கலேவெல பொலிஸ் பிரிவில் கலகிரியாகம பிரதேசத்தில் வசிக்கும் குடும்பப் பெண், அவரது தாய் மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரால் பெற்றோல் ஊற்றி இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 01.45 அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதை அடுத்து கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பப் பெண் அவரது தாய் மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய கலேவெல பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை கனடா புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அறிமுகமான முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் ஏராளமான ரசிகர்களையும், ரசிகைகளையும் குறுகிய காலத்திலேயே பெற்றவர்.
விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் வருடம் வெளிவந்த சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் அனிதா. இப்படத்தைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சுக்ரன் ஆகிய படங்களில் நடித்தார்.
மொபைல் சாதனங்களில் இலகுவாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தக்கூடியவாறு பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.
கிரிக்கெட்டில் எனது வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் சச்சின் என முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரத்தின் பரபரப்பான வீதிகளில் 100 இளம்பெண்களை மேலாடையின்றி நிற்க வைத்து புகைப்படம் எடுத்து சாதனை புரிந்திருக்கின்றார் பிரபல புகைப்படக்கலைஞர் ஒருவர்.
பொலிவுட்டில் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி மும்பையின் ஜூஹூ பகுதியில் தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
பொலிவுட் உலகின் முன்னணி நடிகரான அக்ஷய் கண்ணா ஒரு 1 கோடிக்கு ஆசைப்பட்டு 50 லட்சத்தை இழந்துள்ளார்.
2013ம் ஆண்டின் உலக அளவில் மிகமோசமான விமான நிலையங்ளின் வரிசையில் கொல்கத்தா, சென்னை, மும்பை விமான நிலையங்கள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
காதலனும் காதலியும் தமக்குத் தாமே விஷ ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வெள்ளவாய பிரதான பாதையின் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஜோத்பூரில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அசாரம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயலபட்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய படம் ராஜா ராணி. இப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.