இலங்கை அணியின் பயிற்சியாளராவாரா ஷெப்பல்??

Greg-Chappellஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் கிரேக் சப்பல் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் தென்னாப்பிரிக்காவின் கிரஹாம் போட் தனது ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லை என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை இலங்கை தீவிரமாக தொடங்கியுள்ளது.

பயிற்சியாளரை நியமிப்பதற்கான காலக்கெடு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பலர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்துள்ளனர்.

65 வயதான சப்பல் 2005 முதல் 2007ம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர்.

அப்போது கங்குலி உள்ளிட்ட வீரர்களுடன் கருத்து வேறுபாடு, 2007ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இந்தியா படுதோல்வி உள்ளிட்ட பிரச்சினைகளால் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சப்பலை தவிர இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத், லால்சந்த் ராஜ்புத், மொகித் சோனி, அவுஸ்திரேலியாவின் ஷேன் டப், மைக்கல் ஓ சுலிவான், இங்கிலாந்தின் போல் பார்பிரேஸ், இயன் பொன்ட், நியூசிலாந்தின் கிராண்ட் பிராட்பர்ன், உள்ளூர் முன்னாள் வீரர்கள் மாவன் அத்தப்பத்து, களுவித்தாரன ஆகியோரும் பயிற்சியாளருக்கான போட்டியில் விண்ணப்பித்துள்ளனர்.

யாழ்.நாச்சிமார் கோவிலடியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வவுனியாவைச் சேர்ந்தவர்!!

nachimarயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வவுனியாவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்தார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் பெண் உயிரிழந்ததற்கான காரணம் தொடர்பாக எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

மேற்படி சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வவுனியா நெடுங்குளத்தினைச் சேர்ந்தவர். அவர் புத்திசுவாதீனமற்றவர். இந்நிலையில் அவர் யாழ்.அரியாலைப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இடம்பெயர்விற்குப் பின்னர் சென்று தங்கியிருந்தார்.

சிறிது காலத்தின் பின்னர் அவர் அங்கிருந்து யாழ்.கன்னியர் மடப் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். அங்கிருந்து கடந்த 3ம் திகதி வியாழக்கிழமை காணாமல் போனதாக, மறுநாள் 4 ம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் அரியாலையில் உள்ள அவருடைய உறவினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் நாச்சிமார் கோவிலடியில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஐபோன் வாங்க குழந்தையை விற்ற தம்பதியர்!!

iphoneஉலகம் முழுவதும் இளைஞர்களிடம் மொபைல் போன் மோகம் அதிகரித்துள்ளது. தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுடன் ஐபோன் மற்றும் ஐபேட்களை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்காக சீனாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் கிட்னியைக் கூட விற்பதாக பரவலாக பேசப்பட்டது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் சீனாவில் உள்ள ஒரு இளம் தம்பதியர் ஐபோன் வாங்குவதற்காக தங்கள் பெண் குழந்தையை விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களின் 3வது குழந்தையை இணையத்தின் மூலம் விற்பனை செய்ததாகவும் ஐபோன் விலை உயர்ந்த காலணிகள் மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்கு அந்த பணத்தை பயன்படுத்தியதாகவும் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அந்த தம்பதியர் சலுகைகளை பெறுவதற்காக குழந்தையை கொடுக்கவில்லை என்றும் தாங்கள் வளர்ப்பதை விட அவர்களால் நன்றாக வளர்க்க முடியும் என்பதால் கொடுத்தோம் என்றும் கூறுகிறார்கள்.

குழந்தையை விற்று எவ்வளவு பணம் பெற்றார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் அவர்களின் இணையதள தகவல் பரிமாற்றத்தில் 30 ஆயிரம் யென் மற்றும் 50 ஆயிரம் யென் என்று பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்யா பிரியாணி கொடுத்து நடிகைகளை மடக்குகிறார் : நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!!

Vishaalவிஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த பாண்டிய நாடு படம் தீபாவளிக்கு வெளியாகின்றது. இதுகுறித்து விஷால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு..

கேள்வி:– பாண்டியநாடு என்ன மாதிரி படம்?

பதில்:– ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் பழிவாங்கல்தான் கதை. என் அப்பா கரக்டரில் பாரதிராஜா வருகின்றார். கடைசி இருபது நிமிட காட்சிகள் சீட் நுனிக்கே இழுக்கும். மதுரை பின்னணியில் படத்தை எடுத்து இருக்கோம். சண்டை சச்சரவுக்கு பயந்து ஒதுங்கி போகும் கரக்டரில் நான் வருகிறேன். அடிக்கத் தெரியாதவன் அடித்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.

லட்சுமி மேனனுக்கும் எனக்குமான காதல் சீன்கள் நல்லா வந்து இருக்கு. பதட்டமாகும்போது என் வாய் திக்கும். லட்சுமி மேனனிடம் பேசும்போது வாய் திக்கி வேறு எதையோ பேசும் சீன்கள் கலகலப்பாக இருக்கும்.

கே:– பாரதிராஜாவுக்கு என்ன கரக்டர்?

ப:– பாரதிராஜா என்ன தந்தை கரக்டரில் பிரமாதமாக நடித்துள்ளார். அப்பாவுக்கு பிரச்சினை வரும்போது மகன் வருத்தப்படுவான். மகனுக்கு சங்கடங்கள் வரும்போது அப்பா வருந்துவார். இது இயற்கையாக நடப்பது. அதைத்தான் படத்தில் வைத்துள்ளோம். இந்த படத்தை இன்னொரு சண்டைக்கோழி என்கின்றனர்.

மீராஜாஸ்மின் போல் லட்சுமிமேனன் கரக்டர் அமைந்துள்ளது. விக்ராந்தும், சிறப்பாக நடித்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் கதை சொன்னதும் பிடித்ததால் நானே தயாரித்தேன்.

கே:– உங்களுக்கு திருமணம் எப்போது?

ப:– ஆர்யாவுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் என் திருமணம் நடக்கும். எங்கள் இருவரது பெற்றோரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது விஷால், ஆர்யா திருமணத்தை ஒரே மேடையில் நடத்தி விடலாமா என்று பேசி உள்ளனர்.

கே: அப்படியானால் இருவர் திருமணமும் ஒரே நாளில் நடக்குமா?

ப:– இல்லை. ஆர்யா திருமணம் முடிந்த மறுநாள் என் திருமணம் நடக்கும்.

கே:– நடிகையை திருமணம் செய்வீர்களா?

ப:– நடிகையை மணப்பதில் என்ன தவறு இருக்கிறது? நடிகையாகவும் இருக்கலாம், டான்சராகவும் இருக்கலாம். ஆனால் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்கும்.

கே:– நடிகைகளுக்கு ஆர்யா பிரியாணி விருந்து கொடுக்கிறாராமே?

ப:– ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்து எல்லோரையும் மடக்குகிறார். எனக்கு தெரிந்த நடிகைகளிடம் அண்ணாநகரில் உள்ள ஆர்யா வீட்டிற்கு பிரியாணி சாப்பிட போகாதீர்கள் என்று சொல்லி வைக்கிறேன். பெண்கள் மத்தியில் ஒரு மணி நேரம் இல்லாவிட்டால் ஆர்யாவுக்கு ஜூரமே வந்துவிடும்.

பெண்களுக்கு அவரைத்தான் பிடிக்கிறது. என்னை எல்லாம் பிரியாணி விருந்துக்கு அழைப்பது இல்லை. வீட்டுக்கே பார்சலில் அனுப்பி விடுகிறார். ஆர்யாவை எனக்கு பிடிக்க காரணம் எதையும் சீரியஸ்சாக எடுக்க மாட்டார்.

நட்சத்தர கிரிக்கெட்டில் எல்லா நடிகர்களும் மைதானத்தில் ஆட தயாராக நின்றோம். அம்பயரும் வந்து விட்டார். ஆர்யாவை காணவில்லை. தேடியபோது தொலைவில் சர்வசாதாரணமாக கொஞ்சம் இரு மச்சான் வந்துர்றேன் என்று சைகையில் சொல்லி விட்டு கையில் தட்டு வைத்து பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்தார். அதுதான் ஆர்யா. என்று விஷால் கூறினார்.

பிரட்மனுக்கு அடுத்த சிறந்த வீரர் சச்சின் தான் : கிளாக்!!

clarkeகிரிக்கெட்டின் சகாப்தம் என்றழைக்கப்படும் இந்திய துடுப்பாட்ட வீரர் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு முடிவை அறிவித்த பின்பு முன்னாள் வீரர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் சச்சினை பாராட்டி வருகிறார்கள்.

அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் மைக்கல் கிளாக்கும் சச்சினை வெகுவாக பாராட்டி உள்ளார். நவீன கிரிக்கெட் சகாப்தத்தில் சச்சின் தான் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கிளாக் கூறுகையில் டெண்டுல்கரின் ஓய்வு கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் தலைமுறையில் அவர் தான் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

நான் பார்த்த மற்றும் விளையாடிய வீரர்களில் டெண்டுல்கரே உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார். கிரிக்கெட் வரலாற்றில் பிரட்மனுக்கு பின்னர் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார். அப்படிப்பட்ட சிறந்த வீரரின் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

எல்லாவிதமான பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக எதிர் கொள்ளக்கூடிய திறமை டெண்டுல்கரிடம் இருக்கிறது என்றும் இதனால் அவரை யாருடனும் ஒப்பிட முடியாது எனவும் கூறியுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர் பற்றிய கருத்து முரண்பாடானது : அதிபர் விளக்கம்!!

vavuniya22வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 8 ஆம் திகதி உலக ஆசிரியர் தின நிகழ்வு நடைபெற்றபோது மாணவர்கள் சிலரிடையே காணப்பட்ட குழப்பநிலையை ஆசிரியர்கள் சீர் செய்தவேளை , துரதிஷ்டவசமாகக் காயமடைந்த மாணவன் குடிபோதையில் இருந்ததாகத் தவறான செய்தி பரவியிருந்தமை வருத்தத்திற்குரியது என்று அந்தப் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

உலக ஆசிரியர் தின நிகழ்வு ஒக்டோபர் 5ம் திகதியும் , அந்நிகழ்வை இலங்கையில் ஒக்டோபர் 6ம் திகதியும் செயற்படுத்தும் வகையில் வருடம்தோறும் நடைபெறுகின்றது.

இவ்வருடம் ஒக்டோபர் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வந்த காரணத்தினால் ஒக்டோபர் 8ம் திகதி எமது பாடசாலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. காலைப் பிரார்த்தனையின்போது சகல ஆசிரியர்களும் மாணவர்களால் மாலை அணிவித்து கௌரவித்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர் .

இக் கௌரவிப்பும் , ஆசிர்வாதமும் சகல மாணவர்களும் பங்கு கொள்ள முடியாததால் காலப் பிரார்த்தனையின் பின்பு ஒவ்வொரு வகுப்பறைகளிலும் நடைபெறுவது வழக்கமாகும் . இந்நிகழ்வு சகல வகுப்புக்களிலும் நடைபெறுவதால் , அன்றைய தினம் பாடங்கள் நடைபெறாது , மாணவர்கள் தத்தமது வகுப்பறைகளில் வகுப்பாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள், முகாமைத்துவ அணியினர் அனைவரிடமும் ஆசிகளைப் பெற்றுக் கொண்ருக்கும் வேளையில் குறித்த ஒரு தொகுதி உயர்தர வகுப்பு மாணவர்கள் ஒரு சிலரிடையே குழப்பநிலை காணப்பட்டுள்ளது .

இதனை அவதானித்த உயர்தர வகுப்பாசிரியர்கள் சிலர் இக்குழப்ப நிலையைச் சீர் செய்வதற்கு முயன்று அதனை சகஜநிலைக்குக் கொண்டு வந்திருந்தனர் . அந்நிகழ்வின்போது மாணவன் ஒருவர் துரதிஷ்டவசமாகவும் தற்செயலாகவும் காயமடைந்தார் . ஆனால இம்மாணவன் குடிபோதையில் இருந்ததாக தவறான செய்தி வவுனியாவில் பரவியுள்ளது வருந்தத்தக்கது.

எனவே எமது சமூகத்தின் முக்கியமான பிரஜைகளை உருவாக்கி சிறந்த கல்விப் பெறுபேறுகளை வழங்கி வருகின்ற மாவட்டத்தின் முக்கியமான கல்விச் சாலையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இப்பாடசாலையின் முகாமைத்துவ அணியினருடன் இணைந்து பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், வர்த்தகப் பெருமக்கள், ஊடகத்துறையினர் அனைவரதும் பங்களிப்பு எமக்கு வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிபிட்டார்.

பாய்ந்து வரும் இராட்சத விண்கல் பூமியை அழிக்குமா??

ASTEROID2032ம் ஆண்டில் பூமியின் மீது இராட்சத விண்கல் மோதி உலகம் அழியும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மாயன் காலண்டர் முடிவுக்கு வந்ததால் கடந்த ஆண்டில் உலகம் அழியும் என்ற பீதி எழுந்தது. ஆனால் அது போன்று எதுவும் நடைபெறவில்லை.

ஆனால் இன்னும் 19 ஆண்டுகளில் உலகம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஜோதிடம் தெரிவிக்கவில்லை. அறிவியல் உலகின் மேதாவிகளான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டவெளியில் எரிகல் எனப்படும் ஆயிரக்கணக்கான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி பாய்ந்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன.

ஆனால் அவற்றில் ஒரு சில இராட்சத கற்கள் பல துண்டுகளாக சிதறி பூமியில் விழுந்துள்ளன. சமீபத்தில் ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு விண்கல் விழுந்து சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்னும் 19 ஆண்டுகளில் மற்றொரு இராட்சத விண்கல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளது. 1300 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. அது 2032ம் ஆண்டு ஓகஸ்ட் 26–ம் திகதி பூமியை தாக்கும் ஆபத்து உள்ளது. இதை உக்ரைன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு வேளை இக்கல் பூமியை தாக்கினால் ஒரு மிகப் பெரிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்பை விட இது 50 மடங்கு கூடுதலாகும். அதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என பெயரிடப்பட்டுள்ளது.

இதே போன்று மற்றொரு இராட்சத விண்கல் விண்வெளியில் சுற்றி வருவதாகவும், பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலுக்கு 2007 வி.கே 184 என பெயரிடப்பட்டுள்ளது.

இறந்த பெண்ணின் சடலத்துடன் 10 மாதங்களாக வாழ்ந்த குடும்பம்!!

indதமிழகத்தின் நாகர்கோவிலில் இறந்து போன பெண்ணின் சடலத்துடன் அவரது தாயார், சகோதரர், மகன் ஆகியோர் 10 மாதங்களாக வசித்து வந்தமை தெரியவந்துள்ளது.

நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியர். இவர் இறந்து விட்டார்.
இவரது மனைவி சரோஜினி (89). இவர்களுக்கு உமாதேவி (56) என்ற மகளும், பெருமாள், செல்வம் பிள்ளை என்ற மகன்களும் உண்டு.

உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இவர் நாகர்கோவில் அடுத்த பறக்கையை சேர்ந்தவர். இவர்களுக்கு சிவபிரசாத் (25) என்ற மகன் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக உமாதேவி தனது கணவரை பிரிந்து, மகன் சிவ பிரசாத்துடன் ராமவர்மபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பெருமாளும் இறந்து போனார்.

இதையடுத்து சரோஜினியுடன் செல்வம் பிள்ளை, உமாதேவி, அவரது மகன் சிவ பிரசாத் ஆகியோர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தனர். செல்வம் பிள்ளைக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டும் டிசம்பர் 3ம் திகதி உமாதேவி இறந்து விட்டார்.

ஆனால் அவரது உடலை வீட்டில் இருந்தவர்கள் அடக்கம் செய்ய வில்லை. ஒரு துணியில் நன்றாக உடலை கட்டி வீட்டின் ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டனர்.

சரோஜினியின் வீடு பெரிய பங்களா வீடு ஆகும். வீட்டுக்குள் 10 அறைகள் வரை உள்ளன. இவர்களுடன் அக்கம் பக்கத்தினர் யாரும் எந்த தொடர்பும் வைத்ததில்லை. இவர்களும் யாருடனும் பேச மாட்டார்கள். எப்போதும் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே தான் இருப்பார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் செல்வம்பிள்ளை வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் வசிக்கும் சாந்தி என்பவரின் வீட்டில் செலவுக்கு பணம் கிடைக்குமா என கேட்டார்.

சாந்தியின் மகன் 500 ரூபா கொடுத்தார். அப்போது அவருடன் சென்ற சாந்தி வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வருவதை உணர்ந்த சாந்தி, அந்த அறையை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்களின் நடவடிக்கை மாறியது.

பதற்றத்துடன் வெளியே ஓடி வந்த சாந்தி இது பற்றி பொலிஸாருக்கு தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சந்தேகத்துக்குரிய அறையை திறந்து உள்ளே துணியில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை வெளியே எடுத்து வந்து பிரித்தனர்.

அதில் உமாதேவி உடல் அழுகிபோய் இறுகிய நிலையில் இருந்தது. உடனடியாக உடலை ஆசாரிப்பள்ளம் அரச மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்தவர்களிடம் கேட்ட போது ஏதோ உருவத்தை பார்த்து இறந்து விட்டாள் . மேற்கொண்டு எதுவும் கேட்காதீர்கள் என கூறினர்.

பொலிசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்தனர். ஆனால் எதையும் அவர்கள் கூறவில்லை. கிட்டத்தட்ட சுமார் 10 மாதங்களாக சடலத்துடன் இவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் யாரும் செல்லாததால் துர்நாற்றம் தெரியவில்லை. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக் காதலனுடன் இணைந்து கணவனை நிர்வாணமாக்கி அடித்துக் கொன்ற பெண்!!

murderஇந்தியாவின் அகமதாபாத், ராஜ்கோட்டில் உள்ள மோர்பி மாவட்டத்தில் கொலனி ஒன்றின் வெளிப்புறத்தில் பிண நாற்றம் அடிக்க பொதுமக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸ் கடுமையான விசாரணையில் இறங்கினர். அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்தி வானியா என்ற பெண்ணை பொலிசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணைகளில் புதன்கிழமை தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இந்த பார்தி வானியா, தன் கணவன் மகேந்திர தாராசந்த் வானியாவை நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

கணவனைக் கொலை செய்ய கள்ளக்காதலன் சூரிய பிரகாஷுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வரவழைத்துள்ளார்.
பின் கணவனை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து கணவனின் உடலை துண்டு துண்டாக சிதைத்து சாக்கு மூட்டையில் போட்டு அடைத்துள்ளனர்.

மூட்டையை தூக்கி வீச அதனை காரில் கொண்டு சென்ற முயன்றபோது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவரும் அகப்பட்டுக் கொண்டனர்.

கள்ளக்காதலை அறிந்த கணவன் தாராசந்த் கடுமையாக மனைவியை எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கணவனை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமன்னா– சுருதி பனிப்போர் உச்சகட்டத்தில்!!

shruthihassan-tamannahதெலுங்கு பட உலகில் தமன்னாவுக்கும் சுருதிஹாசனுக்கும் பனிப்போர் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஒருவர் தோல்வியை மற்றவர் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்களாம்.

தெலுங்கில் இவர்கள் முன்னணி நடிகைகளாக உள்ளனர். ஒருவர் படவாய்ப்பு மற்றவருக்கு திடீர் திடீர் என கை மாறுகிறது. இதனால் மோதிக் கொண்டு நிற்கிறார்கள். தெலுங்கில் தயாரான கப்பார் சிங் படத்தில் தமன்னாவை நாயகியாக பரிசீலித்து பிறகு அது சுருதி கைக்கு மாறியது. அப்படம் வெற்றிகரமாக ஒடியது.

ராமைய்யா வந்தாவையா படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். கப்பார் சிங் படம் ஹிட்டானதால் அவரை மாற்றி விட்டு சுருதிஹாசனை தேர்வு செய்தார்கள். இது தமன்னாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால் ராமையா வஸ்தாவையா படம் ரிலீசாகி எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. படம் தோல்வி அடைந்ததை தமன்னா கேக் வெட்டி கொண்டியதாகவும், இனிப்புகளும் வழங்கியதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் செய்தி பரவி உள்ளது.

எமது நலன் கருத்தில் கொள்ளப்படாவிடில் கையெழுத்திட மாட்டோம் : கிளிநொச்சி விவசாயிகள் உறுதி!!

kiliகிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படாவிட்டால் யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உடன்பாடு இல்லாத காரணத்தினால் இந்தக் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகின்ற நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் இரணைமடுக் குளத்தின் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தில் தமக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து வட மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், முக்கியஸ்தர்களிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

இந்தக் குடிநீர்த் திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை அதிகாரி எஸ்.எம்.குரூஸ் மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ் இரணைமடுக் குளத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர் பாலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விவசாய அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தத் திட்டத்தினால் ஏற்படப்போகின்ற விவசாயச் செய்கைக்கான பாதிப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர்த்தேவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும், இந்தக் குடிநீர்த் திட்டம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் விவசாயிகளைப் பாதிக்கத்தக்க வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கருதும் விடயங்களையும் சுட்டிக்காட்டி, இந்த சிக்கல்களுக்கு வடமாகாண சபை நல்லதொரு தீர்வைக்காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

குடிநீர்த்திட்டம் தொடர்பான விபரங்கள் இதுவரையில் நடைபெற்றுள்ள வேலைகளின் நிலைமைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதனையடுத்து, இந்த விடயம் குறித்து வடமாகாண சபை செயற்படத் தொடங்கியதும் உடனடியாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

-பிபிசி தமிழ்-

அவுஸ்திரேலிய அணியின் அபார ஆட்டத்தால் மண்ணைக் கவ்விய இந்திய அணி!!

AUSஇந்தியாவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

டெல்லி மொகாலி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதன்படி இந்திய அணியின் தவான்- ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா 11 ஓட்டங்களுடனும், தவான் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இந்திய அணி சார்பாக சிறப்பாக விளையாடிய அணித் தலைவர் டோனி 139 ஓட்டங்களையும், கோலி 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி கடினமான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது .

அவுஸ்திரேலியா சார்பில் அடம் வோக்ஸ் 76 ஓட்டங்களையும், ஜேம்ஸ் புலுங்கர் 64 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் புலுங்கர் தெரிவானார். இதன்படி 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

இதற்கு முன்னதாக புனேயில் நடந்த முதல் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவும், 2வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுக்களால் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

வவுனியா மாணவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

vavuniyaவவுனியா மாவட்டத்தில் கடந்த புலமைப் பரிசில் பரிட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற 45 மாணவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.

பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.

பிரபல பாடசாலைகள் என்பதை தவிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகளை உருவாக்குவதே அரசின் வேலைத்திட்டம் என ஜனாதிபதி கூறினார்.

நகர்புற மாணவர்களைப் போல கிராமப்புற மாணவர்களும் தற்போது கல்வியில் முன்னேறி உலகை வெற்றி கொள்ள முன்னோக்கி வருவதையிட்டு தாம் பெருமையடைவதாகவும் ஜனாதிபதி மாணவர்களிடம் தெரிவித்தார்.

லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி படத்திற்கு 2 விருதுகள்!!

balaலண்டனில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் பங்கேற்றன.

இந்தியாவில் இருந்து பாலா இயக்கிய பரதேசி படம் பங்கேற்க தேர்வானது. சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய 8 விருதுகளுக்கு பரதேசி படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதில் லண்டன் திரைப்பட விழாவில் 2 விருதுகளை பரதேசி படம் பெற்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் செழியனும், சிறந்த உடையலங்கார நிபுணர் பிரிவில் பூர்ணிமா ராமசாமியும் விருது பெறுவதற்கு தேர்வாகியுள்ளனர். இந்த தகவல் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்தும் சர்வதேச முதியோர் தினவிழா அழைப்பிதழ்!!

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா எதிர்வரும் 22-10-2013 அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு கூமாங்குளம் முதியோர் சங்கத்தலைவர் திரு.பிலிப்பு வரப்பிரகாசம் தலைமை தாங்குகிறார்.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வவுனியா அரசாங்க அதிபர் திரு .M .K .பந்துல ஹரிச்சந்திர அவர்கள் கலந்து கலந்து கொள்வதோடு, கௌரவ விருந்தினர்களாக திரு.கா.உதயராசா (பிரதேச செலாளர் வவுனியா), திரு.நா.கமலதாசன் (பிரதேச செலாளர் வெ.செட்டிகுளம்) ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் க.இராமச்சந்திரன் (தலைவர் வவுனியா மாவட்ட முதியோர் சமாசம்), கிராம அலுவலர் திருமதி.துசிதா புஸ்பராஜா, வைத்தியர் .மு.மதிதரன் (கிசான் மெடிக்கல் சென்டர் கூமாங்குளம்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

(முதியோர் சங்கம் ,ஸ்டார் அமைப்பு)

koomankulamkoomankulam1

அஜித், கார்த்தி படங்களுக்கு வரி விலக்கு கிடைக்குமா??

ajithஅஜித்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன. இப்படங்கள் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ‘U’ சான்றிதழ் அளித்துள்ளார்கள்.

இதனால் இவ்விரு படங்களுக்கும் அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு வரும் இன்னொரு படமான விஷாலின் பாண்டிய நாடு தணிக்கை குழுவினருக்கு திங்கட்கிழமை திரையிட்டு காட்டப்படுகிறது.

அப்படமும் ‘U’ சான்றிதழ் பெற்றால் வரி விலக்குக்கு தகுதி பெறும். பாண்டிய நாடு படம் குடும்ப பாங்கான கதையம்சத்தில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று படங்களும் வரிவிலக்கோடு வந்தால் சினிமாவுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர். மூன்று படங்களுக்கும் தியட்டர்கள் ஒதுக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

ஆரம்பம் படம் தீபாவளிக்கு இரண்டு நாளுக்கு முன்னதாக 31ம் திகதி வெளியாகின்றது. பாண்டிய நாடு படம் 1ம் திகதி வருகிறது.