக்கும் நேற்று கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடக்க உள்ளது. 24ம் திகதி ஆலப்புழையில் வரவேற்பு நடக்க உள்ளது.

பஹத் பாசில் மலையாளத் திரையுலகில் முன்னணி ஹீரோவாக உள்ளார். நஸ்ரியா, தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

22 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக்கால் நடந்த இன்ப அதிர்ச்சி!!

Facebook

பிரான்ஸ் நாட்டில் 22 வருடங்களுக்கு பிறகு இரட்டை சகோதரிகள் பேஸ்புக் உதவியால் ஒன்று சேர்ந்துள்ளனர். சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஷிம் மற்றும் பேபினி என்ற இரட்டையர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு தனித்தனியாக தத்து கொடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் 21 வருடங்களாக வளர்க்கப்பட்டபின் ஷிம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட மற்றொரு 21 வயதுடைய பெண்ணின் புகைப்படத்தையும் அதில் பேபினி என்ற பெயரையும் பார்த்து அவளைக்காண மிகவும் முயற்சித்துள்ளார்.

அவர்கள் இருவரும் தங்களது பேஸ்புக் மூலம் தங்களது பிறந்த நாள், இரத்த குரூப் மற்றும் பல கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் இருவரும் இரட்டைச் சகோதரிகள் என்று உணர்ந்து கொண்டனர்.

உண்மை என்னவென்றால் இந்த இரட்டைச் சகோதரிகளை குழந்தைகளாக இருந்தபோது, இவர்களைத் தத்து எடுக்க வந்த பிரெஞ்சு பெற்றோர்களுக்கு தனித்தனியாக இரு சகோதரிகளையும் பிரித்து எடுத்து வேறுவேறு பெற்றோர்களுக்கு கொடுத்தபொழுது இரட்டைச் சகோதரிகள் என்ற உண்மையை பிரெஞ்சுப் பெற்றோருக்கு மருத்துவர்கள் மறைத்து விட்டனர்.

இவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டில் லயான் நகரத்தில் 22 வருடத்திற்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்து ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளனர்.

 

விசா பட்டியலில் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன : இந்தியாவிடம் இலங்கை கேள்வி!!

Srilankaஇந்தியாவின் வருகைக்கு பின் விசா வழங்கும் பட்டியலில் இடம்பெறாமை குறித்து இலங்கை தமது கவலையை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் இந்தியாவிடம் விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கோரவுள்ளதாக வெளியுறவு அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை இந்திய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இலங்கையுடன் பாகிஸ்தான், சூடான், ஆப்கானிஸ்தான், ஈராக் ,ஈரான் போன்ற நாடுகளுக்கும் இந்தியாவின் வருகைக்கு பின்னர் விசா வசதி பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை.

பாதுகாப்பு காரணங்களை மையமாகக் கொண்டே இந்த வருகைக்கு பின் விசா வசதி பட்டியலில் இருந்து சில நாடுகள் நீக்கப்பட்டதாக இந்திய அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை குறித்த பாதுகாப்பு அச்சம் குறித்து அந்த தரப்பு உரிய தகவல்களை தரவில்லை.

இதேவேளை இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கைக்கு வந்தபின்னர் இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா வசதிகளை நீக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஒருதுளி ரத்தம் கூட இல்லாமல் பிறந்த குழந்தை!!

baby

உடலில் சிறிதளவு கூட ரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது. கலிபோர்னியாவின் ஆரஞ்ச் நகரில் கடந்த மாதம், ஜெனிபர் ஜூரேஸ் என்பவருக்கு குழந்தை ஒன்று பிறந்தது.

பிரசவ காலத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த இக்குழந்தை வெளிறிய நிலையில் காணப்பட்டது.

சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் சோதனை செய்த பார்த்த போது, குழந்தையின் உடலில் ஒருதுளி ரத்தம் கூட இல்லை என்பது தெரியவந்தது.

மருத்துவர்களின் கணிப்பின் படி இக்குழந்தை கிட்டதட்ட 80 சதவிகித ரத்தத்தை தாயின் கர்ப்பத்திலேயே இழந்துள்ளது இது கடுமையான ரத்த சோகையைக் குறிக்கிறது.

பிரசவத்திற்கு மூன்று வாரத்திற்கு முன்பே குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லாததால் மருத்துவரை அணுகியுள்ளார் ஜெனிபர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையும், தாயும் காப்பாற்றப்பட்டனர்.

ஜெனிபரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையே அவரையும் அவரது குழந்தையையும் காப்பாற்றியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்குழந்தை உயிருடன் பிறந்தது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இக்குழந்தையை பரிசோதித்த பிறகே நேரடியாக கருவிலேயே ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தோம் என சாரோன் பிலிகிரிம் என்ற நர்ஸ் தெரிவித்துள்ளார்.