அதிகம் தூங்கினால் மூளை சுத்தமாகும்!!

Sleepஅதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைகென் நெதர்காட் தலைமையிலான குழுவினர் மனிதர்கள் தூங்குவது ஏன் என ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது தெரியவந்தது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி அடிக்கப்படுகிறது.

அப்போது மூளைக்கு வெளிப்புறம் படிந்திருக்கும் மூலக்கூறுகளின் சிதைந்த பொருட்களும், நச்சு புரோன்டீன்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஆய்வுக்கு விஞ்ஞானி மைகென் நெதர்காட் குழுவினர் சுண்டெலிகளை பயன்படுத்தினர். அப்போது தான் இந்த விஷயம் கண்டு பிடிக்கப்பட்டது.

அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!

Ajithஸ்டைலிஷான இயக்குநர் என்று பெயர்பெற்ற கௌதம் மேனனுக்கு மறுபடியும் நல்ல நேரம் வந்திருக்கிறது.
அஜித், சூர்யா என்று ஒவ்வொருவராக கௌதம் படத்தில் நடிக்க முதலில் ஆர்வமாக இருந்து பின் கழன்று கொண்டனர். இப்போது மீண்டும் கௌதம் படத்தில் நடிக்க முன்வருகிறார்களாம்.

சூர்யா தான் வாங்கிய 5 கோடி அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தந்தார். ஆனால், இந்த உறவு பிரியாது. மீண்டும் கௌதமுடன் இணைவேன் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

அடுத்த வருஷம் மீண்டும் ஒரு சிறந்த படத்தோட நான் வந்து உங்களை சந்திப்பேன். அதுக்காக எடுத்த ஒரு இடைவெளியுடன் கூடிய முடிவுதான் அது. ரெண்டு பேருக்குமே ஒருத்தக்கொருத்தர் மரியாதை இருக்கு என்று ஒரு இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.

கௌதம் மேனனை மனதில் வைத்துதான் சூர்யா இதைப் பேசினார் என்பது விஷயம் அறிந்தவர்கள் உணர்ந்துகொண்டார்கள். இப்போது அஜித் கௌதம் படத்தில் நடிக்க இருக்கிறார். வீரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன்தான் இயக்கப் போகிறார்.

பிரதமரது பங்கேற்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் : நாராயணசாமி!!

NARAYANASAMYஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என இந்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

 

ஸ்பூனில் வைத்து வாயில் ஊட்டி விடத் தேவையில்லை : டோனி ஆவேசம்!!

Dhoni pressநேற்று டெல்லியில் இடம்பெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் இஷாந்த் சர்மாவின் மோசமான பந்து வீச்சால், அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. இதனால் தலைவர் டோனி இந்திய பந்து வீச்சாளர்களை குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.

போட்டி முடிவில் செய்தியாளர்களிடம் பேசியபோது தனது கோபத்தை மறைமுகமாக வெளிக்காட்டினார் டோனி. வழக்கமாக வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளும் டோனி இதற்காகவே கேப்டன் கூல் என செல்லமாக அழைக்கப்பட்டார்.

ஆனால் அவரையே ஆவேசப்பட வைக்குமளவுக்கு இருந்தது நேற்றைய இந்திய அணியின் பந்துவீச்சு. நேற்றுப் பகல் ஆரம்பமான இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா டோனியின் அபார சதத்தால் 303 ஓட்டங்களை விலாசியது.

இதன்படி 304 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஒருகட்டத்தில் 213 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இந்த இக்கட்டான நிலையில் களத்தில் இருந்த வோக்ஸ்-பாக்னர் ஜோடி விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி நிதானமாக விளையாடினர்.

வோக்ஸ் அரை சதம் கடந்து இரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனாலும் இந்தியாவின் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு இருந்தது.
47 ஓவர்கள் முடிவில் வெற்றி பெற வேண்டுமாயின் 44 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஆஸி. அணிக்கு கைகொடுக்க வந்தார் இஷாந்த் சர்மா.

இவர் வீசிய 48வது ஓவரில் சிக்சர்களாக விளாசிய பாக்னர் 30 ஓட்டங்களை குவித்தார். இதனால் அவுஸ்திரேலியா வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

49வது ஓவரில் 5 ஓட்டங்களை எடுத்தனர். கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் ஒற்றை ஓட்டமும் அடுத்த பந்தில் ஓட்டங்களும் அடித்த பாக்னர் 3வது பந்தில் அதிரடியாக சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

இதனால் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இது குறித்து டோனி கூறுகையில் கடைசி ஓவர்கள் நமக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்து விட்டது. அதுதான் கவலைக்குரியதாக ஆரம்பத்திலிருந்தே இருந்தது. நேற்று மோலும் மோசமடைந்து விட்டது.

நேற்று பனி இருந்தது. என்றாலும், கடைசிப் போட்டியில் இருந்தது போல அதிகம் இல்லை. பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும்போது சிந்தனையுடனும் திட்டத்துடனும் வர வேண்டும். தங்களது பலத்தை உணர்ந்து பந்து வீச வேண்டும்.

இது சர்வதேசப் போட்டி. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஸ்பூனில் வைத்து வாயில் ஊட்டி விடத் தேவையில்லை. திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டும் என்றார் டோனி.

நடுக்கள பந்து வீச்சாளர்கள் பரவாயில்லை. குறிப்பாக ஜடேஜா நன்றாக வீசினார். அதேசமயம், பகுதி நேர பந்து வீச்சாளர்களும் சற்று உதவிகரமாக இருந்திருக்கலாம்.

மொஹாலியில் நாம் சிறப்பாக செயல்பக் கூடியவர்கள். இந்தப் போட்டியிலும் நாம் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். 300 ஓட்டங்களை நாம் எட்ட முடிந்ததே அதிர்ஷ்டம்தான்.
நாம் சுதாரித்து ஆடியிருக்காவிட்டால் 250 ஓட்டங்களைக் கூட எட்டியிருக்க முடியாது என்றார் டோனி.

இளம்பெண்ணை அசிட் குடிக்கவைத்து கடலில் தள்ளிக் கொலைசெய்ய முயன்ற வாலிபர்!!

murder-attemptஇந்தியாவின் மும்பையில் ஒரு இளம்பெண்ணை வற்புறுத்தி அசிட் குடிக்க செய்து பின்னர் அவரை கடலில் தள்ளிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பை டஹிசார் பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக ஜிதேந்திர சக்பல் என்னும் 20 வயது நபர் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண் அவளது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அந்த நபர் மீது பொலிசில் புகார் அளித்தனர்.

அந்த நபரை விசாரித்த பொலிசார் இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டி எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண் வீடு திரும்புவதை பார்த்த ஜிதேந்திர சக்பல், அவரை வழிமறித்து அசிடை குடிக்கசெய்து பின்னர் அவரை கடலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

பொலிசாரால் மீட்கப்பட்ட அந்த பெண் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காதலை கைவிடுமாறு பெற்றோர் அறிவுறுத்தியதால் 14 வயது மாணவன் தற்கொலை!!

suicide hangingகாதல் தொடர்பு காரணமாக பெற்றோர்களது அறிவுறுத்தல்களினால் மன உளைச்லுக்குள்ளான 14 வயது சிறுவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆணைமடு, திவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இம்மாணவன் அப் பிரதேச பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயின்று வருகிறார்.

அப் பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஒருவருடன் இந்த மாணவனுக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்ட பெற்றோர் காதலை கைவிடுமாறு குறிப்பிட்டு அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் பின்னராக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் தூக்கிட்ட நிலையில் பெற்றோர்களால் வைத்தியசாலைக்கு மாணவன் எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார்.

பந்து தேடிச் சென்ற சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது!!

arrest1சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 25 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழு வயதான சிறுவன் ஒருவர் புத்தளம் கற்பிட்டியிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் குறித்த இளைஞனது வீட்டிற்கு முன் விளையாட்டிக் கொண்டிருந்த நிலையில் பந்து ஒன்றை தேடி இளைஞனின் வீட்டு சூழலிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுவனை சமையலறைக்கு அழைத்துச் சென்ற இளைஞன் அச்சுறுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் பாதுகாப்பாளர்களினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைகளுக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பின் ஒற்றுமையை யாரும் குலைத்துவிட அனுமதிக்கப்போவதில்லை : தர்மலிங்கம் சித்தார்த்தன்!!

Sitharthanகூட்டமைப்புக்குள் அங்கம் பெறும் கட்சிகளோடு கலந்தாலோசிக்காமல் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டதை ஆட்சேபித்தே எமது அதிருப்திகளை தெரிவித்து வந்திருக்கின்றோமே தவிர எச்சந்தர்ப்பத்திலும் எக்காரணங்களுக்காகவும் அதன் ஒற்றுமையை சீர்குலைக்க நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம் என புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்தேறிய இழுபறி நிலை பற்றியும் முரண் சார் நிகழ்வு பற்றியும் விளக்கமளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்..

அமைச்சர் பதவி தரப்படவில்லை என்பதற்காகவோ எங்களை முன்னிலைப்படுப்த்தப்படவில்லை என்பதற்காகவோ நாங்கள் எந்த காரியங்களையும் செய்யவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் பெற்று அதிக வாக்குகளை நாம் பெற்றிருந்தும் கூட வட மாகாணசபை தேர்தலுக்குப் பின் எடுக்கப்பட்ட ஒரு சில முடிவுகள் எம்மை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட காரணத்தினால் தொடர்ந்தும் இவ்வாறான நிலை வரக்கூடாது என்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டோம்.

என்ன காரணத்தையிட்டும் கூட்டமைப்பின் ஒற்றுமையை யாரும் உடைத்துவிட முடியாது என்பதே உண்மை. நடைபெறப் போகின்ற மாகாணசபை ஆட்சியில் எமது ஆதரவு பலம் கொண்டதாகவே இருக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை நாங்கள் ஒற்றுமையாகவுள்ளோம் என்பதைக் காட்ட வலிமேற்கு திறப்பு விழாவொன்றில் கலந்துகொண்டுள்ளோம். எதிர்வரும் 22ம் திகதி மாகாண சபையின் கட்டிடத்துக்கு பால் காய்ச்சும் வைபவம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 25ம் திகதி மாகாண சபை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றது. இவ்வைபவம் அனைத்திலும் ஒன்றுபட்ட முறையில் நாம் செயற்படவுள்ளோம்.

ஆரம்பத்தில் தமிழ் தேசிக் கூட்டமைப்புக்குள் மூன்று கட்சிகளே இருந்தன. அக்கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் என்னால் உணரமுடிந்தது. இதில் இன்னுமொரு விடயம் என்னவென்றால் கட்சியொன்றுக்கு ஒரு அமைச்சு பதவியை வழங்கிவிட்டு இவரைத்தான் நீங்கள் போட வேண்டுமென வலியுறுத்துவது நியாயமற்றது ஆகும்.

இதன் காரணமாகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முரண்பாடு உருவாகியது. செல்வம் அடைக்கலநாதனின் பார்வையில் அது சரியாகப் பட்டாலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் நியாயம் இருக்கவில்லை.

இந்த முரண் நிலைகள் நாங்கள் தனித்தனியாக யோசித்து தீர்மானம் மேற்கொண்டதே தவிர புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து பேசி தீர்மானம் எடுக்கவில்லை என்பதே உண்மை.

40 ஆயிரம் வாக்குகுளை இந்த மாகாண சபைத் தேர்தலில் நான் பெற்றிருந்தேன். மக்கள் பிரதிநிதிகளைத் தான் நாம் முதன்மைப்படுத்த வேண்டுமென கூறப்பட்டு வந்த விடயத்தில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவே கருதுகிறோம்.

முதல் அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்த அன்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித்தை கூட்டமைப்பின் சார்பில் சந்திக்கச் சென்றபோது என்னை அழைக்கவுமில்லை. தகவல் தெரிவிக்கவுமில்லை. தங்கள் விருப்பப்படி சென்றிருந்தார்கள்.

நான் அதிக வாக்கு எடுத்திருந்தும் புறக்கணிக்கப்பட்டு விட்டேன். மக்கள் பிரதிநிதிகளையே எல்லா விடயங்களுக்கும் முதன்மைப்படுத்துவோம் என்று கூறி வருபவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடாது.

இந்த நிலைகள் தொடரக் கூடாது என்பதை மனங்கொண்டே எனது அதிருப்தியை வெளிப்படுத்த சில விடயங்களை வெளிக்காட்டவேண்டி வந்ததே தவிர எனக்கு அமைச்சர் பதவி தரவில்லையென்றோ எனது கட்சி கவனிக்கப்படவில்லை என்பதற்காகவோ நான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

எப்படி இருந்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை யாரும் குலைத்துவிட முடியாது. குலைத்துவிட நாம் அனுமதிக்கப்போவதில்லை. தலைமைத்துவத்தின் வழிகாட்டலுக்கு அமைய நடந்து கொள்வதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

400M ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர்களுக்கு தங்கம்!!

sl89வது மலேஷியன் திறந்த தடகள சாம்பியன்ஷிப் (Malaysian open athletics championship) போட்டிகளின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை வீரர்களான சந்திரிக்கா சுபாஷினி மற்றும் கசுன் கல்ஹார ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

சந்திரிக்கா சுபாஷினி 52.86 சென்கன்களிலும், கசுன் கல்ஹார 47.19 செக்கன்களிலும் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப்பதகங்களை வெற்றிகொண்டனர் என்பது குறிப்பித்தக்கது.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஐவருக்கு விளக்கமறியல்!!

prisonகொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, சீதுவ, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில்,வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட 18 குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூவர், நேற்று முன்தினம் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்களால் கொள்ளையிடப்பட்ட 9 மடிக்கணனிகள், 4 தொலைக்காட்சிகள், 4 டிஜிட்டல் கமராக்கள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், ரயிஸ் குக்கர், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேகநபர்களை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய இரும்பு சேகரிக்கும் நிலையத்தில் வெடிப்பு சம்பவம் : ஒருவர் காயம்!!

Blastமாதம்பை – சுதுவெல்ல பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று முற்பகல் பழைய இரும்புகளை சேகரித்து மொத்தமாக விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடி விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுநலவாய மாநாட்டு பாதுகாப்பு பணிகளில் 55,000 படையினர், 845 சொகுசு வாகனங்கள்!!

miltவரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளும் அமைப்பு நாடுகளின் தலைவர்கள், இராஜதந்திரிகளின் பாதுகாப்புக்கென அதிநவீன உபகரணங்களுடன் சுமார் 14676 பாதுகாப்பு படையினரும், இதற்கு மேலாக அவசர தேவையின் பொருட்டு 40,000 படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் அவர்களது துணைவிமார், அதிகாரிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் 845 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மெரிசிடிஸ் பென்ஸ் ரக கார்கள் 54 மற்றும் நிஸான் ரக கார்கள் 110 என்பனவும் அடங்குகின்றன. இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக 200 டிபெண்டர் ரக வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றிலும் எட்டு பாதுகாப்புப் படை வீர்ர்கள் கடமையிலிருப்பர் என்றும் அந்தச் செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் திடீர் நிறுத்தம்!!

maldivesமாலைதீவில் நேற்று நடைபெற இருந்த ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகள் பொலிசாரின் திடீர் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. எனவே புதிய தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

மாலைதீவில் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் 45.45 சதவீதம் வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தார்.

அந்த நாட்டின் தேர்தல் விதிப்படி 50 சதவீதம் வாக்குகளைப் பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்க முடியும். எனவே முதலிடம் பிடித்த நஷீத், 2வது இடம்பிடித்த அப்துல்லா யாமீன் இடையே 28ம் திகதி 2வது கட்ட தேர்தல் நடக்க இருந்தது.

ஆனால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்தல் முடிவை எதிர்த்து வேட்பாளர் காசிம் இப்ராகிம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 20ம் திகதிக்குள் புதிதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனை அடுத்து 19ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையகம் முடிவு செய்து பணிகளில் ஈடுபட்டது.

அதன்படி மாலைதீவில் நேற்று வாக்குப்பதிவுகள் நடக்க இருந்தன. ஆனால் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சற்றுமுன் பொலிஸ் திடீரென்று தலையீடு செய்தது. வாக்குப் பதிவுக்கு செல்ல இருந்த அதிகாரிகளை பொலிசார் தடுத்து விட்டனர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதலை கடைபிடிக்க தவறியதால் தாங்கள் தலையிட நேரிட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஜனாதிபதி தேர்தலில் நேற்று நடைபெற இருந்த வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையகம் வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது பொலிசார் வந்து தேர்தல் அலுவலகத்தை விட்டு வெளியேறும்படியும், தேர்தலை நிறுத்தம்படியும் கூறினார்கள் என்று தெரிவித்தது.

புதிய தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையகம் கூறியது.

தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வாஷீத் நவம்பர் 11ம் திகதி வரையில் நீடிக்க முடியும். இதனால் அதற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இல்லாவிட்டால் மீண்டும் அங்கு அரசியல் குளறுபடி ஏற்படும்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு முடக்கப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி நஷீத்தின் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் செய்தித் தொடர்பாளர் அப்துல் கபூர் கூறுகையில்..

மாலைதீவில் ஜனநாயகத்துக்கு எதிராக பொலிஸ், இராணுவம், ஜனாதிபதி முகமது வாஷீத், உயர் நீதிமன்றம் ஆகிய அனைத்து அரசு எந்திரங்களும் செயல்படுகிறது. இதை தடுக்காவிட்டால் மற்றொரு பர்மா உருவாகும் என்றார்.

மதுபானக்கடை சுவற்றில் துளைபோட்டுத் திருடிய தம்பதியர்!!

thefமதுக்கடையின் சுவரில் துளைபோட்டு திருடிய கணவன்-மனைவி குடிவெறியில் urangiyapothu பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட கொண்டுள்ளனர். இது பற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது..

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு செல்லும் சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு திருடப்பட்டு இருப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்த தகவலை தொடர்ந்து மதுக்கடை மேற்பார்வையாளர் ராஜ்குமார் நேற்று காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார்.

அப்போது கடையின் சுவரில் துளைபோட்டு 20 ஆயிரம் மதிப்புள்ள மது போத்தல்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் காவேரிப்பாக்கம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொலிசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 100 அடி தூரத்தில் மது போத்தல்கள் அடங்கிய சாக்குமூட்டையை தலைக்கு வைத்தபடி ஆண்-பெண் இருவர் தூங்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக பொலிசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு தலைக்கு மதுபான மூட்டையை வைத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் காவேரிப்பாக்கத்தில் உள்ள அய்யன்பேட்டைசேரி கிராமத்தை சேர்ந்த விஜயன் (35), அவரது மனைவி வள்ளியம்மாள்(30) என்பது தெரியவந்தது. அவர்களை எழுப்பி விசாரித்த போது அவர்கள் கூறியதாவது..

நேற்று முன்தினம் இரவு 2 பேர் எங்களிடம் வந்து ஒரு கடையின் சுவரில் துளைபோடவேண்டும் என தெரிவித்தனர். நாங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தோம். நள்ளிரவில் அவர்கள் எங்களை கூட்டிச்சென்றனர். அப்போது துளைபோடுவதற்கு தேவையான கடப்பாரையை எடுத்துச்சென்றோம். சுவரை துளைபோட்டபின்னர் தான் அது டாஸ்மாக் மதுக்கடை என்பது தெரியவந்தது.

துளைபோட்ட வழியாக உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 1400 மட்டும் இருந்தது. பெரிய அளவில் பணம் ஏதும் இல்லை. அதை தொடர்ந்து அங்கிருந்த குவாட்டர் மது போத்தல்களை கடையில் இருந்த 2 சாக்குப்பைகளில் அள்ளிப்போட்டு கட்டினோம்.

அதில் ஒரு சாக்குமூட்டையை எங்களை அழைத்துச் சென்றவர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு மதுபாட்டில் அடங்கிய மூட்டையை எங்களிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

நாங்கள் இருவரும் அந்த சாக்குமூட்டையை தூக்கிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றோம். பின்னர் சற்று மறைவான இடத்துக்கு சென்று அந்த மூட்டையை பிரித்து அதில் இருந்த 2 குவாட்டர் போத்தல்களை எடுத்து குடித்தோம். அப்போது போதை ஏறியது.

இதனால் சிறிது நேரம் தூங்கிவிட்டு விடிவதற்கு முன் எழுந்து சென்று விடலாம் என நினைத்து தலைக்கு மது போத்தல் அடங்கிய மூட்டையை வைத்து இருவரும் தூங்கினோம். இரவு முழுக்க கண் விழிப்பு மதுபோதை இவற்றால் பொழுது விடியும் வரை தூங்கி விட்டோம். அயர்ந்த தூக்கத்தால் பொலிசாரிடம் சிக்கிக்கொண்டோம் என்று அவர்கள் கூறினர்.

அதை தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் பொலிசார் கைது செய்தனர். மேலும் அவர்களை அழைத்து சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

 

இன்று நாடு முழுவதும் பரவலாக காற்றுடன் கூடிய மழை!!

STORMவங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று மாழை நாடு முழுவதும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 80 கிலோ மீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அரசின் விளம்பரத்தை கேலி செய்த சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா??

TY04SANTHANAM_3அரசின் புகையிலை எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடித்து வசனம் பேசிய காமெடி நடிகர் சந்தானத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

பொது மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்தையும் குட்கா, பான்மசாலா பயன்படுத்துவதையும் கைவிடுவதற்காக திரைப்படங்களில் அரசு, முகேஷ் என்பவர் குட்கா பயன்படுத்தி இறந்ததை விளம்பர படமாக வெளியிட்டு வருகிறது. இதை ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சந்தானம் கிண்டலடித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசானது. அதில் இக்காட்சி உள்ளது. தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு இயக்கத்தின் அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் அரசு சுகாதார துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள புகாரில் ஆல் இன் ஆல் அழகு ராஜா பட டிரெஸ்டரில் தம்மடிக்க வேண்டும் என கார்த்தி கேட்க அதற்கு சந்தானம் குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷின் குரலை இமிடேட் பண்ணி பேசிக் காட்டுவார்.

புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு எதிரான விளம்பரத்தை சந்தானம் கிண்டலடித்துள்ளார். குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷ் நிஜமாகவே புகையிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர்.

புகையிலை மற்றும் புகைப்பழக்கத்தை விடுவது கேவலமான செயல் என்பதுபோல் சந்தானத்தின் கிண்டல் அமைந்துள்ளது. இது புகையிலை கட்டுப்பாடு சட்ட பிரிவு 5க்கு எதிரானது என்று கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெறுகின்றது. சர்ச்சைகுரிய காட்சியை நீக்குவது குறித்து பரிசீலனை நடப்பதாக தெரிகிறது.